இரங்கி நாள்தொறும் வாய்வெரீஇ இவள் கண்ணநீர்கள் அலமர
மரங்களும் இரங்கும் வகை மணிவண்ணவோ என்று கூவுமால்
துரங்கம் வாய் பிளந் தானுறை தொலைவில்லு மங்கலம் என்றுதன்
கரங்கள் கூப்பித்தொழும் அவ்வூர்த் திருநாமம் கற்றதற் பின்னையே.
பொ-ரை :- இவள் நாள்தோறும் இரங்கி வாய்வெருவிக் கண்களிலே நீர் தேங்கும்படியாக மரங்களும் இரங்கும்படி மணிவண்ணா! என்று கூவுகிறாள்; பேசுதற்குக் கற்றுக்கொண்டபிறகு கேசி என்னும் அசுரனது வாயினைப் பிளந்த எம்பெருமான் நித்தியவாசம் செய்கிற திருத்தொலை வில்லி மங்கலம் என்று சொல்லித் தன்னுடைய கைகளைக் குவித்துத் தொழுவாள்.
வி-கு :- வெருவி – வெரீஇ; சொல்லிசையளபெடை. அலமருதல் – சுழலுதல். துரங்கம் – குதிரை. பிளந்தான்: வினையாலணையும் பெயர். திருநாமம் கற்றதற் பின்னை, காங்கள் கூப்பித் தொழும் என்க.
ஈடு :- ஒன்பதாம் பாட்டு. 1இவளுடைய மனம் வாக்குக் காயங்கள் மூன்றும் முதலிலே தொடங்கி அவன் பக்கலிலே ஈடுபட்டன ஆயின என்கிறாள்.
இரங்கி – நெஞ்சு அழிந்து. வாய்வெரீஇ – 3அடியற்ற பேச்சாய் இராநின்றது. “இராமா! என்றும் இராமா! என்றும் எப்பொழுதும் புத்தியினால் எண்ணி அவனையே வாக்கால் சொல்லிக்கொண்டவளாய்” என்னுமாறுபோலே, மனத்தின் துணை இன்றிக்கே இருக்கை. நாள்தொறும் – “ராமேதி ராமேதி ஸதைவ புத்த்யா விசிந்த்ய வாசா ப்ருவதீ தமேவ தஸ்ய அநுரூபாம்ச கதாம் ததர்தாம் ததைவ பஸ்யாமி ததா ச்ருணோமி”-என்பது, ஸ்ரீராரா. சுந். 32 : 11. சுலோகத்திலே “ப்ருவதீ” என்ற பதத்தாலே,
வாக்காலே என்னுமது போதரவும், “வாசா” என்று விசேடிக்கையாலே
மனத்தின் துணை இல்லை என்றபடி.
3மயர்வறமதிநலம் அருளப்பெற்ற அன்றே அறிவு கேடும் குடிபுகுந்தது காணும். பக்தியின் உருவத்தை அடைந்த ஞானம்அன்றோ பெற்றது. இவள் கண்ணநீர்கள் அலமர – 1கண்கள் வாய்வெருவுகிறபடி. ‘நாள்தொறும் வாய்வெரீஇ’ என்றது, 2பொய்ந்நின்ற ஞானம் தொடங்கி இவ்வளவும் வரக் கூப்பிட்ட கூப்பீட்டை அன்றோ. மரங்களும் இரங்கும் வகை – 3சேதனம் என்றும், அசேதனம் என்றும் வேறுபாடு அற அழியும்படி காணும், இவள் வாய்விட்டுக் கூப்பிடும் படி. 4எம்பாரை ‘மரங்களும் இரங்கக் கூடுமோ?’ என்று கேட்க, இது அருளிச்செய்த அன்றுதொடங்கி எத்தனை பாவசுத்தி இல்லாதார் வாயிலே புக்கது என்று தெரியாது; இங்ஙனே இருக்கச்செய்தே, இயமம் நியமம் முதலிய யோக உறுப்புக்களாலே பதம்செய்யப் பார்த்தாலும் சுக்கான்பருக்கை போலே நெகிழாதே இருக்கிற நெஞ்சுகளும் இன்று அழிகிறபடி கண்டால் சமகாலத்தில் மரங்கள் இரங்கச் சொல்லவேணுமோ? என்று அருளிச்செய்தார். 5“மரங்கள் நின்று மது தாரைகள் பாயும் மலர்கள் வீழும் வளர்கொம்புகள் தாழும்” -பெரியாழ்வார் திருமொழி, 3. 6 : 4.-என்று அவதாரத்தில் திருக்குழல் ஓசையில் பட்ட எல்லாம் இத் துன்ப ஒலியிலே படுமாயின; “மரங்களும் வாடி நின்றன”-ஸ்ரீராமா. அயோத். 59 : 10.
“அபிவ்ருக்ஷா: பரிம்லாநா:”என்று, இராமனைப்பிரிந்த பிரிவில் பட்ட எல்லாம் இவள்பேச்சிலே படாநின்றன.பகவானுடைய குணங்களைக்காட்டிலும் குணநிஷ்டர் பாசுரம் அழிக்கும் போலே காணும்.
மணிவண்ணவோ என்று கூவுமால் – 2இவளையோதான் நீங்கள் மீட்கப்பார்க்கிறது! வடிவழகைச் சொல்லியன்றோ கூப்பிடுகிறது. துரங்கம் வாய் பிளந்தான் உறை தொலைவில்லிமங்கலம் – 3பண்டு உபகரித்தவன் இப்போது உபகரிக்கைக்கு வந்து இருக்கிற தேசம். கேசிவாயினை வருத்தம் இன்றியே கிழித்தவன் வாழ்கின்ற தேசம். தொலைவில்லிமங்கலம் என்று தன்கரங்கள் கூப்பித்தொழும்-அத்தலை இத்தலை ஆவதே! என்கிறாள். 4தன் ஊரின் பெயரைச்சொல்ல எல்லாரும் கை எடுக்கும்படி பிறந்தவள் கண்டீர் தான் அவன் ஊரைச்சொல்லித் தொழுகிறாள். அன்றிக்கே, இக் கை கண்டார் தொழுமத்தனை என்றுபோலேகாணும் இவள் இருப்பது என்னுதல். 5தான் தொழுவது பெண்மைக்குப் போராதேயன்றோ. இதுதான் என்று தொடங்கி? என்னில், அவ்வூர்த் திருநாமம் கற்றதன் பின்னை – இவள் சொல் கற்ற பின்பு. 6திருநகரியிலுள்ளார் சொல் கற்பது, “திருத்தொலை வில்லிமங்கலம்” என்றுபோலே காணும்.இவள் பேச்சுக் கற்கை என்றும், திருநாமம் சொல்லுகை என்றும் இரண்டு இல்லை. 2கோயிலிலுள்ளார் “கோயில்” என்றும், “பெருமாள்” என்றும் கற்குமாறு போலே. 3தோழி, தன்வாயாலே ‘திருத்தொலைவில்லிமங்கலம்’ என்றால், இவள்சொன்ன இனிமை பிறவாமையாலே, ‘அவ்வூர்’ என்கிறாள் காணும். என்தான்! முன்பு சொன்னாளே? என்னில், அது அப்படி இராமையால் அன்றோ ‘அவ்வூர்’ என்கிறது.
மூன்று கரணங்கள் உடன் ஈடுபட்டு
வாய் வெருவி கண்கள் நீர்
இரங்கி நெஞ்சு அழிந்து
மணி வண்ணா கூவ மரங்களும் இரங்கும் படி
பிதற்றுகிறாள்
விசிந்தய வாசா -என்னுமா போலே மனஸ் சகஹாரி இன்றி
துரங்கம் கேசி வாய்
கை கூப்பி தொழும்
புத்தி எல்லாம் சக்கரவர்த்தி திரு மகன் இடம்
அடி அற்ற பேச்சு
அவன் கொடுத்த ஞானத்தால்
பக்தி ரூபாபன்ன ஞானம் பெற்றாள் இ றே
பொய் நின்ற ஞாலம் தொடங்கி -மரங்களும் இரங்கும் படி
சேதன அசேதனம் -உருகும்படி
எத்தை பாவ சுத்தி இல்லாரும்
யெமம் நியமம் பதம் செய்தாலும் உருகாத நெஞ்சு
சுக்காம் தரை போலே -சலவை கல் போலே -இருக்கும் நெஞ்சும் அழிய காண்கிறோம்
எம்பார்
சக களத்தில் மரங்கள் இரங்க சொல்ல வேண்டுமோ
மரங்கள் போல் வழிய நெஞ்சமே உருக
குழல் ஓசை கேடு மது தாரைகள்
அவதாரத்தில் குழல் ஓசை போலே ஆழ்வார் பேச்சு
ராமன் பிரிந்த செடி கொடிகள் பட்டது எல்லாம்
அங்கே வாடிற்று இங்கே இரங்க
பாகவத பிரபாவம்
மணி வண்ணவோ அழகை சொல்லி
முன்பு உபகரித்தான் கேசியை கொன்றது தமக்கு என்று
கேசி விருத்தாந்தம்
கடைசியில் வந்தவன் என்பதால் அடிக்கடி ஆழ்வார் ஈடுபட்டு சொல்வார்கள்
தனது ஊரை சொல்ல அனைவரும் கை கூப்பும்படி பிறந்தவள்
அவளே துளை வில்லி மங்கலம் சொல்லி
ஸ்த்ரீத்வதுக்கு -தான் தொழுவது -போராதே
ஆனாலும் செய்கிறாள்
திரு நகரி உள்ளாறும் சொல்லும் படி
கற்க ஆரம்பித்த முதல் சப்தமே இது
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்.
வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.
Leave a Reply