திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -6-5-7-ஸ்ரீ M.A V .சுவாமிகள்.

அன்னைமீர்! அணி மாமயில் சிறுமானிவள்நம்மைக் கைவலிந்து
என்ன வார்த்தையும் கேட்குறாள் தொலைவில்லி மங்கலம் என்றலால்
முன்னம் நோற்ற விதிகொலோ? முகில் வண்ணன் மாயம் கொலோ?
அவன்
சின்னமும் திருநாமமும் இவள் வாயனகள் திருந்தவே.

பொ-ரை :- தாய்மார்களே! அழகிய பெருமைபொருந்திய மயிலையும் இளையமானையும் போன்றவளான இவள், நம்மை விஞ்சித் திருத்தொலைவில்லமங்கலம் என்ற பெயரையல்லாமல் வேறு எந்த வார்த்தையையும் கேட்கின்றாள் இல்லை; முற்பிறவிகளில் செய்த புண்ணியம்தானோ? முகில்வண்ணனான எம்பெருமானுடைய மாயம்தானோ? அறியேன்; அவ் வெம்பெருமானுடைய சின்னங்களும் திருப்பெயர்களும் திருந்த இவள் வாயின ஆயின.

வி-கு :- கைவலித்தல் – மீறுதல். வாயனகள்: 3கள், அசைநிலை, என்ன – என்னுடைய என்றலுமாம். கேட்க உறாள் என்பது, கேட்குறாள் என வந்தது; விகாரம். கைவலிந்து தொலைவில்லி மங்கலம் என்றல்லால் என்ன வார்த்தையும் கேட்குறாள் என்க.

ஈடு :- ஏழாம்பாட்டு. 4அவன் சின்னமும் திருநாமமும் இவள் சொல்லப்புக்கவாறே நிறம்பெற்றன என்கிறாள்.

அன்னைமீர்! – 1இவள் பருவம் இது; நமக்கு அவ்வருகே போன ஆச்சரியத்தைப் பாரீர்கோள். ‘மைத்ரேய’ என்னுமாறுபோலே, ‘அன்னைமீர்!’ என்கிறாள். அணி மா மயில் சிறுமான் – 2அழகிய நிறத்தையுடைய பெண்பிள்ளை. அன்றிக்கே, அழகியதாய்ச் சிலாக்கியமான மயில் போலே இருக்கிற பெண்பிள்ளை என்னுதல். சிறுமான் இவள் நம்மைக் கைவலிந்து – 3நாம் கற்பித்த திருநாமங்களையும் சொப்படச் சொல்லமாட்டாதவள் நமக்கு எட்டாதபடியானாள். கை வலித்தல் – கை கடத்தல். என வார்த்தையுங் கேட்குறாள் – 4தன் நினைவினை யான் சொல்லிலும் மீட்பதற்கு நினைத்துச் சொல்லுகிறேன் என்று, எனவார்த்தையையும் கேட்கை தவிர்ந்தாள். தொலைவில்லிமங்கலம் என்றல்லால் – 5திருத்தொலைவில்லிமங்கலம் என்னில் நான் சொன்னதையும் கேட்பாள். என வார்த்தை – என்னுடைய வார்த்தை.

முன்னம் நோற்ற விதிகொலோ – 6ஒக்கப் பிறந்து வளர்ந்தோம், பின்பு இது சாதிக்கக் கண்டிலோம். ஆதலால், முன்னரே செய்துவைத்த புண்ணியத்தின் பலமோ இது! 1“புண்ணியமானது, விதி என்றும் விதானம் என்றும் சொல்லப்படுமன்றோ” என்னக்கடவதன்றோ. 2இவளாலே செய்யப்பட்ட தர்மத்துக்கு இத்தனைபலம் கனக்க உண்டாகமாட்டாது; இது சித்த தர்ம பலமாகவேணும்; ஆகையால், முகில்வண்ணன் மாயம்கொலோ – 3பிடாத்தை விழவிட்டு வடிவினைக் காட்டினானோ? 4இத்தலையாலே சாதித்தது ஓர் அசேதனமான கிரியைக்கு இத்தனை கனத்த பலம் உண்டாகமாட்டாமையாலே ‘முன்னம் நோற்ற விதிகொலோ?’ என்று ஐயப்பட்டாள். இப்படி முன்பு ஒருவடிவில் பலிக்கக் காணாமையாலே ‘முகில்வண்ணன் மாயம்கொலோ?’ என்று இங்கே ஐயப்படுகிறாள். அவன் சின்னமும் திருநாமமும் – “தவளொண்சங்கு சக்கரம்” என்பதான அடையாளங்களும், “அரவிந்தலோசனன்”, “தேவபிரான்” என்பனவான திருநாமங்களும். இவள் வாயனகள் திருந்தவே – 5பண்டே திருந்தி இருக்கிறவை இவள் சொல்லப் புக்கவாறே உயிர்பெற்று இராநின்றன. 6பட்டர் “அழகிய மணவாளப் பெருமாள்” என்றால் திருநாமம் நிறம்பெறுமாறு போலேயும், சோமாசியாண்டான்“எம்பெருமானார்” என்றால், திருநாமம் நிறம்பெறுமாறுபோலேயும், அனந்தாழ்வான் “திருவேங்கடமுடையான்” என்றால், திருநாமம் நிறம்பெறுமாறு போலேயும்; 1“எவை உம்மால் சொல்லப்பட்ட குணங்கள்” என்னுமாறுபோலே.

இதனை வால்மீகிபகவான் பக்கலிலும் காணலாம் என்கிறார் ‘எவை உம்மால்’
என்று தொடங்கி.

“பஹவோ துர்லபா: சஏவயே த்வயா கீர்த்திதா குணா:
முநே வக்ஷ்யாமி அஹம் புத்வா தை: யுக்த: ச்ரூயதாம் நர:”-என்பது, சங்க்ஷேப ராலாயணம், 7. இந்தச் சுலோகத்தில் ‘கதிதா’ என்னாது,
“கீர்த்திதா” என்கையாலே, குணங்கள் நிறம்பெற்றன என்று தோற்றுகிறது.

  வாங்கரும் பாத நான்கும் வகுத்தவான் மீகி என்பான்
தீங்கவி செவிக ளாரத் தேவரும் பருகச் செய்தான்
ஆங்கவன் புகழ்ந்த நாட்டை அன்பெனும் நறவ மாந்தி
மூங்கையான் பேச லுற்றான் என்னயான் மொழிய லுற்றேன்.-என்றார் கம்பநாட்டாழ்வாரும்.

வரையாழி வண்ணர் அரங்கேசர் ஈசன்முன் வாணன் திண்தோள்
வரையாழி யார்புள்ளின் வாகனத்தே வந்த நாடொடிற்றை
வரையாழிய துயராய்த் தூசும் நாணும் மதியும் செங்கை
வரையாழியும் வளையு மிழந்தாள் என்மடமகளே.-
என்பது, திவ்விய கவியின் திருவாக்கு.-(திருவரங்கத். 58.)-

அவன் சின்னமும் திரு நாமமும் இவள் வாயால் சொல்வதே சிறப்பு
இவையும் மெருகு பெறுமே

அவன் சின்னமும் திரு நாமமும்  சொல்லவே நிறம்  பெற்றன
துளைவில்லி மங்கலம் என்றே  –
இவள் பருவம் இது –
மைத்ரேய -என்னுமா போலே -ஆச்சர்யம் படுகிறார்கள்
முலையோ –திருவேம்கடம் என்று கற்கின்ற வாசகமே -திரு விருத்தம் இதே போலே
பராசரர் மக ரிஷி மைத்ரேயர் என்னுமா போலே
அழகிய ச்லாக்கியமான –
மழலை -நாம் கற்பித்த திரு நாமம் சொல்ல மாட்டாமல் கை கடந்து போனாள்
என வார்த்தை கேட்க வில்லை
தன நினைவை நான் சொனாலும் மீட்க நினைத்து சொல்கிறேன் என்று கேட்க வில்லை
திரு துளை வில்லி மங்கலம் என்றே
முன்னம் ஒற்றை விதி கொலோ -ஒன்றாக பிறந்து வளர்ந்தோம்
இவள் சாதனம் ஒன்றும் செய்ய காண வில்லை -போன ஜன்ம சுக்ருத பலமாக தான் இருக்க வேண்டும்
தோழி வார்த்தையும் கேட்க வில்லை
இத்தனை பலம் கிடைக்க இது சித்த தர்ம சாதனத்தால் பெற்றதாக தான் இருக்க வேண்டும்
முகில் வண்ணன் மாயங்கள்
வடிவைக் காட்டி –
பிடாம் வஸ்த்ரம் எடுத்து வடிவைக் காட்டி –
அதில் சம்சயம் –
இத்தனை கனத்த பலம் -உண்டாக -சாமான்யமாக கிடைக்காதே
அதிர்ஷ்டம் -ந திருஷ்டம் கண்ணால் பார்க்க முடியாதே
விதி சொல்லி –
விதி கொலோ மாயங்கள் கொலோ இரண்டும் சொல்லி
புண்ணியம் செய்து இந்த பலன் பெற முடியாதே
முகில் வண்ணன் மாயம் கொலோ -இப்படி யாரையும் காண வில்லையே அதனால் சம்சயம்
சின்னங்கள் திரு நாமங்கள்
இவள் சொன்னவாறே நிறம் பெற்றன
பட்டர் அழகிய மணவாள பெருமாள்
சோமாசி ஆண்டான் எம்பெருமானார் -சோம யாகம் செய்து பிரபலம் என்பதால் இந்த திரு நாமம்
அனந்தாழ்வான் திருவேம்கடமுடையான் சொல்வது போலே
பிரமேய ரத்னம் ஐதிகம் –
கருவிலே திரு விலாதார் யார் -பட்டர் கேட்டு
அனந்தாழ்வான் திருப்பி போக சொல்லி
வெறுவாதாள்  வாய் வெருவி வேம்கடமே வம்கடமே என்கின்றாள் -திருவரங்கம் பெரிய திரு மொழி
இத்தால் என்ன கார்யம்
மகள் -பாசுரம் அம்மா காது கேட்க வில்லை -தப்பாக சொன்னாள் -என்பர் தப்பாக
அமலனாதி பிரான்
மற்று ஒன்றினைக்  காணாவே -வேம்கடவன் முதலில் சொல்லி
வரத்து சொல்லி பாட -பரம பதம் -நின்று -எட்டி பார்த்து இங்கே வந்து சயனம்
முன் நிலை தான் என்றார் பட்டர்
செவ்வடி தொடர்ந்து பேசி
இவள் -சங்கோடு சக்கரம் -அரவிந்த லோசனன் -தேவ பிரான் துளை வில்லி மங்கலம் சொல்வது
குணவான் -கஸ்ய வீர்யவான் -நாரதர் இடம் வால்மீகி கேட்டு
புதிசாக கேட்க வில்லை
ராமன் தான் தெரியும்
நாரதர் வாயால் கேட்க ஆசைப் பட்டார்
நரனாக இப்பொழுது இருக்க வேண்டும் -அவனுக்கு உள்ள கல்யாண குணங்கள்
சொல்லி கேட்ட கேள்வி

ராம ராஜ்ஜியம் நடக்கும் பொழுது எழுதிய ஸ்ரீ ராமாயணம்
வன வாசம் எழுந்து அருளும் பொழுது வால்மீகி ஆஸ்ரமம் சென்று
துர்லப
கீர்த்தி -உம்மாலே ஈடுபட்ட -வார்த்தை
நினைத்து சொல்கிறேன் –
ஆஸுவாசம் -படித்திக் கொண்டு சொல்கிறேன்
தரித்து நின்று பேசுகிறேன் -என்றார் ரிஷி
மெய் சிலிர்ந்து நா தழு தழுக்க –
வாக்கலே கேட்ட ஸ்ரீ ராம குணங்கள் போலே

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading