பிரவேசம்
கீழ் தம் உள்ளத்தை குறித்து ஸ்ரீ திருப் பிரிதியை ஆஸ்ரயி என்று உபதேசித்தார் –
அது தம் த்வரைக்கு ஈடாக த்வரித்தது -இல்லை
கெடுவாய் -நாம் இருக்கிற இருப்பில் பொல்லாங்கு கண்டாயே –
கடுக ஒரு ஷணம் முற்பட்டது உடலாக ஆஸ்ரயிக்க பாராய் -என்கிறார் –
கீழே -1-1-ஸ்ரீ திரு மந்த்ரத்தை அநுசந்தித்தார் –
அநந்தரம்-1-2- -ஸ்ரீ மந்திர ப்ரதிபாத்யமான அர்த்தத்தை அநுசந்தித்தார் –
ஸ்ரீ மந்திர த்ரஷ்டானவன் இருக்கிற தேசத்தை ஆஸ்ரயிப்போம் என்கிறார் -இதில்-
ஸ்ரீ திரு மந்த்ரம் தன்னை அநுசந்திப்பாருக்கு ப்ரதிபாத்யமான ஸ்துவோபாதி
ருஷி என்ன –
சந்தஸ்ஸூ என்ன –
தேவதைகள் என்ன –
பீஷ சக்திகள் என்ன –
சோஷண தாஹநாதிகள் என்ன –
இவை எல்லாம் அநுசந்தேயமாகக் கடவது –
அதுவேண்டுவான் என் என்னில்-
நமோ நாராயணா என்று பரமாத்மாவை சூழ்ந்து இருந்து ஏத்துவர் பல்லாண்டே -என்று
இம் மந்திர அநுசந்தானம் பண்ணுவார் -நித்ய ஸூரிகளாய் -அவர்கள் உடைய யாத்ரையாய் யாயிற்று -இது
அத்தை இறே குண த்ரயாத்மிகையான -பிரகிருதி வச்யனான -இவன் அநுசந்திக்கப் பார்க்கிறது
ஆகையாலே ஒரு பாவனையாலே அவர்களோபாதி தன்னுடைய சரீரத்தையும் பாவித்து அநுசந்திக்கைகாக
ஷோணாதிகள் -வேண்டுகிறது –
இனி
ருஷி சந்தஸ்ஸூ தேவதைகளை அநுசந்திக்கிறது
இம் மந்த்ரத்தில் உண்டான ஆதராதி அதிசயத்தாலே
பீஜ சக்திகளை அநு சந்திக்கிறது –
மோஷ ப்ரதம் என்று அவ் வழியாலே இவனுக்கு அதில் விஸ்வாசம் பிறக்கைகாக –
கீழே-1-2- பிரிதி சென்று அடை நெஞ்சே -என்றார்
க்ரமத்தில் செய்கிறோம் என்று ஆறி இருந்தது நெஞ்சு –
கெடுவாய் -பிரகிருதி சம்ஸ்ப்ருஷ்டராய் இருப்பாருக்கு அப்படி செய்கிறோம் என்று ஆறி இருக்கப் போமோ
(ஸ்ரீ பட்டருக்கு ஸ்ரீ ஆழ்வான் திரு மந்த்ரார்த்தம் அருளிச் செய்த ஐதிக்யம்–மின்னின் நிலையில மன்னுயிர் ஆக்கைகள்)
அப்ராக்ருத சரீர பரிக்ரகம் பண்ணினாருக்கு அன்றோ – பின்னை செய்கிறோம் என்று ஆறி இருக்கலாவது –
என்று இங்கனே
பிரகிருதி யினுடைய அஸ்த்ரத்தையும் –
விஷயங்களின் உடைய தண்ணிமையும் –
பற்றப் படுகிற விஷயத்தின் உடைய வை லஷண்யத்தையும் -சொல்லி
இருந்தபடி இதுவான பின்பு
ஒரு கை கால் முறிய வாகிலும்-ஓடி வேகமாக- ஒரு ஷணம் முற்ப்பட்டது உடலாக
ஆஸ்ரயிக்கப் பாராய் என்று திரு உள்ளத்தை குறித்து அருளிச் செய்கிறார் –
(கரண ஸைதில்யம் அடைவதற்கு முன் வாராய் என்றுமாம் )
—————————————————————–
முற்ற மூத்து கோல் துணையா முன்னடி நோக்கி வளைந்து
இற்ற கால் போல் தள்ளி மெள்ள இருந்து அங்கு இளையா முன்
பெற்ற தாய் போல் வந்த பேய்ச்சி பெரு முலை யூடுயிரை
வற்ற வாங்கி உண்ட வாயான் வதரி வணங்குதுமே—-1-3-1-
முற்ற மூத்து-மிக மூத்து-
அவதாரிகை –
முற்ற மூத்து-
ஹிமவானில் திருப் பிரிதியை ஆஸ்ரயி என்று திரு உள்ளத்தை குறித்து உபதேசித்தார் –
(கீழில்-அதி தூர தேசம் -என்று திமிர்ந்து இருக்க அருகில் உள்ள ஸ்ரீ பத்ரி காஸ்ரமம் கிட்டே வா –
ஆகவே மானஸரோவர் அருகில் இருக்க வேண்டும் )
அது தம் த்வரைக்கு அநுரூபமாக மேல் விழுந்து திமிர்த்து இருந்தது –
மன ஏவ ஹி மனுஷ்யாணாம் -என்று பந்த மோஷங்கள் இரண்டுக்கும் ஹேது மனஸ் இறே –
இது பகவத் விஷயத்தில் மேல் விழுகிறது இல்லை –
இனி பழையதுவே இறே-(வாடினேன் வாடி இத்யாதி-) மல்கு நிலை –
இனி அவன் தான் விரோதியான இவ் உடம்போடே தன்னை ஆஸ்ரயித்து பெறலாம்
படிக்கு ஈடாக இங்கே வந்து சந்நிஹிதனானான் –
இனி இந்த விரோதியான பிரகிருதி தான் –
தேஹமாயும்-
இந்த்ரியங்களாதியாயும் –
சப்தாதி விஷயங்களாயுமும் இறே விரோதி ஆவது –
அநுபாவ்ய விஷ்யங்களில் பிரதான போக்யங்கள் ஆவன ஸ்திரீகள் இறே –
அவர்கள் தாங்கள் ஆகிறார் தங்களைக் கொண்டு அருமைப் படுத்தி
இவனது சர்வ சொத்தையும் அபஹரிக்கும் அத்தனை போக்கி இவனுக்கு தங்கள்
உடம்பை கொடுக்கிறார்கள் -அன்றிக்கே கொடுத்தார்கள் ஆகில் -அது தன்னில்
அநுபாவ்யம் ஓன்று இல்லாதபடி –
அல்பமாய் -அஸ்த்ரிமாய் -அநர்தா வஹமாய் – துராதாரமாய் இறே இருப்பது –
இனி தேஹம் ஆகிறது தான் ஏக ரூபமாய் இருப்பது ஓன்று அல்லாமையாலே
அவை தன்னுடைய அனுபவ யோக்கியம் உள்ளது சிறிது நாளாய்
பின் அதுவும் கூட இல்லாதபடி இறே இருப்பது
இந்த்ரியங்கள் ஆகிற இவை –
ஆநந்த யாதி -தைத்ரியம் -ஆனந்த வல்லி–என்கிறபடி
இவனுக்கு நிரதிசய ஆனந்தத்தைப் பண்ணிக் கொடுக்கும் ஸ்ரீ பகவத் விஷயத்துக்கு உடலாகை அன்றிக்கே –
சந் நிஹிதமான ஷூத்ர விஷயங்களிலே மூட்டி துக்கத்தை விளைக்கக் கடவதாய் –
பின்பு தான் உண்டாய் இருக்கச் செய்தேயும்
இக் கார்யம் தன்னையும் செய்ய மாட்டாதபடியாய் இறே இருப்பது –
இப்படி இருக்கையாலே – இவ் வஸ்து-அசித்தான சரீரம்- தனக்கே பாங்காய் இருக்கிற நாளிலே
அவனை ஆஸ்ரயித்து
தன்னைக் -சரீரத்தைக்-கழித்துக் கொள்கைக்கு உடலாய் இருப்பதும் ஓர் ஆகாரம் உண்டு –
அவன் தானும் இது பாங்கான போதே தன்னை ஆஸ்ரயிக்கலாம் படி இங்கே ஸ்ரீ பதரியிலே வந்து சந்நிஹிதன் ஆனான் –
ஆன பின்பு இது அநுகூலமான போதே அவனை ஆஸ்ரயித்து இத்தைக் கழிப்பித்துக் கொள்வோம்
என்று பார்த்து அதிலே ஒருப்படுகிறார்-
(நம்மாலே கழிக்க முடியாதே -அவன் கட்டி வைத்த முடிச்சு அவனே தானே அவிழ்க்க வேண்டும் )
ஸ்ரீ பட்டரை ஒரு வியாபாரி –
இது அல்பம் அஸ்தரம் என்று இத்தை த்யாஜ்யமாக நினைத்து இரா நின்றார்கள் சிலர் –
காண்கிற உடம்பு அவ்வருகு இல்லை என்று இது தன்னிலே போக்யதா புத்தி பண்ணி இரா நின்றார்கள் சிலர்
ஒன்றைப் பற்றி இவை இரண்டும் நடக்கிறபடி எங்கனே என்று கேட்டார் –
பாக்யாதிகர்க்கு இதினுடைய தோஷ தர்சனத்தைக் கொண்டு கை விடுகைக்கும் உடலாய் –
பாக்ய ஹீனருக்கு இதிலே போக்யதா புத்தி பண்ணி அநர்த்தப் படுகைக்கு உடலாம் படி
அவ்வவருடைய புண்ய பாபங்களை இட்டு அது அநுரூபமாகக் காணும் இத்தப் பண்ணிற்று -என்று அருளிச் செய்தார்-
பால்யே க்ரீடேந -பால்யத்தில் லீலோ உபகரணம் கொண்டு போது போக்கித் திரியும்
அல்பம் வெளி செறிப்பு பிறந்தவாறே விஷயங்கள் பிடித்துக் கொள்ளும்
பின்னையும் அவை தன்னையும் அனுபவிக்க ஒண்ணாதபடி மூப்பு வரும்
ஆன பின்பு இது பாங்கான நாளிலே ஒரு ஷணம் முற்பட்டது உடலாய்
பகவத் சமாஸ்ரயணம்- ஆஸ்ரயமாம் பட விடுக்கும் -என்னா நின்றது இறே
வியாக்யானம் –
முற்ற மூத்து –
பரிணாமி த்ரவ்யத்துக்கு பரிணாம பரம்பரைகள் வரத் தவிராது இறே
இனி ஒரு அவஸ்தைக்கு அவகாசம் இல்லாத படி
கழிய மூத்து
கோல் துணையா –
முன்பு தன்னை எல்லாருக்கும் அபாஸ்ரயமாக விறே நினைத்து இருப்பது –
ஒரு பரம சேதனனை பற்றுகிறானும் அன்றே –
ஸ்ரீ ஜீயர் சன்னியசித்து அருளுகிற அன்று -தண்ட தாரணம் பண்ணுகிற மந்த்ரம்-(சஹாமே கோபாயா -இத்யாதி மந்த்ரம் )
நீ எனக்கு மித்ரமாய் எல்லா ரஷணங்களும் பண்ண வேண்டும் என்றாய் இற்றே இருப்பது –
அத்தைக் கேட்டு ஒரு சர்வஞ்ஞன் சர்வ சக்தி பரம சேதனனை ஓர் ஆச்சார்யர் முன்னாக இவ்வார்த்தை சொல்லி -வைத்து
இத்தையும் இவ்வார்த்தை சொல்லும்படியான இவ் வாஸ்ரம ப்ராப்தி தான் என் -என்று இருந்தேன் காண் –
என்று அருளிச் செய்வர்
முன்னடி நோக்கி வளைந்து –
முன்பு இறுமாப்பாலே தரை பாராதே யிறே திரிவது
சோழர்கள் வெற்றிலை சிலர் இடம் அன்றிக்கே தாங்களே எடுத்து இறே -தின்பது
தலை கவிழ்ந்து வாங்கில் சிலரை வணங்கிற்று என்னும் துர் மாநத்தாலே
த்விதா பஜ்யேயம் -என்று இது பற்றி உண்டான நாள் இறே
செயல் அற்றால் செய்யலாவது இல்லை இறே
இற்ற கால் போல் தள்ளி –
முறிந்த கால் போலே தடுமாறி
மெள்ள இருந்து –
ஸ்த்திதியில் உண்டான அருமையாலே இருக்க ஒருப்படும்
ஒரு மஹா பாரதத்துக்கு வேண்டும் நேர்த்தி போருமாயிற்று -ஒரு கால் இருந்தானாய் தலைக் கட்ட
அங்கு இளையா முன் –
இருந்த ஆயாசம் தான் பொறாமை இளைக்கும் ஆயிற்று –
அக் கிலேசம் வருவதற்கு முன்னே
பெற்ற தாய் போல் வந்த பேய்ச்சி பெரு முலை யூடுயிரை வற்ற வாங்கி உண்ட வாயான் வதரி வணங்குதுமே
தாய் வடிவு கொண்ட பூதனை உடைய பெரிய முலை வழியே
பிராணனும் பாலோடு ஒக்க வற்றும்படியாக புஜிக்குமவனுடைய
அன்றிக்கே
பேய் வற்றும்படி முலை யூடு உயிர் உண்ட வாயன் -என்னவுமாம்
பால் நேரானவாறே பிராணனும் நேராயிற்று
இத்தால்
அனுகூலம் போலே தோற்றி பிரதிகூலமான பிரக்ருதியைக் கழித்து கொள்ளப் பார்க்கில் –
தாய் வடிவு கொண்டு அனுகூலரைப் போலே வந்து பிரதிகூலமான பூதனையை நிரசித்தவன்
திருவடிகளைப் பற்ற வடுக்கும் என்கிறார்-
————————————————————- .
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply