என்னப்பன் எனக்காய் இகுளாய் என்னைப் பெற்றவளாய்ப்
பொன்னப்பன்1 மணியப்பன் முத்தப்பன் என்னப்பனுமாய்
மின்னப் பொன்மதிள் சூழ் திருவிண்ணகர்ச் சேர்ந்தஅப்பன்
தன்னொப்பார் இல்லப்பன் தந்தனன் தன தாள்நிழலே.
பொ-ரை :- எனக்கு என் அப்பனாகியும், எனக்குச் செவிலித்தாயாகியும், என்னைப் பெற்ற தாயாகியும், பொன்னைப்போன்றவனும் மணியைப் போன்றவனும் முத்தைப்போன்றவனும் என்அப்பனும் ஆகியும், பிரகாசிக்கின்ற அழகிய மதிள்களாற் சூழப்பட்ட திருவிண்ணகரம் என்னும் திவ்விய தேசத்தில் எழுந்தருளியிருக்கின்ற அப்பன், தனக்குச் சமானமானவர்கள் இல்லாத அப்பன் தன்னுடைய திருவடிகளின் நிழலைத் தந்தான்.
வி-கு :- எனக்கு என்னப்பன் ஆய் என்று மாற்றுக. இகுளை – தோழி. ஆய் ஆய் சேர்ந்த அப்பன் தன் ஒப்பார் இல் அப்பன் அவன்தன தாள் நிழல் தந்தனன் என்க.
ஈடு :- ஒன்பதாம்பாட்டு. 2எனக்குச் சரணமான மாத்திரமே யன்று, மற்றும் எல்லாமும் அவனே என்கிறார். அன்றிக்கே, எனக்கு எல்லாவகையாலும் உபகாரகனாம் தன் திருவடி நிழலை, ‘அல்லேன்’ என்ன, வலிய எனக்குத் தந்தான் என்கிறார் என்னுதல்.
எனக்கு என் அப்பன் ஆய் – எனக்கு அசாதாரணனாய்ச்சத்தைக்குக் காரணமாயுள்ள பிதாவாய். 3பஞ்சகாலத்திலே குழந்தைகளைவிற்று உண்ணும் தமப்பனைப்போல் அன்றியிலே, தன்னை அழிய மாறியும் என்னை நோக்கக்கடவ தமப்பனாய். இகுளாய் – எனக்கு நடந்த செயலைப்பற்றிச் சொல்லுவதற்குரிய தோழியுமாய். இகுளை என்று தோழிக்குப் பெயர். அது கடைக்குறைந்து ‘இகுள்’ என நிற்கிறது. என்னைப் பெற்றவளாய் – வளர்த்துக் கொள்ளியான தாயைப்போல் அன்றியே, பத்து மாசம் வயிற்றிலேவைத்து நோக்கிப் பெற்ற தாயாய். பொன் அப்பன் மணி அப்பன் முத்து அப்பன் என் அப்பன் – வேறே இனிய பொருள்களாய்க் கொண்டு உபகாரகம் ஆவன சில பொருள்கள் உள; எனக்கு அப்பொருள்கள் எல்லாம் தானாய் நின்று உபகரித்தவன். மின்னப் பொன் மதிள்சூழ் திருவிண்ணகர் சேர்ந்த அப்பன் – மின்னாநின்றுள்ள பொன்மதிளாலே சூழப்பட்ட திருவிண்ணகரிலே நின்ற உபகாரகன். தன் ஒப்பார் இல் அப்பன் – சிலர்க்கு ஒன்றைக் கொடுக்குமிடத்தில், தன்னோடு ஒக்கக் கொடுக்கவல்லார் இல்லாதபடியான மஹோபகாரகன். இதற்கு, 1‘மின்னிடை மடவார்’ என்ற திருவாய்மொழியிலே, அவன் மேல் வந்து விழ, ‘நீ எனக்கு வேண்டா’ என்று நான் தள்ளத் தள்ள, ‘நீ உனக்கு ஹிதம் அறிந்தாயோ? நான் உனக்கு வேணுங்காண் என்று தன்னை எனக்குத் தந்தவன்’ என்று சீயர் அருளிச்செய்வர். தன தாள் நிழல் தந்தனன் – 2‘உன்னை ஒழிந்த வெய்யிலே எனக்கு அமையும்’ என்று நான் அகலப் புக, “அழித்தாய் உன் திருவடியால்” என்று தன்னுடைய திருவடிகளாலே என் செருக்கைப் போக்கி, திருவடிநிழலை எனக்குத் தந்தான். 3அடிபட்டவாறே, ‘எனக்கு’ என்று வைத்தவற்றையும் பொகடுவர்களே.
திருவடிகளாலே என் செருக்கைப் போக்கினான்’ என்றதனை ரசோக்தியாக
அருளிச்செய்கிறார் ‘அடிபட்டவாறே’ என்று தொடங்கி. திருவடிகள்
என்றும், தண்டனை என்றும் பொருள்.
எனக்கு உபகாரகம் செய்து
எனக்காய் என் அப்பன்
அழிய மாறி என்னை நோக்க கடவ அப்பன்
தகப்பனார் ரஷகன் அல்லன்
இகுளை -விருத்த கீர்த்தனம் செய்யும் செவிலித் தாயாகவும் -தோழி யாகவுமாம்
தாய்க்கு தோழியாய் செவிலித் தாய்
என்னைப் பெற்றவளாயும்
வயிற்றில் வைத்து நோக்கிய
பொன்னப்பன் மணி அப்பன்
பொன் போலேயும் மணி போலேயும் முத்தாகவும் எனக்கு உபகாரகன்
தனக்கு ஒப்பார் இல்லா
மின் அப்பன் -மின்னல் போலே அழகிய –
மதிள் சூழ்ந்த
ஒப்பிலி அப்பன் -தன ஒப்பார் இல் அப்பன்
கிரித்ரிமம் -உப்பில்லா அப்பன் விருத்த விபூதி தத்வம்
6-1 பெரிய திரு மொழி -வேண்டேன் மனை வாழ்க்கையை விண்ணகர் மேயவனே
குமுத வல்லி தாயார் உடன் இவர் ஒருவரே சேவை ஆழ்வார்களில்
கல்யாண பிரார்த்தனை இங்கே செய்து
இதுவும் விருத்த விபூதி வைபவம்
அருளுதியேல் -அருள் இல்லை என்றால் வேண்டாம் -அருளினான்
உபகாரத்வத்தில் இவனை போல் இல்லை
ஜீயர் -அருளிச் செய்தபடி
மின்னிடை மடவாரில் மேல் விழ நான் தள்ள -உனக்கு ஹிதம் தெரியாது
உனக்கு நான் வேணும் காண் என்று மேல் விழுந்து -செய்து அருளிய உபகாரகன்
வலுக்கட்டாயமாக தன்னை ஆழ்வார் இடம் திணித்து கொண்டு
தன்னை எனக்கு தந்தவன் ஒப்பார் இல் அப்பன்
தந்தான் திருவடி நிழல்
உன்னை ஒழிந்த வெயிலே அமையும் என்று நான் போக சிற்றிலும் சிறு சோறும் திருவடியால்
அழித்து பாத சாயையை எனக்கு கொடுத்து
அடி பட்டவாறே -எனக்கு என்று வைதவற்றையும் பொகடுவாறே
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்.
வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.
Leave a Reply