உகவையால் நெஞ்ச முள்ளுருகி உன்தாமரைத்தடங்கண்விழிகளின்
1அகவலைப் படுப்பான் அழித்தாய் உன் திருவடியால்;
தகவு செய்திலை; எங்கள் சிற்றிலும் யாமடு சிறுசோறும் கண்டு,நின்
முக ஒளி திகழ முறுவல் செய்து நின்றிலையே.
பொ-ரை :- மகிழ்ச்சியாலே மனமானது உருகும்படியாக, உனது தாமரைபோன்ற விசாலமான திருக்கண்களின் பார்வையாகிற வலைக்குள்ளே அகப்படுத்துவதற்கு, எங்களுடைய சிற்றிலையும் யாங்கள் சமைக்கின்ற சிறு சோற்றினையும் பார்த்துக்கொண்டு நினது முகத்தின் ஒளி திகழும்படியாகப் புன்முறுவல் செய்துகொண்டு நின்றாய்இல்லை; உன் திருவடியால் அழித்தாய்; அதனால் தக்க காரியத்தைச் செய்தாயில்லை.
வி-கு :- நெஞ்சம் உள் உருக, கண்டு திகழ முறுவல்செய்து நின்றிலை; சிற்றிலையும் சிறுசோறும் உன் திருவடியால் அழித்தாய்; தகவு செய்திலை என முடிக்க. உருக என்பது, உருகி எனத் திரிந்து நின்றது. வலை அகப்படுப்பான் முறுவல்செய்து நின்றிலை என்க. அகவலைப் படுப்பான் என்பதனை, வலை அகப்படுப்பான் எனப் பிரித்துக் கூட்டுக. பிரித்துக் கூட்டாது, நின்றவாறே பொருள் கோடலுமாம்.
முற்றிலைப் பந்தைக் கழங்கைக்கொண்டோடினை முன்னும், பின்னும்
அற்றிலை தீமை, அவைபொறுத்தோம்; தொல்லை ஆலினிளங்
கற்றிலை மேற்றுயில் வேங்கடவா! இன்றுன் கான்மலரால்
சிற்றிலைத் தீர்த்ததற்குப் பெருவீட்டினைச் செய்தருளே.- என்ற அருமைத் திருப்பாசுரம் இங்கு நினைவிற்கு வருகின்றது. திருவேங்கடத்தந். 97.
ஈடு :- ஒன்பதாம்பாட்டு. 2“இவன் ‘போகவொட்டேன்’ என்று வளைத்துக் கிடந்ததற்குப் பிரயோஜனம் உள்ளது இவன் நினைத்தபடி பரிமாறப் பெற்றால் அன்றோ? ஒருதேச விசேடத்திலே முக்தர் சம்சாரிகளோடு உறவு அற்று இருக்குமாறுபோன்று இவன் முகம் பாராதே இருக்கிறோம்” என்று அறுதியிட்டுப் பேசாதே இருந்தார்கள்; பின்னர், நாம் இங்ஙனம் இருப்பின் இவன், ‘தன்னை நினைத்துக் கொண்டிருந்தோம் என்று இருப்பான்’ என்று ‘வேறுஒன்றிலே நோக்குள்ளமை தோற்றச் சிற்றில் இழைப்போம்’ என்று இழைக்கப் புக, ‘என்னைப் பாராதே இருப்பது மன்றிக்கே வேறுஒன்றிலே சிறிது நோக்குள்ளவர்களாகவும் இருப்பதே’ என்று சிற்றிலையும் சிறுசோற்றினையும்தன் திருவடிகளாலே அழிக்க, அதனாலே அவர்களுக்குச் சீற்றம் பிறந்து, தாங்கள் கொண்ட கொள்கையை மறந்து அவன் முகத்தைப் பார்த்துச் சொல்லுகிறார்கள். 1அவனுடைய விருப்பம் நிறைவேறுவதற்கும் சாதனம் திருவடிகள் காணும். அடியுடையார்க்கெல்லாம் சாதித்துக்கொள்ளலாமே.
உகவையால் நெஞ்சம் உள்உருகி – 2வாராய்! உன்செயல் பயன் இல்லாத செயல்காண்; பிரிந்து நெஞ்சினைப் புண்படுத்துகையாலே வந்த உருகுதல் ஒழிய, எங்களுக்கு உகவையால் நெஞ்சம் உள்உருகப் பண்ணவன்றோ நீ பார்த்தது; அது செய்யப் போகாது. உன் தாமரைத் தடம் கண்விழிகளின் அகவலைப் படுப்பான் – 3பகல்கண்டகுழியிலே விழவிட்டு அகப்படுத்துவான்; 4திருஷ்டிபந்தத்தாலேயன்றோ தனக்கே உரிமையாக்குவது. தாமரையைப்போலே வாசனையையும் குளிர்த்தியையும் சிவப்பையுமுடைத்தாய், அநுபவிக்கின்றவர்களால் உண்டறுக்க ஒண்ணாத இன்பமிகுதியையுடைய திருக்கண்களின் நோக்காகிற வலையுள்ளே அகப்படுத்துகைக்காக. அகவலை – வலைக்குள்ளே. அன்றிக்கே, 5அகவிய வலை -என்றுமாம்; கண்ணென்னும் நெடுங் கயிறே அன்றோ, நாய்ச்சியார் திரு. 14 : 4.-. 6‘கண்ணிலே அகப்பட்டால், ஜன்னிஜு ரத்தாலே பீடிக்கப்பட்டவர்களைப் போலே பிதற்றுமித்தனை அன்றோ. “தாமரைக் கண்ணனை விண்ணோர் பரவும் தலைமகனை”-திருவாய்.
2. 6 : 3.-என்பதன்றோ மறைமொழி. உன் திருவடியால் அழித்தாய் – 1தன் சிற்றிலை அன்றோ சங்கல்பத்தால் அழிக்கலாவது; 2இவர்களுடைய சிற்றிலைத் தொட்டு அழிக்க வேணுமே; 3உன் சிற்றில் அழிக்கும் பரிகரம் அமையாதோ இதற்கு? உலகத்தை அழிப்பது சங்கல்பத்தாலே அன்றோ. 4அடியவர்களுக்குத் திருவடிகள் உத்தேசியமாமாறு போன்று காதலிமார்கட்கும் உத்தேசியமாய் அன்றோ திருவடிகள் இருப்பன. அழித்தாய் – 5வெறும் சிற்றிலை அன்றுகாண் நீ அழித்தது; எங்கள் அகவாயையும் நீ அழித்தாய்காண்; சிற்றிலோடு எங்கள் சிந்தையையும் சிதைத்தாய்காண்.முற்றத்தூடு புகுந்து” என்ற நாய்ச்சியார் திருமொழி திருப்பாசுரம் அனுசந்தேயம். 2 : 9.- 6காலாலே சிற்றிலை அழித்து, கண்ணாலே எங்கள் எண்ணங்களையும் அழித்தாய்காண் என்கிறார்கள்.
தகவு செய்திலை – கிருபையுடையார் செய்வதைச் செய்திலை. 7பிரிந்தபோதே அன்புடைமை போயிற்றே யன்றோ; இனிக் கண்ணுடையார் செய்வதும் செய்திலை என்னுதல். கண் படைத்ததற்குப் பிரயோஜனம் நல்லதுகண்டு கொண்டிருத்தலன்றோ? 8உன் முகத்தன கண்கள் அல்லவே? -இது,
நாய்ச்சியார் திருமொழி, 2 : 5.-‘நான் செய்த குறை என்?’ என்ன, எங்கள்சிற்றிலும் யாம் அடு சிறு சோறும் கண்டு நின்முக ஒளி திகழ முறுவல்செய்து நின்றிலை – 1உன் படைப்பினைப் போன்று கொள்ளத் தக்கதாகாததோ எங்கள் படைப்பு? கொள்ளத் தக்கதன்றோ? ‘என்னுடைய படைப்புக் கொள்ளத்தகாததாயினவாறு என்? உங்கள் படைப்புக் கொள்ளத்தக்கதாயினவாறு என்?’ என்னுமே அவன்; உன்னுடைய படைப்புப் போன்று நெருப்பும் காற்றும் 2அன்னலும் துன்னலுமாக விட்டுக் கருமங்கட்குத் தகுதியாகப் படைக்கப்பட்டதோ இது? வண்டல் நுண்மணல் தெள்ளி யாம் வளைக் கைகளால் சிரமப்பட்டுப் படைக்கப்பட்டதன்றோ இது.அன்னல் – வெயில். துன்னல் – சிறு திவலை. ‘வண்டல்’ என்று தொடங்கும்
இவ்விடத்தில் “குண்டுநீர் உறை” என்ற நாய்ச்சியார் திருமொழி,திருப்பாசுரம் அநுசந்தேயம். 2 : 3.
நீ அடு சிறு சோறு 3நிர்மால்யத்தைப்போன்று புறம்பு ஒருவர்க்கு உண்ணலாகாது; நீயே உண்ணுமத்தனை; நாங்கள் அடு சோறு மூட நெய் பெய்து முழங்கை வழிவாரக் கூடி இருந்து உண்ணுமத்தனை யன்றோ என்பார் ‘யாம் அடு சிறு சோறும்’ என்கிறார்கள். ‘கண்டு நின்முக ஒளி திகழ முறுவல்செய்து நின்றிலையே’ என்றதனால் 4எங்களுடைய லீலா விநோதங்களைக் கண்டு பிரீதனாய், உன்னுடைய முக ஒளி திகழப் புன்முறுவல் செய்து நிற்கமாட்டிற்றில்லையே; இங்ஙன் செய்தவிடம் தக்கோர்மை செய்தாயல்லையே என்று தங்களுடைய இன்னாமையைத் தெரிவிக்கிறார்கள். தகவு செய்திலை – 5நாங்கள் சிற்றில் இழைக்கிறோமாகப் பாவித்துக் கடைக்கண்ணாலே உன் முக ஒளியையும் முறுவலையும் கண்டுகொண்டிருக்க வொட்டிற்றிலையே? முழுக்கப் பார்க்கில் எல்லாரையும் போன்றவர்களாவோமே? 6காதலனைப்பார்ப்பது கடைக்கண்ணாலேயன்றோ? 1எங்ஙனே பாராதே இருந்து சிற்றில் இழைத்தார்கள்தாம்!
எய்யவில் வளைத்ததும் இறுத்ததும் உரைத்தும்
மெய்விளை விடத்துமுத லையம்விட லுற்றாள்
ஐயனை யகத்துவடி வேயல புறத்தும்
கைவளை திருத்துபு கடைக்கணி னுணர்ந்தாள்.- என்றார் கம்பநாட்டாழ்வார்.
ஒன்பதாம்பாட்டு
-வளைத்து கொண்டதுக்கு பிரயோஜனம்
தேச விசேஷம் -அநாதர அவக்யா
பேசாமல் இருந்தார்கள்
சிற்றில் கட்டி சிறு சோறு சமைத்து
அந்ய பரதை உங்களுக்கு – நான் இருக்க கோபித்து
உதைத்து -திருவடிகளால் அளிக்க
அத்தாலே சீற்றம் பிறந்து
சங்கல்பம் மறந்து முகம் பார்த்து வார்த்தை சொல்கிறார்கள்
அவன் அபிமத சாதனம் திருவடிகள் காணும் -ரசோக்தி –
சகடாசுர நிரசனத்திலும்
அடி உடையவன் சாதித்துக் கொள்ளலாம்
உகவை துக்கம் மிக்கு நெஞ்சம் உருகி நிற்கிறோம்
தாமரை கண்ணால் அகவலைப் படுத்தி
சிறு சோறும் சிற்றிலும் கண்டு திருவடியால் அழித்தாய்
தகுதியான காரிமா இது உனக்கு
முறுவலும் கூ ட செய்து நின்று
துக்கம் மிக்கு இருக்கிறோம்
வ்யர்த்த பிரவர்த்தி –
உன்னையே நினைத்து உருகி இருந்தால் இந்த கார்யம் செய்யலாம்
அவனைப் பிரிந்த துக்கம்
உகவையால் -உகப்பால் இல்லை
உகப்பால் உருகினவர் போல் பார்க்கிறாய்
அனுபவித்த உகப்பால் உருக பார்க்கிறாய்
அகவலைப் படுத்தவும் உகப்பால் உருக்கவும் பார்க்கிறாய்
தாமரை தடம் பெரும் கண் -பகல் கண்ட குழியில் –
த்ருஷ்டியால் அகவலைப் படுத்தி போக்தாக்கள் உண்டு அறுக்க ஒண்ணாத –
அனுபவித்து முடிக்க ஒண்ணாத -நோக்கு -வலை –
அகவலை வலை அகம்
அகவிய வலை என்னவுமாம்
நெடும் கயிறு
கண்ணிலே அகப்பட்டால் –
தாமரைக் கண்ணனை விண்ணோர் பரவும் –
பிதற்றிக் கொண்டே இருக்க வேண்டியது தான்
சங்கல்பத்தால் அழிப்பது தனது சிற்றில் தான் -இத்தை அவனே நேராக வந்து திருவடியால் தான்
லீலையாக இருக்கும் சிருஷ்டி
மணல் கட்டி விளையாடுவார்சிப் போலே தத்வ த்ரயம்
நாயகி சிற்றில் அழிக்க -திருவடி ஸ்பர்சித்து அழிக்க வேண்டுமே
சேஷ பூதனுக்கு திருவடி உத்தேச்யம் போலே பிரணயிநிகளுக்கும்
அகவாயிலும் உள்ள கோபம் அழித்தாய்
சிடிலோடும் எங்கள் சிந்தையும் கூட சிதைக்க
காலாலே சிற்றிலை அழித்து கண்ணாலே அபிசந்தி உறுதி அழித்து
இரண்டுக்கும் இரண்டு பரிகரம்
கண்களுக்கு பிரயோஜனம்
கிருபை உடையார் செய்தது செய்ய வில்லையே
சிற்றில் அழகாக இருக்க பார்த்து இருக்காமல்
கண் தயை
யானைக்கு அருளை ஈந்த கண்
உன் முகத்தில் கண்கள் அல்லவே
வ்ரதம் அழித்து
அடுத்த பாட்டில் கூடப் போவதற்கு முன்னடி
சிற்றிலோடு எங்கள் சிந்தையும் சிதைக்க கடவையோ கோவிந்தா -ஆண்டாள்
கிருபை உடையார் செய்வதை செய்ய வில்லையே -தகவு-கிருபை
கண் -தயை
யாரே களை கண் போலே
உன் முகத்தில் கண்கள் அல்லவே
நான் செய்த குறை என்ன கேட்டான்
உனது சிருஷ்டி போலே அநுபாதேயம் இல்லை
எங்கள் சிருஷ்டி உபாதேயம்
நீ காற்றும் நீரும் -கரடுமுரடான -கர்ம அனுகுணமாக
நாங்கள் வண்டல் நுண் மணல் தேடி
நீ சமைக்கும் சோறு நீ ஒருவனே உண்ண தான்
நாங்கள் சமைப்பதும் அனைவருக்கும்
பொம்மானாட்டி கார்யம் -ஜனங்கள் அபிப்ராயம்
வண்ணான் -தளிகை செய்பவர் புருஷர்கள்
நிர்மால்யம் சிவன் கோயில் பிரசாதம் யாரும் உண்ண மாட்டார்
குளத்தில் கரைப்பார்கள்
சிவன் சொத்து குல நாசம்
மாலை மரியாதையும் பண்ண மாட்டார்கள்
நிர்மால்யம் கலைந்த மாலையையும் ஜலத்தில் கரைப்பார்கள்
சாளிக்ராமம் வைத்து அமுது செய்து கொடுப்பார்கள்
அத்தா பரமாத்மா
மூட நெய் பாய்ந்து கூடி இருந்து அனுபவிக்கும் படி நாங்கள் செய்யும் சிற்றில்
தகவு செய்தில்லை
கலைத்த தால் முன் சிரிப்பும் முறுவலும் காண முடியவில்லையே
கடைக் கண்ணால் தான் பார்க்க வேண்டும்
முழுக்க பார்த்தால் அனைவர் போலே ஆகுமே
பாராமல் இருந்து எங்கனே சிற்றில் இழைத்தார்கள்
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்.
வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.
Leave a Reply