திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -5-9-2-ஸ்ரீ M.A V .சுவாமிகள் –

என்றுகொல் தோழி மீர்காள்! எம்மைநீர் நலிந்தென் செய்தீரோ!
பொன்திகழ் புன்னை மகிழ்புது மாதவி மீதணவித்
தென்றல் மணங்கமழும் திருவல்லவாழ் நகருள்
நின்றபிரான் அடிநீறு அடியோம் கொண்டு சூடுவதே.

    பொ-ரை :- தோழிமீர்காள்! என்னை வருத்தி என்ன காரியத்தைச் செய்தீர்கள்? பொன்னைப் போன்று விளங்குகின்ற புன்னை என்ன, மகிழ் என்ன, புதிய மாதவி என்ன, இவற்றின் மேலே பொருந்தித் தென்றலானது வாசனை வீசுகின்ற திருவல்லவாழ் என்னும் திவ்விய தேசத்தில் நின்ற திருக்கோலமாய் எழுந்தருளியிருக்கின்ற பிரானுடைய திருவடிகளில் பொருந்திய நீற்றினை அடியோங்கள் கொண்டு சூடுவது என்றுகொல்? என்கிறாள்.

வி-கு :- தோழிமீர்காள்! பிரான் அடிநீறு அடியோம் கொண்டு சூடுவது என்றுகொல்! எம்மை: தனித்தன்மைப் பன்மை. மகிழ்-வகுளம். மாதவி-குருக்கத்தி. நீறு-புழுதி. அடியோம்: உளப்பாட்டுத்தன்மைப் பன்மை.

ஈடு :- இரண்டாம் பாட்டு. 1விலக்குகிற தோழிமார் தங்களைப் பார்த்தே, அவன் பாதரேணுவை நான் சூடுவது என்று? என்கிறாள்.

என்றுகொல் தோழிமீர்காள் – ‘எல்லை கடந்த பிராவண்யம் ஆகாது’ என்று விலக்குகிறவர்களையே, தன்பேற்றுக்கு நாள் அறுதியிட்டுத் தருமவர்களாகக் 2கேட்கிறாளேயன்றோ. 3அவர்கள் உலக அபவாதத்தைப் பற்றி விலக்குகிறார்கள்; இவள், தனது பேற்றினை, அவர்கள் தங்கள் பேறாக நினைத்திருக்கும் ஜககண்ட்யத்தாலே கேட்கிறாள். 4தோழிமாரேயன்றோ; இவளுடைய லாபாலாபமேயன்றோ அவர்களுக்கும் பேறு இழவு. தோழிமீர்காள் என்றுகொல் – 1உங்களுக்கு நான் பெறும் நாள் ஆராய்கையிலே யன்றோ அதிகாரம். எம்மை-2உங்களுடைய கையாலும் காலாலும் துகையுண்கிற என்னை. அன்றிக்கே, அவ்வூரிலே புக்கல்லது தரிக்கமாட்டாத என்னை என்னுதல். நீர் – என்னுடைய உஜ்ஜீவனத்தையே எண்ணுவதற்குரிய நீங்கள். அன்றிக்கே, எனக்குப் பிரியமே செய்துபோந்த நீங்கள் என்னுதல். நலிந்து என்செய்தீரோ – எனது தன்மையை அறியும் நீங்கள் என்வழியே போக வேண்டாவோ. அன்றிக்கே, 3உங்கள் தன்மைக்கு இது சேர்ந்ததோ, என் தன்மைக்கு இது சேர்ந்ததோ? என்னுதல். அன்றிக்கே, தோழிமீர்காள் எம்மை நீர் நலிந்து என் செய்தீரோ என்பதற்கு, உங்களுக்கு அவசியம் நலிய வேண்டினால் தென்றலையன்றோ நலிய அடுப்பது என்னுதலுமாம். 4என்ன மீளவொட்டாமல் காற்கட்டா நிற்க, நான் மீளும்படி என்?

செல்லுகிற உன்னை நலியாமல், தென்றலை நலிவான் என்? என்ன, அதற்கு
விடை கூறுகிறாள் ‘என்னை மீளவொட்டாமல்’ என்று தொடங்கி.
‘காற்கட்டா நிற்க’ என்றது, சிலேடை: காற்று வருத்தா நிற்க என்பது
பொருள். பந்தமாக நிற்க என்பது தொனி.

பொன்திகழ் புன்னை மகிழ் புது மாதவி – 5புன்னை பொன்னேய் தாதுதிர்க்கும்” – பெரிய திருமொழி, 5. 1 : 6.-என்கிறபடியே, பொன்னைப் போன்று பிரகாசிக்கின்ற புன்னை, அப்படியே இருக்கிற மகிழ், அப்போது அலர்ந்த குருக்கத்தி. இதனால், நலிகைக்கு 6இவை அமையாதோ, 7‘கடினமான ஸ்வபாவத்தையுடையராயிருப்பார் செய்வதை மிருதுத்தன்மை வாய்ந்தவர்களாயிருக்கிற நீங்கள் செய்யவோ என்கிறாள் என்றபடி. மீது அணவித் தென்றல் மணம் கமழும்-இவற்றின்மேலே தென்றலானது வந்து அணைந்து பரிமளத்தைக் கொண்டுபோந்து கமழாநின்றது. ‘ஆழ இழியில் பூவில் வெக்கை தட்டும்’ என்று மேலெழத் தீண்டி, அங்குள்ளனவெல்லாம் கொண்டுபோந்து கமழா நின்றது என்பாள் ‘மீது அணவி’ என்கிறாள். என்றது, 1“தாமரைப் பூக்களின் தாதுக்களோடு சேர்ந்தது” என்னுமாறு போலே, பூவில் கால் படாமே மேல் எழுந்த பரிமளத்தைக் கொண்டு போருகிறது என்றபடி.

வெக்கை தட்டாமல் மேலே ஸ்பர்சித்ததற்குப் பிரமாணம் காட்டுகிறார்
‘தாமரை’ என்று தொடங்கி.

“பத்மகேஸர ஸம்ஸ்ப்ருஷ்டோ வ்ருக்ஷாந்தர விநிஸ்ஸ்ருத:”

என்பது, ஸ்ரீராமா. கிஷ். 1 : 71 என்றது, மகரந்தங்களிலே மேலே ஸ்பர்சித்து
வந்தாற்போன்று, இந்தத் தென்றலும் மீது அணவி வந்தது என்றபடி

2அத்தலையில் உள்ளவை அடங்கக்கொண்டு தந்தாமது ஒன்றும் கொடாதே போருகை அந்நிலத்துள்ள பொருள்கட்கெல்லாம் ஸ்வபாவம் கண்டீர். 3கலம்பகன் அல்லது சூடப்பொறாத சுகுமாரரைப் போலே காணும் தென்றலின் ஸ்வபாவம் என்பாள். ‘பொன்திகழ் புன்னை மகிழ் புது மாதவி மீதணவித் தென்றல் மணம் கமழும்’ என்கிறாள். இதனால், பூவில் பரிமளத்தைத் தேடுவாரைப் போலே காணும் இது பரிமளத்தில் கலம்பகன் தேடுகிறபடி என்பதனைத் தெரிவித்தபடி. 4செருக்கராயிருக்கும் இராஜபுத்திரர்கள் முலைசரிந்தாரைப் ‘போகத்திற்குத் தகுதியுள்ளவரல்லர்’ என்று கழிக்குமாறு போன்று, கழிய அலர்ந்தவற்றைப் பாராமல் போருகிறது என்பாள் ‘புது மாதவி மீதணவும்’ என்கிறாள். 5கண்களுக்குத்தோற்ற நின்று நலியாமையாலே காணும் ‘நோவில்லை’ என்றிருக்கிறது. 1இவர்களுக்கு லாபாலாபம் ஒத்திருக்கச் செய்தேயும், ஹிதபுத்தி தொடர்ந்து நிற்பதனாலே இவை நெஞ்சிற்படாதேயன்றோ. 2‘இவர்கள்தாம் அந்வயத்தில் கூடாவிட்டால் வியதிரேகத்திலும் கூடலாகாதோ’ என்று காணும் இவள் நினைத்திருக்கிறது. 3இவர்களுக்குப் பேறும் இழவும் ஒத்திருந்தாலும் இவர்கள் இவள்தான் ஆகமாட்டார்களே, இவளுக்கே வருமவையன்றோ இவையெல்லாம். ‘பொன்திகழ் புன்னை மகிழ்’ என்றதனால், கண் இந்திரியத்திற்குக் கவர்ச்சிகரமாயிருப்பதனைத் தெரிவித்தபடி. ‘தென்றல் மணம் கமழும்’ என்றதனால், சரீரத்திற்கும் மூக்கிற்கும் அங்ஙனம் இருப்பதனைத் தெரிவித்தபடி.

திருவல்லவாழ் நகருள் நின்ற பிரான் – 4அவன் அத்தனை விடுவதும் செய்திலன். நான் நோவுபடாநிற்க, இவ்வளவிலே ஸ்ரீவைகுண்டத்திலே இருக்கையன்றிக்கே. திருவல்லவாழிலே புகுந்து கிட்டவிருக்கு மிதற்குமேற்பட உபகாரம் உண்டோ. 5“இது பல” என்னுமாறு போலே காணும் இவ்வளவில் ஆஸ்வாசம். “ஒரே பூமியில்இருக்கிறோம்” என்று சொல்லப்பட்டதன்றோ.

புணர்ச்சி யின்றிக்கே இருக்க, இங்ஙனம் இருத்தலை மாத்திரம்
உபகாரமாகக் கொள்ளலாமோ? என்ன, பெருமாள் பிராட்டியைப்
பிரிந்திருக்கச் செய்தேயும் தாம் இருந்த பூமியிலே அவள் இருத்தல்காரணமாக ஆஸ்வாசித்தாற்போலே என்கிறார் ‘இது பல’ என்று
தொடங்கி.

“பஹு ஏதத் காமயாநஸ்ய ஸக்யம் ஏதேந ஜீவிதும்
யத் அஹம் ஸா ச வாமோரூ: ஏகாம் தரணிம் ஆஸ்ரிதௌ”-என்பது, ஸ்ரீராமா. யுத். 5 : 10.

1“காற்றே வீசுக” என்று, –வாஹி வாத யத: காந்தா”-என்பது, ஸ்ரீராமா. யுத். 5 : 6.-இவர் கையாலே தொட வேண்டாதபடி இடைச்சுவரான கடல் கிடந்தேயாகிலும், ஒரு படுக்கையிலே இருப்பாரைப் போலே அவள் இருந்த பூமியிலே இருக்கப் பெற்றோமே என்றாரேயன்றோ பெருமாள். 2காலைப் பிடித்து ‘நீ இப்படிச் செய்ய வேணும்’ என்று வேண்டிக்கொள்ளுகிறாரேயன்றோ இவருடைய செல்லாமை. நின்ற பிரான் அடிநீறு அடியோம் கொண்டு சூடுவது என்றுகொல்

“வாஹி வாத – காற்றே வீசுக” என்றதனை, ரசோக்தியாக
அருளிச்செய்கிறார் ‘காலைப்பிடித்து’ என்று தொடங்கி. காலை – காற்றை.

– 3பூவில் சுண்ணம் பெறுவது என்றோ. மயிர் கழுவிப் பூச்சூட இருப்பாரைப் போலக் காணும். 4இவர்கள், இப்போது பிரிய நின்றார்களேயாகிலும் கலக்கும்போது அநுபவம் இவர்களுக்கும் ஒத்திருக்குமாதலின் ‘அடியோம்’ என்கிறாள். 5அவன் வந்தாலும் இவளுக்கு முன்னே கொண்டாடுவது இவர்களையன்றோ. 6ஸ்ரீ பரதாழ்வானை, ‘பிள்ளாய்’ உன் உள் வெதுப்பு ஆறுவது எப்போது?” என்ன, “பெருமாளும் தமக்கு வகுத்த முடி சூடி, நானும் எனக்கு வகுத்த முடி சூடி, இருவரும் முறை தப்பாமே கூறு ஒக்க நின்ற அன்று” என்றான்; அது போன்று, இவளும் ‘அடியோம் கொண்டு சூடுவது என்று’ என்கிறாள். 1“கோலமாம் என் சென்னிக்கு உன் கமலமன்ன குரை கழலே”-இது, திருவாய். 4. 3 : 6.– என்னுமவர் அலரோ.

இப்படிப் பிரார்த்தித்த பேர் உண்டோ? என்ன, அதற்கு விடை
அருளிச்செய்கிறார் ‘ஸ்ரீ பரதாழ்வானை’ என்று தொடங்கி.

“யாவந்ந சரணௌ ப்ராது: பார்த்திவ வ்யஞ்ஜநாந்விதௌ
ஸிரஸா தாரயிஷ்யாமி ந மே ஸாந்தி: பவிஷ்யதி”-என்பது, ஸ்ரீராமா. அயோத். 98 : 8.

அடிநீறு அடியோம் கொண்டு சூடுவதே என்று கொல்தோழி மீர்காள்  கூடுவேன் என்கிறார்
திவ்ய தேச போக்யதை விடாமல் பாசுரம் தோறும் அருளி
நித்ய சூரிகளே இவை
குளம் வருஷம் விமானம் எல்லாம் உத்தேச்யம்
கண்ணாலே பருகி பட்டர் போகும் ஐதிகம்
பொன் திகழ்
தனது பேற்றுக்கு நாள் குறிக்க தன்னை தடுக்கும் தோழிகளை கேட்கிறாள்
லோக அபவாதம் பற்றி தான் தடுக்குகிறார்கள்
தடுக்க அபிப்ராயம் இல்லை
இவள் பேற்றை தம் பேறாக நினைப்பவர்கள்
இவளும் அப்படியே
ஒரே அபிப்ராயம் இருவருக்கும்
இவளுடைய லாப அலாபங்கள் அவர்களுக்கும் உண்டே

தாயார் உபாயத்தில் துணிவு தோழி அத்யவசாயம் தெரிவிப்பார்கள்
என்று சேர்வேன் கூற வேண்டாவோ
பிரகிருதி அறிந்து எனது வழியில்
என்னை -தன்னைக் காட்டி
கையாலும் காலாலும் ஹிம்சை பண்ணி
உங்கள் வார்த்தையாலே
கால் காற்று
நலிந்து -உஜ்ஜீவனமே  யாத்ரை
நீர் -நீர் போய் ப்ரீதி செய்பவர் செய்யலாமா
உங்கள் பிரக்ருதிக்கும் எனது பிரக்ருதிக்கும் சேராதே
உங்களுக்கு அவசியம் நலிய வேண்டுமானால்
மீள ஒட்டாமல் கால்கட்டாக -தென்றல் கூட கட்டி வைக்க
திருத் தண் கால் -வாயுவுக்கு அந்தர்யாமியாக
மாதவி -முற்றம்
பொன் திகழ் -புன்னை புது மாதவி மகர தூள் புது மாதவி மலர்ந்து -அதன் மேல் தென்றல் வாசனை கொண்டு வந்து
திருவல்ல வாழ் –
இரண்டு புஷ்பங்கள் வாசனையையும் கொண்டு
பொன்னோடு ஒத்து பிரகாசிக்கும் துகள்
மகிள மரம்
மூன்றும் சேர்ந்து
மீதணவி –
மேலே ஸ்பர்சித்து -புஷ்பம் உஷ்ணம் படாமல்
வாசனை மட்டும் கொண்டு வந்து

பூவில் கால் படாமல் மேல் எழுந்த பரிமளம் மட்டும் கொண்டு
தன்னுடையதை கொடுக்காமல்
அவனைப் போலேவே காலும்
என்னையும் என் முலையையும் கொண்டு
அத்தலையில் உள்ளது அடங்க கொண்டு தன்னிடம் உள்ளது ஒன்றும் கொடுக்காமல்
பொன்னை -மூன்று பரிமளம் புன்னை மகிழ் மாதவி
கலம்பகம் அல்லது சூடப் பெறாமல் சுகுமாரமான தென்றல்
புது மாதவி -யவன பருவ ஸ்திரீகளை ராஜகுமாரர் தேடுவது போலே
மணம் கமழும் -கண்ணுக்கு தோற்ற அறியாமல் ஸ்பர்சத்தால் ஒன்றுமே அறியும்படி
லாபாலாபம் ஒத்து இருக்க செய்தேயும்
ஹித புத்தி சொல்வதால் அறியவில்லை
கூடும் காலத்தில் தோழிகள் இருக்க முடியாது
இவளுக்கு மட்டுமே வரும் இவை
நாயகிக்கு என்றே வரும்
இவள் தான் ஆக மாட்டார்கள்
ஸ்பர்ச -கண்ணுக்கு -மனம் பஞ்ச இந்த்ரியங்களுக்கும் உப லஷணம்
நோவு படா நிற்க -ஸ்ரீ வைகுண்டத்தில் இராமல் இங்கு வந்து நித்ய வாசம் செய்கிறான்

கண்ணுக்கு தெரியாமல் போகாமல் கிட்டே இருப்பதால் ஆஸ்வாசம் அடைய
கிஷ்கிந்தா காண்டம் -இலங்கையில் இருந்தாலும் ஒரே பூமியில் இருப்பது ஆறுதல் பெருமாள் வார்த்தை போலே –

ஜீவனத்துக்கு காரணம் இதுவே
கையாலே தொட முடியாதபடி இடைச் சுவராக கடல் இருந்தாலும்
காலைப் பிடித்து வேண்டுகிறாள்
காற்றை துன்புறுத்தாதே என்கிறாள்

காலைப் பிடித்து கெஞ்சுகிறாள்
அடி நீர் எம்பெருமான் பூ மகரந்தம் வேண்டி
அடியோம் பன்மை -தோழி சேர்த்து பிரார்த்தனை
அனுபவத்தில் அவளையும் கூட்டிக் கொண்டு –
சம்ச்லேஷத்தில் சேர்ந்தே அனுபவிக்க
திருவடியே உத்தேச்யம்
சென்னிக்கு அணியாக
பிள்ளாய் உனது உள் நோய் ஆறுவது எப்போது
பரதன் சிரசா தார யிஷ்யாமி -சூடிக் கொள்வது வரை ஆராது
வகுத்த முடி பெருமாளும் சூடி
அடி சூடும் அரசை தான் எய்த பின்பு தான்
இருவரும் முறை தப்பாதே நின்ற அன்று தான் சாந்தி
அவன் அவனை காட்டில் கால் கூறு –
நாட்டுக்கு முடி சூடி -அவனுக்கு லஷணம்
சேஷத்வம்
அடியிலே வகுத்து கிடக்க அவனுக்கு -நிர்ணயம் ஜேஷ்ட புத்ரனாக பிறந்த உடனே
இவனுக்கு தலையிலே
மாலடி முடி மேல் -வகுத்த முடி
கோலமாம் சென்னிக்கு ஆழ்வார்

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

 நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

 பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply