ஸ்ரீ பெரிய திருமொழி-1-1-6-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் –

எம்பிரான் எந்தை என்னுடைச் சுற்றம் எனக்கு அரசு என்னுடை வாழ் நாள்
அம்பினால் அரக்கர் வெருக்கொள நெருக்கி யவர் உயிர் செகுத்த எம் அண்ணல்
வம்புலாஞ் சோலை மா மதிள் தஞ்சை மா மணிக் கோயிலே வணங்கி
நம்பிகாள் உய்ய நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம் —6–

நம்பிகாள்-லௌகிக அனுபவ பூர்ணர் என்றும்-பகவத் குண அனுபவத்தால் பூர்ணர் என்றும்-
வம்பு -பரிமளம்
தஞ்சை -வெண்ணாற்றங்கரை கோயில் –

இத்தை நீர் போர ஆதரியா நின்றீர் — இது தனக்கு அர்த்தம் என் என்ன -சொல்கிறார்
இதனுடைய பாடத்தை ஜபித்து அத்தாலே பலம் பெற விருத்தல்
இத்தாலே பாபத்தைப் போக்கி கர்ம யோகத்துக்கு உடலாகுதல் செய்கை அன்றிக்கே
அர்த்த அனுசந்தானத்தாலே பேறு என்று தமக்கு பஷம் ஆகையாலே அர்த்தத்தைச் சொல்லுகிறார்
நம் ஆழ்வாரும் திரு மந்த்ரம் ஓர் இடத்திலே ப்ரஸ்துதம் ஆனால் -முன்னே யாதல் பின்னே யாதல்
அர்த்தத்தைச் சொல்லிப் போருவார்
(நாரணன் முழு ஏழு உலகுக்கும் நாதன்
ஈறில வண் புகழ் நாரணன்)
அர்த்த ப்ராதான்யம் தோற்ற ஜ்ஞானம் மோஷமாக வேண்டுகையாலே
(பக்திஸ்ச ஞான விசேஷம் -ஞானம் கனிந்த பக்தி)

எம்பிரான் –
எனக்கு உபகாரகன்

எந்தை
எனக்கு ஜனகன்

என்னுடைச் சுற்றம்
என் குடல் துவக்குக்கு ஆன எல்லா உறவு முறையும் ஆனவன்

எனக்கு அரசு
என்னை வன்னிய மறுத்து ஆண்டவன்

என்னுடை வாழ் நாள்-
என்னுடைய ஆயுஸு-

அம்பினால் அரக்கர் வெருக்கொள நெருக்கி யவர் உயிர் செகுத்த எம் அண்ணல்
சங்கல்ப்பத்தால் அன்றிக்கே அம்பாலே ராஷசர் அஞ்சும்படி நெருக்கி அவர்கள் உயிரை முடித்த எம் ஸ்வாமி
ஸ்வாமித்வத்தோடே தலைக் கட்டிற்றாய் நின்றது

இத்தால் சொல்லிற்று ஆயிற்று
மாதா பிதா ப்ராதா நிவாஸஸ் சரணம் ஸூஹ்ருத் கதிர் நாராயணா-ஸூ பால உபநிஷத் -என்கிறபடியே –

இது தான் உமக்கு வந்தபடி என் என்ன –
வம்புலாஞ் சோலை மா மதிள் தஞ்சை மா மணிக் கோயிலே வணங்கி –
நித்ய வசந்தமான சோலையையும் மா மதிளையும் உடைத்தான தஞ்சை மா மணிக் கோயிலே-வணங்கி வந்தது–
எல்லா உறவு முறையும் தானே என்று தோற்றும் படி அவன் வந்து நிற்கிற
சௌலப்யத்தை அனுசந்திக்கையாலே வந்தது-

நம்பிகாள் –
பகவத் வ்யதிரிக்த விஷயங்களைப் பற்றி தேக போஷக பரராய் இருக்கிறவர்களைச் சொல்லிற்று ஆதல்
பகவத் குண அனுபவம் பண்ணி அத்தாலே பூரணராய் இருக்கிறவர்களைச் சொல்லிற்று ஆதல்-

உய்ய நான் கண்டு கொண்டேன் –
நீங்கள் எல்லாம் புறம்பே போய் கிலேசப்படா படா நிற்க நான் உஜ்ஜீவிக்கும்படி காணப் பெற்றேன் -என்னுதல்
நீங்களும் உஜ்ஜீவிக்கும் விரகு அறிந்து கரை ஏறினாற் போலே நானும் கரை ஏறப் பெற்றேன் என்னுதல்-

நாராயணா என்னும் நாமம்
சர்வ வித பந்துவும் அவனே என்கிற அர்த்தத்துக்கு வாசகமான திரு நாமத்தைக் காணப் பெற்றேன்-

————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply