ஒன்பதாம் திருவாய்மொழி – “மானேய் நோக்கு”
முன்னுரை
ஈடு :- 1திருக்குடந்தையிலே சென்று புக்கவிடத்திலும் தம் எண்ணம் நிறைவேறாமையாலே திருவல்லவாழ் ஏறப்போக ஒருப்பட்டார்; திருக்குடந்தையிலே சென்று புக்கவிடத்தில் தம் எண்ணம் சித்தியாதது போன்று, திருவல்லவாழிலே முட்டப்போகவுங்கூட அரிதாயிற்று; அங்ஙனம் அரிதாம்படி தமக்குப் பிறந்த துன்பத்தை அந்யாபதேசத்தாலே அருளிச்செய்கிறார். 2“மாசறு சோதி” என்ற திருவாய்மொழியில், இவர்தாம் மடல் எடுக்கப் புக்கு, ‘அவனுக்குத் தாழ்வாம்’ என்று தவிர்ந்தார்;
ஸ்வாபதேசத்திலே சங்கித்துப் பரிஹரிக்கிறார் ‘மாசறு சோதி’ என்று
தொடங்கி. ‘அவனுக்குத் தாழ்வாம்’ என்றது, அவனுடைய ரக்ஷகத்வத்துக்குத்
தாழ்வாம் என்றபடி. “ஊரெல்லாம்” என்ற திருவாய்மொழியின்
முன்னுரையில் ‘சூரியன் மறைகையாலே மடல் எடுக்கை தவிர்ந்தார்’ என்று
அருளிச்செய்தாரேயாகிலும், இங்கு, ‘அவனுக்குத் தாழ்வாம் என்று தவிந்தார்’
என்று அருளிச்செய்கையாலே, இதுவும் ஒரு காரணமாகக் கோடல் தகும்.
இங்கு, ஆற்றாமை தோற்றக் கண்ட திருப்பதிகள்தோறும் புக்குத் திரியா நின்றார்; இதற்கு அடி யாதும் தெரிகிறதில்லை. 3அங்கு, அவன் ஸ்வரூபம் பரிஹரித்தார், இங்கு, தம்முடைய ஸ்வரூபம் நோக்கப் பார்க்கிறார்;
‘இதற்கு அடி யாதும் தெரிகிறதில்லை’ என்று சங்கையை இரண்டு
விதமாகப் பரிஹரிக்கிறார் ‘அங்கு அவன்’ என்று தொடங்கியும், ‘அங்கு
வடிவிலே’ என்று தொடங்கியும். ‘அவன் ஸ்வரூபம் பரிஹரித்தார்’ என்றது,
அவனுடைய நிருபாதிக ரக்ஷகத்வத்துக்குத் தம்முடைய முயற்சி
விரோதமாகையாலே, தம்முடைய முயற்சியை விட்டார் என்றபடி. ‘இங்கு,
தம்முடைய ஸ்வரூபம் நோக்கப் பார்க்கிறார்’ என்றது, அநுபவம்
இல்லாதபோது சத்தை கிடவாமையாலே, திருப்பதிகள் தோறும் புக்காகிலும்
அவனை அநுபவித்துச் சத்தையை நோக்கப் பார்க்கிறார் என்றபடி.
இதனால், தம்முடைய சத்தையை உண்டாக்கியே அத்தலையை நோக்க
வேண்டுகையாலே தம்முடைய சத்தைச் சித்திக்கும் பொருட்டுத்
திருப்பதிகள்தோறும் புக்கு அநுபவிக்கப் பார்க்கிறார் என்று
பரிஹரித்தாராயிற்று.
4அங்கு வடிவிலே அணையவேணும் என்று ஆசைப்பட்டார்;
அங்கு, வடிவிலே அணையவேணும் என்று ஆசைப்பட்டார்’ என்றது,
“மாசறுசோதி என்செய்யவாய் மணிக்குன்றத்தை” என்றதனைத்
திருவுள்ளம்பற்றி. ‘ஆசைப்பட்டார்’ என்றது, ஆசைப்பட்ட
மாத்திரமாகையாலே “தத் தஸ்ய சத்ருஸம் பவேத் – அச்செயல்
அவருக்கு ஒத்ததாகும்” என்றிருக்கலாம் என்றபடி.
பின்பு இவ்வளவும் வர அந்த வடிவிலே இறங்கி மூழ்கினபடியாலே ஆற்றாமை முறுகி, 1“கொம்மை முலைகள் இடர் தீரக் கோவிந்தற்கோர் குற்றேவல்” என்கிறபடியே,
“கொம்மை முலைகள் இடர்தீரக் கோவிந் தற்கோர் குற்றேவல்
இம்மைப் பிறவி செய்யாதே இனிப்போய்ச் செய்யும் தவந்தான்என்”-என்பது, நாய்ச்சியார் திரு. 13 : 9.
அடிமைசெய்ய ஆசைப்படுகிறார். ‘அடிமை செய்ய ஆசைப்படுகிறார்’ என்றது, “அடிகூடுவது என்று கொலோ” என்றதனைத் திருவுள்ளம்பற்றி.
இனி, இவர் தமக்குக் கலவியாவது, மானச அநுபவம் என்றேயன்றோ 2திருவாய்மொழியின் முன்னுரையிலே அடியிலே சொல்லிற்று;
‘திருவாய்மொழியின் முன்னுரையிலே’ என்றது, முதற்பத்திலே ‘திருமகள் கேள்வன் ஒன்றிலே’ என்றபடி.
இங்ஙனேயிருக்க, திருவல்லவாழ் ஏறப் 3புறப்பட்டுப் போகையாவது என்? உறவினர்கள் விலக்குதலாவது என்? என்னில்,
‘புறப்பட்டுப் போகையாவது என்?’ என்றதன்பின், ‘முடியப் போகமாட்டாமல் புறச்சோலையிலே விழுந்து கிடக்கையாவது என்’ என்பது எஞ்சி நின்றது; அதனைக் கூட்டிக்கொள்க.
4அந்த மானச அநுபவத்திற்கு ஒரு கலக்கம் வர அமையுமன்றோ.
இரண்டற்கும் விடை அருளிச்செய்கிறார் ‘அந்த’ என்று தொடங்கி. ‘அந்த
மானச அநுபவத்திற்கு ஒரு கலக்கம் வர அமையும் அன்றோ’ என்றது,
திருவல்லவாழ் ஏறப் போகிறது, மானச அநுபவமாய், முடியப்
போகமாட்டாமல் புறச்சோலையிலே விழுந்து கிடக்கை, மானச அநுபவ
அபாவத்தால் வந்த கலக்கம் என்றபடி. “உறவினர்கள்” என்றது,
சுவாபதேசத்தில், சம்பந்த ஞான உபாய அத்யவஸாய நிலைகளை.
‘அவர்கள் விலக்குதல்’ என்றது, சம்பந்த ஞான உபாய அத்யவஸாய
நிலைகளோடு கூடினவராய் நிரூபிக்குமளவில், தம் முயற்சி, அவனையே
ரக்ஷகனாகக் கொண்டிருத்தல் அவனுக்கே பரதந்திரப்பட்டிருத்தல் ஆகிற
ஸ்வரூபத்திற்கு முரண்பட்டதாகத் தோன்றுதலைக் குறித்தபடி.
5எம்பெருமானோடே கலந்து பிரிந்து பிரிவாற்றாமையாலே நோவு படுகிறாள் ஒரு பிராட்டி, தன்னுடைய குடிப்பிறப்பு முதலானவற்றையும் பாராமல்,(பிராசங்கிகமாகச் சங்கித்துப் பரிகாரம் செய்து, பின், இத்திருவாய்மொழியில்
அருளிச்செய்யப்பட்ட பொருளை விரித்து அருளிச்செய்கிறார்
‘எம்பெருமானோடே’ என்று தொடங்கி. ‘குடிப்பிறப்பு முதலானவற்றையும்’
என்ற உம்மை, அவனுடைய ரக்ஷகத்வம் முதலான குணங்களைத் தழுவுகிறது.) திருவல்லவாழ் ஏறப் புறப்பட்டுப் போகப்புக, இதனை அறியும் தோழிமார் வந்து ‘இது கார்யம் அன்று, நம் தலைமைக்குப் போராது காண்’ என்று ஹிதம் சொல்லி மீட்கப் பார்க்க, ‘இனி, நீங்கள் சொல்லுகிறவற்றால் நான் பெற்றது என்; 1அவ்வூரில் திருச்சோலையும், அங்குண்டான பரிமளத்தைக் கொய்துகொண்டு புறப்படுகிற தென்றலும், அங்கே தேனைக் குடித்துக் களித்துப் பாடாநின்றுள்ள வண்டுகளினுடைய இனிதான மிடற்றோசையும், ஊரிலுண்டான வைதிகக் கிரியைகளின் கோலாஹலங்களும், நகர சம்பிரமங்களும், இவையெல்லாம், நீங்கள் என்னை மீட்க நினைப்பதைப் போன்று ‘அங்கே போரு போரு’ என்று அழையாநின்றன; ஆன பின்பு, நீங்கள் சொல்லுகிறவற்றால் பெற்றது என்’ என்று தன் துன்பத்தை அவர்களுக்கு அறிவுறுத்தி அவர்களை வேண்டிக்கொண்டு; திருவல்லவாழிலே நான் நினைத்தபடியே போய்ப் புக்குப் பரிமாற வல்லேனே என்று அவர்களுக்குச் சொல்லுகிறாளாயிருக்கிறது. இத்திருவாய்மொழியில் வருகின்ற “தேனார் சோலைகள்”, “தென்றல்
மணம் கமழும்”, “பாண்குரல் வண்டு”, “பாடு நல் வேத ஒலி”, “மண்ணும்
விண்ணும் தொழநின்ற” என்ற பாசுரப் பகுதிகளைத் திருவுள்ளம்பற்றி
“அவ்வூரில் திருச்சோலையும்” என்று தொடங்கி அருளிச்செய்கிறார்.
“மானேய் நோக்கு நல்லீர்”, “நன்னலத் தோழிமீர்காள்” என்பனவற்றைத்
திருவுள்ளம்பற்றி ‘அவர்களை வேண்டிக்கொண்டு’ என்கிறார். 2‘இதுதான் நான் அநுபவித்தேன்’ என்று சீயர் அருளிச்செய்வர். பட்டர் திருவடிகளை ஆஸ்ரயித்துப் பின்பு ஒருகால் மேல்நாட்டுக்கு எழுந்தருளி மீண்டு பெரிய விரைவோடே ‘திருநாளுக்கு உதவ வேணும்’ என்று வர, திருக்கரம்பன் துறையளவிலே வந்தவாறே நினைவின்றிக்கே காவிரி பெருகிக் கிடக்க; இராத் திருநாள் எழுந்தருளி இங்குண்டான சம்பிரமங்களெல்லாம் செவிப்படுவது, வந்து புகுரப் பெறாதொழிவதாய்க்கொண்டு ‘போரநோவு பட்டோம்’ என்று அருளிச்செய்வர். ஏகதத்விதத்ரிதர்கள் சுவேதத்தீபத்தைச் சென்று கிட்டி, உள்ளுப் புகுகைக்குத் தகுதியில்லாமையாலே புறம்பே நின்று, அங்குள்ளார் எம்பெருமானைக் கண்டு படுகிற சம்பிரமத்தைச் செவியாலே கேட்டு நிற்பது, கண்ணாலே காணப் போகாதொழிவதாய்க் கிடந்து பட்டாற்போலே கிடந்து கூப்பிடுகிறாராயிற்று இவரும்.
அங்குத்தை வியாபாரங்களும் செவிப்படாநிற்கக் கிட்டப்பெறாமல்
சமீபத்தில் நின்று நோவு பட்டமைக்கு இரண்டு திருஷ்டாந்தங்கள்
காட்டுகிறார் ‘இதுதான்’ என்றும், ‘ஏகதத்விதத்ரீதர்கள்’ என்றும் தொடங்கி.
‘திருநாள்’ என்றது, மார்கழி மாதத்து அத்யயன உத்ஸவத்தை.
‘ஏகதத்விதத்ரிதர்கள்’ என்றது, பிரஹ்மாவினுடைய மானச புத்திரர்களான
இருடிகளை. மானேய் நோக்குநல்லீர்! வைகலும் வினையேன் மெலிய
வானார் வண்கமுகும் மது மல்லிகை கமழும்
தேனார் சோலைகள்சூழ் திருவல்லவாழ் உறையும்
கோனாரை அடியேன் அடிகூடுவது என்று கொலோ?
பொ-ரை :- மான் பார்வை போன்ற பார்வையையுடைய பெண்களே! வினையேன் நாள்தோறும் மெலியும்படியாக, ஆகாயம் வரையிலும் உயர்ந்திருக்கிற வளவிய பாக்குமரங்களும், தேன் பொருந்திய மல்லிகையும் வாசனை வீசுகின்ற தேன்பொருந்திய சோலைகள் சூழ்ந்த திருவல்லவாழ் என்னும் திவ்வியதேசத்தில் எழுந்தருளியிருக்கின்ற சர்வேச்வரனுடைய திருவடிகளிலே அடியேன் சேர்வது என்றுகொல்? என்கிறாள்.
வி-கு :- “மானேய்” என்பதில், ஏய்: உவம உருபு. நோக்கு – கண்கள். பார்வையுமாம். கமுகு-பாக்கு மரம். மல்லிகை – முல்லை விசேடம். கோனார் என்பதில், கோ என்பதற்கு, தலைவன் என்பது பொருள்; னகர ஒற்று, சாரியை; ஆர், உயர்வுப்பொருளைக் காட்ட வந்த விகுதி.
இத்திருவாய்மொழி, கலிநிலைத்துறை.
ஈடு :- முதற்பாட்டு. 1தோழிமாரைக் குறித்து, திருவல்லவாழிலே நின்றருளின சர்வேச்வரன் திருவடிகளைக்கிட்டப் பெறுவது என்றோ? என்கிறாள்.
மான் ஏய் நோக்கு நல்லீர் – 2“நான் திருவல்லவாழிலே போய்ப் புகும்படி உங்கள் கண்களாலே குளிர நோக்கித் திருவருள் புரிய வேணும் என்கிறாள்” என்றுபிள்ளான் பணிப்பர். மான் ஏய் நோக்கு நல்லீர் – மானை ஒத்த நோக்கினையுடையீராய் எனக்கு நல்லவர்களே! அன்றிக்கே, 1‘பிரிவாற்றாமையாலே நோவுபட்டும், சோலையழகிலே ஈடுபட்டும், நம்முடைய ஹிதவசனத்தாலே தளர்ந்தும் இருக்கின்ற இவளுக்கு, ‘போகலாகாது’ என்று விலக்கும் நம்முடைய வார்த்தைகள் செவிப்படுமாகில், இவள் மோஹிக்கும் என்று விலக்குகிற காரியம் தோற்றும்படி காதரேக்ஷணைகளாய்க் கொண்டிருக்க, ‘மான் ஏய் நோக்கு நல்லீர்’ என்கிறாள் என்னுதல். 2இவள் தனக்கு “அசூயையில்லாத” என்னும் இவ்வளவே அன்றோ வேண்டுவது. “இதம் து தே குஹ்யதமம் ப்ரவக்ஷ்யாமி – வைப்பாக வைத்ததையுமெல்லாம் சொல்லா நின்றேன் கேள். அநஸூயவே –
“இதம் து தே குஹ்யதமம் ப்ரவக்ஷ்யாமி அநஸூயவே
ஜ்ஞாநம் விஜ்ஞாநஸஹிதம் யத்ஜ்ஞாத்வா மோக்ஷ்யஸே அஸூபாத்”-என்பது, ஸ்ரீ கீதை. 9 : 1.
3அத்தலை குறைவற்ற பின்பு இத்தலை கிடக்குமோ.”
வைகலும் வினையேன் மெலிய – 4ஒருகால் மெலிந்து தரித்திருப்பார்க்கன்றோ பிரிவாற்றலாவது. வைகலும் மெலிய – 5காலம் கழியக் கழியக் காதல் கழியும்படியன்றோ சிற்றின்பத்தை விரும்பியிருப்பார்க்கு இருப்பது; 1மனனம் பண்ணி, பாவனையாய், பின்பு தரிசனமாய், பிரத்தியக்ஷ சமான ஆகாரமாய், பின்பு சரீரம் நீங்குங் காலத்தைப் பார்த்திருப்பார்படி அன்றோ இது. 2“தஸ்ய-எனக்கு, அத ஸம்பத்ஸ்யே-பின்பு சம்பந்நனாகக் கடவேன் என மேலே வருகின்ற தன்மை ஒருமை வினைமுற்றோடு கூடவேண்டுமே. யாவந்ந விமோக்ஷயே – எத்துணைக்காலம் சரீரத்தினின்றும் விடுபடாமல் இருக்கிறேனோ, தாவ தேவ சிரம் – எனக்கு அவ்வளவே கண்டாய் விளம்பம். அத ஸம்பத்ஸ்யே – பின்பு சம்பந்நனாகக் கடவேன்.” என்றது,
“தஸ்ய தாவ தேவ சிரம் யாவந் நவிமோக்ஷ்யே அத ஸம்பத்ஸ்யே”
என்பது, சாந்தோக்யம்.
எத்துணைக்காலம் சரீரத்தினின்றும் விடுபடாமலிருக்கிறேனோ,
அத்துணைக்காலந்தான் எனக்குத் தாமதம் அவனைப் பெறுவதற்கு; சரீரம்
விடுபட்ட பின், அவனை நான் பெறுவேன் என்பது இவ்வுபநிடத
வாக்கியத்தின் பொழிப்புரையாகும்.
3“இந்த ஆத்மா இந்தச் சரீரத்திலிருந்து விடுபட்டுப் பரமாத்மாவை அடைந்து தானான நிலையைப் பெறுகிறான்” என்றபடி.
எஷ ஸம்பிரஸாத: அஸ்மாத் சரீராத் சமுத்தாய பரஞ்ஜ்யோதி:
உபசம்பத்ய ஸ்வேந ரூபேண அபிநிஷ்பத்யேத’-என்பது, சாந்தோக்யம்.
இப்படிச் சரீரம் விட்டு நீங்கும் தினத்தைப் பார்த்திருப்பார் படி அன்றோ இது. வைகலும் வினையேன் மெலிய – தன்னைப் பிரியும்படிமஹாபாவத்தைப் பண்ணின நான், நாடோறும் தொடர்ந்து வருகிற வியசனத்தாலே மெலிவினையுடையவளாக. 1ஒரு நாள் மெலியப் பொறுக்கமாட்டாத தன்மையினையுடையவள் காண்! நெடுநாள் நோவு படுகிறாள். திருவடி கண்டு போந்த பின்பு பிராட்டி படுவனவெல்லாம் படுகிறாளாயிற்று இவளும். ஓர் இரவின் வியசனத்தைத் திருவடி பொறுக்க மாட்டிற்றிலன் அன்றோ;
இவள் நாள்தோறும் மெலிவதற்குப் பிராட்டியின் மெலிவினைத்
திருஷ்டாந்தம் காட்டுவதற்குத் திருவுள்ளம்பற்றி அதற்கு அவதாரிகை
அருளிச்செய்கிறார் ‘ஒருநாள் மெலிய’ என்று தொடங்கி. ‘திருவடி கண்டு
போந்த பின்பு’ என்றது, இலங்கையிலே போந்து பிராட்டியைக் கண்ட
பின்பு என்றபடி. பிரிவுற்ற நிலையிலே பிராட்டி பட்ட படிக்குப் பிரமாணம்
காட்டுகிறார் ‘இமாம்’ என்று தொடங்கி.
“இமாம் அஸித கேசாந்தாம் ஸதபத்ர நிபேக்ஷணாம்
ஸு கார்ஹாம் துக்கிதாம் த்ருஷ்ட்வா மமாபி வ்யதிதம் மந:”-என்பது, ஸ்ரீராமா. சுந். 16.
2“இமாம் அஸித கேஸாந்தாம்-மை வண்ண நறுங்குஞ்சியையுடையவர்க்கும் பேணத் தகும் குழலையுடையவள்காண். ஸதபத்ர நிபேக்ஷணாம் –
இங்கே திருநெடுந்தாண்டகம் 21-ஆம் திருப்பாசுரம் அதுசந்தேயம்
‘கமலக்கண்ணன்’ என்கிற கண்களாலே கண்டுகொண்டிருக்கத் தக்க கருங்கண்களையுடையவள் காண். ஸுகார்ஹாம்-அவர் மடியிலே இருக்கத் தகுமவள். துக்கிதாம் த்ருஷ்ட்வா-இந்த இருப்பு இருக்கத் தகாதவளைக் கண்டு. மமாபி வ்யதிதம் மந:- இன்ப துன்பங்களுக்கு அழியாத என்னுடைய நெஞ்சுங்கூட வருந்திற்றுக் காண்.” இப்படியே காணும் இவளுக்கும் இருக்கிறபடி. வினையேன் –3நாள்செல்ல நாள்செல்ல ஆசை கழியாதபடியான பாவத்தைச் செய்தேன். மெலிய, திருவல்லவாழ் உறையும் என்னுதல். மெலிய-நீர்ப்பண்டமாய் அழிகிறபடி.
வான் ஆர் வண் கமுகும் மது மல்லிகை கமழும் தேனார் சோலைகள் சூழ் திருவல்லவாழ் உறையும் கோனாரை – 4இதனால், இத்தலை மெலிய மெலிய அத்தலைமல்கா நின்றது என்பதனைத் தெரிவித்தபடி. 1அவ்வூரிற் சோலைக்கு நீர் இத்தலையில் மெலிவு போலே காணும். ஆகாயத்தைக் கண்செறி இட்டாற் போல் இருத்தலின் ‘வானார்’ என்கிறது. 2இவள் இருக்கிற இடம், “மரங்கள் எல்லாம் உலர்ந்து விட்டன” என்னும்படியாக இருக்கும். அவன் இருக்கிற இடம், “காலம் அல்லாத காலத்திலும் மரங்கள் பலத்தைக் கொடுக்கக்கூடியனவாக இருக்கும்.”
“அபி விருக்ஷா: பரிம்லாநா:”, “அகாலபலி நோவ்ருக்ஷா:” என்பன, ஸ்ரீராமா.
காட்சிக்கு இனியதாக இருத்தலின் ‘வண்கமுகு” என்கிறது. “குலையார்ந்த பழுக்காயும் பசுங்காயும் பாளை முத்தும், தலையார்ந்த இளங்கமுகு” இது, பெரிய திருமொழி, 6. 9 : 8.
என்னுமாறு போலே இருத்தல். 3அன்றிக்கே, கொடி தொடர வேண்டாதே, தானே கொடிக்கு உடம்பு கொடுத்து நிற்கிற ஒளதார்யம் எனலுமாம். மெய்யே கொடுக்கிற ஒளதார்யம் அன்றோ இது. மதுவையுடைத்தான மல்லிகைகளின் பரிமளம் இவள் இருந்த இடத்தே வந்து அலை எறிதலின், ‘மல்லிகை கமழும்’ என்கிறாள். 4மலட்டுக் கொடியாயிராமல் பூகத்தோடே அணைந்து பரப்பும் பூவாயிருத்தலின், ‘மது மல்லிகை’ என்கிறாள். 5இதற்கு முன்பு சொன்னவை எல்லாம் ஆஸ்ரயமாத்திரமேயாய்த் தேனே மிக்கிருத்தலின்,தேனார் சோலைகள்’ என்கிறாள். ஆக, வானார்வண் கமுகுகள் தேன் வெள்ளத்திலே அலைந்து, பிரளய காலத்தில் மார்க்கண்டேயன் பட்டவெல்லம் படாநின்றன என்றபடி. 1இருவரும் கூட இருந்து மதுபானம் பண்ணிக் களிக்க வேண்டியிருக்க, நான் மெலியத் தாமே மதுபானம் பண்ணி வாழ்கின்றவர் என்பாள், ‘தேன் வெள்ளமிடுகிற சோலைகள் சூழ்ந்த திருவல்லவாழ் உறையும் கோனாரை’ என்கிறாள். பாவியேன், இவ்வளவிலே 2“மதுவையும் குடிப்பது இல்லை” என்ன வேண்டாவோ.
“ந மாம்ஸம் ராகவோ புங்க்தே ந சாபி மது ஸேவதே”-என்பது, ஸ்ரீராமா. சுந். 36 : 42. திருவடி கூறியது.
3இவர், இவ்வாற்றாமையோடே இருந்து சோலையைக் கவி பாடுகிறது, உள்ளே நிற்கின்றவனைப் போன்று இவையும் இனிய பொருளாக இருக்கையால் அன்றோ. 4மனத்தினை உள் முகமாக்கி அநுபவிக்க மாட்டாதார்க்கு, தன்னை அவர்கள் கண்களுக்கு இலக்காக்கிக்கொண்டு உபாயவஸ்து நிற்கிறாப் போலே காணும் இவையும். யாவர்க்கும் தொழுகுலமான சர்வேச்வரனுடைய உபாய பாவத்தில் நிலை போலே. நித்தியப் பிராப்பியனாய்க் கொண்டு அங்கே இருக்கிறவன், அடியார்கள் உகந்தது ஒருபொருளைத் திருமேனியாகக்கொண்டு முகங்கொடுத்துக் கொண்டு நிற்பது போலே, அங்குள்ளாரும் இங்கே போந்து தாவரங்களையும் ஜங்கமங்களாயும் விலங்குகளாயும் அவனை விடமாட்டாதே நிற்கிறபடி. நித்தியரும், முக்தரும், சம்சாரிகளில் ருசியுடையாரும் உகந்தருளின நிலங்களைப் பற்றியன்றோ கிடப்பது. 1“இயல்பாயமைந்த சேஷத்வத்தையுடைய நித்தியசூரிகளும், சம்சார சம்பந்தம் நீங்கப்பெற்ற முக்தர்களும், பாவங்கள் எல்லாம் நீங்கி இனிமேல் சரீர சம்பந்தம் இல்லை என்னும்படி முடிவான சரீரமுடையவர்களான முமுக்ஷு க்களும் ஆகிய இவர்கள், மனிதப்பிறவியையும் விலங்கின் பிறவியையும் தாவரப் பிறவியையும் விரும்பினவர்களாய்க் கொண்டு ஸ்ரீரங்கத்தை எப்போதும் பற்றியிருக்கிறார்கள் என்று பௌராணிகர்கள் சொல்லிவைத்தார்கள்;
நித்திய சூரிகள், தாவரம் முதலானவைகளாக இங்கே தங்கியிருப்பதற்குப்
பிரமாணம் காட்டுகிறார் ‘இயல்பாயமைந்த’ என்று தொடங்கி.
“அஹ்ருத ஸஹஜ தாஸ்யா: ஸூரய: ஸ்ரஸ்தபந்தா:
விமல சரம தேஹா இத்யமீ ரங்கதாம”
மஹித மநுஜதிர்யக் ஸ்தாவரத்வா: ஸரயந்தே
ஸுநியதம் இதி ஹஸ்ம ப்ராஹு: எப்யோ நம: ஸ்தாத்”-என்பது, ஸ்ரீ ரங்கராஜஸ்தவம்.
இப்படிப்பட்ட மனித விலங்கு தாவரங்களின்பொருட்டு நமஸ்காரம் ஆகுக” என்றார் பட்டர். 2இராமாவதாரத்திலும் ஒரு இலக்குமணன் முதலியோர்கள், வானரங்களின் உருவத்தை அடைந்தார்கள்,
‘சர்வேச்வரன் அவதரித்த இடத்திலே நித்தியசூரிகள் முதலானோர்களும்
அவதரிப்பர்கள்’ என்பதற்கு அநுஷ்டானமும் காட்டுகிறார்
‘இராமாவதாரத்திலும்’ என்று தொடங்கி. இலக்குமணன்
முதலியோர்கள்-நித்தியர்கள். வானரங்களின் உருவத்தையடைந்தவர்கள்
-தேவர்கள். விபீஷணன் முதலியோர்-முமுக்ஷு க்கள்.
வானுளோ ரனைவரும் வான ரங்களாக்
கானினும் வரையினும் கடித டத்தினும்
சேனையோ டவதரித் திடுமின் சென்றென
ஆனன மலர்ந்தனன் அருளின் ஆழியான்.
வளையொடு திகிரியும் வடவை தீதர
விளைதரு கடுவுடை விரிகொள் பாயலும்
இளைஞர்கள் எனவடி பரவவேகி நாம்
வளைமதில் அயோத்தியில் வருதும் என்றனன்.- என்பன, கம்பராமாயணம்.
விபீஷணன் முதலியோர் பற்றிக் கிடந்தார்கள். அது போன்று. 1அதிலும் நடையாடித் திரிகின்றவர்கட்குப் போகைக்கும் தகுதி உண்டேயன்றோ, அதுவும் இல்லையே அன்றோ தாவரங்களுக்கு.
2ஜனநாதப் பிரஹ்மராயர் திருமுடிக்குறையிலே ஒரு மரம் வெட்டப்புக, (திருமுடிக்குறை – பெருமாளுடைய திருமுடிப் பிரதேசமான உபய
காவேரியின் மத்தியப் பிரதேசம். )அதனை எம்பார் கேட்டு ‘அல்லாளப் பெருமாளே! ஈச்வர விபூதியை அழிக்கப் பார்த்தாயோ’ என்ன, இவர் சொல்லும் வார்த்தையைக் கேட்கைக்காக, ‘ஈச்வர விபூதி அல்லாத இடம் உண்டோ’ என்ன, ‘அவை போல் அல்ல காண் இவை; சார்வபௌமனான ராஜாவும் தேவியுமாக முற்றூட்டாகக் குடநீர் வார்த்து ஆக்கும் சோலை போலே, பெருமாளும் பெரிய பிராட்டியாருங்கூடக் கைதொட்டு ஆக்குமவைகாண்’ என்று அருளிச்செய்தார். 3உகந்தருளின நிலங்களிலே மெய்யே பிரதிபத்தி விளைந்தார்க்கு அங்குள்ளவை எல்லாம் உத்தேஸ்யமாகத் தோன்றுமன்றோ. 4கால் வாங்கியல்லது நிற்க ஒண்ணாத சம்சாரம் அவனுக்குரியது என்னும் தன்மையாலே ஒருகால் உத்தேஸ்யமாகா நின்றதன்றோ. 5பிரமாணத்தில் பிறக்கும் எண்ணம் போலன்று கண்களுக்கு இலக்கானால் இருப்பது, முக்தரைப் போன்று பிரத்தியக்ஷ சமானமன்றோ ஆழ்வார்க்குத் ததீயத்வ ஆகாரம். 1பிரமாணத்தை நம்பினவனுக்கு இங்ஙனமல்லது எண்ணம் இல்லையன்றோ. நல்லான், பட்டர் திருவடிகளை ஆஸ்ரயித்து நெடுங்காலம் சேவித்து, பின்பு மரணதசையிலே பட்டர் எழுந்தருளி, ‘என் நினைத்திருந்தாய்’ என்ன, “ஒரு சர்வசக்தி உபகரிக்கும்போது ‘இங்ஙனம் கனக்கவாகாதே உபகரிப்பது’ என்று நினைத்திருந்தேன்” என்ன, ‘அது என், உன் தேசத்தைவிட்டு உறவினர்களை விட்டு நெடுந்தூரம் போந்து இங்ஙனம் நோவுபட்டுத் திருவடி சேரக் கிடந்தாயாகில் இங்கு உபகாரம் என்?’ என்ன, ‘வேறு தேசத்திலே இருந்து பொருள் அல்லாதவனாய் விழுந்து போகக் கடவ என்னை இவ்வளவும் அழைப்பித்து, உம்முடைய திருவடிகளை அடையச்செய்து ருசியை விளைப்பித்து, இத்தேசத்திலே உம்முடைய கண் வட்டத்திலே சரீரம் நீங்கும்படி செய்தானே’ என்ன, ‘ஆனாலும் தானாக அபிமானித்த சரீரம் போகாநிற்க, நீ இங்ஙனம் நினைத்திருந்தது என்கொண்டு?’ என்ன, ‘பிரமாணம்கொண்டு நினைத்திருந்தேன்’ என்றான்.
பிரமாணத்தாலே பிரதிபத்தி விளையக் கண்ட இடம் உண்டோ? என்ன,
அதற்கு ஐதிஹ்யம் காட்டுவாராகத் தொடங்குகிறார் ‘பிரமாணத்தை’ என்று
தொடங்கி. ‘பிரமாணங்கொண்டு நினைத்திருந்தேன்’ என்கிற இவ்விடத்தில்,
“ஈச்வரஸ்ய ச ஸௌஹார்த்தம் யத்ருச்சா ஸு க்ருதம் ததா
விஷ்ணோ: ப்ரஸாதம் அத்வேஷம் ஆபிமுக்யம் ச ஸாத்விகை:
ஸம்பாஷணம் ஸதாசார்ய ப்ராப்திம் ச”
என்பது, அநுசந்தேயம். மேலும்,
திருவாய்மொழி 2-ஆம் பத்து 3-ஆம் திருப்பதிகம் 2-ஆம் திருப்பாசுரம்
அவதாரிகையும், “ஆசாரிய லாபம் பகவானாலே” என்ற ஸ்ரீ வசன பூஷண
ஸ்ரீ சூக்தியும் நினைவு கூர்தல் தகும்.
2கண்ணழிவற்ற வெளிச் சிறப்புடையார்க்கு இங்ஙனமன்றோ இருப்பது. 1இருவராய்க்கொண்டு பரிமாற வேண்டும் தேசத்திலே தனியே நிற்கின்றான் காண் என்பாள் ‘தேனார் சோலைகள் சூழ் திருவல்லவாழ் உறையும் கோனாரை’ என்கிறாள். அவதாரங்கள் போல் தீர்த்தம் பிரசாதித்தொழியாது தங்கியிருத்தலின் ‘உறையும் கோனாரை’ என்கிறாள். 2நாராயண சப்தத்திலும் பிரணவத்திலும் போலே, ‘கோனாரை அடியேன்’ என்கிறாள். 3அவனைச் சொல்லும் போது தம்மையிட்டல்லது சொல்லப் போகாது; தம்மைச் சொல்லும்போதும் அவனையிட்டல்லது சொல்லப்போகாது. 4‘கோனாரை’ என்ற இடம், நாராயண சப்தார்த்தம்; ‘அடியேன்’ என்ற இடம், பிரணவார்த்தம். பிரணவம், ஜீவப்பிரதானம்; நாராயண பதம், ஈச்வரப் பிரதானம்.
‘நாராயண சப்தத்திலும் பிரணவத்திலும்’ என்று மேலே கூறியதனை
விவரிக்கிறார் ‘கோனாரை’ என்று தொடங்கி. ‘நான்காம் வேற்றுமை’
என்றது, ‘நாராயணாய’ என்ற பதத்திலேயுள்ள ‘ஆய’ என்னும் உருபினை.
‘அடி கூடுவது என்று கொலோ’ என்ற இடம், நான்காம் வேற்றுமையின் பொருள்; 5‘என்று கொலோ’ என்று பிரார்த்தனையோடு தலைக்கட்டுகிறதன்றோ. கோனாரை அடியேன் – 6நாயகன் தைரியத்தையுடைய நாயகன், இவள் தைரியம் இல்லாதவள். அடியேன் அடிகூடுவது என்று கொலோ – 1ஸ்வரூபத்துக்குத் தகுதியாக வேற்றுமையின் பொருளோடே தலைக்கட்டுகிறபடி. 2எல்லா அளவிலும் சொரூபம் அழியாதன்றோ. தாமாகவுமாம், பிராட்டிமார் தசையை அடைந்தவராகவுமாம், அதற்கும் அவ்வருகே சில அவஸ்தைகளையுடையராகவுமாம், எல்லாக் காலத்திலும் ஸ்வரூபம் மாறாது; 3பிண்டத்வ கடத்வ கபாலத்வ சூர்ணத்வங்களாகிற நிலை வேறுபாடுகளை அடைந்தாலும் மண்ணான வடிவுக்கு அழிவில்லையன்றோ. 4தாமான தன்மையில் 5“அடி தொழுது எழு”-திருவாய். 1. 1 : 1.-என்பர்; பரோப தேசத்தில் 6“திண்கழல் சேர்” – திருவாய். 1. 2 : 10.-என்பர்; தூதுவிடப்புக்கால் 7“திருவடிக்கீழ்க் குற்றேவல்”- திருவாய். 1. 4 : 2.– என்பர்; பிறரைச் சொல்லப் புக்கால் 8“தாட்பட்ட தண்துழாய்த் தாமம் காமிற்றாயே” திருவாய். 2. 1 : 2.-என்பர்; கலங்கி மடல் எடுக்குமளவானாலும் 9“தலையில் வணங்கவுமாங்கொலோ” –திருவாய். 5. 3 : 7.-என்பர்; பித்தேறிச் சொல்லும்போதும் 10“கண்ணன் கழல்கள் விரும்புமே” – திருவாய். 4. 4 : 8.-என்னுதல், 11“ஏறிய பித்தினொடு எல்லா உலகும் கண்ணன் படைப்பு” -திருவாய். 4. 4 : 7.-என்னுதல் சொல்வார் இத்தனை.
சரணாகதி -பல இடங்களில் -அணைக்க ஆசைப்பட்டு கிடைக்காமல்
துடிப்புடன் தலைகட்டி -திரு வல்ல வாழ் -ஏறப் ஒருப்பட்டு -புறச் சோலை -அழகால்
உள்ளே போக முடியாமல் -முழுக்க போககூட அரிதாம் படி துக்கம்
அன்யாபதேசம் மூலம் அருளிச் செய்கிறார் -நாயகி தசை
மடல் எடுக்க புக்கு அவனுக்கு அவத்யம் என்று -செய்யாமல்
இருள் வந்ததால் -இதுவும் ஒரு ஹேது –
இங்கு ஆற்றாமை கண்ட திருப்பதி தோறும் சரண் அடைந்து
ஆழ்வார் இருக்கும் திவ்ய தேசம் -புளிய மரத்தில் தொங்கி மங்களா சாசனம் கேட்டார்களாம்
தான் உகந்த ஊரெல்லாம் தன் தாள் பாடி -திரு மங்கை ஆழ்வார் சென்று சென்று மங்களா சாசனம் அருளி
அவன் ஸ்வரூபம் பரிகரித்தார் அங்கு மடல் எடுக்காமல் -ரஷகத்வத்துக்கு கொத்தை வரக்கூடாதே
இங்கே தம்முடைய ஸ்வரூபத்தை -நோக்க பிரிந்து தரிக்க முடியாமல் -சரண் அடைகிறார்
பெருமாள் முதலில் சமுத்திர ராஜனை சரண் அடைந்து -மிரட்டி கார்யம் கொண்டார் -இது அவன் ஸ்வரூபம்
அங்கு வடிவிலே அணைய ஆசைப்பட்டார் மாசறு சோதி ஆரா அமுதிலும்
ஆற்றாமை மிக்கு -கொம்மை முலைகள் இடர் -தீர இம்மைப் பிறவி செய்யாமல் –
கைங்கர்யம் செய்ய முடியாமல் இனி போய் செய்யும் தவத்தால் என்ன பலன் –
ஏக கண்டர்கள் –
சம்ச்லேஷம் மானஸ அனுபவம் மாதரம் தான்
விச்லேஷம் சாஷாத் அனுபவம் கிடைக்காமல்
தோழி பந்துக்கள் திரு வல்ல வாழ் போக -விடாமல் –
மானஸ அனுபவம் -அதுவே கலக்கத்துக்கு காரணம்
அங்கு போகவும் சக்தி இன்றி போவதாகவும் புறச் சோலையில் இருப்பதாகவும் -மானஸ அனுபவம்
துடிக்கிற துடிப்பு தலை மகள் பாசுரம்
பேறு தப்பாது என்ற துணிகை -தோழி தாய் பாசுரம்
கலந்து பிரிந்து ஆற்றாமை மிக்கு நோவு பட
பிராட்டி தன்னுடைய ஆபிஜாத்யம் பாராமல்
திருவல்ல வாழ் புறப்பட்டு போக
தோழிமார் உன்னுடைய பெருமைக்கு சேராது ஜீவாத்மா ஸ்வரூபதுக்கு சேராது ஸ்வாபதேசம்
திருச் சோலை தென்றல் -மதுபானம் பண்ணி வண்டுகள் மிடற்று ஓசை வைதிகர் ஓசை
நீங்கள் நீக்க நினைக்குமோ பாதி இவை வர சொல்லி
தனது ஆர்த்தியை சொல்லி
அவர்களையும் தேற்றி -தடுக்காமல் இருக்க வைக்க
போக முடியவில்லையே சக்தி இல்லையே என்று அருளுகிறாள்
ஐதிகம் -ஜீயர்
காஞ்சி உத்சவம் சேவிக்க போக -traffic jamil -மாட்டிக்
கொண்டு பட்டர் திருவடிகளில் ஆஸ்ரயித்து மேல் நாட்டுக்கு யழுந்து அருள
மீண்டும் கைங்கர்யம் செய்ய வரும் பொழுது
திரு உத்தமர் கோயில் வந்தவாறே அச்சிந்தமாக ஆறு பெருகி இருக்க
இங்கு உள்ள சப்தம் செவிப்பட -ஆனால் போக முடியாமல் இருக்க நஞ்சீயர் நோவு பட்டார்
ஸ்வேத தீபம் கிட்டி -மானஸ புத்ரர்கள் புக முடியாமல் புறத்தே நின்று
எம்பெருமான் அனுபவிக்கும் சப்தம் செவியாலே கேட்டு கண்ணாலே காணப் பெறாமல் இருந்தது போலே –
இப்படியே பத்து பட்டும் இந்த திருவாய் மொழியில்
முதல் -பாட்டில்
திருவடிகளை கிட்டப் பெறுவது என்று கொலோ என்கிறாள்
மானைப் போன்ற கண்கள் கொண்ட -நல்லவர்களே தடுக்காதீர்
வைகல் -நித்யமாக
கமுகு ஆகாசம் வரை வளர்ந்து
வளர்ந்து மல்லிகை வாசனை
வீசும் தென்றல் காற்று
தேனார் சோலைகள் சூழ் திருவல்ல வாழ்
கோனார் அரசனார்
அடியேன் அடி கூடுவது என்று கொலோ
உங்கள் கண்ணாலே கடாஷித்து அருளும் -பிள்ளான் நிர்வாகம்
ஏழையர் -மட நோக்கி உன் தோழி -அங்கும் கடாஷம் அருள -புருஷகாரம் முன்னாக
குளிர நோக்கி பிரசாதிக்க வேண்டும்
மானை ஏய்ந்த நோக்க உடையவர்
வாயாலே சொல்ல வில்லை -கண்ணாலே பார்த்து போகாதே என்கிறார்களாம்
நோக்கு -அபிப்ப்ராயதுடன் பார்ப்பது
நல்லீர் -வேண்டாததை சொல்பவர் -தடுத்தாலும்
பக்தி யோகம் உபதேசிக்க போகிறேன் நீ அசூயை -இல்லாதவன் அர்ஜுனன்
பார்த்து சொன்னதை தடுக்காமல் இருந்ததால் நல்லவன் அங்கெ
அது போல் இங்கும் தடுக்க வில்லை கண்ணால் தான் பார்த்தார்கள்
நிதி போலே வைத்த ஞானம் எல்லாம் சொல்லப் போகிறேன்
குஹ்ய தமம் -இவை –
அத்தலை குறை அற்ற பின்பு -வேண்டாம் சொல்ல வில்லையே இத்தலை சொல்லாமல் இருக்குமோ
வைகலும் காலம் கழிய கழிய காதல் பெருக -கடலில் மிக பெரியதாய்
மெலிந்து கொண்டே இருக்க
மனனம் பண்ணி –நிதித்யதவ்ய வரை தர்சனம் பிரத்யஷ சமான ஆகாரம்
சரீர வியோகம் பார்த்து இருப்பார்
சாந்தோக உபநிஷத்
சரீரம் விட்டதும் நிச்சயம் கிட்டுவேன் உறுதி உண்டே
உத்தமன் -நான் அடையப் போகிறேன் -தஸ்ய -இத்தை குறிக்கும்
அந்த ஸ்லோக அர்த்தம் சாதிக்கிறார்
பரஞ்சோதி உபசம்பத்ய –
பிராப்தி கிட்டும் உடம்பு மெலியும் பொழுது
வ்யசன பரம்பரையில் அவஸ்தை –
ஒரு நாள் மெலிய முடியாத மார்த்வம் உடையவள்
திருவடி கண்ட பிராட்டி நிலையை இவளும் பட
ஒரு மாத துக்கம் அதிகம்
ஒரு இரவில் பட்ட துக்கம் திருவடி பொறுக்க மாட்டாமல்
அது போலே பராங்குச நாயகி வைகலும் மெலிய
மைவண்ண நறும் குஞ்சி உள்ளவனும் ஈடுபடும் படி
தாமரை
திருக்கண்கள் ராம கமலா பத்ராஷா பெருமாள் கண்டு கொண்டே இருக்கும் திருக் கண்கள் உடையவள்
இருப்பு பெறாமல் -என்னுடைய -நெஞ்சையும் இந்த்ரியங்கள் வென்ற திருவடி நெஞ்சும் உருகும் படி
வினையேன்
பிரிந்து துக்கம் பெருகி பிராணன் போகாமல் ஆசை அழியாமல் இருக்கும் பாபம் செய்த நான்
மெலியும் படி செய்ய வஸ்துக்களும் அவனும் சேர்ந்து
வாசி இன்றி –
மெலிய நீர் பண்டமாக இத்தலை மெலிய மெலிய அத்தலை வானார் வண் கமுகு சமர்த்தி ஏறிக் கொண்டு
இவள் உடைய மெலிவு சோலைகள் வ்ருத்திக்கு விளை நீராக கொண்டு
வானார் -ஆகாசத்தை கண் செவி இட்டால் போலே -மறைத்துக் கொண்டு
மரம் செடி வாட பெருமாள் போகும் பொழுது
பட்டாபிஷேகம் பொழுது மலர்ந்து
தர்சநீயமான கமுகு –
குலை குலையாக தொங்கி
மெய்யாக உருகி –
மெய்யை அடைய ஆசைப்பட்டு –
பூத்து குலுங்கும் மல்லிகை பரிமளம் இவள் இடம் வர –
தேனார் சோலைகள் சூழ்
தேன் மிக்கு உள்ள
தேனே மிக்கு இருக்கை வெள்ளமாக போக கமுகு மரம் அலை எறிய
நான் மெலிய தான் வர்த்திக்கும் கோனார்
இருவரும் சேர்ந்து அனுவவிக கூடிய தேனை தானே அனுபவித்து
ராமன் மாம்சம் கூட சாப்பிடவில்லை ஷத்ர்ய தர்மம்
இவர் இப்படி இல்லையே இவள் ஆற்றாமை இருந்தாலும்
அவனை போலே அனைத்தும் உத்தேச்யம் பரம போக்கியம் நித்ய சூரிகளே இவை
அவனை ஒக்க செடி கொடிகளும்
கண்ணுக்கு இலக்காக நிற்கும்
அவனை அனுபவிக்க மாட்டாதார் இவற்றை கண்டு
உபாசன வஸ்து -கண்ணுக்கு இலக்காக நிற்கும் திவ்ய மங்கள விக்ரகம் போலே
ஆஸ்ரிதர் உகந்த த்ரவ்யதை திரு மேனியாக தான் உகந்து கொண்டு
முகம் காட்டி இருப்பவன் போலே
நித்ய சூரிகள் இங்கே ஸ்தாவரம் ஜங்கமம் திர்யக் வடிவம் கொண்டு வர
பட்டர் ஸ்லோகம் ரங்க தாமத்தில் –
திருக் கோஷ்டியூரில் இருந்து போகும் பொழுது –
இயற்கையான சேஷத்வம் உள்ள சகஜம் -நித்ய சூரிகள் பிரக்ர்தி சம்பந்தம் இன்றி
முக்தர் -ஸ்ரீ வைஷ்ணவர் -விமல சரம சரீரம் -ஞானியை விக்ரகதோடே ஆதரிக்கும்
மனித த்ரியக் ஸ்தாவர -ரெங்க தாமம் நித்யமாக கொண்டு வர -அவர்களுக்கு நமஸ்காரம்
ராம அவதாரத்தில் -இது போலே உண்டே
சைதன்யம் உள்ள விபீஷண ஆழ்வான் கிளம்பி போக
செடி கொடிகள் நித்யமாக இருக்கும்
ஸ்தாவரங்கள் ஏற்றம்
-எம்பார் ஐதிகம் -பிரம்மா ராயர் =அதிகாரி -திருமுடித்துறையில் -மேற்கு பக்கம் மரம் வெட்டப் புக
ஈஸ்வர விபூதியை அழிய புக
இல்லாதது உண்டோ என்ன
அது போல் அல்ல காண் இது
அரண்மனை தோட்டம் தானே கையாலே செடி வைத்து -ஏற்றம் உண்டே
அது போலே திவ்ய தேச ஸ்தாவரங்கள் ஏற்றம் என்று அருளிச் செய்தாராம்
பெரிய பெரிய பிராட்டியாரும் முற்றூட்டாக அனுபவித்த
அனைத்தும் உத்தேச்யம் நமக்கு
கோனாரை சொல்லும் முன்பு இவற்றை ஆழ்வார் அருளிச் செய்து
அனந்தாழ்வான் மரம் போலே இன்றும் சேவை சாதிக்க -திருமலையில்
எம்பெருமான் பொன்மலை மேல் ஏதேனும் ஆவேனே –
பிரமாணம் கொண்டு காண வேண்டாமல் பிரத்யட்ஷமாக காணலாமே இவற்றை
ஜகம் அனைத்தும் அவன் உடைமை
பிரத்யஷம் விட பிரமாணம் உசத்தி ஞானிகளுக்கு
அனுமானம் பிரத்யட்ஷம் சாஸ்திரம் -மூன்றுமே பிரமாணம்
பிரமாணிகர் சாஸ்திரம் ஏற்றம் அறிந்தவர்
நல்லான் -சக்கரவர்த்தி -வம்சம்
பட்டர் ஸ்ரீ பாதம் ஆச்ரயித்து
அந்திம தசையில்
சர்வ சக்தி உபகரிக்கும் பொழுது தன்னுடைய பெருமைக்கு சேர
இங்கனே நோவு பட்டு -இப்படி –
தேசம் பந்துக்கள் விட்டு நெடு தூரம் வந்து நோவு பட்டு திருவடி சேர கிடக்கும் பொழுது
தேசாந்தரம் இருக்க விடாமல் உம்முடைய திருவடி ஆஸ் ரயக்க பண்ணி
ருசி விளைத்து உம்முடைய திரு முன்பு சரீரம் போக வைக்க
பிரமாணம் கொண்டு நினைத்து இருந்தேன் என்றாராம்
ஈஸ்வர சொவ்ஹார்த்தம் முதல் அடி
எத்ர்ச்யா
விஷ்ணு கடாஷம்
சாத்விகர் கூட்டம்
பிராணன் போகும் சமயத்திலும் நல்லான் இத்தை அருளி ஞானம் உடையவர் இருப்பு காட்ட ஐதிகம்
கோனாரை –
தனியாக அனுபவித்துக் கொண்டு இருக்கிறான்
அவதாரம் போலே தீர்த்தம் பிரசதித்து போகாமல்
அடியேன்
அவனை சொல்லி நாரம் சேருமே நாராயணன் சொன்னால்
தம்மை இட்டு அல்லது அவனை சொல்லப்
போகாது நான் இன்றி நீ இல்லை
நாரமும் அயனமும் சேர்ந்தே நாராயண
திரு மந்திர அர்த்தம்
பிரணவம் ஜீவபிரதான்யம்
அடி கூடுவது என்று கொலோ -பிரார்தனை உடன் தலைக் கட்டுகிறார்
சதுர்த்தி அர்த்தம் -ஆய -பிரார்த்தனை
தமாகவும் பிராட்டி ஆகவும் ஸ்வரூபம் மாறாமல் இருப்பாரே
மண் துகள் பானை போலே
அடி தொழுகையே ஸ்வாபம்
எல்லா தசையிலும் அடி விடாமல் அருளுகிறார்
கண்ணன் கழல்களை விடாமல
அடியேன் அடி கூடுவது என்று கொலோ என்கிறார்
என்னை மெலிய வைக்கத் தான் திருவல்ல வாழ் திவ்ய தேசத்தில் இருக்கிறான்
சோலைகளும் மெலிய காரணம்
மெலிய -இரண்டு இடத்திலும் அன்வயித்து
மெலிய கோனாரும் சோலைகளும்
அடியேன் அடி கூடுவது என்று கொலோ
அடியேன் –
அடி விடாத ஆழ்வார்
நாயகி நிலையிலும் பித்தேறின பொழுதும் கண்ணன் கழல்களையே நினைத்து போகிறவள்
24000 படியில் சிறப்பாக ஒரு அர்த்தம் காட்டி
ஆத்மா பல சரீரம் எடுத்தாலும் ஆத்மா மாறாதது போலே ஆழ்வாரும் அடியேன் அடி விடாமல் அருளுகிறார்
சேஷ பூதராய் தானே இவர்
என்று கொலோ -நாளைக் குறித்து
14 ஆண்டுகள் என்று சொல்லி சக்ரவர்த்தி வார்த்தை -பிராதா -பிரிந்து இருக்க மாட்டாமல்
அபலை நான் நாள் வேற சொல்ல வில்லை
கோனார் ஸ்வாமி நாராயண அர்த்தம்
அடியேன் ஜீவாத்மா அர்த்தம்
பிரணவ அர்த்தமே அருளி
நம பத அர்த்தம்
அடி கூடுவது என்று கொலோ ஆய -சதுர்த்தி அர்த்தம்
திருமந்திர அர்த்தம் அருளி
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்.
வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.
Leave a Reply