வென்றியே வேண்டி வீழ் பொருட்கு இரங்கி வேற் கணார் கல்வியே கருதி
நின்றவா நில்லா நெஞ்சினை உடையேன் என் செய்கேன் நெடு விசும்பு அணவும்
பன்றியாய் அன்று பாரகம் கீண்ட பாழியான் ஆழியான் அருளே
நன்று நான் உய்ய நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம் —4–
ஸ்ரீ வராஹ நாயனார் அருள் பிரதமத்திலே இவரும் அருளிச் செயகிறார்
நின்றவா-நின்றவாறு -என்றபடி –
பாழியான்-இடமுடையவன்-மிடுக்கை உடையவன்-
வியாக்யானம் –
வென்றியே வேண்டி –
பிதாவாகவுமாம் ஆசார்யனாகவுமாம் வென்றியே யாயிற்று இவன் வேண்டி இருப்பது –
தன்னை ஒழிந்தாரை கீழ்ப் படுத்தி தான் மேலாக வாயிற்று இவன் வேண்டி இருப்பது –
( ஸ்வ இதர ஸமஸ்த வஸ்து விலக்ஷணன் அவன் ஒருவனே )
தோல்வி குணமாம் விஷயத்தில் யாயிற்று வெல்ல நினைத்து இருப்பது –
வீழ் பொருட்கு இரங்கி –
கையிலே சிறிது அர்த்தம் உண்டாய் -அத்தாலே இறே இவன் ஒருத்தரையும் மதியாது இருப்பது –
அது அஸ்தரம் ஆனபடியாலே அபஹ்ருத்யமாய் இருக்கும் இறே –
அத்தை இழந்து கூப்பிடா நிற்கும்-
கௌரவ்யராய் இருப்பார் பக்கல் அபிமானம் பண்ணக் கடவது அன்றிக்கே இருக்க
அபிமானம் பண்ணி வர்த்தித்ததுக்கும் மேலே இரங்க கடவது அல்லாததுக்கு இருந்து கண்ண நீர் பாயா நிற்கும் –
அங்கன் அன்றிக்கே
தேக ஆத்மா அபிமானத்தைப் பண்ணி-தன்னை எல்லாருக்கும் மேலாக நினைத்து போந்ததுவே அன்றியே
அஸ்திரமான உடம்பை நித்யமாக வேணும் என்று சோகியா நிற்கும் என்னவுமாம்
வேற் கணார் கல்வியே கருதி –
கையிலே அர்த்தம் உண்டான காலம் பார்யையைச் செங்கற் சீரை கட்டிக் கூப்பிட்டு திரிய விடும் –
அர்த்தம் இழந்து கூப்பிடா நின்றால் அல்லாதாரோடு ஒக்க இவளும் வினவப் புகுருமே –
இவளைக் கண்டவாறே இவ் வர்த்தங்களை எல்லாம் இட்டு ஒரு பணியாக பூட்டிக் காணப் பெற்றிலோம் என்று மநோரதியாய் நிற்கும்-
கெடுத்த பொன்னை இப்போது பூணத் தேடும்
நின்றவா நில்லா நெஞ்சினை உடையேன் என் செய்கேன் –
ஊர்வசீ ஸ லோக்யத்துக்கு லோகம் அடங்க சாதன அநுஷ்டானம் பண்ணா நிற்க
நேர் கொடு நேர் அவள் தான் நடந்து உபஸ்தானம் பண்ணி முன்னே நிற்க
அர்ஜுனன் நமஸ்கரித்து நின்றான் நின்றான் இறே விரக்தியாலே –
இப்படிப் பட்டவன்
தஸ்யாஹம் நிக்ரஹம் மன்யே வாயோரி வஸூ துஷ்கரம் -என்று பிரதிகூல வாயுவை பிடித்துக்
கூடு கட்டிலும் என் நெஞ்சைப் பிடிக்க போகாது காண்–என்றான் இறே-
(சஞ்சலம் ஹி மனஸ் கிருஷ்ண என்றானே)
ஒரு விஷயங்களிலே அரை ஷணம் கால் தாளாத (தங்கி நிற்காத) நெஞ்சை உடையேனான நான்
இந் நெஞ்சை பரிகரமாகக் கொண்டு உன்னை பெறுகைக்கு ஈடான உபாய அனுஷ்டானம் பண்ண என்பது ஓன்று உண்டோ –
உன்னை இழக்கைக்கு உறுப்பாம் இத்தனை
என் செய்கேன்
அர்ஜுனனுக்கு பதினெட்டு ஒத்திலும் சோகத்தை உத்பாதித்தாற் போலே -கண்டது எல்லாம் இவருக்கு
பய வாஹமாய் இருக்கிறபடி
நீர் இப்படி இருந்தீர் ஆகில் உமக்கு பேற்றுக்கு அடி எத்தாலே என்று இருந்தீர் என்ன
பிரளயம் கொண்ட பூமி தன்னுடைய ரஷணத்தில் அசர்த்தமாய் அத்தை ரஷித்தான் யாவன் ஒருவன்
அவனாலே என்கிறார்
நெடு விசும்பு அணவும் பன்றியாய் அன்று பாரகம் கீண்ட பாழியான் ஆழியான் அருளே-
பிரளயம் கொண்ட பூமிக்கு ஸ்வ ரஷணத்தில் அந்வயம் உண்டாம் அன்று இறே
விஷயம் கொண்ட நெஞ்சை உடையேனான நான் எனக்கு ஹித சிந்தனை பண்ணுவது –
ஆகாசம் வெளி யடையும் படி விம்ம வளர்ந்த அவன் ரஷ்யத்தின் அளவு இல்லாதபடி யாயிற்று
ரஷகனாவன் வடிவைப் பாரித்த படி –
பூமி பிரளயத்தில் புக்கு முடிந்து போக புக்கவாறே நீருக்கும் சேற்றுக்கும் இறாயாத மஹா வராஹமானான் –
பல சம்ருத்தி காணப் பணைக்கும் வடிவைக் கொண்டான்
மாசுடம்பில் நீர் வாரா மானமிலா பன்றியாம்–11-8-
மஹிஷி உடம்பு பேணாதே -பாசி தூர்த்தது -என்றவாறே காந்தனான தானும் உடம்பு பேணாதே
மாசேறின உடம்பை உடையவன் ஆனான் ( மாசறு சோதி வடிவை மாற்றி )
மானமிலா –
ஈஸ்வரத் அபிமானம் பின்னாட்டாத படி இருக்கை
மாயா மிருகத்தை கண்ட போது இனத்தில் மான்கள் வந்து மோந்து பார்த்து விசஜாதீயம்
என்று கடக்க போயிற்றின இறே
அங்கன் அன்றிக்கே –
ஆத்மாநாம் மானுஷம் மன்யே -என்கிறது இங்கும் அனுவர்த்திக்கிற படி
ஆத்மானம் வராஹம் மன்யே என்று இங்குமாம்
பாரகம் கீண்ட
பூமிப் பரப்படங்க அண்ட பித்தியோடே புக்கு சேர்ந்தத்தை ஒட்டு விடுவித்து எடுத்த
பாழியான்
மிடுக்கை உடையவன்
ஆழியான்
ரஷிக்கும் இடத்தில் ஒரு பரிகர அபேஷை இல்லை –
ஒரு பரிகரம் கொண்டு ரஷிக்க பார்த்தான் ஆகில் அதுக்கு ஈடான பரிகரம் உடையவன்
அருளே
அபிமானம் பண்ணக் கடவதல்ல விஷயங்களிலே அபிமானம் பண்ணியும்-(வென்றியே வேண்டி)
சோகிக்க கடவ அல்லாததுக்கு சோகித்தும்-(வீழ் பொருட்கு இரங்கி)
நரக அவஹமான விஷயங்களை அநுபவிக்க மநோரதித்தும் (வேற் கணார் கல்வியே கருதி)
நின்றவா நில்லா நெஞ்சினை உடையேன் என்று
இப்படி கை கழிந்த என்னை
இனி இவன் தானாக மீள மாட்டான் என்று அதுவே ஹேதுவாக எடுக்க ஒருப்பட்ட
சர்வேஸ்வரன் கிருபையாலே
அருளே -என்னவுமாம்
அருளாலே என்னவுமாம்
நன்று நான் உய்ய
வென்றியே வேண்டி வீழ் பொருட்கு இரங்கி வேற் கணார் கல்வியே கருதி என்று
போந்தவன்
சுத்தனானான் என்று தெரியாதபடி -அஸ்ப்ருஷ்ட சம்சார கந்தனாம் படி ஆனேன்
நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம் –
வென்றியே வேண்டி வீழ் பொருட்கு இரங்கி -என்று அபிமானமும் லோபமும் இறே சொல்லிற்று
இப்படி போந்த நான்
அபாநித்வாத்யாத்ம குணோ பேதர் பெரும் பேற்றைப் பெற்றேன்
———————————————-
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .
Leave a Reply