கடியன் கொடியன் நெடியமால் உலகங் கொண்ட
அடியன் அறிவரு மேனி மாயத்தன் ஆகிலும்
கொடியஎன் நெஞ்சம் அவனென்றே கிடக்கும் எல்லே!
துடிகொள் இடை மடத்தோழி! அன்னை என்செய்யுமே!
பொ-ரை :- கடியன், கொடியன், நீண்ட மால், உலகத்தைத் தாவி அளந்த திருவடிகளையுடையவன், அறிதற்கு அரிய திருமேனியையுடைய மாயத்தையுடையவன் ஆகிலும், கொடிய என் மனம் அவன் என்றே கிடக்கும்; என்ன ஆச்சரியம்! துடியினது வடிவத்தைக் கொண்ட இடையினையும் மடப்பத்தினையுமுடைய தோழீ! தாய் என்ன செய்ய மாட்டுவாள் என்கிறாள்.
வி-கு :- முதல் இரண்டு அடிகளின் பொருள்களை வியாக்கியானத்திற்காணல் தகும். துடி-உடுக்கை.
ஈடு :- ஐந்தாம் பாட்டு. 2“நீ அவனுக்கு நீர்மை இல்லை, அவன் அருள் அற்றவன்’ என்றாயாகிலும், அச் சொல்லுக்கு ஒரு பிரயோஜனம் இல்லைகாண், அவன் குணம் இல்லாதவன் என்று நீ சொல்லுவது என்னை மீட்கைக்காக அன்றோ, அதுவும் நான் அவனைப் பற்றுகைக்கு உறுப்பாகச் சொன்னாய் ஆயினாயித்தனை என்கிறாள்.
கடியன் கொடியன் நெடிய மால் உலகம் கொண்ட அடியன் 3அவன் குணம் இல்லாதவன் என்று சொல்லும்போதும் நானே சொல்ல வேணுங்காண்; 1நீ மூட்டிக் கடக்க நின்றாயித்தனை போக்கி, அவனைக் கலந்து உட்புகாநின்ற என்னளவு தெரியுமோ உனக்கு அவனை; ஆனபின்னர் அவை தம்மையும் நான் சொல்லக் கேள் என்கிறாள். 2கடியன்-கூரியன்; தன் காரியத்திலே நோக்குள்ளவன். என்றது, தனக்கு ஒரு காரியம் உள்ளது ஆனால், எதிர்த்தலையின் அளவு பாராதே மேல்விழுந்து வந்து கலக்குமவன் என்றபடி. கடுமை-கூர்மை. கொடியன் –3தான் மேல் விழுந்து வந்து கலக்கச் செய்தே ‘பிரியேன்’ என்ன வல்லவன். என்றது, 4கலவியின் மத்தியத்திலே பிரிவினை நினைத்தவன் இனிச் செய்ய மாட்டாதது ஒன்று உண்டோ? என்றது, 5“பேதை நின்னைப் பிரியேன் இனி என்று அகன்றான்” என்கிறபடியே, கலக்கச்செய்தே மற்று ஒன்றினை நினைக்க வல்லவனுக்கு இனிச் செய்ய அரியது ஒன்று உண்டோ? என்றபடி. நெடிய மால்-மால் என்பது பெருமை. நெடிய என்பது, அதன் மிகுதியைக் குறிக்கின்றது. அறப்பெரியவன் என்றபடி. இதனால், கைபுக்கு இருக்கச் செய்தேயும் அளவிட ஒண்ணாதபடி இருக்குமவன் என்கை. 1‘பிரிய நினைக்கின்றான்’ என்று அறியா நிற்கச்செய்தேயும் “சேண் குன்றம் சென்று பொருள் படைப்பான் கற்ற திண்ணனவு” என்ன ஒண்ணாதபடியாய் இருக்கை. என்றது, 2மேல் விழுந்து வந்து கலவாநிற்கச்செய்தே பிரிய நினைத்தால், அதனை அறியச் செய்தேயும், ‘நீ பிரிய நினைத்தாய்’ என்று மடிபிடித்துக் காற்கட்டி விலக்க ஒண்ணாதபடியாய் இருக்கை. உலகம் கொண்ட அடியன் – 3பிறர் உடைமையைத் தனக்கு ஆக்க நினைத்தால் பின்னையும் அவர்களுக்கு ஓர் அடியும் எஞ்சாதபடி செய்யுமவன். அவர்களைப் பின்னே பாதாளத்திலே தள்ளுமவன். 4பாதாளங் கலவிருக்கை கொடுக்குமவன். 5ஒன்றைக் கொள்ளப் பார்த்தால், அவர்களுக்கு ஒன்றும் எஞ்சாதபடி கொள்ளும் திருவடிகளையுடையவன்.
அறிவு அரு மேனி-கிட்டினால், ‘இத்தலைக்கு எல்லாச் செல்வத்தையும் தர நினைக்கின்றானோ, எல்லாச் செல்வத்தையும் கொள்ளை கொள்ள நினைக்கின்றானோ, என்று அறிய ஒண்ணாதபடியான 1வடிவையுடையவன். 2‘என்னுடைய ஆத்மாவும் என்னுடைமைகளும் நீ இட்ட வழக்கு’ என்பாரைப் போலே சொல்லி ஆயிற்று இத் தலையில் ஆத்மாவையும் மற்றைச் செல்வத்தையும் கொள்ளைகொள்வது. என்றது, தன்னையும் தன்னுடைமையையும் இவள் இட்ட வழக்கு ஆக்கி, பின்னையாயிற்று இவளைத் தனக்கு ஆக்கிற்று என்றபடி. மாயத்தன்-‘நானும் என்னுடைமையும் நீ இட்ட வழக்கு’ என்ற இவ்வார்த்தையை நினைத்து அதிலே நெஞ்சு மூழ்கியிருக்க, அவ்வளவிலே கண்களிலே மணலைத் தூவி அகல வல்லவன். ஆகிலும்- 3நீ சொல்லிச் சொல்ல மாட்டாதவையும், சிசுபாலன் முதலானோர் சொல்ல மாட்டாதவையும் எல்லாம் நான் சொல்ல வல்லவள் அன்றோ அவை விடுகைக்கு உறுப்பாகப் பெற்றேனாகில். கொடிய என் நெஞ்சம் – 4உல்லோகமாய் உலகத்திற்கு வேறுபட்டதான என் நெஞ்சு. என்றது, நாட்டாருக்கு, குணம் பற்றுகைக்குப் பற்றாசாய்த் தோஷம் விடுகைக்கு உடலாய் இருப்பது; அங்ஙனன்றிக்கே, குணஹாநிதன்னையே பற்றுகைக்கு உடலாகக் கொள்ளும்படியான என் நெஞ்சம் என்றபடி. அவன் என்றே கிடக்கும்-5இத்தோஷங்கள் அவன் உடைமைகள் அன்றோ என்று ஈடுபட்டுக் கிடக்கும் என்றுபிள்ளான் பணிப்பர். என்றது, 1அவன் கடியன் என்றால் அவன் கடுமை இப்போதே காணவேணும்; கொடியன் என்றால், அவன் கொடுமை இப்போதே காணவேணும்; அவன் அடைய முடியாதவன் என்றால், அவன் அடைய முடியாதவனானபடியை இப்போதே காணவேணும்; அவன் எல்லாச் செல்வங்களையும் கொள்ளை கொள்பவன் என்றால், அவன் எல்லாச் செல்வங்களையும் கொள்ளை கொள்ள நான் இழந்திருக்கவேணும்; அவன் அறிய முடியாதவன் என்றால், அவன் அறிய முடியாதவனாக இருக்கும் தன்மையை இப்போதே அறியவேணும் என்ற படியாம். அன்றிக்கே, என் நெஞ்சுக்கு 2மாயாவாத ருசி உண்டோ? அறிகின்றிலேன் என்பர் சீயர். என்றது, விசேஷணாம்சத்தில் தாத்பரியம் இன்றிக்கே, விசேஷ்யத்திற்கு அவ்வருகு அறிகின்றது இல்லை என்றபடி. இதனால், அவனுடைய சம்பந்தம் குணம் காரணமாக வந்தது அன்று, ஸ்வரூபத்தோடு கூடியிருப்பது என்கை. எல்லே-என்னே! இஃது ஓர் ஆச்சரியம் இருக்கும்படியே! அன்றிக்கே, ‘உன்னை மீட்க நினைத்த நான் சொன்னபடியே அன்றிக்கே ஒழிந்த பின்பு, இனி, நீ நினைத்தபடியே நினைத்திரு’ என்று போகப் புக்காள் தோழி; இங்ஙனே வாராய் என்று அவள் கையைப் பிடித்து ‘எல்லே’ என்று அழைக்கிறாள் என்னலுமாம்.
இவள் இப்படிச் சொன்னவாறே, ‘இது ஓர் அன்பின் தன்மை இருந்தபடி என்?’ என்று நினைத்தவாறே தோழிக்கு ஒரு விகாரம் பிறந்தது; அதனைக் கண்டு ‘துடிகொள் இடை மடம் தோழி’ என்கிறாள். துடியோடு ஒத்திருக்கிற இடையையும், ஆத்ம குணத்தையுமுடைய தோழீ! அன்றிக்கே, 3உன் வடிவிற்கும் குணத்திற்கும் என் பக்கலுண்டான அன்பிற்கும் ஈடாக வார்த்தை சொல்லப்பாராய் என்கிறாள் என்னுதல். 1நான் அது அறியாமையாலும் வேண்டாமையாலும் சொல்லுகிறேனோ, தாய்சொல்லுமதற்கு அஞ்சிக்காண் நான் இப்படிச் சொல்லுகிறது என்ன, அன்னை என் செய்யுமே-உன் சொல் கேளாத நான், இனி, தாய் சொல்லோ கேட்கப் புகுகிறேன். 2அநசூயை, பிராட்டியைப் பார்த்துப் ‘பெண்களுக்குத் தெய்வம் கணவனே காணும்’ என்ன, கேட்ட பிராட்டி நாணமுற்றுக் கவிழ்தலை இட்டிருந்தாள்; ‘நான் இவர் பக்கல் ஈடுபாடுடையவளாய் இருக்கிற இருப்புக்குக் காரணம், பெருமாள் பக்கல் உண்டான குணங்களாலே என்றே அன்றோ நாட்டார் நினைத்திருப்பது; தெய்வ சம்பந்தத்தால் அவருக்குக் குணமுண்டான தித்தனை போக்கி, குணங்கள் இல்லாதவருமாய் அழகு இல்லாதவருமானாலும் நான் அவரை விடமாட்டாதே இருக்கும் இருப்பைக் காட்டலாமே அன்றோ அவரைக் குணங்களோடு பிரித்து வைக்கப் பெற்றதாகில்’ என்றாளே அன்றோ. 3ஒரு விஷயத்தில் பாவபந்தம் உறைத்திருப்பார் வார்த்தையாயிற்று இது. 4“வேம்பின் புழு வேம்பு அன்றி உண்ணாது; என்னக் கடவதன்றோ. நன்று; 1“இது, குணாதிக விஷயத்தில் சொல்லுகிற வார்த்தையாகில், ‘கரும்பின் புழு கரும்பு அன்றி உண்ணாது’ என்ன வேண்டவோ? என்னில், ‘அவனுக்கு இந்நன்மைகள் இல்லையேயாகிலும் நான் அவனை விட மாட்டேன்’ என்கிற பாவபந்தத்தில் உறைப்புத் தோற்றும்படி மாறாடிச்சொல்லுகிறதல்லது, குணாதிக விஷயத்தில் இது இருப்பதாமோ என்க. 2என் ஸ்வரூபத்தைப் பார்த்தால் நான் உன்னை விட மாட்டேன், நீ நீ அன்றிக்கே இருந்தாலும் என்னால் விடப் போகாது.
கடியன்
ஓன்று மட்டும் இல்லை
கொடியன்
ஐந்து சொல்லி
நீ சொல்வதே பற்றாசாக
குண க்ருத தாஸ்யம் இல்லை
ஸ்வரூபம் பற்றியே தாஸ்யம்
குணஹாணி சொல்லும் பொழுதும் நானே சொல்லுவேன்
மூட்டி கடக்க நின்றாய் நீ –
கலந்து முழுவதும் உட் புகுந்து அறிந்த என்னை போல் அறிவாயோ –
குருகுலம் -குட்டுப்பட்டு அறிந்த நன் அறிவேன்
சமுத்ரம் ஆழம் வானரம் அறியுமா மந்த்ரம் அறியுமே –
அவை தன்னையும் நானே சொல்லே கேளாய்
கடுமை கூர்மை ஸு கார்யம் பார்ப்பவன் -கடியன் –
கொடியன் மேல் விழுந்து கலக்கும் பொழுது பிரியேன் என்பான் -கேட்காமல் இருக்கும் பொழுதே
பேதை பிரியேன் -சொல்லி பிரிந்தான்
நெடிய மால் பெருமை மிகுதி அற பெரியவன்
இன்னது நினைந்து இருக்கிறன் அறியாமல்பிரிய இருக்கிறான் அறிந்தும் விலக்காமை
தன் மேன்மை அளவிட ஒண்ணாதபடி இருத்தலைத் திருஷ்டாந்த மூலம்
காட்டுகிறார் ‘பிரிய நினைக்கின்றான்’ என்று தொடங்கி.
காண்கின் றனகளும் கேட்கின் றனகளும் காணில் இந்நாள்
பாண்குன்ற நாடர் பயில்கின் றனஇதெல் லாமறிந்தோம்
மாண்குன்ற மேந்திதண் மாமலை வேங்கடத் தும்பர் நம்பும்
சேண்குன்றம் சென்று பொருள்படைப் பான்கற்ற திண்ணனவே- என்பது, திருவிருத்தம், 8.
கலக்கிறபோது பிரியேன் என்று சொன்னானோ? என்ன, ‘பேதை நின்னை’
என்று தொடங்கி அதற்கு விடை அருளிச்செய்கிறார். ‘மற்று ஒன்றினை’
என்றது, பிரிவினை. ‘செய்ய அரியது ஒன்று உண்டோ’ என்றது. முகம்
காட்டாமலே இருந்து முடித்தே விடுவான் என்றபடி.
ஏது செய்தால் மறக்கேன்? மனமே! தொழுதும் எழு
தாது மல்கு தடம்சூழ் பொழில் தாழ்வர் தொடர்ந்து பின்
பேதை நின்னைப் பிரியேன் இனி என்று அகன்றான் இடம்
போது நாளும் கமழும் பொழில் சூழ்ந்த புல்லாணியே.- என்பது, பெரிய திரு. 9. 3 : 3.
உலகம் அளந்து -பாதாளம் கலவிருக்கை -தாடாளன் -கொள்ளப் பார்த்தால்
ஒன்றும் சே ஷியாத படி திருவடி கொண்டவன்-அடியன் –
குறட் பிரமசாரியாய் மாவலியைக் குறும்பதக்கி அரசுவாங்கி
இறைப்பொழுதில் பாதாளம் கலவிருக்கை கொடுத்துகந்த எம்மான் கோயில்”
என்பது, இங்கே அநுசந்தேயம். பெரியாழ்வார் திருவாய்மொழி,
ஆனால் திருமேனி பார்த்தாள் சர்வ சொத்தையும் தர நினைக்கிறானோ
கொண்டு போக பார்க்கிறானா சொல்ல முடியாமல் மாயம்
திருமேனி காட்டி மகா பலியை ஏமாற்றி
ஆத்ம ஆத்மீயங்கள் நீ இட்ட வழக்கு சொல்லி அனைத்தையும் கொண்டு போவான்
வைஸ்யன் நித்யம் காசு கொடுத்து நம்பிக்கை வளர்த்து
தங்க ரதம் பண்ண சொல்லி -10 kg தங்கம் கொண்டு போய் –
மாயத்தன் -நெஞ்சை அபஹரித்து கண்ணில் மணல் தூவி அகன்று
ஆகிலும்
சிசுபாலாதிகள் சொல்ல முடியாத குறைகளையும் சொல்லுவேன்
கொடிய என் நெஞ்சம் லோக விசஜாதீயமான நெஞ்சு
நாட்டாருக்கு குணம் பற்றாசாக தோஷம் விடுகைக்கு
குண ஹாநிதானே எனக்கு பற்றுக்கைக்கு
அவன் என்றே கிடக்கும் –
அவன் கடுமை இப்போதே காண வேண்டும்
அவன் கொடுமை இப்போதே காண வேண்டும்
பிள்ளான் அருளிச் செய்த வார்த்தை -இவை
அன்றிக்கே
நஞ்சீயர் மாயாவாதியாக முதலில்
விசேஷ்யத்தில் ஊன்றி -குணங்கள் பற்றி -உண்மையாக நிர் குணம் –
ஈடுபட்டது அவன் இடம் தான் சொல்வதாக வியாக்யானம்
நெஞ்சுக்கு மாயாவாதி ருசி உண்டோ அறியேன்
மாயாவாத ருசியாவது, மாயாவாதிகளைப் போன்று விசேஷண அம்சத்தை
ஆதரியாமல், விசேஷ்யரூப பிரஹ்ம ஸ்வரூப மாத்திரத்தை ஆதரித்தல்.
எல்லே இது ஒரு ஆச்சர்யம்
உன்னை -மீட்பதுவாக சொல்லி -முடியாமல் தோழி போக புக்க இங்கனே வாராய் என்கிறாள்
பிரேம ஸ்வபாவம் இருந்த படி என் –
துடி கொள் இடை வடிவு மடப்பம் ஆத்ம குணம் வடிவுக்கும் சேர வார்த்தை சொல்லு
பிடிக்காமல் சொல்ல வில்லை
தாய் சொல்லுக்கு அஞ்சி சொல்கிறேன்
அன்னை என் செய்யுமே –
நீ சொல்வதையே கேட்க்க வில்லையே
அன்னை சொன்னால் என்ன
கொடிய என் நெஞ்சம் அவன் என்றே கிடக்கும் விவரிக்கிறாள் அடுத்து
ஸ்ரீ வசன பூஷணம்
அனசூயை பிராட்டி சம்வாதம்
இங்கே, ‘அநசூயை’ என்று தொடங்கி அருளிச்செய்யும் இது, “குணஹாநி
உண்டானாலும் அது விடுகைக்கு உறுப்பு அன்றிக்கே, பற்றுகைக்கு உறுப்பு’
என்னுமதற்குக் காட்டப்படும் சம்வாதமாகும். ஆதலால், இதனை,
இத்திருப்பாசுரத்தின் அவதாரிகையில் ‘அதுவும் நான் அவனைப் பற்றுகைக்கு
உறுப்பாகச் சொன்னாய் ஆயினாயித்தனை’ என்ற வாக்கியத்தின் பின்
கொண்டு கூட்டிப் பொருள் காணல் தரும். ‘நாட்டார் நினைத்திருப்பது’
என்றது, ‘நீ நினைத்திருப்பது’ என்றபடி. பிராட்டி இங்ஙனம்
அருளிச்செய்ததனால், பெருமாள் பக்கல் தமக்கு உண்டான பிராவண்யம்,
அவருடைய குணத்தால் வந்ததன்று; ஸ்வரூபத்தோடு கூடியது என்பது
தெளிவாம்.
குணஹாநி பற்றுகைக்கு உறுப்பாம் என்பதற்கு வேறு பிரமாணம்
காட்டுகிறார் “வேம்பின் புழு” என்று தொடங்கி.வேம்பின் புழு வேம்பன்றி உண்ணாது அடியேன்
நான் பின்னும் உன் சேவடியன்றி நயவேன்”-என்பது, பெரிய திருமொழி, 11. 8 : 7.
குண ஹீனரானாலும் விடாமல் இருப்பேன் -காட்ட முடிய வில்லையே
துரத்ரிஷ்டம் -குணங்களை பிரிக்க முடியவில்லையே -நிரூபிக முடியாதே
விஷய ஈடுபாடு -ஸ்வரூப பிரயுக்தமான தாஸ்யம் குண க்ருத தாஸ்யம் விட சிறந்ததே
வேம்புக்கு என்று இட்டு பிறந்த புழு போலே –
கரும்பின் புழு கரும்பு அன்று உண்ணாது சொல்லாமல் -இப்படி அருளி
வஸ்து பார்த்தே குணம் பார்க்காமல்
அது போல் எம்பெருமானை சத்தா பிரயுக்தமாக பற்றி இருக்கிறேன்
ஸ்வரூபத்தை பார்த்தால் –
அத்யந்த சேஷத்வம் பாரதந்த்ரம்
நீ குணாதிகனாக இல்லாமல் இருந்தாலும் விட போகாது-
குண க்ருத தாஸ்யம் -குணங்களுக்கு தோற்று
ஸ்வரூப ப்ரயுக்த தாஸ்யம் -குணங்கள் இல்லை என்றாலும் தாஸ்யம்
வேம்பு புழு -உதாரணம்
நிருபாதிக சேஷித்வம் ஸ்வரூபம் பார்த்தால் விட
மாட்டேன் நீ நீ அன்றிக்கே இருந்தாலும் உன்னை விடப் போகாது –
அடியேன்-அனந்யார்ஹன் -எனது ஸ்வரூபம்
கரும்பாய் இல்லாமால் இருந்தாலும் விட மாட்டேன்
வேம்பை அவனுக்கு திருஷ்டாந்தமாக சொல்லலாமா -சர்வ ராச வச்துதானே இவன் –
உன்னைக் கொண்டு விரோதியை போக்கி கொள்ள சந்தரன் போக்குக் கொள்கிறான்
ஆதி செஷன் கூடி இருந்து -அணைய ஆசைப்பட்டவனுக்கு உன்னைக்
கொடுக்கிறாய் வேம்பின் புழு
ஸ்வரூப ப்ரயுத தாஸ்யம் பிரதானம் குண க்ருத தாஸ்யம் விட
சிறந்தது முன்னோர் அருளிய வசனம் மிகக் கொண்டு ஸ்ரீ வசன பூஷணம்
உயிர் க்கு அணியாக அவரே வைத்த -பெயர்
ஆகிலும் கொடிய என்நெஞ்சம் அவர் என்றே கிடக்கும் -நம்பிள்ளை வார்த்தை-
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்.
வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.
Leave a Reply