திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -5-3-6-ஸ்ரீ M.A V .சுவாமிகள் —

அன்னைஎன் செய்யில்என்? ஊர்என் சொல்லில்என்? தோழிமீர்!
என்னைஇனி உமக்கு ஆசை இல்லை அகப்பட்டேன்
முன்னை அமரர் முதல்வன் வண்துவராபதி
மன்னன் மணிவண்ணன் வாசுதேவன் வலையுளே.

பொ-ரை :- தோழியர்களே! முற்பட்டவர்களான நித்திய சூரிகளுக்குத் தலைவனும் வளம் பொருந்திய துவாரகை என்னும் திவ்விய தேசத்திற்கு அரசனும் மணிவண்ணனுமான வாசுதேவனுடைய வலைக்குள்ளே அகப்பட்டேன்: ஆதலால், இனி, தாயானவள் எந்தக் காரியத்தைச் செய்தால் என்ன? ஊரிலுள்ள மக்கள் எந்தப் பழிச் சொற்களைக் கூறினால் என்ன? என் பக்கல் உங்களுக்கு ஆசை வேண்டாம் என்கிறாள்.

வி-கு :- என்னை, என்பது: வேற்றுமை மயக்கம். வண்ணம்-நிறம். வசுதேவன் குமரன்; கண்ணபிரான்.   ஈடு :- ஆறாம் பாட்டு. 1மேல் ‘அன்னை, நீ செய்கிற இதனைப் பொறுக்க மாட்டாள்’ என்ன, “அன்னை என் செய்யும்” என்று, அவள் பொறாமல் செய்வது என்? என்னுமளவிலே நின்றாள். இப்பாசுரத்தில், நீ இப்படி ஒரு விஷயத்தில் அறுதியிட்டிருப்பதை அறிந்தால், அவள் பிழைக்க மாட்டாள் என்ன, அவள் பிழைத்தால் என்? முடிந்தால் என்? என்கிறாள்.

அன்னை என் செய்யில் என்- அவள் பிழைத்தால் என்? முடியில் என்? என்கிறாள். 2“விரக அக்னியினால் கொளுத்தப்பட்டிருக்கிற நமக்குப் பெரியோர்கள் என்ன செய்வார்கள்” என்கிறபடியே, முடியாதே இருப்பார்க்கு அன்றோ இதனை நீக்க வேண்டுவது, கையற்றார்க்கு இது கொண்டு காரியம் என்? நன்று; – ‘தாயாருடைய நாசம் ஒரு தலையாகவும் மீளாதபடியாய், இவள் நாயகனுடைய அழகு முதலானவைகளில் ஈடுபட்டவள் ஆனாள்’ என்று ஊரார் பழி சொல்லுவார்களே என்ன, ஊர் என் சொல்லில் என்-அவர்கள் பழி சொல்லில் என்? குணங்களைச் சொல்லில் என்? 3“கொல்லை” என்னுதல், “குணமிக்கனள்” என்னுதல், இத்தனை அன்றோ அவர்கள் பழி சொல்லுவது. தோழிமீர்-‘தாய் என் செய்யில் என், ஊர் என் சொல்லில் என்’ என்று நீங்கள் மேல் விழுந்து என்னை இவ்விஷயத்தில் ஈடுபாடு உடையவளாக ஆக்குகை அன்றிக்கே, ‘தாய் பிழையாள், ஊரார்பழி சொல்லுவர்கள்’ என்று இதனைப் பழியாகச் சொல்லுமளவு உங்களது 1ஆன பின்பு. என்னை – 2“தாய் வாயிற் சொற்கேளாள் தன் ஆயத்தோடு அணையாள்” என்கிற ‘தாயார் பிழையாள், ஊரார் பழி சொல்லுவார்கள்’ என்றால் மீளாதபடி இவ்விஷயத்தில் ஈடுபாடுடையவளாய் இருக்கிற என்னை. இனி-உங்கள் சொல்லும் கேளாதபடி கைகழிந்த பின். உமக்கு – ‘இது பழி’ என்று மீட்கப் பார்க்கிற அளவிலே நிற்கிற உங்களுக்கு. ஆசை இல்லை-இனி என் பக்கல் உங்களுக்கு நசை அற அமையும்.

தோழிமீர் – 3இதற்கு முன்பு எல்லாம் ‘தோழி’ என்று உயிர்த்தோழி ஒருத்தியையும் பார்த்து வார்த்தை சொல்லிப் போந்தாள்; இப்போது இவளுடைய துணிவின் மிகுதியைக் கண்டவாறே ‘ஒவ்வொருவரும் ஒவ்வொரு வார்த்தை சொல்லியாகிலும் மீட்க வேணும்’ 4என்று ஆயவெள்ளம் எல்லாம் திரண்டன; அதனாலே ‘தோழிமீர்’ என்கிறாள். அகப்பட்டேன்-“இப்போது ‘ஹிதம்’ என்கிற புத்தியாலே ஒரு வார்த்தை சொன்னோமேயாகிலும், ஊரார்க்கும் தாய்மார்க்கும் இவ்வருகே எங்களிடத்தில் 5ஒரு வாசி நினைத்திருக்க வேண்டாவோ உனக்கு” என்ன, அது அப்படியே, அதில் குறை இல்லை; என்னைக் கடல் கொண்டது காணுங்கோள், நான் என் செய்வேன் என்கிறாள். முன்னை அமரர் முதல்வன் வண் துவராபதிமன்னன் – 1“சிறியார் பெரியார்’ என்ற வாசி இன்றிக்கே எல்லாரையும் ஒரு சேர ஆழப் பண்ணும் கடலிலே அன்றோ நான் அகப்பட்டது. “ரூப ஒளதார்ய குணை:”-ரூபம் என்றது, வடிவழகை. ஒளதார்யம் என்றது, அதனை எல்லாரும் அநுபவிக்கலாம்படி தன்னை முற்றக் கொடுத்துக் கொண்டிருக்கையை. “குணம்” என்றது, கொள்ளுகிறவனைக்காட்டிலும் தாம் தாழநின்று கொடுக்கும் சீலத்தை. தன் மேன்மை தோற்ற இருந்து கொடுக்கும் அன்று ஆள் பற்றதே அன்றோ; அதற்காகத் தாழநின்றாயிற்றுத் தன்னைக் கொடுப்பது. “பும்சாம்” – 2அந்த அழகும் கொடையும் சீலமும் வயிர உருக்கானவாம்; என்றது, பலம் அற்ற பெண்கள் படுமதனை வன்னெஞ்சரையும் படுத்த வல்லனவாம் என்றபடி. அன்றிக்கே, “பிரகிருதி புருஷர்கள்” என்றாற்போலேயாய், அசித்துக்கு வேறுபட்டவர்கள் எல்லாரையும் ஈடுபடுத்த வல்லன என்னவுமாம். “திருஷ்டி சித்தாபஹாரிணம்”-3கண்களுக்கு மனத்தின் துணை வேண்டாமலே, கண்களைப் பின்செல்லுமத்தனை நெஞ்சு. தாய் வேறு, கன்று வேறு ஆக்கும் விஷயம்அன்றோ என்றபடி. 1“எந்தப் பரமபதத்தில் எல்லாவற்றையும் காண்கிறவர்களும், எப்பொழுதும் உள்ளவர்களும், பகவானுடைய அநுபவத்தில் எப்பொழுதும் ஒருபடிப்பட்டவர்களும்” என்னும்படி இருக்கிறவர்கள் ஆகையாலே ‘முன்னை அமரர்’ என்கிறது. நித்தியசூரிகளுக்கும் சத்தைக்குக் காரணமாயிருக்கிற மேன்மையுடையவன் ஆதலாலே 2‘முதல்வன்’ என்கிறது. அன்றிக்கே, அப்பொழுதைக்கு அப்பொழுது ஆசைப்படக்கூடிய விஷயமானவன் என்னுதல். ஆக, அத்தகைய விஷயத்திலே அன்றோ நான் அகப்பட்டது என்பதனைத் தெரிவித்தபடி. ‘வண் துவராபதி மன்னன்’ என்றதனால், 3முதன்மை தோற்ற ஓலக்கங் கொடுத்துக்கொண்டிருக்கிற துறை அல்லாததிலேயோ நான் இழிந்தது’ 4“பதினாறாம் ஆயிரவர் தேவிமார் பணி செய்யத் துவரை என்னுமதில் நாயகராக வீற்றிருந்த மணவாளர் மன்னுகோயில்” என்கிறபடியே பெண்களுக்கு உடம்பு கொடுத்துக்கொண்டிருக்கிற நம் துறையிலே அன்றோ இழிந்தது என்பதனைத் தெரிவிக்கிறாள். அன்றிக்கே, ‘மன்னன்’ என்றதனால் 5மேன்மை தோற்ற ஓலக்கங் கொடுத்துக் கொண்டிருக்கிற இடமே நன்றாய் விட்டது நீர்மை தோற்ற இருக்கிற இடத்தில் விழுகிற பிரம்புகளிற் காட்டில் என்பதனைத் தெரிவிக்கிறாள் ஆதலுமாம்.மணி வண்ணன்-1அவ்விரண்டும் இல்லையேயாகிலும் விட ஒண்ணாததாயிற்று வடிவழகு. காதலி துவக்குண்பது வடிவழகிலே அன்றோ. வாசுதேவன்-வடிவழகு இல்லையாகிலும் விட ஒண்ணாததாயிற்றக் குடிப்பிறப்பு. 2“நான் தசரத சக்கரவர்த்தியினுடைய மருமகள்” என்கிறபடியே, பிராட்டி தனக்குப் பேற்றுக்கு உடலாக நினைத்திருப்பது ‘சக்கரவர்த்தி மருமகள்’ என்னும் இதனையே காணும். “எதிரியின் படையினை வருந்தச் செய்யுமவர்” என்கிறபடியே, எங்கள் மாமனார் உளராகில் எனக்கு இவ்விருப்பு இருக்க வேணுமோ? பகைவர்களும் ஜீவிக்க, ஜீவித்தவரோ அவர்.

3முன்னை அமரர் முதல்வன் வண் துவராபதி மன்னன்-அவனுடைய 4அருள் அற்ற தன்மையோடு நீர்மையோடு, ஊராருடைய பழியோடு புகழோடு வாசி அற்றாற் போலே, அவன் மேன்மையோடு சௌலப்யத்தோடு வாசி அற இரண்டும் மனக் கவர்ச்சியாய் இருக்கிறதாயிற்றுஇவளுக்கு. வலையுள் . . . அகப்பட்டேன் – 1அந்தப் பொதுவானதில் அன்றிக்கே, அவன் என்னைக் குறித்து நோக்கின நோக்கிலும் புன்முறுவலிலும் அன்றோ நான் அகப்பட்டது. 2ஆழ்வார் திருவரங்கப் பெருமாள் அரையர் வலையாக அபிநயித்துப் பாடாநிற்க, எம்பெருமானார் திருக்கண்களைக் காட்டியருளினார், “கமலக்கண் என்னும் நெடுங்கயிறு” எனக் கடவதன்றோ. அநுகூலம் போலே இருந்து தப்பாதபடி அகப்படுத்திக்கொள்ளும் நோக்கிலே அகப்பட்டேன்

“குரவ : கிம் கரிஷ்யந்தி தக்தாநாம் விரஹாக்நிநா”

என்பது ஸ்ரீ விஷ்ணுபுராணம், 5. 18 : 22. இச்சுலோகத்தில், “கிம் கரிஷ் யந்தி”
என்றதற்கு, பாவம், ‘முடியாதே’ என்று தொடங்கும் வாக்கியம். “தக்தாநாம்”
என்று இறந்த காலமாகச் சொல்லுவதற்கு, பாவம், ‘கையற்றார்க்கு’ என்று
தொடங்கும் வாக்கியம். இந்தச் சுலோகம் இங்குப் பிரமாணமானபடி எப்படி?
எனின், “பெரியோர்கள் என்ன செய்வார்கள்?” என்ற போதே, ‘அவர்கள்
இறந்தாலும் அதனையும் நாம் அநாதரித்திருப்போம்’ என்று
தோற்றுகையாலே, பிரமாணமாகத் தட்டு இல்லை என்க. “வாசுதேவன்
வலையுள் அகப்பட்டேன், அன்னை என் செய்யில் என்?” என்றதுவும்,
“விரஹாக்நிநா தக்தாநாம் குரவ: கிம் கரிஷ்யந்தி” என்றதுவும் ஒரு
பொருளையே கூறுவனவாம்.

குரவ –
பெரியார்கள் வந்து கலந்து நின்றனர் காவலும் கடந்து
கயிறுகள் -மாலையாகி
அன்னை சொன்னால் என்ன
முன் அமரர்
முதல்வன் துவராபதி மன்னன்
தாயார் -சொல்லையும் மீறி அவன் இடம் ஈடுபட்டு
பழி -புகழ்

வரம்பு மீறி -அப்பால் போனால் -குணம் மிக்கு -என்பார்கள்
தாய் வார்த்தை கேளாள் -மீலாத படி ஈடுபட்டு –
கை கழிந்த -பின்பு இனி
தோழி மீர் -பன்மையில் சொல்லி –
முன்பு தோழி சொல்லி ஒருத்தியை பார்த்து வார்த்தை சொல்லிப் போந்தாள்
ஆய வெள்ளம்  திரண்டு இவளை மீளப் -பார்த்தார்கள்
பரதன் சைன்யம் முழுவதும் கூட்டிப் போனானே பெருமாளை மீட்க
வாசி உண்டே –
நான் மீள முடியாமல் -சிக்கி கடல் கொண்டது காணும் என்கிறாள்
முனை அமரர் -பெரியான் அனைவரையும் அகப்படுத்தும் சமுத்ரம் –
சௌந்தர்ய சாகரம்
ரிஷிகளும் முளுகும்படி –
பும்ஸாம் திருஷ்டி சிந்த அபஹரினாம் ரூபம் ஔதார்யம் குணங்களாம்
ஆண்களையும் கூட அகப்படுத்தும் அழகு
கண்களையும் மனதையும் கொள்ளை கொள்ளும் ரூப ஔதார்யம்
தான் தாழ நின்று கொடுக்கும் -சீலம் மேன்மை தொன்றகொடுக்காமல் சக்கரவர்த்தி திருமகன்
வஜ்ரம் கூட உருக்கும்படி –புருஷாம் -அசேதனம் தவிர மற்றை அனைத்தும் உருகும் அழகு
திருஷ்டி சித்தம் கண்ணுக்கு மனசு சககாரியம் வேண்டாமல்
-தசரதன்
தாய் வேறு கன்று வேறாக
முன்னை அமரர் -முதல்வன் -மேன்மை உடையவன் –

எல்லா இந்திரியங்களும் பிரதானமான மனத்தினைப் பின் செல்லுவன
ஆகையாலே “சித்த த்ருஷ்டி அபஹாரிணம்” என்ன வேண்டாவோ? என்ன,
அதற்கு விடை அருளிச்செய்கிறார் ‘கண்களுக்கு’ என்று தொடங்கி. அதற்குக்
காரணம் யாது? என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார் ‘தாய் வேறு’
என்று தொடங்கி. கரணங்களுக்குப் பிரதானமானதாகையாலே மனத்தினைத்
‘தாய்’ என்றும், மற்றைக் கரணங்கள் மனத்தினைப் பின் செல்லுவன
ஆதலின், அவற்றைக் ‘கன்று’ என்றும் அருளிச்செய்கிறார். ஸ்ரீ
பரதாழ்வானையும் கைகேசியையும் வேறாக்கின விஷயம் அன்றோ இது
என்பது, தொனிப் பொருள்,

மேன்மை தோற்ற ஓலக்கம் -நீர்மை தோற்ற ஓலக்கம் துவராபதி –
இரண்டும் இல்லை என்றால் விட முடியாத அழகு –

குடிப் பிறப்பு விட ஒண்ணாமைக்கு மேற்கோள் அருளிச்செய்கிறார் “நான்
தசரத சக்கரவர்த்தியினுடைய” என்று தொடங்கி.

“ப்ருதிவ்யாம் ராஜசிம்ஹாநாம் முக்யஸ்ய விதிதாத்மந:
ஸ்நுஷா தசரதஸ்யாஹம் சத்ருசைந்ய பிரதாபிந:”

என்பது ஸ்ரீராமா. சுந். 33 : 15, 16. பிராட்டி திருவடியைப் பார்த்துக் கூறியது.
மற்றைய சம்பந்தங்களை இட்டுக் கூறாமல், சக்கரவர்த்தியின்
சம்பந்தத்தைக்கொண்டு கூறுவதற்கு, பாவம் ‘பிராட்டி’ என்று தொடங்கும்
வாக்கியம்.
சத்ரு சைதன்யம் பிரதானம் தசரதர் -மகள் -முதலில் சீதை சொல்லி
மாமனார் உண்டாகில் இவ்விருப்பு இருக்காதே
இல்லையே வசுதேவர் -புத்திரன் இங்கு அது போலே
மணி வண்ணன்
பொதுவாக என்னை குறித்து நோக்கின நோக்கிலும் ஸ்மிததிலும்
மணிவண்ணன் வாசுதேவன் வலை உள்ளே அகப்பட்டேன்
என் சினம் தீருவேனே
கமலக் கண்ணன் என்னும் நெடும் கயிறு கொண்டு என்னை ஈற்றுக் கொண்டான்
அனுகூலம் போலே நோக்கி வலைப் படுத்திக் கொண்டான்

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

 நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

 பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading