திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -5-2-7-ஸ்ரீ M.A V .சுவாமிகள் —

நிறுத்தி நும் உள்ளத்துக்கொள்ளும் தெய்வங்கள் உம்மை உய்யக்கொள்
மறுத்தும் அவனொடே கண்டீர் மார்க்கண்டேயனும் கரியே
கறுத்த மனம் ஒன்றும் வேண்டா கண்ணன் அல்லால் தெய்வம் இல்லை
இறுப்பதெல்லாம் அவன் மூர்த்தி யாயவர்க்கே இறுமினே.

பொ-ரை :- உங்கள் உள்ளத்திலே நிறுத்திக் கொள்ளுகின்ற தெய்வங்கள் உங்களை உஜ்ஜீவிப்பித்துக் கொள்ளுவதும் மீண்டும் அவன் திருவருளாலேயாகும்; அதற்கு மார்க்கண்டேயனே சான்று ஆவான்;

தண்ணிய மனம் சிறிதும் வேண்டாம்; கண்ணபிரானைத் தவிர வேறு தெய்வங்கள் இல்லை; ஆதலால், உங்களால் செய்யப்படுகின்ற நித்திய நைமித்திக கர்மங்கள் எல்லாவற்றையும் சர்வேச்வரனுக்குச் சரீரமாக இருப்பவர்கள் இந்தத் தேவர்கள் என்ற எண்ணத்தோடு அவர்களுக்கு இடுங்கோள் என்கிறார்.

வி-கு :- நிறுத்திக் கொள்ளும் தெய்வங்கள் உம்மை உய்யக் கொள்வது அவனொடே கண்டீர் என்க. ‘அவனொடே’ என்றது, அவன் திருவருளாலேயாகும் என்றபடி. கரி – சான்று. ‘கறுத்த’ என்பது, ஈண்டுக் குற்றத்தைக் காட்டுகின்றது. இறுத்தல் – கொடுத்தல். அவன் மூர்த்தியாயவர் – அவனுக்குச் சரீரமாக இருப்பவர்கள்.

ஈடு :- ஏழாம் பாட்டு. 1நாங்கள் பலநாள் தேவதைகளுக்குப் பச்சை இட்டு ஆராதித்துப் போந்தோம்; அதன் முடிவு கண்டு, பின்பு பகவானைப் பற்றுகிறோம் என்ன, நீங்கள் ஆராதிக்கின்ற தேவதைகள் உங்களைக் காப்பாற்றுவதும் அவன் பக்கலிலே கொடு சென்று காட்டிக் கொடுத்தாயிற்று, ஆன பின்பு, 2அவனையே ஆராதிக்கப்பெறில் அழகிது; அதுவும் மாட்டீர்கோளாகில், நீங்கள் அவர்களுக்கு இடுகிறவற்றை ‘இவர்கள் அவனுக்குச் சரீரமாக உள்ளவர்கள், இவர்கள் முகத்தாலே நாம் பகவானை ஆராதிக்கிறோம்’ என்று புத்தி பண்ணியாகிலும் இடுதற்குப்  பாருங்கோள் என்கிறார்.

நிறுத்தி – 3தியானம் செய்தற்குரிய பொருளை நிலைத்திருக்கச் செய்கையும் தியானம் செய்கிறவனுக்கே பாரமாயிற்று. தியானம் செய்கிற இவன் எடுத்த, நிறுத்த, நிற்கின்றவையே யன்றோ அந்தத் தெய்வங்கள். நும் உள்ளத்துக் கொள்ளும் தெய்வங்கள் – உங்களுடைய இருதயங்களிலே கொள்ளுகின்ற தேவதைகள். ‘புறம்பே சிலர் அறியில் பரிஹசிப்பர்கள்’ என்று தாங்களே அறிந்ததாக உபாசிப்பவர்கள் என்பார் ‘உள்ளத்துக் கொள்ளும்’ என்கிறார். உம்மை உய்யக்கொள்-உங்களை உஜ்ஜீவிப்பித்துக் கொண்டார்கள் ஆகிறபடி. மறுத்தும் அவனோடே கண்டீர்-நீங்கள் ‘அவனிலும் இவர்கள் அடையத் தக்கவர்கள்’ என்று பற்ற, இவர்கள் உங்களை அவன் பக்கலிலே கொண்டுபோய் அன்றோ காப்பாற்றுவது. 1”காப்பாற்றுவதில் நிலைநிற்கின்றவரும் எல்லா ஆத்மாக்களுக்கும் ஈச்வரனாயும் மஹாத்மாவாயும் இருக்கிறவருமான விஷ்ணுவைத் தவிர, காப்பாற்றும் திறன் வேறு ஒருவர்க்கும் இல்லை என்பது பிரசித்தம்” என்கிறபடியே, என்றும் இரக்ஷண தர்மம் கிடப்பது அவன் பக்கலிலேயாம்.

வேறு சிலரை ஆராதிக்க அவனே பலத்தைக் கொடுக்கிறவன் ஆவான் என்பது என்? என்ன, மார்க்கண்டேயனும் கரியே-இவ்வர்த்தத்திற்குச் சாக்ஷி மார்க்கண்டேயன். அம்மார்க்கண்டேயன் பலநாள் தேவனை ஆராதிக்க, அவனைப் பார்த்து, ‘பலநாள் நீ நம்மை ஆஸ்ரயித்தாய், இந்த ஆஸ்ரயணம் பாழே போக ஒண்ணாது, உன்னோடு என்னோடு வேற்றுமை இல்லை, உனக்கு ஒரு புகல் காட்டித் தருகிறேன் போதரு’ என்று சர்வேச்வரன் பக்கலிலே கொண்டு சென்று, அவனுடைய விருப்பத்தைத் தலைகட்டிக் கொடுத்தான்; ஆனபின்னர், இதற்குச் சான்று அவனே என்றபடி. கறுத்த மனம் ஒன்றும் வேண்டா-புன் சிறு தெய்வங்களைப் பரம்பொருளாக நினைத்து இருக்கும் தண்ணிய மனம் உங்களுக்கு வேண்டா. கண்ணன் அல்லால் தெய்வம் இல்லை- 1“வேதங்களும் மூன்று அக்நிகளும் ஐந்து ஆஹீதிகளும் எல்லாத் தேவர்களும் தேவகியின் புத்திரனான கண்ணபிரானே” என்கிறபடியே, அவனுக்குச் சரீரமாக அல்லது ஸ்வதந்திரமாயிருப்பது ஒரு தேவதை இல்லை. “எந்த எந்த பக்தன் எந்த எந்தச் சரீரத்தைச் சிரத்தையுடன் அருச்சிப்பதற்கு விரும்புகிறனோ அவன் அவனுக்கு அந்த அந்தச் சிரத்தையையே நிலைநிற்கும்படி செய்கிறேன்” என்கிறபடியே, அக்கண்ணபிரானுக்குச் சரீரமாக உளராகில் ஆமித்தனை. இறுப்பது எல்லாம் அவன் மூர்த்யாயவர்க்கே இறுமின் – ஆனபின்பு, நீங்கள் அவ்வத் தேவர்கட்குக் கொடுக்கும் சமாராதநத் திரவியங்களை எல்லாம் ‘இவர்கள் அவனுக்குச் சரீரமாக இருப்பவர்கள்’ என்று புத்திபண்ணி, அவர்களுக்குக் கொடுக்கப் பாருங்கோள். ‘இறுப்பது எல்லாம்’ என்றது, “தேவதாந்தராய-பிற தேவதையின் பொருட்டு” என்று தோற்றுகிற நித்திய நைமித்திகக் காமங்களையெல்லாம் என்றபடி. ‘அவன் மூர்த்தியாயவர்க்கே’ என்றது, அவனுக்குச் சரீரமாக இருக்கிற அவர்களுக்கே என்றபடி. ஆக, “அந்தராத்மா சர்வேச்வரன்’ என்று புத்திபண்ணி அவனுக்குச் சாமாராதனம் செய்கிறோம் என்ற எண்ணத்தோடு செய்யுங்கோள் என்றபடி.

பலன் கொடுப்பவனும் எம்பெருமானே-

நாங்கள் தேவதைகளை பச்சை இட்டு ஆஸ்ரயித்தோம்
பலன் வாங்கி வந்த பின்பு பகவத் சமாஸ்ரயநீயம் செய்கிறோம் என்ன
ஓடி ஓடி பல பிறப்பும் பிறந்து முன்பே அருளினார்
அவன் தானே ரஷிப்பான் -உங்கள் தேவதைகளையும் ரஷிப்பவன் அவனே
மார்கண்டனேயனுமே சாஷி
இவர்கள் முகத்தாலே பகவத் சாமாஸ்சரயநீயம் செய்து -அவன் அந்தர்யாமியாக நினைத்து செய்தால்
இது அவதாரிகையில் அருளி -மேலே விளக்கி -இங்கு சரீரம் என்ற புத்தி பண்ணி யாகிலும்
சாமான்யமான ஆராதனம் பற்றி சொலவில்லை –
சந்தாவந்தனம் அக்னி வருணன் சூர்யன் இவர்களை -சொல்லுவதை -பற்றி –
அவனை அந்தர்யாமியாக கொண்ட தேவதைகள் –
ஆராதனை எம்பெருமானுக்கே என்று நினைத்து –
சர்வ தேவ நமஸ்காரம் கேசவம் பிரதிகச்சதி முடிக்கிறோம்

இரக்ஷண தர்மம் மற்றைத் தேவர்கட்கு இல்லையோ? என்ன, ‘இல்லை’
என்பதனைப் பிரமாணத்தோடு காட்டுகிறார் ‘காப்பாற்றுவதில்’ என்று
தொடங்கி.

“நஹிபாலன சாமர்த்யம் ருதே சர்வேஸ்வரம் ஹரிம்
ஸ்திதௌ ஸ்திதம் மஹாத்மாநம் பவதி அந்யஸ்ய கஸ்யசித்”-  என்பது, ஸ்ரீ விஷ்ணுபுரா. 1. 22 : 19.

உம்மை உயக் கொள்வது அவனுடன் சேர்த்து -தானே கண்டீர் பிரத்யட்ஷம்
மார்கண்டேயனும் கரியே –
கருத்த மனம் வேண்டாம்
கண்ணன் அல்லால் தெய்வம் இல்லை
அனைத்தும் அவன் மூர்த்தி சரீரம் -தானே
நிறுத்தி -தேவதைகளை நிறுத்துவதும் கஷ்டம்
த்யானம் செய்யும் வஸ்துவை கெட்டியாக கொண்டு -செய்ய வேண்டும்
த்யான  ஸ்லோகம் திருமேனி வர்ணிக்கும்
அர்த்த அனுசந்தானம் செய்து நிறுத்திக் கொள்ள வேண்டும்
த்யான ஸ்லோகம் சொலும் பொழுதே காணிலும்-உருப்பிலா -பயங்கரமாக இருக்க
நிறுத்துவதே கஷ்டம் –
இவன் நிறுத்த அவை நிற்கும் பேச நின்ற சிவனுக்கும்
உங்கள் ஹிருதயங்களில் கொள்ளும் தேவதைகள் -வெளிப்படையாக சொல்லவும் வெட்கி
தாங்கள் -பரிகசிக்கப்படாமல் -இருக்க -இதர தேவதாந்திரம் சேவை பண்ணி

இப்படி இவன் செய்ய அந்த தேவதைகளும் கை விட்டு –
மறுத்தும் மீண்டும் அவனுடன் சேர்த்து –
இவை உங்களை அவன் பக்கலில் இட்டு ரஷிக்கும் -ரஷணம் தர்மம் அவனது
பலான சாமர்த்தியம் சர்வேஸ்வரனை விடு வேறு யாருக்கும் இல்லை
பிறவி என்னும் நோய்க்கு யாரும் மருந்து அறிவார் இல்லை
மருத்துவனாய் நின்ற மா மணி வண்ணன் ஒருவனே
மார்கண்டேயன் ருத்ரனை ஆஸ்ரயிக்க -இது பாழாக ஆகக்கூடாது
உனக்கு ஒரு புகல் காட்டித் தருகிறேன் -அவன் அபேஷிதத்தை தலைக் கட்டி கொடுத்தான் –

கருத்த மனம் ஒன்றும் வேண்டா தாழ்ந்த புத்தி வேண்டாம்
கண்ணன் ஒருவனே -தேவன்
மற்றவை எல்லாம் பிரகாரம்

கண்ணன் அல்லால் தெய்வம் இல்லை” என்றதனால், வேறு தெய்வங்களே
இல்லை என்கிறாரோ? என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார்
‘வேதங்களும்’ என்று தொடங்கி.

“ஜோதீம்ஷி சுக்ராணிச யாநி லோகே த்ரயோ லோகா : லோகபாலா:
திரயீச, திரய : அந்நய : ச ஆஹீதய:ச பஞ்ச ஸர்வே தேவா தேவகீ
புத்ர ஏவ” என்பது, மஹாபாரதம் வீடுமப்பர்வம்.

“யோ யோ யாம் யாம் தநும் பக்த:சிரத்தயா அர்ச்சிதும் இச்சதி
தஸ்ய தஸ்ய அசலாம் சிரத்தாம் தாமேவ விததாமி அஹம்”

என்பது, ஸ்ரீ கீதை. 7 : 21.

இவற்றால், மற்றைத் தேவர்கள் சர்வேச்வரனுக்குச் சரீரமாகையாலே
பரதந்திரப் பட்டவர்கள் என்பதனைத் தெரிவித்தவாறு.

மிடுக்கிலாத தேவர்
அவன் பிரசாதத்தால் கிடீர் இவை பலன் கொடுக்கும்
மேலுக்கு மெழுகு பூசி நிறுத்தினாலும் –
பிரகார பூதராக இந்த தேவதைகள் -தரு பூதரே சரீரம் தானே
நின் மூர்த்தி பரப்பி வைத்தாய் அணங்குகள் பல பலவாக்கி –
அங்கானி -உபநிஷத்தும் சொல்லும்
சரீர பூதர் என்ற நினைவுடன் கொடுக்கலாம்

விதி பூர்வகமாக -மாம் ஏவ கௌந்தெய அவிதி பூர்வாக -கீதை
அவர்களையே உபாசிப்பதாக செய்தால் -பலன் கிட்டாது
சரீரம் சந்தனம் சத்தி ஆத்மா சந்தோஷிப்பது போலே
ஆத்மா இல்லாத சரீரத்துக்கு மோதிரம் போடுகிறோமோ
நித்ய நைம்மித்திக கர்மாக்களை செய்யும் பொழுது –
தீய கந்தம் சேர்ந்து தீய கந்தம் கொள்வது போலே –
தேவதாந்தர பஜனம் கூடாதே –
கஜாநனர் -விஷ்வக் சேனர் காவல் காரர்கள் எட்டு பேரில்
கரி முகன்-ஜயத்செனன் – குமுதன் குமுதாட்ஷன் ஜெய விஜயன் -பட்டர்

அவனே இங்கே படுகாடு கிடக்க -இதர தேவதைகள் நமது திருக்கோயிலில் இருந்தாலும் சேவை கூடாதே –
ஹோமம் அக்னி ஸ்வாகா -சோம ஸ்வாகா சொல்லி சாஸ்திரம் விதிக்க அவன் மூர்த்தியாய்
இரப்பது எல்லாம் -அந்தராத்மா புத்தி பண்ணி பற்ற -வேண்டும்
தனது  திருவடிகளை பிடித்தார்க்கு தானே பலன் கொடுப்பானே சர்வேஸ்வரன் –

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

 நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

 பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading