இரண்டாம் திருவாய்மொழி – “பொலிக பொலிக”
முன்னுரை
ஈடு :- 1“ஆழ்வாருடைய ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீயைக் காண்கைக்காக நித்தியசூரிகள் இங்கே வர, அவர்களைக் கண்டு மங்களாசாசனம் செய்கிறார். இத்திருவாய்மொழியால்” என்று ஆளவந்தார் அருளிச்செய்தாராகத் திருமாலையாண்டான் பணிப்பர். அங்ஙன் அன்றிக்கே, “நண்ணாதார் முறுவலிப்ப’ என்ற திருவாய்மொழியிலே, சம்சாரிகள் படுகிற கிலேசத்தை நினைத்து, அதற்குப் பரிஹாரமாக, ‘ஒன்றுந் தேவும்’ என்ற திருவாய்மொழியிலே பகவானுடைய பரத்துவத்தை எடுத்துப் பேசித் திருத்த, அதனாலே திருந்திச் சம்சாரம் பரமபதம் என்ற வேறுபாடு இல்லாமல் அங்குள்ளாரும் இங்கே வரலாம்படி இருக்கிற இருப்பைக் கண்டு மங்களாசாசனம் செய்கிறார்” என்று இங்குள்ளார் பக்கலிலே பிராதாந்யம் தோற்ற எம்பெருமானார் அருளிச்செய்வர்.
2தாம் பகவானுடைய பரத்துவத்தை எடுத்துப் பேச, அதனாலே திருந்தின சத்துவ குணமுடையார் அடங்கலும் எங்கும் பரந்திருக்கிறபடியையும், குறிக்கோளின்மையாலும் அறிவின்மையாலும் இராஜசராயும் தாமசராயுமுள்ளார் குறைந்தவர்களாயிருக்கிறபடியையும், சத்துவ குணமுடையார் மேற்கொண்டதாகையாலே ‘உத்தம தர்மமான ஸ்ரீ வைஷ்ணவ தர்மமே பிரசித்தமாய்ப் போருகிறபடியையும், அதற்கு மாறுபட்ட தர்மங்கள் மறைந்தவைகளாய்ப் போருகிறபடியையும், தேச காலங்கள் அதிகாரிகள் அங்கங்கள் என்கிறவற்றுக்கு உண்டான நன்மைகள் 1“எல்லாத் தர்மங்களுக்குள்ளே வைஷ்ணவ தர்மம் உத்தமமானது” என்கிறபடியே, 2பகவானுடைய பரிசத்தாலேயாயிருக்கிறபடியையும், 3அது இல்லையாகில் எல்லா நன்மைகளும் உண்டானாலும் அவை அடையத் தண்ணியனவாயிருக்கிறபடியையும் சொல்லி, தம்மாலே திருந்தின 4ஸ்ரீவைஷ்ணவர்கள் திருவடிகளிலே விழுந்தும்,திருந்துகைக்குத் தகுதியுடையாரைத் திருத்தியும், திருந்தாதாரை உபேக்ஷித்தும், இப்படி, கூட்டங்கூட்டமாக நிறைந்திருக்கும் பாகவதர்களைக் கண்டு மங்களாசாசனம் செய்கிறார்.
இத்திருவாய்மொழிக்கு இரண்டு வகையாக அவதாரிகை அருளிச்செய்கிறார்.
‘ஆழ்வாருடைய ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீயை’ என்றது, ஆழ்வார் உபதேசத்தாலே
திருந்தின ஸ்ரீ வைஷ்ணவர்களுடைய கூட்டத்தைத் தெரிவித்தபடி,
‘நித்தியசூரிகள் இங்கே வர’ என்றது, இத் திருவாய்மொழியில் வருகின்ற
“தேவர்கள் தாமும் புகுந்து”, “நேமிப்பிரான் தமர் போந்தார்” என்னும்
பாசுரப் பகுதிகளைத் திருவுள்ளம் பற்றி. ஸ்ரீ ஆளவந்தார் நிர்வாஹத்திலே
நித்தியசூரிகளுக்குப் பிராதாந்யம் தோற்றும். இதனால், “ஒன்றும் தேவும்”
என்ற திருவாய்மொழிக்கும், இத்திருவாய்மொழிக்கும் நேரே பொருள்
இயைபு தோன்றும். இடையேயுள்ள “கையார் சக்கரம்” என்ற திருவாய்
மொழி, பிராசங்கிகம். (இடைபிறவரல்.)
2. பாசுரங்களில் கூறப்படும் பொருள்களை உட்கொண்டு அவற்றை விவரணம்
செய்கிறார் ‘தாம் பகவானுடைய’ என்று தொடங்கி. “கடல்வண்ணன்
பூதங்கள்” என்றதனைத் திருவுள்ளம் பற்றிச் ‘சத்துவ குணமுடையார்’
என்றும், “மலியப் புகுந்து” என்றதனைத் திருவுள்ளம்பற்றி ‘எங்கும்
பரந்திருக்கிறபடியையும்’ என்றும், “உள்ளீரேல்” என்றதனை நோக்கிக்
‘குறைந்தவர்களாயிருக்கிறபடியை’ என்றும் அருளிச்செய்கிறார்.
‘சத்துவகுணமுடையார் மேற்கொண்டதாகையாலே’ என்றது, “மேவித்தொழும் அடியாரும் பகவரும் மிக்கது
உலகே” என்றதனைத் திருவுள்ளம்பற்றி. “பெரியகிதயுகம்பற்றி” என்றதனைத்
திருவுள்ளம்பற்றி ‘உத்தம தர்மமான ஸ்ரீ வைஷ்ணவ தர்மமே பிரசித்தமாய்ப்
போருகிறபடியையும்’ என்கிறார். ‘அதற்கு மாறுபட்ட தர்மங்கள்
மறைந்தவைகளாய்ப் போருகிறபடியையும். என்றது. “திரியும் கலியுகம் நீங்கி”
என்றதனைத் திருவுள்ளம்பற்றி அன்றி, “சமயத்தை எல்லாம் எடுத்துக்
களைவன போலே” என்றதனைத் திருவுள்ளம்பற்றி எனலுமாம். ‘தேச
காலங்கள்’ என்றது “மண்மேல், கலியும் கெடும்” என்றதனைத்
திருவுள்ளம்பற்றி. இவை இரண்டும் அதிகாரி அங்கங்களுக்கும் உபலக்ஷணம்.
பொலிக பொலிக பொலிக போயிற்று வல்லுயிர்ச் சாபம்
நலியும் நரகமும் நைந்த நமனுக்கு இங்கு யாதொன்று மில்லை
கலியுங் கெடும் கண்டு கொண்மின் கடல்வண்ணன் பூதங்கள் மண்மேல்
மலியப் புகுந்து இசை பாடி ஆடி உழி தரக் கண்டோம்.
பொ-ரை :- கடல் போன்ற நிறத்தையுடைய சர்வேச்வரனுடைய அடியார்கள் பூமியின்மேலே கூட்டம் கூட்டமாகப் புகுந்து இசையோடு பாடி ஆடிச் சஞ்சரிக்கக் கண்டோம்; ஆதலால், உயிரைப் பற்றியுள்ள வலிய பாபங்கள் அழிந்தன, எல்லாரையும் வருத்துகின்ற நரகலோகமும் கட்டு அழிந்துபோயிற்று, யமனுக்கு இந்த உலகத்தில் ஒரு வேலையும் இல்லை. இவற்றிற்கெல்லாம் காரணமான கலிகால தோஷமும் கெடும். நீங்களே பார்த்துக்கொள்ளுங்கோள்; பொலிக! பொலிக!! பொலிக!!!
வி-கு :- பொலிதல்-நீடு வாழ்தல். உயிர் வல் சாபம் போயிற்று என்க. பூதங்கள்-பாகவதர்கள். உழிதரல்-சஞ்சரித்தல்.
இத்திருவாய்மொழி, அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்.
ஈடு :- முதற்பாட்டு. 1ஸ்ரீ வைஷ்ணவர்களுடைய கூட்டத்தைக் கண்டு மங்களாசாசனம் செய்கிறார்.
பொலிக பொலிக பொலிக – நீடூழி வாழ வேண்டும், நீடூழி வாழ வேண்டும், நீடூழி வாழ வேண்டும். “சாந்தி: சாந்தி: சாந்தி:” என்று வைதிகமான மங்களாசாசனங்கள் மும்முறை சொல்லக்கடவதாயிருக்குமேயன்றோ? ஆதலால், ‘பொலிக பொலிக பொலிக’ என்கிறார். ‘பெரியாழ்வாரைப் போலே முற்படப் பகவானுடைய நிறைவிற்கு மங்களாசாசனம் செய்து, பின்பு பாகவதர்களுடைய கூட்டத்திற்கு மங்களாசாசனம் செய்ய வேண்டாவோ?” என்ன, அப்படியே யன்றோ செய்தது,1“வீற்றிருந்தேழுலகு” என்ற திருவாய்மொழியால் பகவானுடைய நிறைவிற்கு மங்களாசாசனம் செய்தார்கண்டீரே; பின்னை இத்திருவாய்மொழியிலே பாகவதர்களுடைய கூட்டத்திற்கு மங்களாசாசனம் செய்கிறார்” என்று நஞ்சீயர் அருளிச்செய்தார். 2பரமாசாரியரான இவரைப் பின் சென்றாரித்தனை காணும் பெரியாழ்வாரும். உயிர் வல் சாபம் போயிற்று-உயிரினுடைய வலிய சாபம் போயிற்றது. 3சாபத்தாலே பற்றப்பட்டவரைப்போலே அநுபவித்தால் அல்லது அழியாதது ஆகையாலே, பாபத்தைச் ‘சாபம்’ என்கிறார். அன்றிக்கே, 4ஆத்மாவைப் பற்றிக் கிடக்கிற அவித்யை முதலானவைகள் போயிற்றன என்னுதலுமாம். நலியும் நரகமும் நைந்த-கர்மங்களுக்குத் தகுதியாகச் சேதனர்களைக் கொண்டுபோய் வருத்துகின்ற 5நரகங்களும் சிதிலமாயின. 6நரக அநுபவத்திற்கு ஆள் இல்லாமையாலே, நரகங்களும் கட்டி மேய்க்கை தவிர்ந்து கோப்புக் குலைந்தன. ஆயின், அவ்விடங்கட்கு அதிகாரிகளாயிருக்குமவர்கள் செய்வன என்? என்னில், இங்கு நமனுக்கு யாது ஒன்றும் இல்லை-யமனும் தனக்கு அடைத்த இந்நிலத்தில் ஆராயலாவது ஒன்று இல்லை; இனிப் பரமபதத்தில் சென்று ஆராயில் ஆராயு மத்தனை என்பார் “இங்கு” என்கிறார். தர்ம புத்திரனுக்கும் ஒருகால் நரகலோகத்தைக்காணுதல் செய்ய வேண்டியிருந்ததேயன்றோ, 1அதற்கும் ஆள் இல்லை என்பார் ‘யாது ஒன்றும் இல்லை’ என்கிறார்.
இவை எல்லாம் உண்டாவன கிருத யுகத்திலே அன்றோ, கலியுகத்திலே உண்டாவன ஆமோ? என்னில், கலியும்கெடும்-அந்தக் கலிகாலமும் அழிந்து போகும். மேலே சொல்லிக்கொண்டு போந்தவற்றை இறந்த காலத்திலே ஆக்கி, ‘கலியும்கெடும்’ என்ற இதனை எதிர்காலத்திலே ஆக்கி நிர்வஹிக்கவுமாம். அன்றிக்கே, இவையும் எல்லாம் போயிற்றன, ‘கலியும்’ நசித்தது என்றே இருக்க அமையும் என்று, இங்ஙனே 2ஒரே ரீதியாகச் சொல்லவுமாம். நன்று; கலிக்கு அடைத்த காலமாய் இருக்கச் செய்தே, ‘கெடும்’ என்பது என்? என்னில், கண்டு கொண்மின்-அநுபவத்தால் அறியுமதற்கு உபதேசம் வேணுமோ? நீர் ‘இது கெடும்’ என்று சொல்லுகிறது என் கொண்டு? என்னில், ‘கடல் வண்ணன்’ என்று தொடங்கி, விடை அருளிச்செய்கிறார் மேல்: 3“எந்தத் தேசத்தில் திரு அட்டாக்ஷர மந்திர சித்தியையுடைய பெருமை பொருந்திய பாகவதர்கள் வசிக்கின்றார்களோ அங்கு வியாதி துர்பிக்ஷம் களவு முதலானவை நடமாடுகின்றன இல்லை” என்கிறபடியே, பாகவத சஞ்சாரம் இல்லாமையே யன்றோ இப்பொல்லாங்குகள் உண்டாவதற்குக் காரணம்; அவர்கள் சஞ்சாரம் உண்டான பின்பு இவை நிற்குமோ? கடல் வண்ணன் பூதங்கள்-அவனுடைய சிரமஹரமான வடிவழகை அநுசந்தித்து அதனாலே தங்கள் சத்தையாம்படி இருக்குவர்கள். “பூ ஸத்தாயாம்” என்று தாதுவாகையாலே, அவன் சத்தையே சத்தையாய் அறுகையாலே ‘பூதம்’ என்ற சொல் அடியார்களைக் காட்டுகிறது. மண்மேல்-அவன் அழகிலே தோற்றிருப்பவர்கள் உள்ளது பரமபதத்திலே அன்றோ? என்ன, இங்கே என்று படி எடுத்துக் காட்டுகிறார். 1பகவானுடைய அநுபவத்திற்கு மேட்டுமடையான சம்சாரத்தில் மருபூமியில் தண்ணீர் போலே எங்கேனும் ஒருவர் இருவர் உண்டாமத்தனையன்றோ? என்ன, மலியப் புகுந்து- 2“அடியார்கள் குழாங்கள்” என்கிறபடியே, நெருங்கப் புகுந்து. இசை பாடி ஆடி உழிதரக் கண்டோம்-சந்தோஷத்தின் மிகுதியாலே பாடுவது, உடம்பு இருந்த இடத்திலே இராமல் ஆடுவதாய்க் கொண்டு, 3யமன் முதலானோர்கள் தலை மேலே அடியிட்டுச் சஞ்சரிக்கக் கண்டோம். உழிதருகை-பயம் இல்லாமல் எங்கும் சஞ்சரித்தல்.
கடல் வண்ணன் என்று தொடங்கி, உழிதரக் கண்டோம், வல்லுயிர்ச் சாபம் போயிற்று, நலியும் நரகமும் நைந்த, நமனுக்கு இங்கு யாது ஒன்றும் இல்லை, கலியும் கெடும், கண்டு கொண்மின், பொலிக பொலிக பொலிக என்று கூட்டுக.
உபகாரம் கொண்டாடினார் கையார் சக்கரத்தில்
நிர்ஹெதுகமாக -பிறரையும் திருத்தி -பொன்னாக்கும் தன்மை அருளி –
பொலிக பொலிக பாகவத சமர்த்தி மங்களா சாசனம்
நித்ய சூரிகள் வந்து பார்க்க -அவர்களுக்கு மங்களா சாசனம் ஆளவந்தார் நிர்வாகம்
இங்குள்ள ஸ்ரீ வைஷ்ணவர்கள் –எம்பெருமானார் நிர்வாகம் –
பரம பதம் -உபய விபூதி இன்றி ஒன்றாக இருப்பது பார்த்து –
நித்ய சூரிகள் பிரதாண்யம் ஆளவந்தார்
ஒன்றும் தேவும் -அத்தாலே திருந்த
அன்குள்ளா ரும் இங்கே வரும்படியான -சம்சார விபாகம் இன்றி –
இங்குள்ளார் பக்கம் பிரதாண்யம் -எம்பெருமானார் நிர்வாகம் –
ஞான சங்கோசம் -அற்று –
ராஜச தாமச குணங்கள் அற்று –
ராஜச பலனில் ஆசை பட்டு -இதர தேவதைகள் –
அஞ்ஞானம் இன்றி மற்ற தேவதைகளை ஆஸ்ரயிக்க –
மாம் ஏவ பிரபத்யே சாத்விகர் ஆக –
பேச நின்ற சிவனுக்கும் நாயகன் அவனே உபதேசித்த பின்பு இந்த ராஜச தாமச
குணங்கள் நீங்கி -சாத்விகர் விச்திராயும் -மற்றவர் சந்குதராயும்
உத்தம ஸ்ரீ வைஷ்ணவ தர்மம் –
சர்வேஷாம் உத்தமோ வைஷ்ணவ விதி -ஆத்மா சரீரவதி போலே
சர்வேஷாம் கில தர்மாணாம் உத்தமோ வைஷ்ணவோ விதி:
ரக்ஷதே பகவாந் விஷ்ணு: பக்தாந் ஆத்வ சரீரவத்.
என்பது, பாரதம் மோக்ஷதர்மம். ஸ்ரீவைஷ்ணவ தர்மம் உத்தமமான
தர்மமானபடி என்? என்னில், ஸ்ரீ வைஷ்ணவர்களைச் சர்வேச்வரன்
“ஜ்ஞாநீது ஆத்மைவ மே மதம்” (பகவத். கீ. 7 : 18.) என்று, தனக்குத்
தாரகமாகக் கொள்ளுகையாலே என்க.
இது இல்லை யாகில் -விஷ்ணு பக்தி இன்றி -ஒன்றும் பலன் இல்லையே
ஓடத்தொடு ஒழுகல் -ஓட்டை ஓடம் ஒழுகல் ஓடம் –
தம்மாலே திருந்தின ஸ்ரீ வைஷ்ணவர்கள் திருவடிகளில் விழுந்தும்
திருத்தியும் –
திருந்தாத ஸ்ரீ வைஷ்ணவர்களை நிந்தித்தும் –
பகவானுடைய சம்பந்தம் உண்டானால் தேச காலங்களுக்கு நன்மை உண்டு
என்று சொல்லுகையாலே, இந்தச் சம்பந்தம் இல்லாத போது அவற்றால்
பயன் இல்லை என்ற பொருளும் தோன்றுகையாலே, அதனை
அருளிச்செய்கிறார் ‘அது இல்லையாகில்’ என்று தொடங்கி. அது
பகவானுடைய சம்பந்தம். அவை-தேச காலங்கள்.
4. ‘ஸ்ரீ வைஷ்ணவர்கள் திருவடிகளிலே விழுந்தும்’ என்றது, “தொழுது
தொழுது நின்று ஆர்த்தும்” என்றதனைத் திருவுள்ளம்பற்றி.
“தொழுதுய்ம்மினீரே”, “உய்யும் வகை இல்லை” என்பனவற்றைத்
திருவுள்ளம்பற்றித் ‘திருந்துகைக்குத் தகுதியுடையாரை’ என்று தொடங்கி
அருளிச்செய்கிறார்.
பொலிக பொலிக பொலிக -மங்களா சாசனம் ஸ்பஷ்டமாக
சாந்தி சாந்தி சாந்தி போலே
சாபம் -அனுபவித்தே தீர வேண்டிய பாபங்கள்
நமனுக்கே வேலை இன்றி போக -நரகமும் நலிந்து போக
கலி புருஷனுக்கும் கெட்டு போகும் படி
கடல் வண்ணன் பூதங்கள் -நினைத்தே தரித்து இருப்பவர்கள்
மண் பூ லோகத்திலே மலிய புகுந்து -எம்பெருமானார் நிர்வாகம்
பாடி ஆடி இருக்க கண்டார்
பகவத் சமர்த்திக்கு -சமர்த்தமாக வேண்டும் -வைதிக மங்களா சாசனம் முக்கால் சொல்லப் படும்
பகவானுக்கு மங்களா சாசனம் செய்த பின்பு பாகவதர்களுக்கு செய்ய வேண்டுமே
நம்பிள்ளை நஞ்சீயர் -கேட்க
மணி வண்ணா பல்லாண்டு அப்புறம் சுடர் ஆழியும் பல்லாண்டு பெரியாழ்வார்
வீற்று இருந்து ஏழு உலகும் -போற்றி அங்கேயே செய்து அருளி
நம் ஆழ்வாரை அடி ஒற்றி பெரியாழ்வார்
பிராயச்சித்தம் செய்து போகும் பாபம்
அனுபவித்தே போக்க வேண்டியவை சாபம்
இங்கே சாபம் -என்றது -ஆத்மாவை பற்றி கிடக்கிற அவித்யாதிகள்
கர்மானுகூலமான -நலிய கூடிய நரகங்கள் -ஆள் இன்றி -கட்டி மேய்ப்பு தவிர்ந்து நலிய –
இருக்கும் -நமனுக்கு இங்கு இந்த பூமியிலே -வேலை இல்லை
யாதொன்றும் இல்லை லவதேசமும் இல்லை
தர்ம புத்திரன் -கூட அஸ்வச்த்தாமா -சொன்னதுக்கு போக
துரி யோதனன் ஸ்வர்க்கம் இருக்க -தானும் நரகம் போக கேட்டு –
வழி எல்லாம் நாற்றம் -சகிக்க முடியாமல்
தர்ம புத்திரன் தேஜஸ் நறு மணம் வீச –
அங்கேயே இருக்க -இந்த்ரன் தோன்றி -நரக தர்சனம் -உண்டு அப்புறம் கூட்டி போனான் –
நரக தர்சனும் இல்லை இவற்களுக்கு
கிருத யுகத்தில் இல்லை
கலியும் கெடும் -பவிஷ்யத்த விஷயமாகவும் கெட்டு போயிற்று என்றும் சொல்லாம்
கெட்டு போனது எப்படி -கண்டு கொண்மின்
அனுபவத்தால் ஸ்பஷ்டமாக பார்க்க சொல்லி புரிய வைக்க வேண்டுமோ
கடல் வண்ணன் -பாகவத சஞ்சாரம் இல்லாமையாலே இந்த பொல்லாங்கு நடமாட அடி
இப்பொழுது உண்டான பின்பு இருக்குமோ
விளக்கு ஏற்றின பின்பு இருள் விலகுமே
பாகவதர்களுடைய சஞ்சாரம் உண்டானால் பொல்லாங்குகள் போமோ?
என்ன, ‘போகும்’ என்பதனைப் பிரமாணத்தோடு எடுத்துக் காட்டுகிறார்
‘எந்தத் தேசத்தில்’ என்று தொடங்கி.
“யத்ர அஷ்டாக்ஷர சம்சித்தோ மஹாபாகோ மஹீயதே
ந தத்ர சஞ்சரிஷ்யந்தி வியாதி துர்பிக்ஷ தஸ்கரா:”– சுலோகம்.
புருஷார்த்தம் -வியாதி -நம்மை உணர்ந்து கொள்ளாதது
துர்பிஷம் வேண்டியது கிடைக்க திருவடி உபாயம்
தனக்குஎன்று நினைப்பது திருட்டு
ஸ்வா பதேசம் -அர்த்தம் –
பூதங்கள் -அவன் பூ சத்தாயம் -பூ தாது -இருப்பது –
எம்பெருமானை நினைத்து தரித்து
வணங்கி -தரித்து மூச்சு போலே பகவத் அனுபவம் –
அத்தாலே சத்தை -உண்ணும் சோறு எல்லாம் கண்ணன்
அவன் நித்ய சூரிகள் நாயகன் -மண் மேல் இங்கே என்று கையால் படி எடுத்து காட்டுக்கிறார்
இப்படி தான் நீதாண்டிய அசைவோ
படி பூமி –
ஒருவர் இருவர் இல்லை மலியப் புகுந்து
அடியார் குழாம் நெருங்கி
பாடி ஆடி –
எமாதிகள் தலை மேல் அடி இட்டு-
உழி தருகின்றோம் -நிர்பயமாக எங்கும் சஞ்சரிக்கை
போயிற்று வல்லுயிர் சாபம் –
“மலியப் புகுந்து” என்பதற்கு, அவதாரிகை, ‘பகவானுடைய’ என்று
தொடங்கும் வாக்கியம்.
மருபூமி-நீரும் நிழலும் அற்ற நிலம். “மலையும் மறிகடலும் வனமும்
மருநிலமும்” என்பது, கம்பராமா. மூலபல. 158. “நீரும் நிழலும் இல்லா மரு
நிலம் என்பார், ‘மண்’ என்றார்” என்பது, பரிமேலழகருரை. (குறள். 742)
3. திருவாய். 2. 3 : 10.
4. “காவலில் புலனை வைத்துக் கலிதன்னைக் கடக்கப் பாய்ந்து
நாவலிட் டுழிதரு கின்றோம் நமன்தமர் தலைகள் மீதே”
என்பது, திருமாலை.
பொலிக பொலிக பொலிக -5104
48 நாள் அவதாரம்
மதுர கவி ஆழ்வார் பட்டோலை -கொள்ள -செய்தார் -ஆண்டிடும் தன்மையான் –
-கேட்டாராம் ஆழ்வார் இடம் -கலியும் கெடும் -திருவடி காட்ட
அஞ்சலி உடன் திவ்ய மங்கள விக்ரஹம் -காட்டிக் கொடுக்க –
அப்புறம் பவிஷ்யத் ஆசார்யர் விக்ரஹம்
பூத புரி -அவதாரம் -பூதங்கள் சொல்லி சூசகம் -அலங்கார சாஸ்திரம் –
சப்தங்கள் சூசகம்
அடியார்கள் சொல்லாமல் பூதங்கள் -சொல்லி அருளி –
எம்பெருமானார் திருவவதரித்து –
விசேஷமான திருவாய்மொழி –
அவன் திருவடியில் அனுபவிக்கப் பெற்றோம்
கலியும் கெடும் போலே சூசிதம் கொசித் கொசித் -ஆசார்ய ஹ்ருதயம் -ஸ்ரீ ஸூக்தி
தாமர பரணி நதிக்கரை –
இது பிரசித்தம் கொண்டு அத்தை காட்டிக் கொடுக்க –
இங்கு இப்பொழுது மலிய புக கண்டோம் –
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்.
வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.
Leave a Reply