திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -4-10-11-ஸ்ரீ M.A V .சுவாமிகள் —

ஆட்செய்து ஆழிப் பிரானைச் சேர்ந்தவன், வண்குரு கூர்நகரான்,
நாட்க மழ்மகிழ் மாலை மார்பினன் மாறன் சடகோபன்
வேட்கையால் சொன்ன பாடல் ஆயிரத்துள் இப்பத்தும் வல்லார்
மீட்சி இன்றி வைகுந்த மாநகர் மற்றது கையதுவே.

    பொ-ரை : ‘வாசிகமான கைங்கரியத்தைச் செய்து, ஆழிப்பிரானைச் சேர்ந்தவரும், வளப்பம் பொருந்திய திருக்குருகூர் நகரை உடையவரும், புதிய வாசனையோடு கூடின மகிழம்பூ மாலையைத் தரித்த மார்பையுடையவரும், ‘மாறன், சடகோபர்’ என்ற திருப்பெயர்களையுடையவருமான நம்மாழ்வார், விருப்பத்தோடு அருளிச்செய்த திருப்பாசுரங்கள் ஆயிரத்துள் இப்பத்துத் திருப்பாசுரங்களையும் கற்று வல்லவர்களது கையிலே இருப்பதாம், இவ்வுலகத்திற்கு வேறுபட்டதும் சென்றவர்கள் மீண்டு வருதல் இல்லாததுமான வைகுந்தமாநகரமானது,’ என்றவாறு.

    வி-கு : ‘மற்றதுவாகிய வைகுந்த மா நகர், மீட்சியில்லாததான வைகுந்த மா நகர், இப்பத்தும் வல்லார் கையது,’ என்க. இனி, வைகுந்த மா நகர் அது மீட்சி இன்றிக் கையது என்று கூட்டலுமாம். கையது – குறிப்பு வினைமுற்று. ‘ஆழிப்பிரானை ஆட்செய்து சேர்ந்தவன்’

என்க. மகிழம்பூமாலை ஆழ்வார்க்குரியது; ‘வகுளாபரணன்’ என்ற திருப்பெயரையும் நினைவு கூர்க.

    ஈடு : முடிவில், 1‘இத்திருவாய்மொழி கற்றார்க்குப் பரமபதம் எளிது,’ என்கிறார்.

    ஆள் செய்து ஆழிப்பிரானைச் சேர்ந்தவன் – அடிமை செய்து சர்வேசுவரனைக் கிட்டினவர். 2முறையிலே சர்வேசுவரனைப் பற்றினவர் ஆயிற்று இவர். 3என்றது, ‘வியக்கத்தக்க உடலின் சேர்க்கை ஈசுவரனுக்கு அடிமை செய்யும்பொருட்டு’ என்கிறபடியே, அவன் கொடுத்த உறுப்புகளைக்கொண்டு உலக விஷயங்களிலே போகாமல், 4‘தந்த நீ கொண்டாக்கினையே’ என்கிறபடியே, வகுத்த விஷயத்துக்கே உரியதாக்கிக்கொண்டு கிட்டினமையைத் தெரிவித்தபடி. 5ஆட்கொள்ளுகைக்கு உபாயம் அவன் கையிலே உண்டு போலேகாணும், தான் விருத்தவானாய்க் காணும் இவரை விருத்தியிலே சேர்ப்பித்தது. 6கையில் திருவாழி சேர்ந்தாற்போலே ஆயிற்று இவரும் சேர்ந்தபடி. கெடு மரக்கலம் கரை சேர்ந்தாற்போலே இருத்தலின் ‘சேர்ந்த’ என்கிறார்.

    7ஆட்செய்கையாவது, அடிமை செய்கை. மனத்தால் செய்தல், வாக்கால் செய்தல், சரீரத்தால் செய்தல் என

அவ்வடிமைதான் மூன்று வகைப்படும். இவற்றுள், மனத்தாலும் சரீரத்தாலும் செய்யும் அடிமைகட்கு இவர் ஆள் அல்லர். ‘என்?’ என்னில், 1‘கால் ஆழும் நெஞ்சழியும் கண் சுழலும்’ என்கையாலே. இனி, ‘வாக்கால் செய்யும் அடிமை ஒன்றுமேயானால். வாசிகமாகத் திருவாய்மொழி பாடி அடிமை செய்தார் என்கிறதோ?’ என்னில், அன்று; அப்படியாமன்று 2இப்பாசுரம்; ‘முனியே நான்முகனே’ என்ற திருவாய்மொழியிலே ஆக வேண்டும்; இல்லையாகில், எல்லாவற்றிற்கும் சுருக்கமான முதல் திருவாய்மொழியிலேயாகிலும் ஆக வேண்டும்; இல்லையாகில், இவர் வாசிகமாக அடிமை செய்த ‘புகழும் நல்லொருவன்’ என்ற திருவாய்மொழியிலே ஆகப்பெறில் சிறப்புடையதாம்.

    ‘ஆனால், மற்றைத் தேவர்கள் பரம்பொருள் அல்லர் என்று மறுத்து அறுதியிட்டுப் பேசுதல் மூலமாகச் சர்வேசுவரனுடைய பரத்துவத்தை அருளிச்செய்கையாலே ஆனாலோ?’ என்னில், அதுவாகில், முதல் திருவாய்மொழியிலேயாக அமையும். ‘ஆனால், பரத்துவ நிர்ணயத்திலே பரோபதேசமும் ஆகையாலே ஆனாலோ?’ என்னில், அதுவாகில், ‘திண்ணன் வீடு’ என்ற திருவாய்மொழியிலேயாதல், ‘அணைவதரவணை’ என்ற திருவாய்மொழியிலேயாதல் அமையும். ‘ஆனால், அர்ச்சாவதாரத்திலே பரத்துவம் அருளிச்செய்கையாலே ஆனாலோ?’ என்னில், அதுவாகில், 3‘செய்ய தாமரைக் கண்ணன்’ என்ற திருவாய்மொழியிலேயாதல்

அமையும். ‘ஆனால், பரோபதேசம் பண்ணுகையாலே சொல்லிற்று ஆனாலோ?’ என்னில், அதுவும் ஒண்ணாது. ‘என்னை?’ எனின், ‘வீடுமின் முற்றவும்’ என்ற திருவாய்மொழி தொடங்கிப் பலவிடங்களிலும் பரோபதேசம் செய்தார்; அவற்றிலும் ஆகப்பெற்றதில்லை.

    ‘ஆனால், யாது ஆவது!’ என்னில், இந்த ‘ஒன்றும் தேவும்’ என்ற திருவாய்மொழியிலே, ‘திருக்குருகூரதனுள் பரன்திறமன்றிப் பல் உலகீர் தெய்வம் மற்று இல்லை பேசுமினே,’ என்று, பொலிந்து நின்ற பிரானே எல்லாப் பொருள்கட்கும் அறப்பெரியவன் என்று இவர் அருளிச்செய்யக் கேட்டு, ‘கபால நன்மோக்கத்துக் கண்டு கொண்மின்’ என்ன, கண்டு, உலகம் எல்லாம் திருந்தி ஸ்ரீவைஷ்ணவர்கள் ஆனார்கள். 1‘இவர்தாம் அவர்களுக்கு மங்களாசாசனம் பண்ணும்படி அன்றோ அவர்கள் தாம் திருந்தினபடி? 2‘பொலிக பொலிக’ என்று இதற்கென்ன ஒரு திருவாய்மொழி நேருகிறாரே அன்றோ? 3சர்வேசுவரன் அவதரித்துத் திருத்தப் பார்த்த இடத்தும் திருந்தாத சமுசாரத்திலே இவர் திருத்தத் திருந்தினபடி. இனி, இவர்க்குத் தத்துவ நிர்ணயம் பண்ண வேண்டாதபடி 4‘இடங்கொள் சமயத்தை எல்லாம் எடுத்துக் களைவன போலத் தடங்கடற்பள்ளிப் பெருமான் தன்னுடைப் பூதங்களே’ ஆம்படி திருத்துகையாலே, ‘ஆட்செய்து ஆழிப் பிரானைச் சேர்ந்தவன்’ என்கிறார்.

    வண் குருகூர் நகரான் – இந்த நன்மைக்குக் காரணம் அவ்வூரில் பிறப்பு ஆயிற்று. நாள் கமழ் மகிழ் மாலை மார்பினன் – ‘நண்ணாதார் முறுவலிப்ப’ என்ற திருவாய்மொழியிலே இம்மக்கள் படுகிற துன்பத்தை நினைத்து, சார்த்தின மாலையும் வாடி இருந்தது முன்பு; இப்போது, பகவானுடைய பரத்துவத்தை விரித்து அருளிச்செய்து,

இனி இவர்களுக்கு ஒரு குறை இல்லை,’ என்று தேறின பின்பு, இட்ட மாலையும் செவ்வி பெற்றதாயிற்று; ஆதலின், ‘நாள் கமழ் மகிழ் மாலை’ என்கிறது. மாறன் சடகோபன் – பகவானை அடைவதற்குத் தடையாக உள்ளனவற்றிற்கு எல்லாம் யமன் ஆனவர். வேட்கையால் சொன்ன பாடல் ஆயிரத்துள் இப்பத்தும் வல்லார் – தம்முடைய ஆசையின் மிகுதியாலே அருளிச்செய்த பாடல் ஆயிரத்திலும் இப்பத்தையும் வல்லார். சிலர் ஐம்பொறிகளையும் அடக்கினவர்களாய் வந்து நின்று கேட்கச் சொல்லுகிறார் அல்லர்; தம்முடைய வேட்கையால் சொல்லுகிறாராதலின், ‘வேட்கையால் சொன்ன’ என்கிறார்.

    மீட்சி இன்றி வைகுந்த மாநகர் வல்லார் கையது – இரண்டும் இவர்கள் கையது. மீண்டு வருதல் இல்லாத பரமபதமானது இவர்கள் கையது. இந்தப் பத்தும் பத்தாக இவர்கள் கையது பரமபதம். இப்பொருளில் ‘மற்றது’ என்பது இடைச்சொல். அன்றிக்கே, ‘மற்றது’ என்பதனை வைகுந்த மாநகருக்கு அடைமொழியாக்கி, ‘மற்றையதான – அதாவது, இவ்வுலக வாழ்க்கைக்கு எதிர்த்தட்டான வைகுந்த மாநகரமானது இவர்கள் கையது,’ என்னலுமாம். அன்றிக்கே, ‘பகவானுடைய பரத்துவ ஞானமே பிரயோஜனம் போரும்; அதற்குமேல், ஞான பல ரூபமான கைங்கரியத்திற்கு ஏகாந்த தேசமான பரமபதமும் இவர்களுக்கு எளிதாம்,’ என்னலுமாம்.

 

திருவாய்மொழி நூற்றந்தாதி

ஒன்று மிலைத்தேவிவ் வுலகம் படைத்தமால்
அன்றிஎன ஆரும் அறியவே – நன்றாக
மூதலித்துப் பேசியருள் மொய்ம்மகிழோன் தாள்தொழவே
காதலிக்கும் என்னுடைய கை.

நிகமத்தில்
பரமபதம் சுலபமாக கிட்டும்
ஆள் செய்து ஆழிப் பிரானை சேர்ந்தவன்
மகிழ் மாலை மார்பினன் மாறன் சடகோபன்
வேட்கையினால் ப்ரீதி உடன் அருளிய
அடிமை செய்து -முறையிலே சர்வேஸ்வரனை பற்றி
ஆழிப் பிறனை சேர்ந்து பின்புகைங்கர்யம் செய்ய வில்லை
கைங்கர்யமேபாலன் -அது கொண்டே பற்ற
விசித்ரா தேக சம்பந்தி அவன் கொடுத்தவை கொண்டது கொண்டு ஈஸ்வரனுக்கு சமர்ப்பிக்க
கைங்கர்யம் செய்து –
வகுத்த விஷயத்தில் செஷமாக்கி கிட்டி
உகந்து பணி  செய்து -உனது பாதம் பெற்றேன் –

ஆள் செய்ய உபாயம் கையிலே உண்டே
ஆழி உண்டே
வ்ருத்தம் -வட்டம் செயல் பாடு
வருத்தமான் தான் -ஞான அனுஷ்டானம் கொண்டு வ்ருத்தியில் மூட்டுவான்
கையிலே திரு ஆழி சேர்ந்தால் போலே இவர் சேர்ந்ததே
வட்டமான இருப்பை காட்டி -ஆள்கின்றான் ஆழியான் யாரால் குறை உடையோம்
கையும் திரு ஆழியும் சேர்ந்த அழகை காட்டி
கரை மரம் சேர்ந்தது போலே
ஆழ்வார் அடிமை -மூன்று விதம்
மனத்தால் வாயாலா சரீரத்தால்
மானச காகிகங்கள் -மூலம் செய்ய முடியாதே -கால் அழும் நெஞ்சம் உருக

‘பாலாழி நீகிடக்கும் பண்பையாம் கேட்டேயும்
காலாழும் நெஞ்சழியும் கண்சுழலும் – நீலாழிச்
சோதியாய்! ஆதியாய்! தொல்வினைஎம் பால்கடியும்
நீதியாய்! நிற்சார்ந்து நின்று.’

  பெரிய திருவந். 34. ‘நன்று; நெஞ்சு அழிந்தால் வாசிகமானதுதான்
செய்யக்கூடுமோ?’ எனின், ‘முடியானே’ என்ற திருவாய்மொழியில்
சொல்லப்பட்ட காரணங்களையுடையவராகையாலே ‘மனம் முன்னே, வாக்குப்
பின்னே’ என்னும் நியமம் இல்லை இவர்க்கு என்க.

உடல் எனக்கு உருகுமாலோ –
வாசிகம் ஒன்றுமே
திருவாய் மொழி அருளி இன்று
முனியே நான் முகனே அப்புறம் தான் சொல்ல முடியுமே
சந்க்ரகமாக முதல் திருவாய் மொழி
சொல்லாமல் நடிவில் அருளி –
புகழும் நல் ஒருவன் -எங்கும் அடிமை செய்ய இச்சித்துவாசிகமாக அங்கு அடிமை செய்தான்
பரத்வ் நிர்ணயம் செய்தாரா என்றால்

பர உபதேசம்
பரத்வம் திண்ணன் வீட்டில் அரவது அரவணை
அர்ச்சையில் பரத்வமா வாசிக்க கைங்கர்யம்
செய்ய தாமரைக் கண்ணன்
வீடு முற்றவும் தொடங்கி பல பர உபதேசம்

செய்ய தாமரைக்கண்ணன்’ என்ற திருவாய்மொழியில் ‘நெஞ்சினால்
நினைப்பான் எவன்? அவனாகும் நீள்கடல் வண்ணன்,’ என்ற ஒன்பதாம்
பாசுரத்திலே நோக்கு.

பொலிந்து நின்ற பிரான்
கேட்டு
கபால நல நோக்கம் கண்டு கை உடன் காட்டி
பிச்சை எடுத்ததை அவர்களே சொல்லி வைக்க கண்டு கொண்மின்
உம தாம் ஆகமங்களில் நீங்கள் செய்தவற்றை பார்த்து கொள்ளும் என்கிறார்
ஜகம் திருத்தி -ஸ்ரீ வைஷ்ணவம்
பொலிக பொலிகபொலிக  இவரே மங்களா சாசனம் இதுக்கு என்று திருவாய் மொழி இடும்படி
அவனால் திருத்த முடியாத சம்சாரம் இவரால்
திருமகள் கேல்வனுக்கு ஆக்கி –
மண் மிசை மாதவனே நிற்கிலும் -ராமானுசன் வந்து தோன்றிய அப்பொழுதே
அப்பொழுது ஒரு சிந்தை செய்தே
அருமா மணை கொண்டு திருத்த -கூராழி கொண்டு சிதைப்பது அவன்
இவன் திருத்தினது தான் ஆள் செய்தது
எங்கும் ஸ்ரீ வைஷ்ணவர் ஆகும் படி -இதுவே ஆழ்வார் செய்து அருளிய கைங்கர்யம்
இதுக்கு அடி இந்த திவ்ய தேச மகிமை
உபய பிரதானம் -பிரணவம் போலே –
ஜீவாத்மா பரமாத்மா பிரதாண்யம்
அர்த்தம் கொண்டும் -சப்தம் கொண்டும் –
அடிமை அவனுக்கே –

எழுவாய் பயனில்லை செயப்படு பொருள் -கதை –
subject -ஜீவாத்மா
அடிமை -அவனுக்கே
அர்ஜுனன் தேர் தட்டு போலே
சாரதி ரதி -எனது தேரை அங்கே  நிறுத்து
அவனே கலங்கும் பொழுது மாசுச சொல்லி யுத்தத்தில் மூட்டி -இறங்கி தேர் எரிய –
திரு குருகூர் ஆதி நாதர் ஆழ்வார் -இரண்டு த்வஜ ஸ்தம்பம் உத்சவங்கள்
பரே சப்தம் பொலியும் இங்கே
நண்ணாதார் -உலகு இயற்க்கை -மாலையும் வாட
இங்கே திருந்த மாலையும் மணக்க -குறைகள் இன்று இட்ட மாலையும்
திரு குருகூர் பாசுரம் மட்டும் தான் மகிழ் மாலை
தம்முடைய பெருமை அருளி
கலியன் -சீர்காழி
ஆள் செய்தேன்
மாறன்-மாறி இருப்பவர் –
சடகோபன் -சடம் வாயு பகவன் அடைய
வேட்கை யால்  சொன்ன பாடல் –
அபிநிவேச அதிசயத்தால்
அவாவில் அந்தாதி
பாடும் பாடும் தூண்டி வேட்கை
காதல் அன்பு அவா வேட்கை நான்கு சப்தங்கள்
அபிநிவேச அதிசயத்தால்
சொல்லாமல் தரிக்க முடியாமல்
கை யது
-மற்றது இரண்டும்
இதுவே பரம பாக்கியம்
மற்று பரம பதம் வேண்டி இருக்கில் அதுவும் கிட்டும்
மற்று
பத்தும் பத்தாக பரி பூரணமாக
இந்த பத்து பாசுரங்கள்
பகவத்
ஞான அனுரூபமான தேகமும் அவர்கள் கையதே
பஹா குத்ருஷ்டிகள் இல்லாமையாலே உபதேசிக்க வேண்டாதே அனுபவிக்க
பரம பதம்
இவர் தம்மை புகழ்வது –
பரதவ ஞானம் சந்தோசம் -திருத்த பேற்றை கொடுத்து அருளின
அரட்ட முக்கி அடையார்-பரகாலன் –
தன்னை இப்படி ஆக்கின அவன் நினைந்து
மகிழ் மாலை சடகோபன்
மகிழ்ந்த மாறன் மற்ற இடங்களில்
மா முனிகள் –
மொய்ம் மகிழான்
வகுளாபரணன் இவரே சொல்லி அருளி

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

 நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

 பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading