திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -4-10-6-ஸ்ரீ M.A V .சுவாமிகள் —

போற்றி மற்றோர் தெய்வம் பேணப் புறத்திட்டு, உம்மைஇன்னே
தேற்றி வைத்தது, எல்லீரும் வீடுபெற் றால்உலகு இல்லைஎன்றே;
சேற்றில் செந்நெல் கமலம் ஓங்கு திருக்குரு கூர்அதனுள்
ஆற்ற வல்லவன் மாயம்கண் டீர்அது அறிந்தறிந்து ஓடுமினே.

    பொ-ரை : வேறு ஒரு தெய்வத்தைத் துதித்து ஆதரிக்கும்படியாகத் தனக்குப் புறம் ஆக்கி உங்களை இவ்வகையாகத் தெளியும்படியாகச் செய்து வைத்தது. எல்லோரும் மோக்ஷத்தை அடைந்தால் சாஸ்திர மரியாதை கெட்டுவிடும் என்றே ஆம்; சேற்றிலே செந்நெற்பயிர்களும் தாமரைகளும் உயர்ந்து வளர்கின்ற திருக்குருகூர் என்னும் திவ்விய தேசத்தில் எழுந்தருளியிருக்கின்ற மிக்க ஆற்றலோடு கூடிய எம்பெருமானது மாயமாகும் இது; அதனை அறிந்து அறிந்து தப்பிப் பிழைப்பதற்குப் பாருங்கோள்.

    வி-கு : ‘மற்றோர் தெய்வம் போற்றிப் பேண’ எனக் கூட்டுக. உலகு – சாஸ்திரம். ஆற்ற வல்லவன் – இறைவன். கண்டீர் – முன்னிலை அசைச்சொல்.

    ஈடு : ஆறாம் பாட்டு. 3‘பகவானுடைய பரத்துவத்தை நீர் அருளிச்செய்யக் கேட்ட போது வெளிச்சிறத்து

அல்லாத போது வேறு தெய்வங்களிடத்தில் ஈடுபாடு உண்டாகாநின்றது; இதற்கு அடி என்?’ என்ன, ‘உங்கள் பாபம்’ என்கிறார். 1‘எம்பெருமானே சர்வேசுவரனாகில் எங்களை வேறு தெய்வங்களிடத்திலே ஈடுபாடுடையவர்களாக்கி வைப்பான் என்?’ என்ன, ‘உங்களை இங்ஙனே வைத்தது, ‘புண்ணிய பாவங்களைச் செய்த ஆத்துமாக்கள் அவ்வவற்றிற்குத் தகுதியான பலன்களை அனுபவிக்க வேண்டும்,’ என்று கூறுகின்ற சாஸ்திர மரியாதை அழியும் என்று; ஆன பின்னர், அதனையறிந்து எம்பெருமானையே இறுகப் பற்றி அவன் வஞ்சனத்தைத் தப்புங்கோள்,’ என்கிறார்.

    போற்றி – 2நான் பகவத் விஷயத்தில் செய்வன முழுதும் நீங்கள் இதர தேவர்கள் பக்கலிலே செய்து போருகின்றீர்கோள்; உங்கள் பக்கல் ஒரு குறை இல்லை; அடையத்தகாதனவாய் இருத்தல் ஒன்றே குறை. மற்றோர் தெய்வம் –  3‘அருச்சுனா! எவர்கள் வேறு தேவர்களிடத்தில் பத்தியுடையவர்களாய்க்கொண்டு சிரத்தையோடு பூஜிக்கின்றார்களோ, அவர்களும் என்னையே விதி முன்னாக அன்றியே பூஜிக்கின்றார்கள்,’ என்னுமாறு போலே. பேண – ‘அவை  தமக்கு என்ன ஒன்று இல்லாமையாலே, அவற்றிற்கு ஓர் உயர்வினைச் சாதித்தல் அவர்களை அடைகின்ற உங்களுக்கே பாரம்’ என்பார், ‘பேண’ என்கிறார். புறத்திட்டு – ஈசுவரனாகிய தனக்குப் புறம்பு ஆம்படி செய்து. உம்மை இன்னே தேற்றி வைத்தது – உங்களை இப்படியே தெளியும்படி செய்து வைத்தது. என்றது, 4‘ஓர் இடத்தில் நின்றும் அஞ்சுகிறான் இல்லை,’ என்கிறபடியே,நான் மேல் வரும் கேட்டிற்கு அஞ்சாதே பாரம் அற்றவனாய் இருக்கின்றாற்போலே, ஓட்டை ஓடத்தோடு ஒழுகல் ஓடமான இதர தேவதைகளைப்பற்றி உங்களுக்கு அவர்கள் பக்கலிலே ருசி விசுவாசங்கள் உண்டாம்படி செய்து பாரம் அற்றவர்களாய் இருக்கும்படி வைத்தது,’ என்றபடி.

    எல்லீரும் வீடு பெற்றால் உலகு இல்லை என்றே – எல்லீரும் இருந்ததே குடியாக மோக்ஷத்தைப் பெற்றால், லீலைக்கு அடியான சாஸ்திரம் பயன் அற்றதாய்விடும். என்றது, ‘புண்ணியங்களைச் செய்வாரும் பாவங்களைச் செய்வாருமாய் அன்றோ நாடுதான் இருப்பது? பாவம் செய்தவர்களும் புண்ணியம் செய்தவர்களுடைய பலத்தை அனுபவிக்குமன்று, ‘புண்ணியத்தினாலே புண்ணியனாகவும் பாவத்தாலே பாவியாகவும் ஆகின்றான்’ என்கிற சாஸ்திர மரியாதை குலையும்,’ என்றபடி. ஆக, பாவம் செய்தவர்கள் அதன் பலத்தினை அனுபவித்தலும், புண்ணியம் செய்தவர்கள் அதன் பலத்தினை அனுபவித்தலும் ஆகிற சாஸ்திர மரியாதை குலையாதபடியாகச் செய்து வைத்தான் என்றவாறு. 1 ‘ஆதலால், உலகத்திலும் ( சாஸ்திரங்களிலும் ) வேதங்களிலும் புருஷோத்தமன் என்று பிரசித்தனாய் இருக்கிறேன்’ என்றவிடத்தில் ‘லோக’ சப்தத்தால், பிரமாணத்தைச் சொல்லிற்று என்று கொண்டதைப் போன்று, இங்கும் ‘உலகம்’ என்ற சொல் சாஸ்திரத்தைச் சொல்லுகிறது.

    சேற்றில் செந்நெல் கமலம் ஓங்கு – அவ்வூரில் உள்ள பொருள்கள் முழுதும் ஒன்றற்கு ஒன்று 2இசலி வளரா நிற்கும். இதனால், ‘உரம் பெற்ற மலர்க்கமலம்’ என்பது போன்று, அவ்வூரிலே உள்ள பொருள்களில் ஒன்றில்

ஒன்று குறைந்திருப்பது இல்லையாயிற்று என்பதனைத் தெரிவித்தபடி. ஆற்ற வல்லவன் – மிகவும் வல்லவன். என்றது, ‘சம்பந்தம் ஒத்திருக்கச்செய்தே, புண்ணியம் செய்தார் அதன் பலத்தினை அனுபவிக்கவும், பாவம் செய்தார் அதன் பலத்தினை அனுபவிக்கவும் செய்ய வல்லவன்’ என்றபடி. மாயம் கண்டீர் – 1‘என்னுடைய மாயையானது ஒருவராலும் தாண்டக்கூடாதது,’ என்கிறபடியே, தான் அகற்ற நினைத்தாரைத் தன் பக்கல் வந்து கிட்டாதபடி பிரகிருதியை இட்டு வஞ்சித்து வைத்தபடி கண்டீர்கோள்.

    அது அறிந்து – ‘இது அவனுடைய மாயம்,’ என்னுமதனை அறிந்து. அறிந்து ஓடுமின் – 2‘சத்திய சங்கல்பம் முதலான குணங்களையுடைய என்னையே எவர்கள் சரணம் அடைகின்றார்களோ, அவர்கள் இந்த மாயையினைத் தாண்டுகிறார்கள்,’ என்கிறபடியே, மாயையினைத் தாண்டுதற்கு உபாயமான பிரபத்தியையும் தானே அருளிச்செய்து வைத்தான்; அதனை அறிந்து, அவ்வழியாலே அவனைப்பற்றி, இந்த மாயையினைத் தப்பப் பாருங்கோள். என்றது, ‘இது அவன் செய்து வைத்ததான பின்பு, அவனை வெல்ல வேண்டில், அவனோடு பிரிய நின்று வெல்லப் பாராமல், அவனையே காற்கட்டி இதனைத் தப்பப் பாருங்கோள்,’ என்றபடி.

பரத்வத்தை பிரதி பாதித்து வருகிறார்
பாஹ்ய குத்ருஷ்டி மதத்தார் வலிந்து செய்வார்களுக்கும்-உள்ள  தெய்வமும் ஆகி நின்றான்
மனு  ஸ்மரதி பிரமாணம் –
சர்வ -யா வேத பாஹ்யா -குத்ரிஷ்ட்யா -சர்வார்தா நிஷ்பராயா -பிரயோஜனம் இன்றி
தாமசர் இவர்கள் அனைவரும் -என்கிறது
ஸ்ரீ ரெங்க ராஜ சத்வம் விவரித்து பட்டர் -இருவரும் அழிந்து போவர் களே என்று அருளி –
கானல் நீர் தேடி போகும் மானும் துஷ்ட சந்துக்கள் துறையில் இறங்கிய மான் போலே –
பொலிந்து நின்ற பிரானை போற்ற வேண்டும் சடக்கென என்றார் முந்தைய  பாசுரத்தில் –
நீர் அருளிச் செய்யும் பொழுது பகவத் பரத்வம் தெளிவாக இருக்க
அல்லாத பொழுது இப்படி இல்லையே
உங்கள் பாபம் தான் இதனால் என்கிறார்
தேவதாந்தர பிரவணம் எதற்கு வைத்தான்
கர்மம் -அடியாக-சாஸ்திரம் தப்ப கூடாதே
சர்வருக்கும் மோஷம் கொடுக்கக் கூடாதே
எல்லீரும் வீடு பெற்றால் -உலகு இல்லாமல் போகும் உலகு இங்கே சாஸ்திரம் அர்த்தம்
சாஸ்திர மரியாதை வேண்டுமே

தெய்வமே மற்று இல்லை என்று அருள வில்லை
பரன் திறம் அன்றி மற்று இல்லை என்கிறார்
காட்டினான் தெய்வம் எங்கும் –
சாஸ்திரம் கர்ம பலன் அனுபவிக்க சம்சாரம் இருக்க வேண்டுமே
சத் அசத் கார்யம் செய்யும் ஜந்துக்கள் கர்ம பலன் அனுபவிக்க –
சர்வ முக்தி பிரசங்கம் சாஸ்திரம் ஒத்து கொள்ளாதே –
போற்றி -மற்றோர் தெய்வம் பேண  -புறத்து இட்டு
எல்லீரும் வீடு பெற்றால் உலகு இல்லையாமே சாஸ்திரம் இல்லாமல் போகுமே
ஆற்ற வல்லவன் சர்வ சக்த யுக்தன்
மாயம் கண்டீர்
அறிந்து அறிந்து அவன் திருவடி சேர வாரும்
போற்றி இதர தெய்வங்கள் -நான் அவனை செய்வது போலே –
இங்கே போற்றி மங்களா சாசனம் செய்தால் போதுமே
அவை அட்டது ஒழிய சுட்டது கொண்டு வர சொல்லுமே
உங்கள் பக்கல் குறை இல்லை –
ஆனால் அது மற்றோர் தெய்வம் -அப்ராப்தமே குறை
பிராப்தி -வகுத்த சேஷி தானே
மற்றோர் தெய்வம் -ஏ பி அந்ய தேவதை பக்தா யஜந்தே கீதை
அவர்களும் கூட என்னையே அவிதி பூர்வகமாக பற்றுகிறார்கள்
உடம்பில் சந்தனம் ஆத்மா தானே நுபவிக்கிறது
அனைத்தும் அவன் சரீரம் தானே
சரீரம் என்று நினைத்து பண்ண வேண்டும் –
நேரே உபாசிக்க பிராப்தி உள்ள பொழுது சரீரம் உபாசிக்க வேண்டாமே
பிரபன்னன் நேரே செல்ல பிராப்தி உள்ளவன்

பேண –
அவை இடம் ஒன்றும் இல்லை -உத்கர்ஷம் சாதிப்பதே உங்களுக்கு பலம் –
இல்லாத பெருமை நீங்களே சொல்ல வேண்டுமே –

‘ஓர் இடத்தில் நின்றும் அஞ்சுகிறான் இல்லை’ என்னும் இவ்விடத்தில்,

  ‘இடராக வந்தென்னைப் புன்சிறு தெய்வங்கள் என்செயும்? மான்
இடராக வன்பிணி மாநாக மென்செயும்? யான்வெருவி
இடராக வன்னி புனலிடி கோள்மற்று மென்செயும்?வில்
இடராக வன்னரங் கன்திருத் தாள்என் இதயத்ததே.’

  என்ற திவ்வியகவியின் திருவாக்கு நினைவு கூர்க.

போற்றி
பேண
இரண்டு சப்தமும் அருளி
புறத்திட்டு -தனக்கு வெளியே தள்ளி
கைங்கர்யம் கொள்ள ஆசைப் பட்டவன் -அவன் அனுக்ரகத்தால் பெறுகிறான்
தனக்கு வேண்டியவர்களை தானே கைக் கொள்ளுவது போலே
வேண்டாதவர்களை அவனே தள்ளி வைக்கிறான் -புறத்திட்டு
நெறி காட்டி நீக்குதியோ பெரிய திருவந்தாதி
வேற உபாயம் காட்டி -நெறி -உன்னுடைய திரு மேனி அனுபவிக்க வரும் என்னை நீக்கி –
வேறு ஒருவர் இடம் கை காட்டி தன்னிடம் இன்று நீக்கி
உங்களை இப்படி தெளிவு படும் படி செய்தது –
நிர்பரமாய் நிர்பயமாய் நான் இருக்க -மேல் வரும் அனர்தங்களுக்கு அஞ்சாமல்
நீங்கள் முடியாது –
மரம்மேல் நின்று -தரை மேல் நின்று மின்சார கம்பி தொடுவாரை போலே –
ஓட்டை ஓடம் ஒழுகல் ஓடம் இதர தேவதைகளை ஆஸ்ரயித்து
வேண்டுதல் வேண்டாதவன் இல்லாதவன் எதனால் இப்படி செய்தான் என்னில்
எல்லாரும் இருந்ததே அடியாக மோஷம் பெற்றால்
சத் கர்மம் -ஆசாத் கர்மம் செய்பவருலகில் இருக்க
பலன் அனுபவிக்க சாஸ்திரம் இருக்க
சதுகாரி சாதுகி பவதி -பாபேனே –
சாஸ்திர மரியாதை காத்து -குலையாத படியாக செய்கிறான்
உலகு சப்தம் இங்கே சாஸ்திரம் அர்த்தம் எங்கனே என்னில்
லோக சப்தம் சாஸ்திரம் சொல்லும் பிரமாணங்கள் பல உண்டே கீதை பாஷ்யம்

தைவீஹ் யேஷா குணமயீ மம மாயா துரத்யயா
மாமேவயே ப்ரபத்யந்தே மாயா மேதாம் தரந்தி தே.’

  இது, ஸ்ரீ கீதை, 7 : 14.

எல்லாம் அவனது மாயசெயல்
தேவதைகள் மேல் விசுவாசம் தானே செய்வதாக கீதையில் அருளி
நாட்டினான் தெய்வம் எங்கும்
நல்லதோர் அருள் தன்னால் காட்டினான் திருவரங்கம்
இவனும் நிற்க சேட்டை தன்  மடி பார்த்து இருக்கின்றீர்களே
அதிகாரி பேதம் -உண்டே -தகுந்த தேவதைகள் -கர்மம் தகுந்த பலன்
மதி விகற்ப்பால் பல பல ஆக்கி -தெய்வங்களும் பல பல ஆக்கி -நின் மூர்த்தி சரீரம்
எல்லாம் அவன் சரீரம்

bill colector போலே இவை
சேற்றில் செந்நெல் கமலம் -இரண்டும்
உலகு அளந்த சேவடி போலே உயர்ந்து காட்ட கமலம்
கதிர் தாழ்ந்து வணங்குகின்ற தேவதைகள் போலே பெரியாழ்வார்
பதார்த்தங்களும் இழிந்து கொண்டு சிநேகமாக
ஆற்ற வல்லவன்
சம்பந்தம் ஒத்து இருக்க செய்தே புண்ய பாப பலன்களை சரியாக அனுபவிக்க பண்ணும் சாமர்த்தியம்
மாயம் கண்டீர்
பிரகிருதி இட்டு வஞ்சித்து வைத்த மாயம்
மாயை கடக்க முடியாதே
அறிந்து -அவன் இடம் ஒடுமினே
அவனை பற்றி கடக்க
உபாயம் பிரபத்தியும் காட்டி
இவன் அவன் செய்து வைத்தது
அவனையே கால் கட்டி -விடுதலை
பிள்ளை திரு நறையூர் அரையர் வார்த்தை நினைவு கொள்க

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

 நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

 பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading