திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -4-9-11-ஸ்ரீ M.A V .சுவாமிகள் —

திருவடியை நாரணனைக் கேசவனைப் பரஞ்சுடரைத்
திருவடிசேர் வதுகருதிச் செழுங்குருகூர்ச் சடகோபன்
திருவடிமேல் உரைத்ததமிழ் ஆயிரத்துள் இப்பத்தும்
திருவடியே அடைவிக்கும் திருவடிசேர்ந்து ஒன்றுமினே.

    பொ-ரை : ‘திருவடியும் நாரணனும் கேசவனும் பரஞ்சுடருமான சர்வேசுவரனுடைய திருவடிகளை அடையவேண்டும் என்று நினைத்து, செழுமை பொருந்திய திருக்குருகூரில் அவதரித்த ஸ்ரீ சடகோபராலே, எம்பெருமானுடைய திருவடிகளின்மேலே அருளிச்செய்யப்பட்ட தமிழ்ப்பாசுரங்கள் ஆயிரத்துள் இப்பத்துப்பாசுரங்களும்

திருவடிகளிலே சேர்ப்பிக்கும்; நீங்களும் திருவடிகளைச் சார்ந்து அடிமை செய்யப் பாருங்கோள்,’ என்றவாறு.

    வி-கு : ‘கருதி உரைத்த தமிழ்’ என்க. ‘இப்பத்தும் அடைவிக்கும்,’ என்க.

    ஈடு : முடிவில், 1‘இத்திருவாய்மொழி கற்றவர்களை இதுதானே அவன் திருவடிகளிலே சேர்க்கும்,’ என்கிறார்.

    2புறம்பு உண்டான ருசியைப் போக்கித் தன் பக்கலிலே ருசியைப் பிறப்பித்த உபகாரத்தை நினைத்து ஏத்துகிறார், ‘திருவடியை’ என்று தொடங்கி. திருவடியை – எல்லார்க்கும் ஸ்வாமியாய் உள்ளவனை. நாரணனை – 3கேவலம் ஸ்வாமியாய் இருக்குமளவே அன்றிக்கே, ‘இவை அல்லோம்’ என்ற அன்றும் தான் விடமாட்டாதபடி அன்பு உள்ளவனாய் இருப்பவனை. கேசவனை – அன்பு உள்ளவனாய்க் கடக்க இருக்கை அன்றிக்கே, இவர்களோடே ஓர் இனத்தானாய் வந்து அவதரித்து, இவர்கள் 4விரோதியைப் போக்குமவனை. பரஞ்சுடரை -இப்படி அவதரித்து நின்ற இடத்திலே உண்டான மனிதத் தன்மையிலே பரத்துவத்தைச் சொன்னபடி. திருவடி சேர்வது கருதி – ‘அவன் திருவடிகளைக் கிட்டினோமாகவேண்டும்’ என்னும் எண்ணத்தையுடையராய்; ‘துயர் அறு சுடர் அடி தொழுது எழு’ என்று அடியே பிடித்து வருகின்ற எண்ணம் இதுவே அன்றோ?

    செழுங்குருகூர்ச் சடகோபன் – 5திருவயோத்தியையில் மண்பாடுதானே ஸ்ரீராமபத்தியைப் பிறப்பிக்குமாறு போலே, அவ்வூரில் பிறப்பாயிற்று இவர்க்கு இந்த ஈடுபாட்டிற்குக் காரணம். திருவடிமேல் உரைத்த தமிழ் ஆயிரத்துள் இப்பத்தும் திருவடியே அடைவிக்கும் திருவடி

சேர்ந்து ஒன்றுமின் – அவன் திருவடிகளிலே சொன்ன தமிழ் ஆயிரத்திலும் வைத்துக்கொண்டு இந்தப் பத்தும் அவன் திருவடிகளிலே சென்று அடைவிக்கும்; நீங்களும் அதற்கு உறுப்பாகத் திருவடிகளிலே சென்று கிட்டுங்கோள்.

    1அவன் திருவடிகளிலே கிட்டக்கொள்ள, நீங்கள் உங்களுக்குமாய் இராமல், அடிசிற்பானை போலே அவன் திருவடிகளிலே நித்திய கைங்கரியத்திலே சேரப் பாருங்கோள். 2‘ சமானமான பதவியை அடைந்தவர்களாய், விரோதி கழிந்தவர்களாய் எப்பொழுதும் என்னுடைய கைங்கரிய பரர் ஆகின்றார்கள்,’ என்றும், ‘பகவான் எந்த எந்த வழியாலே செல்லுகிறானோ, அந்த அந்த வழியிலே உயிரும் செல்கிறது,’ என்றும் சொல்கிறபடியே, இளைய பெருமாளைப்போலே பிரியாதே நின்று அவன் நினைவிற்குத் தகுதியாக அடிமை செய்யப் பாருங்கோள். ‘இப்படி அடிமை செய்வார்க்கு, இவர் விட்டவையும் விட்டுப் பற்றியதும் பற்ற வேண்டுமோ?’ என்னில், ‘இவர் அருளிச்செய்த இத்திருவாய்மொழியைச் சொல்லவே, தன்னடையே ஐம்புல இன்பங்களில் விரக்தியையும் பிறப்பித்து அவன் திருவடிகளில் சேர விடும் இத்திருவாய்மொழிதானே,’ என்க.

(11)

திருவாய்மொழி நூற்றந்தாதி

நண்ணாது மாலடியை நானிலத்தே வல்வினையால்
எண்ணாராத் துன்பமுறும் இவ்வுயிர்கள் – தண்ணிமையைக்
கண்டிருக்க மாட்டாமல் கண்கலங்கும் மாறன்அருள்
உண்டுநமக்கு உற்றதுணை ஒன்று.

பறம்புண்டான ருசியை போக்கி
அவன் திருவடி மேல் ருசி ஏற்ப்படுத்திய
உபகாரத்தை கொண்டாடி
திருவடியை ஸ்வாமி
நாரணன் -வாத்சல்யம் சொல்லி விட மாட்டாத
கேசவனை சஜாதீயனாய் வந்து
பரம் சுடரை தேஜஸ் குறையாமல் வளர்ந்து பல பிறப்பாய் ஒளி வெறும் முழு நலம்
சாணியில் இட்ட மாணிக்கம் போலே
மனுஷ்யதுவத்திலே பரத்வம்

திருவடி சேர கருதி
அடியே பிடித்து -முதலில் மநோ ரதம்
செழும் குருகூர் அவ்வூரில் மண் பற்று இவருக்கு
திரு அயோதியை மண் பற்று ராம பக்தி உண்டாக்கும் போலே
இந்த பத்தும் –
திருவடி மேல் வைத்த ஆயிரம்
இப்பத்தும் ர்திருவடிமேல் –
திருவடி சேர்ந்து ஒன்றுமினே
அடிசில்-பானை போலே
அவனுடைய ஆனந்துக்கு என்று கைங்கர்யம் செய்ய

ஒன்றுமின்’ என்பதற்கு வேறும் ஒரு கருத்து அருளிச்செய்கிறார் ‘அவன்
திருவடிகளே’ என்று தொடங்கி. ‘அடிசிற்பானைபோலே நித்திய
கைங்கரியத்திலே சேரப் பாருங்கோள்,’ என்று கூட்டுக.
‘உங்களுக்குமாயிராமல்’ என்றது, ‘ஸ்வாதந்திரியம் கொண்டாடாமல்’
என்றபடி. ‘அடிசிற்பானை போலே’ என்றது, ‘பாரதந்திரியம் கொண்டாடி’
என்றபடி.

2. ‘‘ஒன்றுமின்’ என்றது, ‘அவனிடத்தில் இலயம் அடைந்தது’ என்கிறபடியே,
ஐக்கியம் போன்று இராநிற்க, அவனுடைய திருவடிகளிலே நித்திய
கைங்கரியத்திலே சேரப் பாருங்கோள்,’ என்று சொல்லுகிறது யாங்ஙனம்?’
என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார், ‘சமானமான பதவியை’ என்று
தொடங்கி.

சாயுஜ்யம் அடைந்து
இளைய பெருமாளைப் போலே பிரியாமல்
அவன் நினைவுக்கு ஈடாக கைங்கர்யம் செய்ய
இவர் அருளிச் செய்த இந்த திருவாய்மொழி அனுசந்திக்க
அவனே சேர விடும் இது தானே

வெறுப்பு தானே ஏற்படுமே
உண்மை நெஞ்சில் படியுமே தன்னால்

சாரம் –
நண்ணாது மாலதியை
நானிலத்தே வல் வினையால்
எண்ணாராத் துன்பம் உறும்
கண்டு இருக்க மாட்டாமல் கண் கலங்கும் மாறன் அருள்
உற்ற துணை ஓன்று நமக்கு உண்டு

பரம பதம் காட்டிய பின்பு
ஈஸ்வரனால் திருத்த ஒண்ணாத இந்த லோகத்தை திருத்த முயல்கிறார்
அர்ச்சாயாம் பரத்வம் இதில் உபதேசிக்கிறார்

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

 நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

 பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading