திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -4-8-7-ஸ்ரீ M.A V .சுவாமிகள் —

கிளர்ஒளியால் குறைவில்லா அரி உருவாய்க் கிளர்ந்து எழுந்து,
கிளர்ஒளிய இரணியனது அகல்மார்பம் கிழித்து உகந்த,
வளர்ஒளிய கனல்ஆழி வலம்புரியன், மணிநீல
வளர்ஒளியான் கவராத வரிவளையால் குறையிலமே.

பொ-ரை : ‘கிளர்ந்த ஒளியாலே குறைபாடு இல்லாத நரசிங்க உருவமாய்க் கிளர்ந்து எழுந்து, கிளர்ந்த ஒளியையுடைய இரணியனுடைய அகன்ற மார்பினைக் கிழித்து மகிழ்ந்த, வளர்கின்ற ஒளியையுடைய பிரகாசம் பொருந்திய சக்கரத்தையும் பாஞ்சஜன்யம் என்னும் சங்கினையும் நீலமணி போன்று வளர்கின்ற ஒளியினையுமுடைய சர்வேசுவரன் விரும்பாத வரிகளையுடைய வளையல்களால் ஒரு பிரயோஜனத்தையுமுடையோம் அல்லோம்,’ என்கிறாள்.

    வி-கு : கிளர்தல் – மிக்குப்பொலிதல். ‘எழுந்து கிழித்து உகந்த ஒளியான்,’ என்க. அரி – சிங்கம். வரி – அழகு; கீற்றுமாம்.

    ஈடு : ஏழாம் பாட்டு. 1‘பெற்ற தமப்பன் பகையாக, பாலன் ஆனவனுக்கு உதவினவன், தன்னால் உதவப் பெறாமல் நோவு படுகிற எனக்கு உதவானாகில், நான் ஆபரணம் பூண்டு அலங்கரித்திருக்கின்ற இவ்வலங்காரம் யார்க்கு?’ என்கிறாள்.

    கிளர் ஒளியால் குறை இல்லா அரி உருவாய் – கிளர்ந்த ஒளியால் குறைவின்றிக்கே இருக்கின்ற நரசிம்ஹமாய். 2‘ஜ்வலந்தம் -பிரகாசித்துக்கொண்டிருப்பது’ என்கிற மந்திரார்த்தம் தோற்றச் சொல்லுகிறது-

நரசிம்ஹ அவதாரத்தில் ஒளி உண்டோ?’ என்ன, அதற்கு விடை
அருளிச்செய்கிறார், ‘ஜ்வலந்தம்’ என்று.

  ‘உக்ரம் வீரம் மஹாவிஷ்ணும் ஜ்வலந்தம் ஸர்வதோமுகம்
ந்ருஸிம்ஹம் பீஷணம் பத்ரம் ம்ருத்யு ம்ருத்யும் நமாம்யஹம்.’

  என்பது அம்மந்திரமாகும்.

கிளர்ந்து எழுந்து – சீறிக்கொண்டு தோற்றி. என்றது, 3‘பிறை எயிற்று அன்று அடல் அரியாய்ப் பெருகினானை’-பெரிய திருமொழி. 2. 5 : 8. என்கிறபடியே, சிறுக்கன்மேலே அவன் முடுகினவாறே கிளர்ந்தபடி. கிளர் ஒளிய இரணியன் – மிக்க ஒளியையுடைய இரணியன். ஆசுரமான ஒளியைக் குறித்தபடி. 4நரசிம்ஹமும் பிற்காலித்து வாங்கும்படி ஆயிற்றுப் பையல் கிளர்த்தி இருந்தபடி. அகல் மார்பம் – அகன்ற மார்வை :

தேவர்களுடைய வரத்தை 1ஊட்டியாக இட்டுத் திருவுகிருக்கு இரை போரும்படியாக வளர்த்த மார்பாதலின், ‘அகல் மார்பம்’ என்கிறது.

    கிழித்து – 2நரசிம்ஹத்தினுடைய மொறாந்த முகத்தையும், நா மடிக்கொண்ட உதட்டையும், குத்துதற்கு முறுக்கின கையையும், அதிர்ந்த அட்டகாசத்தையும் கண்டவாறே, பொசுக்கின பன்றி போலே உருகினான் ஆயிற்றுப் பொன்னன். ஆகையாலே, பின்னர் வருத்தமின்றியே கிழித்துப் போகட்டான். 3நெற்றியது கண்ணும் உச்சியது புருவமுமாய்க்கொண்டு தோற்றின போது மரத்தினைப் பற்றியுள்ள நெருப்புப் போலே அச்சமாகிய நெருப்பு உள்ளே நின்று எரியப் புக்கவாறே பதஞ்செய்யுமே அன்றோ? உகந்த – ‘சிறுக்கனுடைய விரோதி போகப் பெற்றோமே!’ என்று உகந்தபடி. அன்றிக்கே, 4‘ஏ தேவனே! உன்னைத் துதித்த என்னிடத்தில் என் தமப்பனாருக்கு அதனால் உண்டான பாபமானது நாசம் அடையட்டும்,’ என்கிறபடியே, இவன்தான் காற்கட்டி ஆணையிடாதே, இவன்தானே ‘கொல்ல வேண்டும்’ என்று இசையப் பெற்றோமே அன்றோ என்று உகந்த உகப்பு என்னுதல்.

    வளர் ஒளிய கனல் ஆழி வலம்புரியான் – 5காவற்காட்டில் துஷ்ட மிருகங்களுக்கு ஊட்டி இட்டு வளர்க்குமாறு போலே, தேவர்களுடைய வரங்களை ஊட்டியாக இட்டு வளர்த்த பையலுடைய மார்பு முழுவதும் திரு உகிருக்கு அரை வயிறாம்படி ஆயிற்றே அன்றோ? 6ஒருவன் கைபார்த்திருப்பார் பலர் உளர் ஆனால், அவர்களிலே 1சிலவர் இவனோடே கைசெய்து, அவனுக்குள்ள 2உடலையும் தாங்கள் கண்டபடி அழித்து நீக்கியுள்ள உடலையும் கூறிட்டு, தாங்களே கொண்டுவிட்டால், மற்றுள்ளார் கதகத எனச் சொல்ல வேண்டா அன்றோ? 3இவர்கள்தாம் நுனியாடிகள் அலரோ? 4இப்படி இவர்கள் தாமேயாவது என், நாம் இருக்க?’ என்று திவ்விய ஆயுதங்கள் கிளர்ந்தன ஆயிற்று. மணி நீல வளர் ஒளியான் – நீலமணி போலே வளராநின்றுள்ள ஒளியையுடையவன். கை மேலே 5இலக்கைப் பெறாதார்க்கு நாடோறும் படி விட வேண்டுமே அன்றோ? படி விடாத போது அரைக்கணமும் நில்லார்களே அவர்கள். இவர்கள் விருத்தவான்கள் ஆகையாலே அன்றோ கைமேலே இப்படிப் பெற்று வாழ்கிறார்கள்? ‘படி கண்டறிதியே’ என்னக் கடவதன்றோ?

‘ஒருவன் கைபார்த்திருப்பார்’ என்று தொடங்கிச் சிலேடையாக
அருளிச்செய்கிறார். கைபார்த்திருப்பார் – ‘ஒருவனுக்குப்
பரதந்திரராயிருப்பார்’ என்பதும், ‘கையிலே இருப்பார்’ என்பதும் பொருள்.
கைசெய்து – ‘துணை செய்து’ என்பதும், ‘கையிலே இருந்து’ என்பதும்
பொருள்.

இலக்கு – மாத ஜீவனமான பணமும், இலட்சியமும். படி – அரிசிப் படியும்,
திருமேனியும், என்றது, ‘கைமேலே இருந்து வைத்து இலட்சியம்
பெறாதார்க்குச் சந்தோஷத்தையுண்டாக்குவதற்காகத் திருமேனியைக் கொடுக்க
வேணுமேயன்றோ?’ என்றபடி. ‘படி’ என்பது, திருமேனி என்ற பொருளைக்
காட்டுவதற்கு மேற்கோள், ‘படி கண்டறிதியே’ என்பது, முதல் திருவந். 85.

எப்பொழுதும் பார்த்துக்கொண்டேயிருக்கிறார்கள்,’ என்கிறபடியே, இப்படிக் கண்டு ஜீவிக்குமதேயன்றோ உள்ளது?

    ‘‘மணி நீல வளர் ஒளி’ என்பது என்? அப்போது திருமேனி வெளுத்து அன்றோ இருந்தது?’ என்னில், ‘சிறுக்கன் துன்பம் தீரப் பெற்றோமே!’ என்று திருமேனி குளிர்ந்தபடியைச் சொல்லுகிறது. கவராத வரி வளையால் குறை இலமே –  ‘அவ்வடிவையுடையவன் தானே வந்து மேல் விழுந்து விரும்பி வாங்கி இட்டுக்கொள்ளாத இவ்வளையால் எனக்கு என்ன காரியம் உண்டு?’ என்கிறாள்.

பெற்ற தகப்பனால் வந்த நோவை -விலக்கி
தன்னால் நோவு படும் எனக்கு -உதவாமல்
வளையால் என்ன பிரயோஜனம் ஒப்பனை யாருக்கு
ஹிரண்யனின் மார்பை கிழித்து உகந்த
நர சிம்ஹனை சொல்லி -திரு ஆழியை சொல்லி வளையை சொலி
மந்த்ரம் -உக்ரம் வீரம் மஹா விஷ்ணும் -ஜ்வலந்தம் -அர்த்தம் காட்டி
கிளர்ந்த ஒளியால் -சீறிக் கொண்டு போக்கி
சிருக்கன் மேலே –
அகல் மார்பன் -பரந்த தேவதைகள் வரத்தால் பெருகிய மார்பன்
கிழித்து -பொசுக்கிய பன்றி போலே -கோபம் கொண்ட திரு முகம் -நா மடிக் கொண்ட உதட்டையும் –
குத்த முருக்கின திருக்கையும் -அதிர்ந்த அட்டகாசத்தையும் -மந்த காசம் =புன் சிரிப்பு
உருகினான் இத்தால் -வருத்தம் இன்றி கிழித்து
நெற்றியது கண்ணும் உச்சியது புருவமுமாய்க்கொண்டு தோற்றின போது மரத்தினைப் பற்றியுள்ள நெருப்புப் போலே

அச்சமாகிய நெருப்பு உள்ளே நின்று எரியப் புக்கவாறே
கண் மேலே போக புருவமும் மேலே போக

பதம் செய்யும்
பொன்னன் ஆகையாலே -ஹிரண்யன் உருகினான் –
கிழித்து என்பதருக்கு இவ்வளவு அர்த்தம்
உகந்த -சிறுகண் விரோதி தொலைக்கப் பெற்றோமே என்று உகந்து
அன்றி கால் கட்டி விலக்காமல் இருந்ததால் மகிழ்ந்து -இரண்டாலும் உகந்து –
வளர் ஒளிய கனல் ஆழி வலம் புரியான் –
காவல் காட்டில் துஷ்ட மிருகங்களை ஊட்டி வளர்ப்பது போலே -தேவர்கள் வரத்தால்
பையல் -திரு வயிற்ருக்கு அரை வயிறு ஆக -மற்ற ஆயுதங்களுக்கு வேலை இன்றி –
கைபார்த்து இருப்பார் அநேகர் இருக்க –
சிலர் -நகங்கள் இவன் உடன் கை செய்து யுத்தம் செய்து –
கூறிட்டு கிழித்து பங்கு போட்டு கொண்டால்
மற்றவர் வேலை இன்றி-இவர்கள் நுனி யாடிகள்
சங்கு சக்கரங்கள் -முதல் ஆயுதங்கள் கிளர்ந்து
நீல மேனி போலே வளரா நின்று உள்ள ஒளியை உடையவன்
படி விடாத போது -அரை ஷணம் நில்லார்களே இவர்கள்
படி =திருமேனி
இவர்கள் தான் விருதவான்கள் கை மேலே
சதா பஸ்யந்தி படி கண்டு ஜீவிப்பவர்கள்

இலக்கு – மாத ஜீவனமான பணமும், இலட்சியமும். படி – அரிசிப் படியும்,
திருமேனியும், என்றது, ‘கைமேலே இருந்து வைத்து இலட்சியம்
பெறாதார்க்குச் சந்தோஷத்தையுண்டாக்குவதற்காகத் திருமேனியைக் கொடுக்க
வேணுமேயன்றோ?’ என்றபடி. ‘படி’ என்பது, திருமேனி என்ற பொருளைக்
காட்டுவதற்கு மேற்கோள், ‘படி கண்டறிதியே’ என்பது, முதல் திருவந். 85.

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

 நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

 பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading