இவளைப் பெறும்பரிசு இவ்வணங்கு ஆடுதல் அன்று;அந்தோ!
குவளைத் தடங்கண்ணும் கோவைச்செவ் வாயும் பயந்தனள்;
கவளக் கடாக்களிறு அட்டபி ரான்திரு நாமத்தால்
தவளப் பொடிகொண்டு நீர்இட் டிடுமின்; தணியுமே.
பொ-ரை : ‘ஐயோ! இவளைப் பெறுதற்குரிய வழி இந்த அணங்கு ஆடுதல் அன்று; குவளை போன்ற விசாலமான கண்களும் கொவ்வைக்கனி போன்ற சிவந்த வாயும் பசலை நிறத்தை அடைந்தாள். கவளத்தை உண்ணுகின்ற மதம் பொருந்திய குவலயாபீடம் என்னும் யானையைக் கொன்ற கண்ணபிரானுடைய திருப்பெயரைச் சொல்லிக்
கொண்டு அடியார்களுடைய தூய்மையான பாததூளியை இவளுக்கு நீங்கள் இடுங்கோள்; இட்டவளவில் இந்நோய் தணியும்.’
வி-கு : பயந்தனள் – பசந்தனள். கவளம் – யானை உண்ணும் உணவு. அட்ட – கொன்ற. தவளம் – வெண்மை; இங்குத் தூய்மையைக் காட்டிற்று. பொடி – தூளி.
ஈடு : ஐந்தாம் பாட்டு. 1‘நீங்கள் செய்கிற பரிஹாரம் நோயை மிகுதி ஆக்காநின்றது; அதனை விட்டு, நோய்க்குத் தகுதியான பரிஹாரத்தைச் செய்யுங்கோள்,’ என்கிறாள்.
2இவளைப் பெறும் பரிசு இவ்வணங்கு ஆடுதல் அன்று – ‘இங்ஙனம் சிறப்பினை உடையளாய் இருக்கிற இவளைப் பெறுகைக்கு உபாயம் இத்தெய்வ ஆவேசங்கொண்டு ஆடுமது அன்று; இந்த நற்சரக்கைப் பெறப் பார்ப்பவர்கள் இந்தத் தாழ்ந்த செயல்களாலேயோ பெறப்பார்ப்பது?’ என்றபடி. இவள் இப்படிச் சொன்னவிடத்திலும் இவர்கள் மீளாதொழிகையாலே, அந்தோ – ‘ஐயோ! 3இவளை இழந்தோமே அன்றோ!’ என்கின்றாள். ‘இத்தெய்வ ஆவேசங் கொண்டு ஆடத் தொடங்கிய அளவில் இவளை இழந்தோமாதல் எப்படி?’ என்ன, ‘பார்க்கமாட்டீர்களோ? குவளைத் தடம் கண்ணும் கோவைச் செவ்வாயும் பயந்தனள் – 4‘குவளை அம் கண்ணி’ என்கிறபடியே, குவளைப் பூப்போலேயாய் அனுபவிக்கின்றவர்கள் அளவு அல்லாத பரப்பையுடைத்தான கண்ணும், 5‘கோவை வாயாள்’ என்கிறபடியே, கோவைப்பழம் போன்ற சிவந்த உதடும் பசலை நிறத்தையடைந்தாள். 6‘தொண்டை அம் செங்கனி
வாய் நுகர்ந்தானை’ என்றும், 1 ‘மணநோக்கம் உண்டான்’ என்றும் சொல்லுகிறவாறே ‘இவை அல்லவோ அவனுக்கு ஊண்? ஆதலால், அவனுடைய வாய்புகுசோறு அன்றோ பறி உண்டாகிறது?’ என்கிறாள். 2பகவானைப் பிரிந்ததனால் உண்டான விரஹத்துக்கும் அகஞ்சுரிப்படாதவள், வேறு தெய்வங்களின் சம்பந்தத்தாலும் அத்தெய்வங்களின் அடியார்களுடைய சம்பந்தத்தாலுமாகப் பசலை நிறத்தை அடைந்தாள்.
‘ஆனால், பரிஹாரம் சொல்லாய்,’ என்ன, 3‘நெடுங்காலமும் கண்ணன் நீள் மலர்ப்பாதம் பரவிப் பெற்ற இளமான்’ என்று நீங்களே அன்றோ சொன்னீர்கோள்? அப்படியே, கண்ணபிரானுடைய திருவடிகளை அடைந்து அவனாலே நீக்கிக்கொள்ளப் பாருங்கோள்,’ என்கிறாள். கவளம் கடாம் களிறு அட்டவன் திருநாமத்தால் தவளம் பொடி கொண்டு நீர் இட்டிடுமின் – மதஜலம் ஒழுகாநின்றுள்ள குவலயாபீடத்தை முடித்த உபகாரகனது திருநாமத்தாலே போக்குவதற்குப் பாருங்கோள். இதனால், ‘பிரபலமான தடைகளையும் வருத்தம் இன்றிப் போக்க வல்லவன்’ என்பதனைக் குறிப்பித்தவாறு. ‘கவளத்தை உண்பித்துப் போதையைத் தரும் பொருள்களைக் குடிப்பித்துப் பிச்சு ஏற்றுவித்த களிறு’ என்பாள், ‘கவளக் கடாக் களிறு’ என்கிறாள். ‘தூய்மையான பொடி’ என்பாள், ‘தவளம் பொடி’ என்கிறாள். ‘பாபம் செய்வதற்குத் துணை புரிந்தவர்கள், கழுவாய்க்கும் கூட்டுப்பட வேண்டாவோ?’ என்பாள், ‘நீர்’ என்கிறாள். ‘இட்டிடுமின்’ என்றது, ‘இவள் மேலே இடுங்கோள்’ என்றவாறு. ‘வேறு தெய்வங்களின் சம்பந்தம் உண்டானதற்குப் பகவானுடைய நாமத்தைச் சொல்லிப் பரிஹரிக்கப் பாருங்கோள்; வேறு தெய்வங்களின் அடியார்களுடைய சம்பந்தத்துக்குஸ்ரீ வைஷ்ணவர்களுடைய பாததூளியைக் கொண்டு பரிஹரிக்கப் பாருங்கோள்,’ என்கிறாள். ஆக, ‘இங்கே புகுந்த அநீதிகள் இரண்டு உள : அவ்விரண்டனுக்கும் இவ்விரண்டனையுங்கொண்டு பரிஹரிக்கப் பாருங்கோள்,’ என்கிறாள் என்றபடி. ‘இப்படிச் செய்தல் பரிஹாரம் ஆகுமோ?’ என்ன, தணியுமே – இவள் கண்ணும் விழித்து நிறமும் வரும்படி காட்டித்தரக்கடவேன்.
நோய்க்கு யோக்யமான மருந்து கொடுக்க பாரும்
இவளை பெறுவது
குவளை போன்ற கண்கள் கோவை பழம் போன்ற செவ்வாய்
அவனது சோறு இவை வாடி வர
திருநாமத்தால் –
சுத்தமான பொடி
அந்தோ -ஐயோ இவளை இழந்தோம் இவளுடைய கண்ணையும் வாயையும் வருணிக்கிறவளுடைய மனோபாவத்தை
அருளிச்செய்கிறார், ‘தொண்டையஞ்செங்கனி’ என்று தொடங்கி. இது,
பெரிய திருமொழி, 3. 7 : 2.
விவரணம் ஆயின
பசலை நோய் விரகதுக்கும் இப்படி இல்லை
தேவதாந்தர ஸ்பர்சம் இப்படி செய்ததே
பிரிந்த வருத்தம் கொஞ்சம் தான்
இதை நீக்கும் என்கிறாள்
பரிகாரம் சொல்-திருவிருத்தம் 37தாயார் பாசுரம் -நெடும் காலம் கண்ணன் பாதம் பரவி தவம் இருந்து
பெற் ற பெண் பிள்ளை –
அதே கிருஷ்ணன் திருவடிகளை ஆஸ்ரியித்து பரிகரித்து கொள்ளும்
த்ரவ்யம் போக்கி -தேவதந்திர ஸ்பர்சம் நீக்கி
கடா -கவளம் கொண்டு துர் த்ரவ்யம் -கண்ண்ணனை சிஷ்யை செய்ய மதம் பிடிக்க கள்ளை
கொடுத்து -பிச்சேற்றி நிறுத்தி
குவலயாபீடம் முடித்த உபகாரகன் திரு நாமம்
பரி சுத்தமான பொடி கொண்டு
நீர் -பிராயச்சித்தம் செய்ய
இரண்டு அநீதி -இரண்டையும் கொண்டு நிவர்த்திக்க
திரு நாமத்தாலும்-ஸ்ரீ வைஷ்ணவ பாத ரேகை -கொண்டு –
நிச்சயமாக கிடைக்கும்
தடங்கண்ணும் செவ்வாயும்’ என்று உம்மையைச் சிறப்பும்மையாக்கி
பாவம் அருளிச்செய்கிறார், ‘பகவானைப் பிரிந்ததனால்’ என்று தொடங்கி.
‘பகவானைப் பிரிந்ததனாலுண்டான விரஹத்துக்கும் அகஞ்சுரிப்படாதவள்’
என்றது, ‘மாழை நோக்கு ஒன்றும் வாட்டேன்மின்’ (2. 4 : 10) என்ற
பாசுரத்தைத் திருவுள்ளம் பற்றி அகஞ்சுரிப்படுதல் – குறைதல்.
ஸ்ரீ பாத ரேணு திருவேம்கடமுடையான் பிரசாதம்
ஸ்ரீ பாதம் -அடியவர்
அடிகள் -கை தொழுது -திருவடியை -எம்பெருமானை சொல்வதாகவும் திருவடியையும் –
ஸ்ரீ வாரி –
அனந்தாழ்வான் கடப்பாரை
திருவடி சுவடு எடுத்து வைக்க சொன்னானாம்
பாகவத பாத தூளி -அனைத்துக்கும் மருந்து
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்.
வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.
Leave a Reply