மருந்துஆகும் என்று,அங்குஓர் மாய
வலவைசொற் கொண்டு,நீர்
கருஞ்சோறும் மற்றைச் செஞ்சோறும்
களன்இழைத்து என்பயன்?
ஒருங்காக வேஉலகு ஏழும்
விழுங்கி உமிழ்ந்திட்ட
பெருந்தேவன் பேர்சொல்ல கிற்கில்,
இவளைப் பெறுதிரே.
பொ-ரை : ‘இவள் நோய்க்குப் பரிஹாரமாகும் என்று நினைத்து, வஞ்சனை பொருந்திய ஒரு வலவையினது சொல்லைக் கொண்டு நீங்கள் கருஞ்சோற்றையும் செஞ்சோற்றையும் அங்கே அத்தேவர்களுடைய முன்னிலையில் படைப்பதால் பயன் யாது? ஒருசேர ஏழ் உலகங்களையும் பிரளயகாலத்தில் உண்டு, பின் பிரளயம் நீங்கினவுடனே வெளி நாடு காண உமிழ்ந்த அறப்பெரிய சர்வேசுவரனது திருப்பெயரைச் சொல்லுவீர்களேயானால், இவளைப் பெறுவீர்கள்,’ என்றவாறு.
வி-கு : மருந்து – பரிஹாரம். வலவை – பலவாறு பேசுகின்றவள். களன் – படைக்குமிடம். ‘சொற்கொண்டு இழைத்துப் பயன் என்?’ என்க. பெருந்தேவன் – ‘முதலாவார் மூவரே; அம் மூவ ருள்ளும் முதலாவான் மூரிநீர் வண்ணன்,’ என்பதனைக் குறித்தபடி.
ஈடு : நாலாம் பாட்டு. 1‘வஞ்சனையுடையவளாய்த் தோன்றியதைச் சொல்லுகிற இவளுடைய பலவாறான வார்த்தைகளை விட்டு, ஆபத்திற்குத் துணைவனான சர்வேசுவரனுடைய திருநாமத்தைச் சொல்ல வல்லீர்கோளாகில், இவளைப் பெறலாம்,’ என்கிறாள்.
மருந்து ஆகும் என்று – 2பத்தியத்திற்கு மாறானவற்றைச் செய்கின்றவர்கள் மருந்து ஆகும் என்று. ‘பத்தியம்’
என்று சொல்லிக்கொள்ளவும் வேண்டுமோ? ‘மருந்தாம்’ என்றபடி. அங்கு ஓர் மாயவலவை சொற்கொண்டு – வஞ்சனையுடையவளாய் நெஞ்சில் தோற்றியவைகளையே சொல்லக்கூடியவளான இவள் வார்த்தையைக் கேட்டு. ‘அங்கு ஓர்’ என்று விருப்பம் இல்லாமையைத் தெரிவிக்கிறாள். நீர் – 1சத்துவ குணத்தை உடையவர்களாய், பகவத் விஷயமல்லது சொல்லாதவர்களாய், நேர்மையாளர்களாயிருக்குமவர்கள் வார்த்தையைக் கேட்கக்கூடிய நீங்கள் படும் எளிவரவே! அன்றிக்கே, 2 ‘போனகம் செய்த சேடம் தருவரேல் புனிதம் அன்றே?’ என்ற சத்துவ குணமுடையார் அமுது செய்த பிரசாதத்தின் பெருமையை அறிந்த நீங்கள். என்றது, ‘சத்துவகுணமுடைய அன்னமல்லது தொடக்கூடியவர் அல்லாத நீங்கள்’ என்றபடி. கருஞ்சோறும் மற்றைச் செஞ்சோறும் – தாமச அன்னமும் அதனோடு தோள் தீண்டியான இராஜச அன்னமும். களன் இழைத்து என் பயன் – இராஜச தாமச தேவதைகளுக்கு அவ்வத்தெய்வங்கள் வந்து தங்கியிருக்கும் இடங்களிலே இராஜசமாயும் தாமசமாயுமுள்ள சோற்றினைக் கொண்டு இடச் சொல்லுகிற முறையிலே இட்டால் என்ன பிரயோஜனம் உண்டு? பிரயோஜனம் இல்லாமை மாத்திரமேயன்று; அழிவோடே முடியும். களன் – ‘களம்’ என்றபடி. இழைக்கை – இடுகை.
என்றது, புன்சிறு தெய்வங்கள் வந்து தங்கியிருக்கும் நாற்சந்தி தொடக்கமானவற்றிலே அவற்றுக்குச் சொல்லுகிற நியமங்களோடே படைத்தலைக் குறித்தபடி. 3‘பிரளய
காலத்தில் எல்லாப் பொருள்களையும் பாதுகாத்தவனான சர்வேசுவரனை ஒழியப் பிரளய ஆபத்தில் பாதுகாக்கலாமாகில் ஆயிற்று, இவளைப் புன்சிறு தெய்வங்களைக் கொண்டு பாதுகாக்கலாவது,’ என்பாள், ‘விழுங்கி உமிழ்ந்திட்ட பெருந்தேவன்’ என்கிறாள். 1‘இதில் ஒரு பிரயோஜனம் இல்லையாகில், மற்று, பிரயோஜனம் உண்டாக நீ நினைத்ததைச் சொல்லாய்,’ என்ன, ‘செய்வீர்கோளேயாகில் உங்களுக்கு ஒரு பேரேயன்றோ நான் சொல்லுகிறது?’ என்கிறாள் மேல் :
ஒருங்காகவே உலகு ஏழும் விழுங்கி உமிழ்ந்திட்ட பெருந்தேவன் -‘அடியார், அடியர் அல்லாதார்’ என்று பாராமல், எல்லாரையும் ஒக்க ஒரே காலத்தில் திருவயிற்றிலே வைத்து நோக்கி, பிரளயம் கழிந்தவாறே வெளிநாடு காணப் புறப்பட விட்ட பரம்பொருள். ‘ஒருவர் களன் இழையாதிருக்கச்செய்தே வந்து, வரையாதே பாதுகாக்குமவன்’ என்பாள், ‘ஒருங்காகவே’ என்கிறாள். ‘ஒருவர் விரும்பாதிருக்க, ஆபத்தே காரணமாக வந்து உதவுமவன்’ என்பாள், ‘உலகு’ என்கிறாள். ஆக, ‘அத்தகைய எம்பெருமானைப் பற்றுங்கோள்,’ என்கிறாள். 2எல்லாப் பொருள்களையும் பாதுகாப்பவன் ஆகையாலே, எல்லாரைக்காட்டிலும் அறப்பெரியவனான சர்வேசுவரன்; தளர்ந்தார் தாவளமானவன். 3முன்பு முகந்தோற்றாதே நின்றானேயாகிலும், ஆபத்து வந்தவாறே முகங்காட்டிக் காக்குமவனாயிற்று. அவன் இப்படியிருப்பான் ஒருவன் ஆகையாலே, எளிதில் ஆராதிக்கப்படுமவன்; நீங்கள் பற்றுகின்ற தேவதைகளைப் போன்று கெட்ட தன்மைகளையுடையவன் அல்லன்; ‘அட்டது ஒழியச் சுட்டது கொண்டு வா,’ என்கிறபடியே,
கஷ்டப்பட்டு ஆராதிக்கப்படுமவன் அல்லன். 1தான் காக்குமிடத்தில் இத்தலையில் காப்பதற்கு அறிகுறியான விலக்காமையே வேண்டுவது. இதனால், ‘அந்தப் பிரளயம் தீர்த்தவனேகாணும் இந்தப் பிரளயத்துக்கும் கடவன்; நம்மோடு ஒக்கப் பிரளயத்திலே அழுந்தும் புன்சிறு தெய்வங்களையோ பற்றுவது? வரையாதே எல்லாப் பொருள்களையும் பாதுகாப்பவனாயுள்ளவனை அன்றோ பற்றத் தகுவது?’ என்கிறாள் என்றபடி.
பேர் சொல்லகிற்கில் – திருப்பெயரைச் சொல்ல வல்லீர்கோளேயானால். ‘இப்படி 2நேர்த்தி அற்று இருக்குமாகில் பலமும் அளவுபட்டு இருக்குமோ?’ என்னில், இவளைப் பெறுதிர் – அத்தேவதைகள் மாட்டு நேர வேண்டுவன எல்லாம் நேர்ந்தாலும், ‘என் பயன்?’ என்று பிரயோஜனம் இல்லையாகச் சொல்லிற்று; இங்கு நேர்த்தி திருநாம மாத்திரம் சொல்லுகையாய், பேற்றில் வந்தால் இவளைப் பெறுதலாகிற பெரிய பலத்தைப் பெறலாம். ‘பேர் சொல்ல வல்லீர்கோளாகில் இவளைப் பெறலாம்; 3இல்லையாகில் இழக்குமித்தனை,’ என்றபடி.
வஞ்சகை இவள்
ஆபத்சகன் அவன் திருநாமம் சொல்லி நோயை தீர்க்க
பெரும் தேவம்
அது இளம் தெய்வம்
அலவலை -தொண தொண பேச்சு
கரும் சோறு செஞ்சோறு கேட்ட்பார்கள் -தாமச ராஜச உணவு
மருந்தா அது –
அங்கும் ஓர் -கண்ணை மறைத்து அநாதாரம் தோற்ற
கூடாதவற்றை சொல்ல கடவதான இவள் வார்த்தை கேட்டு
நீரோ சாத்விகர் ருஜுக்கள்
சாத்விகர் பிரசாதம் அறியும் நீர் போனகம் செய்து
இனி, ‘நீர்’ என்பதனை, மேலே வருகின்ற ‘கருஞ்சோறும்’ என்றதனோடு
கூட்டி பாவம் அருளிச்செய்கிறார், ‘போனகம் செய்த சேடம்’ என்று
தொடங்கி. ‘போனகம் செய்த சேடம்’ என்பது, திருமாலை, 41ஆம் பாசுரம்.
ஆக, ‘‘நீர்’ என்றதற்கு ‘ஞானிகள் பக்கல் கேட்கக் கூடிய நீங்கள்’ என்றும்,
‘தருவரேல் புனிதமன்றே’ என்ற பிரசாத வைபவம் அறிந்த நீங்கள் என்றும்
இரு வகையான கருத்து அருளிச்செய்தபடி.
பிரயோஜனம் இல்லை எனபது மட்டும் இல்லை விநாசமும் விளையும்
பிரளய ஆபத்தில் -அந்த தேவதை ரஷித்ததா –
பிரளயத்தில் இந்த தேவதைகளையும் சேர்த்து -உண்டு உமிழ்ந்த எச்சில் தேவர்
அல்லாதார் தாம் உளரே
ஒருங்காகவே -ஆபத்தே காரணமாக அனைவரையும் உதவுமவன்
உலகு ஏழும் ஆஸ்ரிதர் அ நா ஸ்ரிதர் வாசி இன்றி ஒரே காலத்தில்
பெரும் தேவர் சர்வ ரஷகன் சர்வேஸ்வரன்
முன்பு முகம் தோன்றாமல் நின்றாலும் ஆபத்து வந்தால் ரஷிக்கும்
ஆராதனைக்கு எளியவன் –
அட்டதுக்கு -சுட்டு கொண்டு வா –
நேர்த்தி அல்பம் -பலமும் அல்பம் இல்லையே இங்கே
நேர்த்தி முயற்சி
பலம் அளவு பட்டு இருக்காதே
அங்கு பிரயோஜனம் இல்லை
இங்கு நேர்த்தி செய்ய வேண்டியது அல்பம் திருநாமம் சொல்லுகை தானே
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்.
வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.
Leave a Reply