இதுகாண்மின் அன்னைமீர்! இக்கட்டு
விச்சிசொற் கொண்டுநீர்
எதுவானும் செய்துஅங்குஓர் கள்ளும்
இறைச்சியும் தூவேன்மின்!
மதுவார் துழாய்முடி மாயப்பி
ரான்கழல் வாழ்த்தினால்
அதுவே இவள்உற்ற நோய்க்கும்
அருமருந் தாகுமே.
பொ-ரை : ‘தாய்மார்களே! இதனைக்காணுங்கோள்; இந்தக் கட்டுவிச்சியினுடைய வார்த்தையைக்கொண்டு நீங்கள் ஏதாகிலும் செய்து அவ்விடத்திலே ஒரு கள்ளையும் மாமிசத்தையும் இறைக்காதீர்கள்; தேன் ஒழுகுகின்ற திருத்துழாயைத் தரித்த திருமுடியையுடைய மாயப்பிரானுடைய திருவடிகளைத் துதித்தால், துதிக்குமதுவே இவள் அடைந்திருக்கும் நோய்க்கும் சிறந்த மருந்தாகும்,’ என்றபடி.
வி-கு : ‘அன்னைமீர்! இக்கட்டுவிச்சி சொல்லைக்கொண்டு செய்து தூவேன்மின்,’ என்க. தூவுதல் – வணங்குவதற்காக வைத்தல். மாயன் -ஆச்சரியமான குணங்களையும் செயல்களையுமுடையவன். பிரான் – உபகாரகன்.
ஈடு : மூன்றாம் பாட்டு. 1‘பொருந்தாத காரியங்களைச் செய்யாமல் அவன் திருவடிகளை ஏத்துங்கோள்; அதுவே இந்நோய்க்கும் மருந்து,’ என்கிறாள்.
அன்னைமீர் இது காண்மின் – 2வயிற்றில் பிறந்தவர்கள் என்னுமது ஒன்றனையே கொண்டு சொல்லுகிறநலத்தைக் கேளாதொழிய வேண்டுமோ? ஏவுகின்றவர்கள் என்னும் இத்தனையோ வேண்டுவது? வயிற்றிலே பிறந்தவர்களாகிலும் சொன்ன வார்த்தை நல்லதாக இருக்குமாகில் கைக்கொள்ள வேண்டாவோ? 1திருமாலைப் பாடக் கேட்டு, ‘வளர்த்ததனால் பயன் பெற்றேன்; வருக’ என்று மடக்கிளியைக் கைகூப்பி வணங்கினவளும் உங்களிலே ஒருத்தி அன்றோ? 2அது கிடக்க : ‘புத்திரர்களே!’ என்று அல்லவா சொன்னார் என்றாரும் இல்லையோ? யாரேனும் சொல்லிலும் வார்த்தை நன்றாகில் கைக்கொள்ள வேண்டாவோ? இக்கட்டுவிச்சி சொற்கொண்டு – ‘பரிஹாரம் சொல்லுகிற இவள் தன்மை கண்டீர்களே அன்றோ? இவள் வார்த்தையைக் கேட்டீர்களே அன்றோ? இதனையோ ஆதரிப்பது! நான் சொல்லுகிற வார்த்தையையே இவள் சொன்னாலும் கேட்கக் கடவதோ? 3‘காணிலும் உருப்பொலார்’ என்கிறபடியே அன்றோ இருப்பது?’ என்பாள், ‘இக்கட்டுவிச்சி’ என்கிறாள். ‘இவள் சொன்ன வார்த்தையை யான் கூறினாலும் என்னையுங்கூடத் துறக்கும்படி அன்றோ வார்த்தையின் பொல்லாங்கு இருப்பது?’ என்பாள், ‘இச்சொல்’ என்கிறாள். ‘செவிக்கு இனாத கீர்த்திய’ராய் இருக்கின்றமையைத் தெரிவித்தபடி.நீர் – 1‘பேய் முலை நஞ்சு, ஊணாக உண்டான் உருவொடு பேர் அல்லால், காணா கண் கேளா செவி,’ என்று இருக்கக்கூடிய நீங்கள், 2நாஸ்திகரான பௌத்தர் ஜைநர் முதலான மதத்தினர்களும் ‘பிற உயிரை வருத்தல் ஆகாது’ என்பார்களே அன்றோ? அவ்வழியாலே கைக்கொள்ளுமவர்களோ நாம்? ‘எந்த உயிரையும் கொல்லுதல் கூடாது,’ என்ற விதியைக் கைக்கொள்ளுதல் போன்று 3‘வைதஹிம்சையும்’ கைக்கொள்ள வேண்டாவோ? 4‘ஆத்தும தத்துவத்தையறிந்த பிரஹ்ம ஞானிகள்’ என்னப்படுமவர்களன்றோ உங்களுக்கு உபதேசிக்கத் தக்கவர்கள்?
எதுவானும் செய்து – யாதேனும் பொருத்தம் இல்லாத காரியத்தைச் செய்து. உங்கள் ஆசாரத்தோடு சேர்ந்திருக்கப் பெறில், 5அதுவும் ஆகுமே அன்றோ? 6‘செய்யாதன செய்யோம்’ என்றும், ‘மேலையார் செய்வனகள் வேண்டுவன’ என்றும் அன்றோ உங்கள் ஒழுக்கம்? அங்கு ஓர் இறைச்சியும் கள்ளும் தூவேன்மின் – தாழ்ந்த பொருள்களைக் கொண்டு வைஷ்ணவத் திருமாளிகையைத் தூஷியாதே கொள்ளுங்கோள். ‘அங்கு’ என்று முகத்தை மாற
வைத்துச் சொல்லுகிறாள். ‘ஆகில், தவிருகிறோம்; பரிஹாரத்தைச் சொல்லிக்காணாய்,’ என்ன, சொல்லுகிறாள் மேல் :
மது வார் துழாய் முடி மாயப்பிரான் கழல் வாழ்த்தினால் – 1‘விரை மட்டு அலர் தண்துழாய் என்னும்’ என்று நீங்கள் சொல்ல அன்றோ நான் கேட்டது? திருக்குழலின் சம்பந்தத்தாலே தேன் பெருக்கு எடுத்து ஓடுகின்ற திருத்துழாயைத் திருமுடியிலேயுடையனாய், அழகு சீலம் முதலியவைகளால் ஆச்சரியத்தையுடையனாய், அந்த அழகு முதலானவற்றை அடியார்களுக்காக ஆக்கி வைக்கும் உபகாரகன் திருவடிகளை வாழ்த்தினால். 2‘உன் சேவடி செவ்வி திருக்காப்பு’ என்றே அன்றோ வாழ்த்துவது? ஆதலால், இவர்கள் திருநாமம் சொல்லுவதுதான் மங்களாசாசன முகத்தாலே ஆயிற்று என்க. 3‘கெண்டை ஒண்கண்ணும் துயிலும்’ என்றார் திருமங்கை மன்னனும். அதுவே -அடையத் தக்கதுமாய் இனியதுமான அதுதானே.இவள் உற்ற நோய்க்கும் அருமருந்து ஆகும் – இவள் மறுபாடு உருவக் கொண்ட நோய்க்கு பெறுதற்கு அரிய மருந்தாம். என்றது, ‘மேல் காற்றிலே காட்டப் பரிஹாரமாம்,’ என்றபடி.
அ யுக்தம் செய்யாமல்
அவன் திருவடிகளை ஏத்தும் கோள்
இக்கட்டுவிச்சி சொல் எதுவானும் செய்யாமல்
ஹிதம் சொல்வதை கொள்ள வேண்டும்
வயிற்றில் பிறந்தவர்கள் சொல்வதை ஹிதம் இல்லாமாலும் கேட்க வேண்டும்
இது காண்மின் அன்னைமீர்காள் –
வயிற்றில் பிறந்தவர்களுடைய வார்த்தையைக் கேட்ட பேர் உளரோ?’ என்ன
அதற்கு விடை அருளிச்செய்கிறார், ‘திருமாலை’ என்று தொடங்கி. இது,
திருநெடுந். 14.
‘விளக்கொளியை மரகதத்தைத் திருத்தண் காவில்
வெஃகாவில் திருமாலைப் பாடக் கேட்டு,
‘வளர்த்ததனால் பயன்பெற்றேன்; வருக’ என்று
மடக்கிளியைக் கைகூப்பி வணங்கி னாளே.’
என்பது அப்பாசுரப் பகுதி.
2. ‘அது கிடக்க’ என்றது, ‘உங்கள் வார்த்தையே அன்றிக்கே, முனிவர்கள்
கோஷ்டியிலும் இப்படியேயன்றோ?’ என்றபடி. என்றது, அவ்வளவேயன்றி,
ஞானோபதேசம் செய்தாரும் இலரோ?’ என்கிறாள் என்றவாறு. ‘பிரமன்
பிதிரர் முதலானோர்களைப் பார்த்து, ‘மூடராய்ப் போங்கோள்!’ என்று சபிக்க,
அவர்கள் சுக்கிரன் பக்கலிலே அத்தியயனம் பண்ண, அவர்களைப் பார்த்துப்
‘பிள்ளைகாள்! வாரிகோள்’ என்றானேயன்றோ சுக்கிரன்?’ என்றபடி.
3. ‘காணிலும் உருப்பொலார் செவிக்கி னாத கீர்த்தியார்
பேணிலும் வரந்தர மிடுக்கி லாத தேவரை
ஆணமென் றடைந்து வாழும் ஆதர்காள்! எம் ஆதிபால்
பேணி நும்பி றப்பெனும் பிணக்கு அறுக்க கிற்றிரே’
என்பது திருச்சந்தவிருத்தம், 69.
திருமாலைப் பாடக் கேட்டு மடக் கிளியை கை கூப்பி வணங்கி -உங்களில் ஒருத்தி அன்றோ
பிள்ளை திரு நறையூர் அரையர் போல்வார் -பட்டரை சேவித்து -இத்தை சொல்லி அருளி –
பிரம்மா சபிக்க -அவர்கள் சுக்ரன் இடம் அத்யயனம் பண்ணிய விருத்தாந்தம்
பிள்ளைகாள் சொல்லி –
வயோதிகர் அக்ஞனாய் இருந்தால் பாலனாய் இருப்பான்
பாலன் ஞனவானாய் இருந்தால் -பெரியவர்
வயசு வாசி இல்லை
சுக்ரன் பிள்ளைகளே கூப்பிட்ட வ்ருத்தாந்தம்
தோழி நல்ல விஷயம் சொல்ல பெரியவர்கள் கேட்டுக் கொள்ள வேண்டும்
இத்தலை அத்தலை நியமனம் ஆனதே
பள்ளியில் -சிறுவன் வாயில் ஒரு ஆயிரம் நாமம்
சிறுவன்
தனது பிள்ளை எல்லாம் போக்யம்தானே
தமது மக்கள் மழலை சொல் கேளாதவர் குழல் இனிது என்பர்
சொன்னதே வேற ஆயிர நாமம் உத வார்த்தை
விரோதி சொன்னாலும் கேட்க வேண்டுமே
பொறுக்காமல் சீறினான்
இக்கட்டுவிச்சி காணிலும் உருப்பொலார்
கண்ணாலே காண முடியாமல்
இவள் படி காணும் உருவம்
இக்கட்டு விச்சி
இச்சொல் –
இவள் படி கண்டு கொள்ளும்கோள் –
நான் சொல்லும் நல்ல ஹிதம் இவள் சொன்னாலும் கொள்ள கூடாத ரூபம்
இவள் வார்த்தை நான் சொன்னாலும் கைக் கொள்ள கூடாதே
நீங்கள் –
‘வைதஹிம்சை’ என்றது, ‘விதிக்கப்பட்ட ஹிம்சை’ என்றபடி. அதாவது,
‘யாகத்தில் பசு ஹிம்சை விதிக்கப்பட்டிருக்கிறது; அதனைக் கைக்கொள்ள
வேண்டாவோ?’ என்றபடி. ‘ஜைனர்கள் முதலானோருடைய உபதேசத்தைக்
கேட்டால் அதனை விடவேண்டி வருமேயன்றோ?’ என்க.
சாஸ்த்ரத்தில் சொல்வதையே அனுஷ்டானம் உள்ளவர் சொல்வதையே கொள்ள வேண்டும்
ஞானிகள் தத்வ தர்சினி சொல்படியே கேட்க்க வேண்டும்
‘பொருத்தமானவைகளாகச் செய்யக் கூடியவை யாவை?’ என், அதற்கு விடை
அருளிச்செய்கிறார், ‘செய்யாதன’ என்று தொடங்கி. இது, திருப்பாவை.
இந்தப் பிரமாணத்தால், ‘நம் முதலிகளுடைய அநநுஷ்டாநமும்
அநுஷ்டானமும் தியாஜ்ய உபாதேயங்களாம்’ என்றபடியாயிற்று.
செய்யாதன செய்யோம் எதிர்மறை
மேலையார் செய்வனகள் உடன்பாடு
நிஷித்த த்ரவ்யம்
அங்கு -முகத்தை மாற வைத்து சொல்கிறாள் -சுட்டு சொல்
இது இக்கட்டுவிசி சொன்னவள் அங்கு சொல்வது -பராக் பிரத்யக் போலே –
பார்க்க முடியாமல் முகம் திருப்பி -காண மாட்டாமல் –
மது பெருகும் திரு துழாய் திரு அபிஷேகத்தில் சூடி உபகாரகன் திருவடிகள் வாழ்த்தி
மங்களா சாசனம் -சேவடி செவ்வி திருக்காப்பு அதுவே நோய்க்கு அரு மருந்து
ஏத்தினால்’ என்னாதே, ‘வாழ்த்தினால்’ என்றதற்குக் கருத்து
அருளிச்செய்கிறார், ‘உன் சேவடி’ என்று தொடங்கி. இது,
திருப்பல்லாண்டு, 1.
3. ‘தன் ஆற்றாமை தீருகை மாத்திரமே பிரயோஜனமாகையன்றிக்கே,
அத்தலைக்கு மங்களாசாசனம் செய்கையும் அவசிய அபேக்ஷிதம்’ என்கைக்கு
மற்றும் ஓர் உதாரணம் காட்டுகிறார், ‘கெண்டை ஒண் கண்ணும்’ என்று
தொடங்கி. இது, பெரிய திருமொழி, 11. 1 : 9. இதற்கு வியாக்கியாதா
அருளிச்செய்த பொருளைத் தருகிறேன் : ‘கெண்டை ஒண்கண்ணும் துயிலும்
– உறக்கத்தால் அல்லது செல்லாதபடியாய் முக்தமாய்ச் சுகுமாரமான கண்ணும்
உறங்கும். என் நிறம் பண்டு பண்டு போல் ஒக்கும் – அதாவது, கலப்பதற்கு
முன்பு போலேயாம், கலக்கையாகிறது, ஆற்றாமைக்கு அடி இடுகிறதிறே. ஒரு
விஷயத்தில் வாசி அறியாதார் நிரபேக்ஷரிறே. ‘கண்ணுறங்குவதும் நிறம்
பழையபடியேயாவதும் என் செய்தால்?’ என்னில், மிக்க சீர் இத்யாதி –
அநந்யப் பிரயோஜனரான ஸ்ரீவைஷ்ணவர்கள் இட்ட திருத்துழாயில்
பரிமளத்தை வண்டு கொண்டு வந்து ஊதுமாகில். இப்படிச் சீயர்
அருளிச்செய்தவாறே ‘துளவின் வாசமே’ என்ன அமையாதோ? ‘மிக்க சீர்த்
தொண்டர்’ என்கிற விசேஷணத்திற்குக் கருத்து என்?’ என்று நான்
கேட்டேன்; இவள்தான் நோவுபடுகிறது ‘அத்தலைக்குப் பரிவாரில்லை’
என்றாயிற்று; ‘அங்கே அநந்யப் பிரயோஜனர் பரிமாறாநின்றார்கள்’
என்றவாறே உறங்காத கண்ணும் உறங்கும்; பழைய நிறமும் வருங்காண்,’
என்று அருளிச்செய்தார் என்பது.
அந்த பாசுரம் போலே இங்கும் –
ஐதிகம் சம்வாதம்
மீனைப் போலே கண்
கலப்பதற்கு -பிரிந்த நிலை பண்டு பண்டு –
கலக்கை – ஆற்றாமைக்கு அடி இடும் என்பதால் அதற்க்கு முன் நிலை
தெரியாமல் இருந்தால் கவலை இல்லையே
கண் உறங்குவதும் –
மிக் க சீர் தொண்டர்ட் இட்ட வாசமே போதுமே
விசேஷணம் கருது என்ன –
மிக்க சேர் தொண்டர் -நம்பிள்ளை நம்ஜீயரைக் கேட்க -நான் கேட்டேன் வடக்கு திரு வீதி பிள்ளை அப்படியே ஏடு படுத்தி –
இவள் தான் நோவு படுகிறது அத்தலைக்கு பரிகரம் இல்லையே
அநந்ய பிரயோஜனர் தானே மிக்க சீர் தொண்டர்
இருப்பது அறிந்தால் உறங்காத கண்ணும் உறங்கும் –
பிராப்தமும் போக்யமும் ஆன அதுவே பரிகாரமாம்
மேல் காட்டினாலே போதுமே
கந்தம் உள்ளே சென்று
வாழ்த்துவதே மருந்து
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்.
வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.
Leave a Reply