மாரி மாறாத தண்அம் மலைவேங்கடத்து அண்ணலை
வாரி மாறாத பைம்பூம் பொழில்சூழ் குருகூர்நகர்க்
காரி மாறன் சடகோபன் சொல்ஆயிரத்து இப்பத்தால்
வேரி மாறாத பூமேல் இருப்பாள் வினைதீர்க்குமே.
பொ-ரை : ‘மழை மாறாமல் இருந்துகொண்டிருக்கின்ற குளிர்ந்த அழகிய திருமலையில் எழுந்தருளியிருக்கின்ற திருவேங்கடமுடையானை, வருவாய் மாறாமல் இருக்கின்ற பசுமையான பூக்கள் நிறைந்த சோலைகளாற்
சூழப்பட்ட திருக்குருகூரிலே எழுந்தருளியிருக்கின்ற காரிமாறரான சடகோபரால் அருளிச்செய்யப்பட்ட ஆயிரத்துள் இப்பத்துத் திருப்பாசுரங்களையும் சொல்லுகிறவர்கட்கு, வாசனை மாறாத தாமரைப் பூவில், எழுந்தருளியிருக்கின்ற பெரிய பிராட்டியார் வினையைத் தீர்ப்பார்,’ என்கிறார்.
வி-கு : வாரி – வருவாய் : வரவுக்குக் கருவியாய் இருப்பது. இ -கருவிப்பொருள் விகுதி. காரி – ஆழ்வாருடைய தந்தையார் பெயர். மாறன் சடகோபன் – இவருடைய திருப்பெயர். வேரி – வாசனை. தீர்க்கும் – செய்யுமென் முற்று.
ஈடு : முடிவில், 1‘இத்திருவாய்மொழி கற்றாரைப் பெரிய பிராட்டியார் தம் பொறுப்பாகக் கொண்டு எல்லாத் துக்கங்களையும் போக்குவார்,’ என்கிறார்.
மாரி மாறாத தண் அம் மலை வேங்கடத்து அண்ணலை – 2எப்பொழுதும் மழை பெய்கையாலே சிரமத்தைப் போக்கக் கூடியதாய்க் காட்சிக்கு இனியதான திருமலையையுடைய சர்வேசுவரனை ஆயிற்றுக் கவி பாடிற்று; 3‘நமக்கும் பூவின் மிசை நங்கைக்கும் இன்பனை’ என்கிறபடியே, நித்திய அநபாயினியான பெரிய பிராட்டியாருக்கு முன்பே நித்திய சமுசாரிகளுக்கும் முகங்கொடுக்கும் சீலமுடையவனது தன்மையைச் சொல்லிற்றாகையாலே, சீலத்துக்கு எல்லையான திருவேங்கடமுடையான் ஆயிற்றுக் கவி பாடிற்று. 4‘விண்முதல் நாயகன் நீள்முடி வெண்முத்த வாசிகைத்தாய், மண்முதல் சேர்வுற்று அருவி செய்யாநிற்கும் மாமலை’ ஆகையாலே, அறற்றலையாய்க் காட்சிக்கு இனியதாய்
இருத்தலின், ‘மாரி மாறாத தண் அம் மலை’ என்கிறது. வாரி மாறாத பைம்பூம்பொழில் சூழ் குருகூர் நகர் – அழகியதாய்க் காட்சிக்கு இனியதாய் இருந்துள்ள பொழிலாலே சூழப்பட்ட திரு நகரி. திருநகரிக்கு 1ஸஹ்யம் திருமலையாகையாலே, திருமலை மாரி மாறாதாப் போலே திருநகரியும் வாரி மாறாதே இருக்குமாதலின், ‘வாரி மாறாத நகர்’ என்கிறது.
காரி மாறன் சடகோபன் சொல் ஆயிரத்து இப்பத்தால் ‑ 2சொன்ன பொருளில் அதிசங்கை பண்ணாமைக்கு ஆப்தி அதிசயம் சொல்லுகிறது. வேரி மாறாத பூமேல் இருப்பாள் வினை தீர்க்கும் – ‘இத்திருவாய்மொழி கற்றார்க்குப் பலம் கொடுப்பாள் பெரிய பிராட்டி,’ என்கிறது. 3திருமலை மாரி மாறாதாகையாலே, திருநகரி வாரி மாறாது; ஆறாக் கயமாகையாலே பிராட்டியுடைய ஆசனமாகிய தாமரை வேரி மாறாது.
‘இது கற்றார்க்கு இவள் பலம் கொடுக்க வேண்டுவான் என்?’ என்னில், தனக்கு முன்பே தான் காட்டிக்கொடுத்த சமுசாரியை விரும்பும் சீல குணத்தையாயிற்று இதில் சொல்லிற்று; இந்தச் சீல குணம் ஒருவர்க்கும் நிலம் அன்று; தான் அறிதல் மயர்வற மதிநலம் அருளப்பெற்றவர் அறிதல், செய்யும் இத்தனையாயிற்று; ‘இந்தப் பிரபாவத்தை அறிந்து இவர் வெளியிட்டார்,’ என்னும் கருணையின் மிகுதியாலே, சர்வேசுவரன் பலம் கொடுக்கிற நிலையிலே அவனை விலக்கி, ‘நானே இதற்குப் பலம் கொடுக்கவேண்டும்,’ என்று தனக்கே பொறுப்பாக ஏறிட்டுக் கொண்டு, 4பலம் கொடுக்கும். இத்திருவாய்மொழி கற்றாருடைய, பகவானுடைய அனுபவத்திற்கு விரோதியான
எல்லாத்தடைகளையும் ஈண்டு ‘வினை’ என்கிறது. தீர்க்கும் – போக்குவாள். 1‘இத்திருவாய்மொழி கற்றார்க்கு அந்தப்புரத்திலே படியும் நடையும்’ என்கை.
(11)
திருவாய்மொழி நூற்றந்தாதி
வீற்றிருக்கு மால்விண்ணில் மிக்க மயல்தன்னை
ஆற்றுதற்காத் தன்பெருமை யானதெல்லாம் – தோற்றவந்து
நன்றுகலக் கப்போற்றி நன்குகந்து வீறுரைத்தான்
சென்ற துயர்மாறன் தீர்ந்து.
இத்திருவாய்மொழியில் பரமபதநாதனையன்றோ கவி பாடிற்று?
திருவேங்கடமுடையானைக் கவி பாடிற்று என்பது என்?’ என்னும் வினாவிற்கு
விடையாக ‘நமக்கும்’ என்று தொடங்கி அருளிச்செய்கிறார். இது,
இத்திருவாய்மொழியில் எட்டாம் பாசுரம். அநபாயினி – பிரியாமல்
இருப்பவள்.
4. திருவிருத்தம், 50. ‘அறற்றலை’ என்பது, சிலேடை : ‘தண்ணீரைத்
தலையிலேயுடையது’ என்பதும், ‘தர்மத்தைத் தலையிலேயுடையது’ என்பதும்
பொருள்.
பெரிய பிராட்டியார் -பூ மேல் இருப்பாள் வினை தீர்க்குமே பலன் சொல்லி தலைக் கட்டுகிறார்
மாரி நிரந்தரமாக இருப்பதால் -தர்சநீயமாக
திருவேம்கடமுடையானை அருளி –
விண்ணோர் பெருமான் நித்ய சூரிகள் நாயகன்
ஒவ் ஒன்றும் -திருவேம்கடமுடையான்
சொன்னால் விரோதம் -தென்னா தென்னா -திருவேம்கடமுடையான் உளன் ஆகவே
திவ்ய ப்ரபந்தம் முழுவதும் இவனுக்கு
வேம்கடத்து அண்ணலை -விண் முதல் நாயகன்
அலற்றலை -அருவிகள் இருப்பதால் ஜாலம் மாறாமல்
தர்மத்தை தலையிலே உடைத்தாய்
நித்ய அநபாயினி -நமக்கும்
காடும் -அலர்மேல் மங்கை உறை மார்பன் -சீலதுக்கு எல்லை திருவேம்கடமுடையான் –
காரி மாறன் சொல் ஆயிரத்துக்கும் இந்த விசேஷணம் –
வான் இத்யாதி
திரு நகரியும்
இதற்க்கு அடி திருமலை
திரு நகரிக்கு மலை திருமலை
அனுக்ரகம் -சக்யம்
காரி மாறன் -சத்யம் ஆப்திக்காக -சொல்கிறது –
தான் தோன்றி இல்லை காரி திருக்குமாரர்
வேரி மாறாத பூ மேல் இருப்பார்
ஆசன பத்மம் -வாசனை குறையாதே ஜாலம் வற்றாத தடாகம் -மாரி மாறாத திருமலை என்பதால்
தனக்கு முன்பே காட்டிக் கொடுத்த சீல குணம்
தான் காட்டிக் கொடுத்த சம்சாரியை -பிராட்டி காட்டி கொடுக்கிறாள் முதலில் –
தனக்கு முன்பு-பிராட்டிக்கு முன்பே அனுக்ரகித்த சீல குணம்
நமக்கும் பூவின் மிசை நங்கைக்கும் -முதலிலே காட்டினானே
தன்னை விட அதிகமாக விரும்பும் சீல குணம் காட்டி -பிராட்டி வியக்கும் படி –
இந்த ஷீலா குணம் ஒருவருக்கும் நிலம் இல்லை
பிராட்டி ஆழ்வார் இருவரும் தான் அறிவர்
வெளி இட்ட அதிசயத்தில் –
பிராட்டி பலன் கொடுக்க அவனை விளக்கி தானே பலன் கொடுப்பிக்கும்
பகவத் அனுபவ பிரதிபந்தகங்கள் போக்கி
அந்தபுரம் செல்வாக்கு விசேஷம் கிட்டும்
படி அனுபவம் கைங்கர்யம்
ஜீவனம் வருத்தி இரண்டு அர்த்தம்
விண்ணில் மால் வீற்று இருக்க
அவன் விஷயத்தில் மிக்க மையல்
ஆற்றுவதற்க்காக
போற்ற வந்து
நன்கு கலக்க
சென்ற திடர் மாறன் தீர்ந்து
முன்பு கலக்கம் தீர
தானான தன்மை போய் தாயார் பாசுரத்தால் அருளிய துயர் தீர
தொழுதார் போற்றி –
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்.
வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.
Leave a Reply