திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -4-5-10–ஸ்ரீ M.A V .சுவாமிகள் —

உண்டும்உமிழ்ந் தும்கடந்தும் இடந்தும்கிடந் தும்நின்றும்
கொண்டகோ லத்தொடு வீற்றிருந் தும்மணம் கூடியும்
கண்டஆற் றால்தனதே உலகுஎன நின்றான் றன்னை
வண்தமிழ் நூற்க நோற்றேன் அடியார்க்கு இன்ப மாரியே.

பொ-ரை : ‘பிரளய காலத்தில் உலகத்தையெல்லாம் புசித்தும், பிரளயம் நீங்கியவுடனே வெளி நாடு காண உமிழ்ந்தும், திரிவிக்கிரமனாய் அளந்தும், வராக அவதாரமாய் இடந்து எடுத்தும், கடற்கரையிலே கிடந்தும், இலங்கையில் போர் முடிந்த பின்பு தேவர்களுக்குக் காட்சியளித்து நின்றும், மீண்டு வந்து மகுடாபிஷேகம் செய்த திருக்கோலத்தோடு  வீற்றிருந்தும், இராச்சிய பரிபாலனம் செய்தும் போந்த காரியங்களைக் கண்கூடாகப் பார்த்த தன்மையால் இந்த உலகமெல்லாம் தனக்கே உரிமைப்பட்டவை என்று சொல்லும்படி நின்ற சர்வேசுவரனைப் பற்றி வளப்பமான தமிழ்ப்பிரபந்தத்தைச் செய்வதற்குப் புண்ணியத்தைச் செய்தேன்; இப்பிரபந்தமானது அடியார்க்கு இன்பத்தையுண்டாக்கும் மேகமாகும்,’ என்கிறார்.

    வி-கு : ‘மணங்கூடியும் செய்து போந்த காரியங்களைக் கண்ட ஆற்றால்’ என விரித்துக்கொள்க.

    ஈடு : பத்தாம் பாட்டு. 1‘அவன் செயல்கள் அடங்க என் சொல்லுக்குள்ளேயாம்படி கவி பாட வல்லேனாய், வகுத்த சர்வேசுவரனிடத்திலே வாசிகமான அடிமை செய்யப்பெற்ற அளவன்றிக்கே, ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு ஆனந்தத்தையுண்டாக்கக் கூடியவனாகவும் பெற்றேன்,’ என்கிறார்.

    உண்டும் – பிரளய ஆபத்திலே திருவயிற்றிலே வைத்து நோக்கியும். உமிழ்ந்தும் – திருவயிற்றிலேயிருந்து நெருக்குப்படாதபடி வெளி நாடு காணப் புறப்பட விட்டும். கடந்தும் – மஹாபலி போல்வார் பருந்து இறாஞ்சினாற் போலே பறித்துக்கொண்டால் எல்லை நடந்து மீட்டும். இடந்தும் – பிரளயம் கொண்ட பூமியை மஹாவராஹமாய் அண்டப் பித்தியிலே செல்ல முழுகி எடுத்துக்கொண்டு ஏறியும், கிடந்தும் – என்றது, 2‘பகைவர்களை அழிக்கின்ற ஸ்ரீராமபிரான் பாம்பின் உடல் போலே இருக்கிற திருக்கையைத் தலையணையாகக் கொண்டு, கிழக்கு

முகமாகக் கையைக் கூப்பிக்கொண்டு கடலை நோக்கிச் சயனித்தார்,’ என்கிறபடியே, கிடந்த கிடையிலே இலங்கை குடி வாங்கும்படியாக, ஒரு கடல் ஒரு கடலோடே சீறிக் கிடந்தாற்போலே கடற்கரையிலே கிடந்தபடியைத் தெரிவித்தவாறு. நின்றும் – 1‘கம்பீரமான வில்லைப் பிடித்துக் கொண்டு நிற்கின்ற ஸ்ரீ ராமபிரானைத் தாரையானவள் கண்டாள்,’ என்கிறபடியே, நின்ற நிலை. கொண்ட கோலத்தொடு வீற்றிருந்தும் – 2‘பர்ணசாலையில் எழுந்தருளியிருப்பவரும் சடை மரவுரி இவற்றைத் தரித்தவருமான ஸ்ரீ ராமபிரானை ஸ்ரீ பரதாழ்வான் பார்த்தார்,’ என்கிறபடியே, இருந்த இருப்பாதல்; 3க்ஷத்திரியர்களுக்குரிய ஒப்பனையோடே பதினோராயிரம் ஆண்டு இருந்த இருப்பாதல். மணம் கூடியும் – பதினோராயிரம் ஆண்டு தன் 4படுக்கைப் பற்றான பூமியைக் காப்பாற்றுகையாலே ஸ்ரீ பூமிப்பிராட்டி அணைக்க, அவளோடே கலந்தும்.

    கண்ட ஆற்றால் உலகு தனதே என நின்றான் தன்னை – பிரமாணங்கொண்டு அறிய வேண்டாமல், தொன்று தொட்டு வருகின்ற அனுபவம் கொண்டு, ‘இவனுக்கே உரிமை’ என்று அறியலாய் இருக்கை; என்றது, 5ஒருவன் ஒரு நிலத்தைத் திருத்துவது கமுகு வைப்பது எரு இடுவதாய்க் கிருஷி பண்ணாநின்றால், ‘இது இவனது’ என்று அறியலாமே அன்றோ?’ 6‘பெய்த காவு கண்டீர் பெருந்தேவுடை மூவுலகே,’ –திருவாய். 6. 3 : 5.-என்னக் கடவதன்றோ? வண் தமிழ் நூற்க நோற்றேன் – திருவாய்மொழி பாடுகைக்குப் பாக்கியம் செய்தேன். தன்னைச் சொன்ன மாத்திரத்தில் எல்லாப் பலன்களையும் கொடுக்கக் கூடியதான உதாரகுணத்ததாய் இருத்தலின், ‘வண்தமிழ்’ என்கிறது. அன்றிக்கே. 1‘இது முன்னே நடந்ததாயிருந்தாலும் இப்பொழுது நேரிற்கண்டது போல இருக்கின்றது,’ என்பது போன்று, பழையதாகச் செய்தவை இவர் பேச்சாலே இன்று செய்த செயல் போலே விளக்கமாய் இருத்தலின், ‘வண்தமிழ்’ என்கிறது என்னுதல். 2‘கண்டவாற்றால்’ என்று நேரில் பார்ப்பதாய் இருக்கிறதே அன்றோ? அடி யார்க்கு இன்பமாரியே – சர்வேசுவரனைக் கவி பாடப் பெற்ற இதுவேயோ? இது, வைஷ்ணவர்களுக்கு ஆனந்தத்தை உண்டாக்கக் கூடியதாகவும் ஆயிற்று. இன்பத்தையுண்டாக்கும் மேகம் ஆதலின், ‘இன்பமாரி’ என்கிறது. 3‘இது எனக்கு இருக்கிறபடி கண்டால், இது உகக்குமவர்களுக்கு எங்ஙனே இருக்கிறதோ!’ என்கை. 4‘தொண்டர்க்கு அமுது உண்ணச் சொன்மாலைகள் சொன்னேன்,’ என்றாரே அன்றோ?

நிகர் அகல் வானத்திலும் பரம பதத்திலும் இல்லை
செஷ்டிதங்களை எல்லாம் முழுக்க சொல்லிய எனக்கு
பிராப்த விஷயத்தில் வாசிக கைங்கர்யம் செய்யப் பெற்றேன்
ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு -தொண்டர்க்கு அமுது உண்ண  சொன்னேன்
7-9-திருவாய்மொழி -எம்பெருமான் -எந்தனை இங்கு வைத்தது எதுக்கு எம் தாமர்க்கும் ஆனந்தம் -பெரிய திருவந்தாதி பாசுரம் –
உண்டும் உமிழ்ந்தும் -கடந்தும் இடந்தும் -கிடந்தும் நின்றும் -கொண்ட கோலத்தோடு வீற்று இருந்தும்

மணம்  கூடியும்
தனதே உலகு என்று நின்றான் தன்னை
வண்மையான தமிழில் அன்பருக்கு இன்ப மாரி போலே பாடி
நோக்கியும் -பிரளய காலத்தில்
உமிழ்ந்தும் -வெளிநாடு காண புறப்பட விட்டும்
எல்லை நடந்து மீட்டும் பருந்து போலே மகா பலி பிடுங்கி போன
பொழுது இடந்தும் -தூக்கி எடுத்துக் கொண்டு -அ ண்ட புத்தியில் இருந்து
கிடந்தும் -திருப்புல்லாணி சயனம் -மூன்று நாள் தரையிலே கிடந்தும் –
இலங்கை குடி வாங்கும்படியாக கிடந்தான் –
தோளை அணை -யாக கொண்டு –
கிழக்கே நோக்கி அஞ்சலி பிரதிசிஷ்யே எதிராக கடல் உடன் சீறி கிடந்தது போலே
கருணை கடல் கிடந்தான் கரும் கடலை நோக்கி கம்பர்
நாதமுனிகள் பட்டர் காலத்தவர் என்பர் -காஞ்சி ஸ்வாமிகள் காட்டி அருளி –
நின்றும் –
கடல் கரையில் அணை கட்டும் பொழுது தனுஸ் பிடித்து நின்றன்
கொண்ட கோலத்தோடு வீற்று இருந்தும் -சக்கரவர்த்தி திருமகன் சரணாகதி
11000 ஆண்டுகள் இருந்த இருப்பாதால் -ராஜ்ஜியம் ஆண்டு
மணம் கூடியும் -படுக்கைபற்றான பூமியை ரஷித்து –
இத்தனை கார்யம் செய்து பூமியை ரஷித்தான்
இவற்றை கண்டவாற்றால்
பிரமாணம் வேற வேண்டாமே
ஷேத்ரம் -திருத்துவது -பயிர் இட்டு எரு இட்டு -போலே செய்து -இவனது தானே
சர்வேஸ்வரன் செய்த கார்யமே -தனதே உலகு அறியலாம் இ றே
செய்த காவு -ஆழ்வார் அருளி -தோட்டம் நந்தவனம் போலே லீலா விபூதி
திருவாய்மொழி -வ ண் தமிழ் உத்தரமாய் இருக்கை
அனுசந்தித்து சகல பலன் கொடுக்குமே
பல பாடல் நூற்றையும் பார்த்து அறியலாமே –
நோய் நாடி நோய் முதல் நாடி -சரீரம் ஒழித்தால் வியாதி தீருமே
நோய்களை ஒட்டுமே
வண்மை -பழையதாக இருந்தாலும் இவர் அருளி புதிதாக இருப்பது
இவர் பேச்சாலே இன்று செய்த செயல் போலே விளக்கமாய் இருத்தற்குக்
காரணம் காட்டுகிறார், ‘கண்டவாற்றால்’ என்று. அதாவது, ‘அறிந்தவாற்றால்’
என்னாமல், ‘கண்டவாற்றால்’ என்றதனால், இதுவும் பிரத்தியக்ஷமாய்
இருக்கிறது என்பது கருத்து. ஆக, ‘கண்டவாற்றால்’ என்பதனைக்
கண்டவாற்றால் வண்தமிழ்’ என்று ‘வண்தமிழ்க்கும்’ அடையாகக்
கூட்டிக்கோடல் வேண்டும் என்பது.
பார்த்த உடனே பிரத்யட்ஷமாக அறியலாமே

அடியாருக்கு இன்ப மாரி
சந்தோஷம் -இன்பம் உண்டாக்கும் மேகம்
எனக்கே இருக்கிறது –
ஸ்ரீ வசன பூஷணம் -என் தனக்கு மணவாள மா முனி -அருளியது போலே
எனக்கு இது இருப்பது கண்டால் -தொண்டர்க்கு அமுது உண்ண சொன்னேன்

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply