ஐந்தாந்திருவாய்மொழி – ‘வீற்றிருந்து’
முன்னுரை
1மேல் திருவாய்மொழியிலே அப்படி விடாய்த்தவர், ‘இனி என்ன குறை எழுமையுமே?’ என்னப் பெறுவதே! 2மேல் ‘பொய்ந்நின்ற ஞானம்’ தொடங்கிக் ‘கோவைவாயாள்’ என்ற திருவாய்மொழி முடிய, ‘மண்ணையிருந்து துழாவி’ என்னுந் திருவாய்மொழியில் உண்டான விடாய்க்குக் கிருஷி செய்தபடி. அப்படி விடாய்க்கும்படி செய்த கிருஷியின் பலம் சொல்லுகிறது இத்திருவாய்மொழியில். 3‘பேற்றுக்கு இதற்கு அவ்வருகு சொல்லலாவது இனி ஒன்று இல்லை. 4‘சூழ்விசும்பு அணி முகில்’ என்ற திருவாய்மொழிக்குப் பின் இத்திருவாய்மொழியாகப் பெற்றது இல்லையே!’ என்று அருளிச்செய்வர் நஞ்சீயர்.
1பெருமாளும் இளைய பெருமாளுமான இருப்பிலே பிராட்டிக்குப் பிரிவு உண்டாக, மஹாராஜரையும் சேனைகளையும் கூட்டிக்கொண்டு சென்று பகைவர்கள் கூட்டத்தைக் கிழங்கு எடுத்து அவளோடே கூடினாற்போலே, போலி கண்டு இவர் மயங்கின இழவு எல்லாம் போகும்படி, 2நித்தியவிபூதியையும் லீலாவிபூதியையுமுடையனாய் இருக்கின்ற தன் படிகள் ஒன்றும் குறையாதபடி கொண்டு வந்து காட்டிக் கொடுத்து, ‘கண்டீரே நாம் இருக்கின்றபடி? இந்த ஐசுவரியங்களெல்லாம் ஒன்றாய்த் தலைக்கட்டுவது, நீர் உம்முடைய வாயாலே 3ஒரு சொல்லுச் சொன்னால் காணும்,’ என்று 4இவர் திருக்கையிலே தாளத்தைக் கொடுக்க, அவ்விருப்புக்கு மங்களாசாசனம் பண்ணி, ‘இவ்வுலகம் பரமபதம் என்னும் இரண்டு உலகங்களிலும் என்னோடு ஒப்பார் இலர்,’ என்று மிக்க பிரீதியையுடையவர் ஆகிறார்.
நின்ற குன்றத்தினை நோக்கி நெடுமால்’ ஆக மயங்கின மயக்கத்திற்கு வானமாமலையான தன்னைக் காட்டிக்கொடுத்தான்; ‘நீறு செவ்வே இடக்காணில் நெடுமால் அடியார் என்று’ மயங்கி ஓடினதற்கு, ‘தூவி அம்புள் உடையான் அடல் ஆழி அம்மான்’ என்கிற நித்திய புருஷர்களைக் காட்டிக்கொடுத்தான்; ‘செய்யது ஓர் ஞாயிற்றைக் காட்டிச் சிரீதரன் மூர்த்தி ஈது’ என்றதற்கு, ‘மைய கண்ணாள் மலர்மேல் உறைவாள் உறைமார்பினன்’ என்று தானும் பெரிய பிராட்டியாருமாய் இருக்கிற இருப்பைக் காட்டிக்கொடுத்தான்; ‘திருவுடை மன்னரைக் காணில் திருமால்’ என்றதற்கு, உபய விபூதிகளையுடையனான தன் ஐசுவரியத்தைக் காட்டிக்கொடுத்தான்; ‘விரும்பிப் பகவரைக் காணில், வியலிடம் உண்டான்’ என்று சிறிய ஆனந்தமுடையாரைக் கண்டு மயங்கினவர்க்கு, ‘வீவில் இன்பம் மிக எல்லை நிகழ்ந்த நம் அச்சுதன்’ என்று ஆனந்தமயனாய் இருக்கிற இருப்பைக் காட்டிக்கொடுத்தான்; பிறர் வாயால் ‘என் செய்கேன்’ என்றதைத் தவிர்த்து, தம் திருவாயாலே ‘என்ன குறை எழுமையுமே’ என்னப் பண்ணினான்.
377
வீற்றிருந்து ஏழுலகும் தனிக்கோல் செல்ல, வீவுஇல்சீர்
ஆற்றல்மிக்கு ஆளும் அம் மானைவெம் மாபிளந் தான்றனைப்
போற்றிஎன் றேகைகள் ஆரத் தொழுது,சொல் மாலைகள்
ஏற்றநோற் றேற்குஇனி என்ன குறைஎழு மையுமே?
பொ-ரை : ‘வேறுபாடு தோன்ற இருந்து ஏழுலகங்களிலும் ஒரே கோல் செல்லும்படியாகப் பொறுமை மிகுந்து ஆளுகின்ற அழிதலில்லாத கல்யாண குணங்களையுடைய அம்மானும், கொடிய கேசி என்னும் அசுரனது வாயைப் பிளந்தவனுமான சர்வேசுவரனைப் ‘போற்றி போற்றி’ என்று சொல்லிக்கொண்டே கைகள் வயிறு நிறையும்படி தொழுது சொற்களாலாகிய மாலைகளை அவன் தலைமேல் தாங்கும்படி பாட வல்ல புண்ணியத்தையுடைய எனக்கு இனி ஏழேழ்படிகாலான பிறவிகள் வரக்கூடியனவாக இருந்தாலும், என்ன குறை இருக்கின்றது? ஒரு குறையும் இன்று,’ என்றவாறு.வி-கு : ‘ஏழுலகும் தனிக்கோல் செல்ல வீற்றிருந்து ஆற்றல் மிக்கு ஆளும் வீவில்சீர் அம்மான்’ என்க. ‘வீ’ என்பதற்கு ‘அழிதல்’ என்பது பொருள். ‘போற்றி – பரிகாரம்’ என்பர் நச்சினார்க்கினியர். ‘போற்றி -பாதுகாத்தருள்க; இகரவீற்று வியங்கோள்’ என்பர் அடியார்க்கு நல்லார். ‘இனி எழுமையும் என்ன குறை?’ என மாறுக. எழுமையும் – ‘எப்பொழுதும்’ என்னலுமாம்.
இத்திருவாய்மொழி கலித்துறை என்னும் பாவகையில் அடங்கும்.
ஈடு : முதற்பாட்டு. 1‘சர்வேசுவரனாய் வைத்து அடியார்களைக் காப்பாற்றுவதற்காக மனிதர் கதியில் வந்து அவதரித்த ஸ்ரீ கிருஷ்ணனைக் கவி பாடப் பெற்ற எனக்கு நாளும் ஒரு குறையும் இல்லை,’ என்கிறார்.
வீற்றிருந்து – வீற்று என்று வேறுபாடாய், தன் 2வேறுபாடு அடங்கலும் தோற்ற இருந்து. 3ஈண்டு ‘வேறுபாடு’ என்றது, தன்னினின்று வேறுபட்ட எல்லாப் பொருள்களும் தனக்கு அடிமையாகத் தான் இறைவன் ஆகையாலே வந்த வேறுபாட்டினை. இங்ஙன் அன்றாகில், ஒன்றற்கு ஒன்று வேறுபாடு எல்லாப் பொருள்கட்கும் உண்டே அன்றோ? ஆதலால், இங்கு ‘வேறுபாடு’ என்றது, உயர்த்தியால் வந்த வேறுபாட்டினையே என்க. 4எல்லா ஆத்துமாக்களுக்கும் ஞானமே வடிவமாய் இருப்பதாலே, அவனோடு ஒப்புமை உண்டாயிருக்கச் செய்தேயும், எங்கும் பரந்திருத்தல், எல்லாப்பொருள்கட்கும் இறைவனாய்ருத்தல், எல்லாப் பொருள்களையும் ஏவுகின்றவனாயிருத்தல் ஆகிய இவை அந்தச் சர்வேசுவரன் ஒருவனிடத்திலேயே கிடக்குமவை அல்லவோ?’ 1தன்னை ஒழிந்தார் அடையத் தனக்கு அடிமை செய்யக்கடவனாய், தான் எங்கும் பரந்திருப்பவனாய், ஆகாசம் பரந்திருத்தலைப்போல அன்றிக்கே, ஜாதி பொருள்கள்தோறும் நிறைந்திருக்குமாறுபோலே இருக்கக்கடவனாய், 2இப்படிப் பரந்திருத்தல் தான் ஏவுவதற்காக அன்றோ? 3இவ்வருகுள்ளாரை அடையக் கலங்கும்படி செய்யக்கூடியவைகளான அஞ்ஞானம் முதலானவைகள் முழுதும் தன் ஆசனத்திலே கீழே அமுக்குண்ணும்படி அவற்றை அதிஷ்டித்துக்கொண்டு இருக்கும் படியைத் தெரிவிப்பார், ‘இருந்து’ என்கிறார். அன்றிக்கே, 4‘தன்னினின்றும் வேறுபட்ட எல்லாப் பொருள்களையும் உடையவன் ஆகையால் வந்த ஆனந்தம் தோற்ற இருக்கிற இருப்பைச் சொல்லுகிறது’ என்னுதல்.
ஏழ் உலகும் தனிக்கோல் செல்ல – 5சுற்றுப்பயணம் வந்து உலகத்தையெல்லாம் நிர்வாகம் செய்கையன்றிக்கே, இருந்த இருப்பிலே உலகமடையச் செங்கோல் செல்லும்
படியாக ஆயிற்று இருப்பது. ‘ஏழ் உலகு’ என்று பரமபதமும் அதற்குக் கீழே உள்ள உலகங்களுமான இரு வகை உலகங்களையும் சொல்லிற்றாதல்; பரமபதத்திற்கு இப்பால் உள்ள உலகங்கள் மாத்திரத்தைச் சொல்லிற்றாதல். இரு வகையான உலகங்களையும் சொல்லும் போது 1மூன்று வகையான ஆத்துமாக்களையும் நான்கு வகையான பிரகிருதியையும் சொல்லுகிறது. நான்கு வகையான பிரகிருதிகளாவன : காரிய காரண உருவமான இரு வகைப்பட்ட பிரிவுகள் அங்கு; இங்கும், அப்படியுண்டான இரு வகைப்பட்ட பிரிவுகள். லீலாவிபூதி மாத்திரத்தைச் சொன்னபோது, கீழேயுள்ள உலகங்களையும் பூமியையும் கூட்டி ஒன்று ஆக்கி, பரமபதத்திற்கு இப்பாலுள்ள உலகங்களை ஆறு ஆக்கி, ஆக ஏழையும் சொல்லுகிறது என்று கொள்க. வீவு இல் சீர் -அழிவில்லாத கல்யாண குணங்களைச் சொல்லுதல்; நித்தியமான பரமபதத்தைச் சொல்லுதல். ஆக, ‘ஏழ் உலகு’ என்பதற்கு உபயவிபூதிகளையும் என்று பொருள் கொண்டால், ‘இங்கு வீவில்சீர்’ என்பதற்குக் கல்யாண குணங்கள் என்ற பொருளும், அங்கே, லீலாவிபூதியை மாத்திரம் கொண்டால், இங்கு நித்தியவிபூதி என்ற பொருளும் கோடல் வேண்டும் என்பதனைத் தெரிவித்தபடி.
‘இப்படி உபயவிபூதிகளையுமுடையவனான செருக்கால் தன் பக்கல் சிலர்க்குக் கிட்ட ஒண்ணாதபடி இருப்பானோ?’ என்னில், ‘அங்ஙனம் இரான்’ என்கிறார் மேல் : ஆற்றல் மிக்கு ஆளும் அம்மான் – 2‘ஸ்ரீராமபிரான் இராச்சியத்தை விநயத்தோடு கூடினவராய் நடத்துகையாலே இராச்சியத்தை உபாசித்தார்’ என்பது போன்று ‘செருக்கு அற்றவனாய்
ஆளுகின்ற அம்மான்’ என்கிறார். என்றது, 1வழி அல்லா வழியே வந்த ஐசுவரியமுடையவன் பிறர்க்குத் திரிய ஒண்ணாதபடி நடப்பான் என்பதனையும், உடையவனுடைய ஐசுவரியமாகையாலே தகுதியாய் இருக்கின்றமையையும் தெரிவித்தபடி. அன்றிக்கே, ‘ஆற்றல்’ என்றது, வலியாய், ‘இவ்வுலகமனைத்தையும் நிர்வஹிக்கைக்கு அடியான தரிக்கும் ஆற்றலைச் சொல்லுகிறது’ என்று சொல்லுவாரும் உளர். இனி, ‘அம்மான்’ என்பதற்கு, ‘எல்லாரையும் நியமிக்கின்ற தன்மையால் வந்த ஐசுவரியத்தையுடையவன்’ என்று பொருள் கூறலுமாம்.
வெம் மா பிளந்தான் தன்னை – ‘ஆற்றல் மிக்கு ஆளும்படி சொல்லுகிறது’ என்று பட்டர் அருளிச் செய்யும்படி. ‘என்றது, என் சொல்லியவாறோ?’ எனின், இவ்வுலகங்கள் அனைத்தையம் உடையவன் ஆனால், இருந்த இடத்தே இருந்து, ‘தஹபச – கொளுத்து அடு’ என்று நிர்வஹிக்கையன்றிக்கே, இவர்களோடே ஒரே சாதியையுடையனாய் வந்து அவதரித்து, இவர்கள் செய்யும் பரிபவங்களை அடையப் பொறுத்து, களை பிடுங்கிக் காக்கும்படியைச் சொல்லுகிறது என்றபடி. 2சமந்தக மணி முதலியவைகளிலே பரிபவம் பிரசித்தம்; ‘நான் ‘பந்துக்களுக்கு இரட்சகன்’ என்பது ஒரு பெயர் மாத்திரமேயாய், இவர்களுக்கு அடிமை வேலைகளையே செய்துகொண்டு திரிகின்றேன்,’ என்றும், ‘நல்ல பொருள்களை அனுபவிக்கும் அனுபவங்களில் பாதியைப் பகுத்திட்டு வாழ்ந்து போந்தேன்; இவர்கள் கூறுகின்ற கொடிய வார்த்தைகளையெல்லாம் பொறுத்துப் போந்தேன்,’ என்றும் அவன் தானும் அருளிச் செய்தான்.
இனி, ‘வெம் மா பிளந்தான்றன்னை’ என்பதற்கு, ‘ஆற்றல் மிக்கு ஆளும் அம்மான் யார்?’ என்றால், இன்னான் என்கிறது என்று அம்மங்கி அம்மாள் நிர்வஹிப்பர். கேசி பட்டுப்போகச் செய்தேயும் தம் வயிறு எரித்தலாலே ‘வெம்மா’ என்கிறார் இவர். 1‘நன்றாகத் திறந்த வாயையுடையவனும் மஹாபயங்கரமானவனுமான அந்தக் கேசி என்னும் அசுரன், இடியினாலே தள்ளப்பட்ட மரம் போலே கண்ணபிரானுடைய திருக்கையாலே இரண்டு கூறு ஆக்கப்பட்டவனாய்க் கீழே விழுந்தான்,’ என்பது ஸ்ரீவிஷ்ணு புராணம். கேசி வாயை அங்காந்துகொண்டு வந்த போது, சிறு குழந்தைகள் துவாரம் கண்ட இடங்களிலே கையை நீட்டுமாறு போலே, இவன் பேதைமையாலே அதன் வாயிலே கையை நீட்டினான்; முன்பு இல்லாதது ஒன்றைக் கண்ட காட்சியாலே கை பூரித்துக் கொடுத்தது; கையைத் திரும்ப வாங்கினான்; அவன் இருபிளவாய் விழுந்தான் என்பது.
போற்றி – 2சொரூபத்திற்குத் தக்கனவாய் அன்றோ பரிவுகள் இருப்பன? 3கேசி பட்டுப்போகச்செய்தேயும் சமகாலத்திற்போலே வயிறு எரிந்து படுகிறாராயிற்று இவர். என்றே – 4‘நம’ என்று வாயால் எப்பொழுதும் சொல்லிக்கொண்டு இருக்கும் தன்மை வாய்ந்தவர்களாய் இருப்பார்கள்,’ என்பது போன்று, ஒருகால், ‘பல்லாண்டு’ என்றால், பின்னையும் ‘பல்லாண்டு பல்லாண்டு’ என்னுமத்தனை. கைகள் ஆரத் தொழுது – ‘வைகுந்தம் என்று கைகாட்டும்’ என்று வெற்று ஆகாசத்தைப் பற்றித் தொழுத கைகளின் விடாய் தீர்ந்து வயிறு நிறையும்படி தொழுது. சொல் மாலைகள் – வாடாத மாலைகள். என்றது, ‘அநசூயை கொடுத்த மாலை போலே செவ்வி அழியாத
மாலைகள்’ என்றபடி. ஏற்ற – 1‘ஆராதனத்தைத் தாமாகவே தலையாலே ஏற்றுக்கொள்ளுகிறார்’ என்கிறபடியே, திருக்குழலிலே ஏற்றும்படியாக. நோற்றேற்கு – இவர் இப்போது நோற்றாராகச் சொல்லுகிறது, ‘மண்ணையிருந்து துழாவி’ என்னும் திருவாய்மொழியில் சொல்லப்பட்ட விடாயை; 2முன் கணத்திலே நிகழ்வது ஒன்றேயன்றோ ஒன்றுக்கு ஏதுவாவது?
அன்றிக்கே, 3‘பகவானுடைய கிருபையை’ என்னலுமாம். இனி என்ன குறை – 4பரமபதத்திற்குச் சென்றாலும் தொண்டு செய்தலாலேயாகில் சொரூபம்; அதனை இங்கே பெற்ற தனக்கு ஒரு குறை உண்டோ? 5இங்கே இருந்தே அங்குத்தை அனுபவத்தை அனுபவிக்கப்பெற்ற எனக்கு ‘அங்கே போகப் பெற்றிலேன்’ என்கிற குறை உண்டோ? 6அங்கே போனாலும் சூழ்ந்திருந்து ஏத்துவர்
பல்லாண்டே அன்றோ?’ ‘இது எத்தனை குளிக்கு நிற்கும்?’ என்னில், எழுமையுமே – 1முடிய நிற்குமவற்றை எவ்வேழாகச் சொல்லக்கடவதன்றோ? 2‘கீழே பத்துப் பிறவியையும் தன்னையும் பரிசுத்தப்படுத்துகிறது’ என்றும், ‘மூவேழ் தலைமுறையைக் கரை ஏற்றுகிறது’ என்றும் சொல்லப்பட்டிருக்கின்றது அன்றே?
. மேல் திருவாய்மொழியிலே உண்டான அளவிற்கு மீறிய அப்ரீதியையும்,
இத்திருவாய் மொழியிலே உண்டாகும் அளவிற்கு மீறிய ப்ரீதியையும்
அநுசந்தித்து வியாக்கியாதாவின் ஈடுபாடு, ‘மேல் திருவாய்மொழியிலே’ என்று
தொடங்குவது. ‘மேலே உண்டான வருத்தம் சிறிதும் தோன்றாதே எப்போதும்
பிரீதன் ஆனேன் என்று சொல்லும்படி ஆவதே!’ என்று ஆச்சரியப்படுகிறார்
என்பது கருத்து.
2. ‘இனி என்ன குறை?’ என்று ஈடுபடுகிறது என்? ‘பொய்ந்நின்ற ஞானம்’
தொடங்கி இத்துணையும் கலவியும் பிரிவுமாயன்றோ சென்றது?
அவற்றைக்காட்டிலும் இவ்விரண்டு திருவாய்மொழிகளுக்கும் அதிசயம் என்?’
என்ன, அருளிச்செய்கிறார், ‘மேல்’ பொய்ந்நின்றஞானம்’’ என்று தொடங்கி,
‘பொய்ந்நின்றஞானம்’ என்னுமிது, திருவிருத்தம், முதற்பாசுரம்.
3. ‘அர்ச்சிராதி மார்க்கம் முதலாகப் பலம் பெற வேண்டியிருக்க, இதனையே
பலமாகச் சொல்லுகிறது என்?’ என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார்,
‘பேற்றுக்கு’ என்று தொடங்கி. என்றது, ‘அங்குப் போய்ச்
செய்யும்அடிமைகளை இங்கே இருந்தே செய்யும்படி தன் சொரூபம்
முதலானவைகளைத் தெளிவாகக் காட்டிக் கொடுத்தானாகையினாலே,
அவ்வருகு சொல்லலாவது இல்லை,’ என்றபடி.
4. பேற்றுக்கு, இதற்கு அவ்வருகு சொல்லலாவது இல்லை என்றதற்குச் சம்வரதம்
காட்டுகிறார், ‘சூழ்விசும்பணிமுகில்’ என்று தொடங்கி. என்றது,
‘இத்திருவாய்மொழியிலுண்டான அனுபவ கைங்கரியங்கள் அர்ச்ராதி கதிக்குப்
பின்பு பெறத் தக்கனவாகையாலே, அவ்வர்ச்சிராதி கதியைப்பற்றிப் பேசுகின்ற
‘சூழ்விசும்பணி முகில்’ என்ற திருவாய்மொழிக்குப் பின்னர்
இத்திருவாய்மொழி அமையப் பெற்றதில்லையே!’ என்றபடி. ‘சூழ்
விசும்பணிமுகில்’ என்பது, திருவாய். 10. 9 : 1.
மேல் திருவாய்மொழியோடே இயைபு அருளிச்செய்கிறார், ‘பெருமாளும்’
என்று தொடங்கி. மேலே, ஆழ்வார் விடாய் கொண்டமைக்குப் பெருமாளைத்
திருஷ்டாந்தமாக்கினாற்போலே, விடாய் தீர்ந்தமைக்கும் பெருமாளைத்
திருஷ்டாந்தமாக்குகிறார் இங்கு. என்றது, இச்சேர்த்தியைச் சேர்த்து
வைக்கின்றவர்கள்கூட இருக்கச் செய்தே பிரிகையும், போலி கண்டு
மயங்குகையும், தக்க பரிகரத்தைக்கொண்டு பரிஹரிக்கையும், இரண்டு
இடங்களிலும் உண்டு ஆகையாலே, திருஷ்டாந்த தார்ஷ்டாந்திக பாவத்தைத்
தெரிவித்தபடி. அங்கு, அச்சேர்த்திக்குக் கடகர் இளைய பெருமாள்; இங்கு,
நித்தியசூரிகள்; அங்கு மிருகத்தின் போலி; இங்கு அவன் போலி. அங்குப்
பரிகரம் மஹாராஜர் முதலானோர்; இங்கு யாதோர் ஆகாரத்தைக் கண்டு
மயங்கினார், அந்த ஆகாரத்தோடு கூடிய வேஷத்தைக் காட்டுகை. அங்குப்
பிராட்டியோடு கூடிச் சந்தோஷித்தாற்போலே இவர் திருக்கையிலே
தாளத்தைக் கொடுக்க, இவரும் சந்தோஷித்து மங்களாசாசனம் பண்ணுகிறார்
என்க.
2. ‘வீற்றிருந்தேழுலகும்’ என்ற பாசுரத்தைக் கடாக்ஷித்து, ‘நித்திய விபூதியையும்’
என்று தொடங்கி அருளிச்செய்கிறார்.
3. ‘சொல்மாலைகள் ஏற்ற’ என்ற பாசுரப் பகுதியைத் திருவுள்ளம் பற்றி, ‘ஒரு
சொல்லுச்சொன்னால்காணும்’ என்கிறார்.
4. ‘போற்றி’ என்றும், ‘இசைமாலைகள் ஏத்தி’ என்றும் வருகின்றவற்றைத்
திருவுள்ளம் பற்றி, ‘இவர் திருக்கையிலே தாளத்தைக் கொடுக்க’ என்கிறார்,
‘போற்றி என்றே’ என்றதனை நோக்கி, ‘மங்களாசாசனம் பண்ணி’ என்கிறார்.
பாசுரம் முழுதினையும் கடாக்ஷித்து, அவதாரிகை அருளிச்செய்கிறார். ‘வெம்
மா பிளந்தான்றன்னை’ என்றதனை நோக்கி, ‘ஸ்ரீ கிருஷ்ணனை’ என்கிறார்.
2. ஈண்டு ‘வேறுபாடு’ என்றது, உயர்வினாலே வந்த வேறுபாடு என்று கூறத்
திருவுள்ளம் பற்றி, அவ்வுயர்வுதான் எங்கும் பரந்திருத்தல், எல்லாப்
பொருள்கட்கும் சேஷியாயிருத்தல், எல்லாரையும் ஏவுகின்றவனாயிருத்தல்
ஆக மூன்று வகையாய் இருத்தலின், அம் மூன்று வகையான வேறுபாடுகளும்
தோன்ற ‘வேறுபாடு அடங்கலும்’ என்கிறார்.
3. ‘வேறுபாடு எவ்வகையாலே?’ என்ன, அதனை அருளிச்செய்கிறார், ‘ஈண்டு,
வேறுபாடு என்றது’ என்று தொடங்கி.
4. ‘எல்லா ஆத்துமாக்களும் ஈசுவரனோடு ஞானத்தாலே ஒரே தன்மையனவாய்
ஒத்து இருக்க, வேறுபாடு சொல்லும்படி யாங்ஙனம்?’ என்கிற சங்கையையும்
நீக்காநின்றுகொண்டு, மேலே ‘வேறுபாடு அடங்கலும்’ என்றதில் சொல்ல
வேண்டுமென்று விரும்பிய தன்மை விசேஷங்களையும் காட்டுகிறார், ‘எல்லா
ஆத்துமாக்களுக்கும்’ என்று தொடங்கி.
மேலே கூறிய மூன்றனையும் மாறாடி அருளிச்செய்கிறார், ‘தன்னை ஒழிந்தார்’
என்று தொடங்கி. ‘தன்னையொழிந்தாரடையத் தனக்கு அடிமை செய்யக்
கடவனாய்’ என்றது, இறைவனாயிருத்தலை விளக்கியபடி. ‘தான் எங்கும்
பரந்திருப்பவனாய்’ என்றது, எங்கும் பரந்திருத்தலைக் கூறியபடி.
‘பரந்திருத்தலை’ விளக்குகிறார், ‘ஆகாசம்’ என்றது முதல் ‘இருக்கக்கடவனாய்’
என்றது முடிய. ‘எல்லாப் பொருள்களையும் ஏவுகின்றவனாயிருத்தல்’
என்றதனை விளக்குகிறார், ‘இப்படிப் பரந்திருத்தல்தான்’ என்று தொடங்கி.
2. ஆக, ‘இப்படிப் பரந்திருத்தல்தான் ஏவுவதற்காகவன்றோ?’ என்றது முடிய,
‘வீற்று’ என்ற பதத்தின் பொருளை விளக்கிக் கூறியபடி.
3. ‘இருந்து’ என்பதற்குப் பொருள் அருளிச்செய்கிறார், ‘இவ்வருகுள்ளாரை’
என்று தொடங்கி. இதனால், ‘தர்மாதிபீடம்’ சொல்லப்படுகிறது. ‘அஞ்ஞானம்
முதலானவைகள்’ என்றது, ஞான தர்ம வைராக்ய ஐஸ்வர்யங்களையும்,
அஞ்ஞான அதர்ம அவைராக்ய அநைஸ்வர்யங்களையும் குறித்தபடி.
4. ‘வீற்றிருந்து’ என்றதனை இரண்டு சொற்களாகக் கொள்ளாது, ஒரே
சொல்லாகக் கொண்டு பொருள் அருளிச்செய்கிறார், ‘தன்னினின்றும்’ என்று
தொடங்கி.
5. மேலேயுள்ள ‘இருந்து’ என்ற பதத்தை இங்கும் கூட்டி பாவம்
அருளிச்செய்கிறார், ‘சுற்றுப்பயணம் வந்து’ என்று தொடங்கி.
மூன்று விதமான ஆத்துமாக்கள் : பத்தர், முத்தர், நித்தியர் என்பவர்கள்.
‘காரிய காரண உருவமான இருவகைப்பட்ட பிரிவுகள் அங்கு’ என்றது,
விமான கோபுரம் முதலானவைகள் காரியம்; திவ்ய அசித்துக் காரணம்
என்றபடி. ‘இங்கும், அப்படி யுண்டான இருவகைப்பட்ட பிரிவுகள்’ என்றது,
இவ்வுலகத்திலும், பிரகிருதியையும் அதன் காரியமான மகத்து முதலான
காரியங்களையும் குறித்தபடி. இரண்டாம் பத்து. பக். 35. காண்க.
மேல் உலகம் ஆறாவன : புவர் லோகம், சுவர் லோகம், மகர்லோகம்,
ஜனர்லோகம், தபோலோகம், சத்தியலோகம் என்பனவாம்.
ஸ்ரீ சாத்வதம். ‘திருக்குழலிலே ஏற்றும்படியாக’ என்றது, ‘சிரசாகத் தரிக்க’
என்றபடி.
2. ‘‘மண்ணையிருந்து துழாவி’ என்ற திருவாய்மொழியிலுண்டான விடாயைச்
சாதனமாகச் சொல்லலாமோ?’ என்ன, அந்த வருத்தத்தைக் கண்டு
அனுபவிப்பிக்கையாலே முன் கணத்தில் இருந்தமை மாத்திரமே கொண்டு
அருளிச்செய்கிறதொழிய, உபாயம் அன்று என்று திருவுள்ளம் பற்றி
அருளிச்செய்கிறார் ‘முன்கணத்திலே’ என்று தொடங்கி. ‘ஈசுவரன்
அபிப்பிராயத்தாலே ஏது’ என்றபடி.
3. ‘பகவானுடைய கிருபையை என்னலுமாம்’ என்றது, ‘நன்று சூட்டும் விதி
எய்தினம்’ என்கிறபடியே, ‘பகவானுடைய கிருபையை’ என்றபடி.
4. ‘‘இனி என்ன குறை’ என்னலாமோ? பரமபதப் பிராப்தி முதலானவை
வேண்டாவோ?’ என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார், ‘பரமபதத்திற்குச்
சென்றாலும், என்று தொடங்கி.
5. ‘இனி என்ன குறை’ என்றதனைச் ‘சொன்மாலைகள் ஏற்ற நோற்றேற்கு’
என்றதனோடே கூட்டி, பாவம் அருளிச்செய்தார் மேல்; ‘இனி என்ன குறை’
என்றதனைப் ‘போற்றி’ என்ற பதத்தோடு கூட்டி வேறும் ஒரு பாவம்
அருளிச்செய்கிறார், ‘இங்கேயிருந்தே’ என்று தொடங்கி.
6. ‘அங்குத்தை அனுபவம் யாது?’ என்ன, ‘அங்கே போனாலும்’ என்று
தொடங்கி அதற்கு விடை அருளிச்செய்கிறார்,
‘பல்லாண் டென்று பவித்திர னைப்பர மேட்டியைச் சார்ங்கமென்னும்
வில்லாண் டான்தன்னை வில்லிபுத் தூர்விட்டு சித்தன் விரும்பியசொல்
நல்லாண் டென்று நவின்றுரைப் பார்நமோ நாராய ணாயஎன்று
பல்லாண் டும்பர மாத்மனைச் சூழ்ந்திருந் தேத்துவர் பல்லாண்டே.’
என்பது திருப்பல்லாண்டு, பா. 12.
‘பூவள ரும்திரு மாது புணர்ந்தநம் புண்ணியனார்
தாவள மான தனித்திவம் சேர்ந்து, தமருடனே
நாவள ரும்பெரு நான்மறை ஓதிய கீதமெலாம்
பாவள ரும்தமிழ்ப் பல்லாண் டிசையுடன் பாடுவமே.’
என்பது வேதாந்த தேசிகன் ஸ்ரீசூக்தி.
அப்படி விடாய்த்தவர் -இதில் ஹர்ஷமாக அருளுகிறார்
கிருஷி பண்ணின படி
பொய் நின்ற ஞானம் தொடங்கி -இதுவரை –
பக்தி என்கிற பசி -போஜனத்துக்கு ஷுத்து போலே –
உண்டாக்கி -போகம் ரசிக்க
காதல் கடல் புரைய விளைவித்த
கடலில் மிகப் பெரிதால்
தத்வ த்ரயம் விளாக்குலை கொண்ட -அவா அதனில் பெரிய –
விடாயுக்கு கிருஷி முயன்றான் பக்தி உழவன்
இந்த கிருஷிக்கு பலன் சொல்கிறது இதில்
சாஷாத் அனுபவம் போலே மானஸ அனுபவம்
பேற்றுக்கு அவ்வருகு இல்லாத பேறு பெற்று ஹர்ஷம் –
சாஸ்திரம் -நிறைய பேற்றை –
முக்குணம் உடையவர் -ராசிக்யம் உண்டாக்க முதலில் சாஸ்திரம்
சேன யாகம் சூன்யம் -வைப்பது போலே விரோதி அழிக்க
நம்பிக்கை இன்றி செய்தாலும் பலன் கொடுக்குமே
ஐஸ்வர்யம் வாயவ்ய யாகம்
அடுத்த நிலை -ஸ்வர்க்கம்
நிரந்தர பலன் -பகவத் கைங்கர்யம்
இதை பெற்று விட்டால் போலே
நிகர் யாரும் இல்லையே
சூழ் விசும்பு அநந்தரம் இருக்க வேண்டிய திருவாய்மொழி
பெற்ற ஹர்ஷம் இதில் சொல்வதால் நஞ்சீயர் –
பெருமாளும் இளைய பெருமாளும் இருப்பிலே பிராட்டி
பிரிந்து -போக்க வானர -மகராஜர்
விரோதி கிழங்கு எடுத்து கூடினது போலே
போலி கண்டு பிரமித்த இலவு ஐவரும்
அவள் மாயமான்
இவரோ போலியை எம்பெருமானாக கண்டு
இலவு எல்லாம் போகும்படி காட்டிக் கொடுத்து
ஐஸ்வர்யம் அனைத்தையும் காட்டி அருளி –
24000 படியில் விவரிக்கிறார்
திவ்ய நகரம் திவ்ய ஆஸ்தானம்
சமஸ்த கல்யாண குணாத்மகன்
வீற்று இருந்த நிலை
லீலா விபூதியையும் நித்யர் போலே ஆக்க அவதரித்து செஷ்டிதன்கள் காட்டி கொடுத்து
இவர் கையில் தாளம் கொடுத்து
எம்பெருமான் இருக்கும் இருப்புக்கு மங்களா சாசனம் பண்ணுகிறார்
பிரமிப்புக்கு -தன்னை காட்டி -குன்றத்தை நெடுமா மலை வானமா மலை
ஸ்ரீ வர மங்கை நகர்
மங்களம் -சொல் மங்கை
சீதா சீதை தமிழ் –
தமிழ் சமஸ்க்ருதம் போகாதாம்
மங்கை மங்கா ஆகாது
ஆண்டாள் கோதை கோதா சொல்கிறோம்
சம்பந்தம் இல்லை -வேற திருநாமம் காஞ்சி ஸ்வாமி காட்டி
கோதை மாலை அர்த்தம்
பெண்ணை ஆறு பெண்ணா வராது பாட பேதம் –
ஸ்ரீ வர மங்கள நகர்
திவ்ய தேச பெயர் –
நான்குநேரி
அல்ப சாதுர்யம் கண்டு போலி –
புள்ளுடையான் அருளாழி அம்மான் நித்ய அடியாரைக் காட்டிக் கொடுத்தான் –
பஸ்மத்தை கொண்டு மேல் நோக்கி இட்டவரைக் காணில் –
திருமண் -நெடுமால் அடியார் பிரமித்தார்
நித்ய கைங்கர்யபரர்களைக் காட்டி
ஸ்ரீ தரன் மூர்த்தி
பாஸ்கரென ப்ரபா-மைய கண்ணாள் -மலர் மேல் -காட்டிக் கொடுத்தான்
உபய விபூதி ஐஸ்வர்யம்
என்ன குறை தனது வாயால் சொல்ல
முன்பு தாயார் என்ன செய்வேன் சொல்லி
வீவில் இன்பம் ஆனந்த மயம் காட்டிக் கொடுத்து
இனி என்ன குறை எழுமையும் சொல்லும்படி
சாத்து முறை திருவாய்மொழி
இதுவும் திருவேம்கடமுடையான் விஷயம் தான்
அனுபவித்து மங்களா சாசனம் செய்கிறார்
கிரிஷ்ணனை கவி பாட செய்தஎனக்கு என்ன குறை
வீவில் சீர் அழிவு இல்லாத கல்யாண குணங்கள்
வெம்மா பிளந்தான் தன்னை
கைகள் ஆரத் தொழுது
வேறுபாடு -வீற்று இருந்து -வீறு இருந்து
வீறு -வேறுபாடு வை லஷண்யம்
ஸ்வ வ்யரிக்த சமஸ்த வஸ்துகளும் அடிமை தான் எஜமானன் -சேஷயாய்
வந்த வேறுபாடு ஞான ஆகாரத்தால் சாம்யம் அனைவரும்
தர்ம பூத ஞானம் மங்கி இருக்கும்
ஜீவாத்மா பரமாத்மா ஞான ஆனந்த ஸ்வரூபம்
விபுத்வ -சேஷித்வ -நியந்த்ருத்வ -மூன்றிலும் வேறுபாடு உண்டே
தன்னை ஒழிந்தார் அடைய தனக்கு கிஞ்சித் கரிக்க கடவனாய் -சேஷி சேஷ பாவம்
வியாபித்து -ஆகாசமும் வியாபிக்கும் -ஜாதி குணம் போலே வியாபித்து பரிபூர்ணமாக –
நியந்த்ருத்வம் உண்டே இவனுக்கு
வியாபித்தும் நியமநார்தம் –
ஆசனம் கீழே அஞ்ஞானம் அழுத்தும்படி -கட்டளைக்கு கீழே அனைத்தும்
வீற்று இருந்து
இருந்து –
இருந்த இருப்பில் லோகம் அடைய செங்கோல் நடத்தும் –
சென்று கார்யம் செய்ய வேண்டாதபடி
பீஷாத்மா -வாயு -போலே
ஏழு உலகு -விபூதி த்வயத்தையும்
வீவில் சீர் கல்யாண குணம்
அன்றிக்கே
ஏழு உலகு லீலா விபூதி
வீவில் சீர் நித்ய விபூதி
த்ரிவித செத்தனர் பக்தர் முக்தர் நித்யர்
சதுர்வித -பிரகிருதி கார்ய காரண ரூபமான
அங்கும் இங்கும் கார்ய காரணங்கள்
பதாளா லோகங்கள் பூ லோகம் சேர்த்து -பரம பதம் இவ்வருகு ஆறு
பரமபதம் ஏழாவது லோகம்
செருக்கால் தனது பக்கம் கிட்ட ஒண்ணாது இருப்பானோ என்னில் –
ராமோ ராஜ்ஜியம் உபாசித்வா -ராமக ராஜ்ஜியம் -உபாசனம் -செய்வானாம்
ஜனங்கள் கண்டு அரசன் பயப்படுவது போலே
இட்ட கட்டளை நிறைவேற்ற வேண்டுமே
ஐஸ்வர்யம் அர்த்த ராத்திரி குடை பிடிப்பது
பவ்யமாக =ஆற்றல் -மிக்கு அழும் அம்மான் –
ஆற்றல் -ஆளுதல் -துன்பம் ஆற்றினான் ஆறுதல் சொன்னான்
வலிமை சாந்தி உடன் ராஜ்ஜியம் ஆளுகிறான்
பொறை ஷமம் -கர்வம் இன்றி
பிரப்தமான ஐஸ்வர்யம்
அன்றிக்கே
வலிமையாய் -தாரண சாமர்த்தியம் பலம் உள்ளவன்
அம்மான் -நியந்த்ருத்வம் ஸ்வாமி என்பதால்
வெம்மா வெவ்விய குதிரை கேசி
ஆற்றல் மிக்கு ஆளும் அம்மான் கேசி வதம் -பட்டர் நிர்வாகம்
இன்னார் என்கிறது கண்ணன் அம்மங்கி அம்மாள் பணித்த
எம்பார் வார்த்தை பிள்ளான் என்றும் சொல்வார்கள் –
ராஜகுமாரர் முதுகுடனே போம் எம்பார் பட்டர் வார்த்தை சொல்வது போலே
சஜாதீயனாக வந்து அவதரித்து
பரிபவங்கள் அடைய பொறுத்து
களை பிடுங்கி ரஷிக்கும் படி
சமந்தக மணி விருத்தாந்தம்
சத்ய பாமைக்கே சங்கை வந்ததாம்
கேசி பட்டுப் போக செய்தேயும் -வெம்மா என்கிறார்
மா பலி சொல்வது போலே
ஆபத்தை நினைத்தவாறே
வாயை பிளந்து வந்தானாம் -கையாலே இரண்டு கூறாக இடி விழுந்த மரம் போலே விழுந்தான்
கிருஷ்ணன் தோளாலே பிராணன் விட்டான்
த்வாரம் கண்ட இடத்தில் குழந்தை கை நீட்டுவது போலே
அபூர்வ தர்சனம் கை பூரித்ததாம்
பூரித்து தாங்காமல் –
கைவாங்க விழுந்தான்
போற்றி போற்றி
‘நூறு பிராயம் புகுவீர்’ என்று சொல்லாமல், ‘போற்றி’ என்கிறது என்?’
என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார், ‘சொரூபத்திற்கு’ என்று தொடங்கி.
என்றது, ‘சேஷத்துவத்திற்கு அநுகுணமாகப் பரிந்து, ‘போற்றி’ என்று
மங்களாசாசனம் செய்கிறார்’ என்றபடி.
ஸ்வரூபம் தக்கபடி பல்லாண்டு பாடுகிறார் –
என்றே -ஒருதடவை சொல்லி நிற்காமல்
பலாண்டு பல்லாண்டு -அங்கும் நம நம இத்யேவ வாதினக
வாயால் போற்றி
தொழுது கை –
விடாய் தீர வயிறு நிறையும்படி தொழுது
என்று தழுவும் -போலி இப்பொழுது கைகள் ஆரத் தொழுது
சொல் மாலைகள் தொல் மாலைகள் செவ்வி அழியாத மாலைகள் –
அனுசூயை கொடுத்த மாலை போலே
இவருடைய கவி பாட்டு ஈஸ்வரனுக்கு அலங்காரம்
பாசுரம் செய் மாலையே இவரே அருளி
ஏற்ற திருக் குழலிலே ஏறும்படி தலையாலே சுமந்தும்
ஏற்ற நோற்றேன் -நோற்றாரா
மண்ணை இருந்து துழாவிய இவருக்கு விடாய் -த்வரை -அதனடியாக
பகவத் கிருபை தான் சாதனம்
அழுததே காரணம் -நோற்றேன் -இது தான்
பகவத் கிருபையை நோன்பு என்கிறார்
பூர்வ ஷண வர்த்தியே காரணம்
என்ன குறை
இங்கே கிஞ்சித்காரம் பெற்ற எனக்கு குறை என்ன
ஸ்வரூப அனுரூபமாக அடிமை செய்யப் பெற்றேன்
தேச விசேஷம் போய் -தேகம் விட்டு பெற வேண்டியதை -இங்கேயே பெற்றதால் குறை என்னது
பரம பதம் போக வேண்டிய குறையும் இல்லையே
எத்தனை குளிகைக்கு நிற்கும் எம்பெருமான் கேட்டானாம்
எழுமையுமே என்றும் ஒக்க
முடிய நிற்பதை ஏழு ஏழு ஆக சொல்வர் சப்த சப்தச-21
அங்கெ போக பெற்றிலேன் குறையும் இல்லையே
சூழ்ந்து இருந்து ஏத்துவர் பல்லாண்டே
இங்கேயே அனுபவிக்க பெற்றேனே
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்.
வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.
Leave a Reply