ஏக மூர்த்தி இருமூர்த்தி மூன்று மூர்த்தி பலமூர்த்தி
ஆகி ஐந்து பூதமாய் இரண்டு சுடராய் அருவாகி
நாகம் ஏறி நடுக்கடலுள் துயின்ற நாரா யணனே!உன்
ஆக முற்றும் அகத்துஅடக்கி ஆவி அல்லல் மாய்த்ததே.
பொ-ரை : ‘ஒரு மூர்த்தியாகி இருமூர்த்தியாகி மும்மூர்த்தியாகிப் பல மூர்த்தியாகி ஐம்பூதங்களாகி இருசுடர்களான சூரிய சந்திரர்களாகி இவற்றுக்கு உள்ளுயிராகித் திருப்பாற்கடலின் நடுவில் ஆதிசேஷனாகிய படுக்கையின்மேலே ஏறி யோகநித்திரை செய்கின்ற நாராயணனே! உன் திருமேனிக்கு வேண்டும் சாந்து பூமாலை முதலிய இன்பப்பொருள்கள் எல்லாம் என்னுள்ளேயாம்படி செய்து உன் திருவுள்ளமானது துன்பத்தை நீக்கியது,’ என்கிறார். என்றது, ‘ஒருபடி கரை மரம் சேர்க்க வல்லனே’ என்று இருந்த உன்னுடைய திருவுள்ளத்தில் துன்பம் கெட்டு, கிருதார்த்தன் ஆனாயே!’ என்றபடி.
வி-கு : ஆவி – ஈண்டு, மனம். ‘ஆவி அடக்கி அல்லலை மாய்த்தது’ என்க.
ஈடு : மூன்றாம் பாட்டு. 2‘இத்தலையை உனக்கு ஆக்கி அத்தாலே கிருதக்கிருத்தியன் ஆனாயே!’ என்கிறார்.
ஏகமூர்த்தி – 3‘சோமபானம் செய்தற்குரிய சுவேத கேதுவே! காணப்படுகிற இந்த உலகமானது படைப்பதற்கு முன்னே ‘சத்’ என்று சொல்லக்கூடியதாயும் நாமரூபங்கள் இன்மையால் ஒன்றாகவும் அடையக்கூடிய வேறு பொருள் இல்லாததாயும் இருந்தது,’ என்கிறபடியே, படைப்பதற்கு முன்னே ‘இது’ என்ற சொல்லுக்குரிய பொருளாய்க் கிடந்த உலகமுழுதும், அழிந்து ‘சத்’ என்று சொல்லக்கூடிய நிலையாய் நீறு பூத்த நெருப்புப்போலேஇவை அடையத் தன் பக்கலிலே கிடக்கத் தான் ஒருவனுமேயாய் நிற்கும் நிலையைச் சொல்லுகிறது. ஆக, ‘படைப்புக்கு முன்னே இருக்கும் இருப்பைச் சொல்லுகிறது,’ என்றபடி. இரு மூர்த்தி – பிரகிருதியும் மஹானும் ஆகிய இரண்டையும் நோக்கிக்கொண்டு அவற்றைத் திருமேனியாகக் கொண்டிருக்கும் இருப்பைச் சொல்லுகிறது; என்றது, 1‘காரிய காரணங்கள் இரண்டையும் தனக்குத் திருமேனியாகவுடையனாய் இருக்கும் இருப்பைச் சொல்லுகிறது,’ என்றபடி. 2இரண்டுக்கும் உண்டான அண்மையைப் பற்றச் சொல்லுகிறது. அவ்யக்தத்தினுடைய மலர்ந்த விளக்கமான நிலையன்றோ மஹானாகிறது? மூன்று மூர்த்தி – மூன்று விதமான அகங்காரங்களைச் சரீரமாகக் கொண்டிருக்கும் இருப்பைச் சொல்லுகிறது. சாத்விகமாயும் இராஜசமாயும் தாமசமாயும் மூன்று வகைப்பட்டே அன்றோ அகங்காரந்தான் இருப்பது? பல மூர்த்தியாகி ஐந்து பூதமாய் – 3மேலே கூறிய முறை அன்று இங்குச்
சொல்லுகிறது; சாத்துவிக அகங்காரத்தின் காரியம், பதினோரிந்திரியங்கள்; தாமச அகங்காரத்தின் காரியம், மண் முதலான ஐம்பெரும்பூதங்கள்; இரண்டற்கும் உபகாரமாய் நிற்கும், இராஜச அகங்காரம்; ஆக பதினோரிந்திரியங்களையும், குணங்களோடு கூடிய ஐம்பெரும்பூதங்களையும் சொல்லி அவற்றைத் திருமேனியாகவுடையவனாய் இருக்கும் இருப்பைச் சொல்லுகிறது.
இரண்டு சுடராய் – 1‘பிரமாவானவர் சூரிய சந்திரர்களை முன்பு போலே படைத்தார்,’ என்கிறபடியே, படைத்த சூரிய சந்திரர்களைச் சொல்லுகிறது. இவற்றைக் கூறியது, காரியமான பொருள்கள் எல்லாவற்றிற்கும் உபலக்ஷணம். அருவாகி – 2‘அவற்றைப் படைத்து அவற்றுக்குள் அநுப்பிரவேசித்தார்; அவற்றுக்குள் அநுப்பிரவேசித்துச் சேதனமாயும் அசேதனமாயும் ஆனார்,’ என்றபடியே, இவற்றை உண்டாக்கி இவைகள் பொருள் ஆகைக்காகவும் பெயர் பெறுகைக்காகவும் தான் அவ்வவ்வுயிருக்குள் அந்தராத்துமாவாய் அநுப்பிரவேசித்து நிற்கும் நிலையைச் சொல்லுகிறது. ‘நன்று; மேலே, அசித்தை அருளிச்செய்தாராதலின், அங்கு ‘அரு’ என்பதற்கு ஆத்துமா என்று பொருள் கூறுதல் ஏற்புடைத்தாம் அன்றோ?’ என்னில்,
சரீரமாகவுடைய நான் அந்தரியாமியாய்ப் புகுந்து நாம ரூபங்களை உண்டு பண்ணுகிறேன்,’ என்கிறபடியே, இந்த ஆத்துமாக்களையெல்லாம் சரீரமாகவுடைய சர்வேசுவரனுக்கு அநுப்பிரவேசமாகையாலே அப்பொருளும் சொல்லிற்றாயிற்று.
நாகம் ஏறி நடுக்கடலுள் துயின்ற நாராயணனே – 1தன்னால் படைக்கப்பட்ட பிரமன் முதலானோர்கட்குப் பற்றப்படுமவன் ஆகைக்காகத் திருப்பாற்கடலின் நடுவில் திருவனந்தாழ்வான்மேலே சாய்ந்தருளினவனே! அன்றிக்கே, ‘பயிரைச் செய்து செய்த்தலையிலே குடி கிடக்குமாறுபோன்று, படைக்கப்பட்ட பொருள்களைப் பாதுகாத்தற்காகக் கண்வளர்ந்தருளுகின்றவனே!’ என்னவுமாம். ‘இப்படி எல்லாக் காலமும் ஒரு படிப்படத் திருவருள் புரிதலையே இயல்பாகவுடையன் ஆகைக்கு அடியான சம்பந்தத்தையுடையவன்’ என்பார், ‘நாராயணனே’ என்கிறார்.
உன் ஆகம் முற்றும் – உன் திருமேனிக்கு வேண்டும் சாந்து பூமாலை பரிவட்டம் ஆபரணங்கள் இவையெல்லாம். அகத்து அடக்கி – என்னுள்ளே உண்டாம்படி செய்து. 2‘இதுவே அன்றோ படைப்புக்குப் பிரயோஜனம்? இப்படிச் செய்த காரணத்தால் துக்கம் இல்லாதவர் ஆனார் யார்?’ என்னில், ‘அவன்’ என்கிறார் மேல்; ஆவி அல்லல் மாய்த்தது – உன் திருவுள்ளத்தில் உண்டான துன்பம் ஒருபடி அழியப்பெற்றதே! என்றது, 3‘இத்தலையை
ஒருபடி கரைமரஞ் சேர்த்து நீ கிருதக்கிருத்யன் ஆனாயே!’ என்றபடி. அன்றிக்கே, 1‘என் உள்ளமானது துக்கம் இல்லாததாயிற்று,’ என்னுலுமாம்.
2இனி, இப்பாசுரத்திற்கு, ‘ஏகமூர்த்தி என்பது, பரத்துவத்தைச் சொல்லுகிறது’ என்றும், ‘இருமூர்த்தி’ என்பது, வியூகத்தைச் சொல்லுகிறது; அதாவது, ‘வாசுதேவ சங்கர்ஷணர்களைச் சொல்லுகிறது’ என்றும், ‘மூன்று மூர்த்தி என்பது, ‘வியூகத்தில் மூன்றாம் மூர்த்தியான பிரத்யும்நரைச் சொல்லுகிறது’ என்றும், ‘பல மூர்த்தி’ என்பது, அவதாரங்களைச் சொல்லுகிறது என்றும், 3‘ஐந்து பூதமாய் இரண்டு சுடராய் அருவாகி நாகம் ஏறி நடுக்கடலுள் துயின்ற நாராயணனே!’ என்பது, இன்னார் படைப்புக்குக் கடவர், இன்னார் பாதுகாத்தலுக்குக் கடவர் என்கிற படியாலே சொல்லுகிறது’ என்றும் நிர்வஹிப்பார்கள் உளர்.
3‘இந்த ஆத்துமாக்களை எல்லாம்
காரிய காரணங்கள் இரண்டையும்’ என்றது, மஹானாகிய காரியத்தையும்
மூலப்பகுதியாகிய காரணத்தையும் குறித்தபடி.
2. ‘அகங்காரம் முதலான தத்துவங்களும் மூலப்பகுதியின் காரியமாயிருக்க,
‘மஹத்’ என்னும் தத்துவத்தை மாத்திரம் சொல்லுவான் என்?’ என்னும்
வினாவிற்கு விடை அருளிச்செய்கிறார், ‘இரண்டுக்கும் உண்டான’ என்று
தொடங்கி. ‘அண்மை எப்படி?’ என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார்,
‘அவ்யக்தம்’ என்று தொடங்கி. ‘அவ்யக்தத்தினுடைய மலர்ந்த விளக்கமான
நிலை’ என்றது, அவ்யக்தமாவது, பிரகிருதியினுடைய நிலை வேறுபாடுகளுள்
ஒன்று; பிரகிருதியானது. ‘அவிபக்த தமஸ்’ என்றும், ‘விபக்த தமஸ்’ என்றும்,
‘அக்ஷரம்’ என்றும், ‘அவ்யக்தம்’ என்றும் நான்கு வகையாக இருக்கும்;
அவற்றுள் ஒன்றான அவ்யக்தத்தினுடைய காரியநிலை மகானாய் இருத்தலால்
என்றபடி, ‘அவிபக்த தமஸ்’ என்பது, பூமியில் விதைக்கப்பட்ட விதை
போன்றது. ‘விபக்த தமஸ்’ என்பது, பூமியிலிருந்து எழும் விதை போன்றது.
‘அக்ஷரம்’ என்பது, நீருடன் கலந்து நனைந்து பிரிந்த உறுப்புகளையுடைய
விதைபோன்றது. ‘அவ்யக்தம்’ என்பது, ஊறிப் பருத்து மேலெழுந்து வெடித்த
விதை போன்றது. ‘மகத்’ என்பது, வித்தினின்றும் எழுந்த முளை போன்றது.
3. ‘மேலே கூறிய முறையன்று இங்குச் சொல்லுகிறது’ என்றது, ‘ஏகமூர்த்தி
இருமூர்த்தி மூன்று மூர்த்தி’ என்ற இடங்களில் காரணகாரியங்கள் என்ற
முறை பற்றி அருளிச்செய்தார்; ‘இனி, அருளிச்செய்வது அம்முறையில்
அன்று,’ என்றபடி. அதனை விளக்குகிறார், ‘சாத்விக அகங்காரம்’ என்று
தொடங்கி. பதினோர் இந்திரியங்கள் ஆவன, ஞானேந்திரியங்கள் ஐந்து,
கர்மேந்திரியங்கள் ஐந்து, மனம் ஒன்று. இங்குக் கூறிய தத்துவங்களின்
முறையையும் விரிவையும் பரம காருணிகரான ஸ்ரீமத் பிள்ளை லோகாசார்யர்
அருளிச்செய்த தத்துவத்திரயத்தில் அசித் பிரகரணத்தாலும், பாகவதத்தில்
சுகமுனி தத்துவமுரைத்த அத்தியாயத்தாலும் தெளிவாக உணரலாகும்,
‘ஐந்து பூதமாய் இரண்டு சுடராய் அருவாகி’ என்றதனால், இன்னார்
படைப்புக்குக் கடவர் என்றும், ‘நாகமேறி நடுக்கடலுள் துயின்ற
நாராயணனே’ என்றதனால், இன்னார் பாதுகாத்தலுக்குக் கடவர் என்றும்
பிரித்துக் கூட்டிக்கொள்க. ‘ஐந்து பூதமாய் இரண்டு சுடராய் அருவாகி’
என்றது, சிருஷ்டியைக் கூறுவதனால், மேலே கூறிய பிரத்யும்நரது
தொழிலாகிய சிருஷ்டியைக் கூறுகின்றது என்பது பொருள். ‘நாகமேறி
நடுக்கடலுள் துயின்ற நாராயணனே’ என்பது, ‘அநிருத்தரையும் அவருடைய
காரியமான பாதுகாத்தலையும் கூறுகின்றது’ என்பது பொருள். ‘ஆயின்,
சங்கர்ஷணருடைய தொழிலாகிய சம்ஹாரத்தைக் கூறவில்லையே?’ எனின்,
‘அழித்தலானது, படைத்தற்றொழிலில் லயப்பட்டிருப்பது ஒன்றாகையால்,
அது, பொருளாற்றலால் தானே சித்திக்கும்’ என்க.
‘உளர்’ என்பதனாலே, இவ்வாறு பொருள் கூறுதல் தமக்குத்
திருவுள்ளம் அன்று என்பது போதரும்.
விபீஷண -ஜுரம் நீங்கப் பெற்ற ராமன் போலே
ஏக மூர்த்தி -மொன்று மூர்த்தி இரு சுடர் பஞ்ச பூதம் எல்லாம்
ஆகி
இரண்டு சுடர்
அருவாகி அந்தர்யாமி
நாகம் ஏறி நாடு கடல் துயின்ற
மேன்மை உடையவன்
உன்னுடைய திருமேனி நெஞ்சத்தில் கொண்டு
சேர்ந்த பின்பே துக்கம் நீங்கப் பெற்றானே
ஆவி அல்லல் மாய்ந்தான் -இவருடைய அல்லலும் தீர்ந்ததே
ஏக மூர்த்தி இத்யாதி –
வேதாந்தம் –
சதக சோ ம்யே -ஒருவனாய் ஜகத் சிருஷ்டிக்கு முன்பு ஒருவனே இருந்தானே
சூஷ்ம தசையில் அவன் இடம் அனைத்தும் சேர்ந்து ஏக மூர்த்தி –
ச்வேதகேது உத்தாரகர் சொல்லி
பிள்ளாய் -இதம் அக்ரே சத் உடன் இருந்தது –
பிரமத் துடன் ஒடுங்கிக் கிடந்தது
கண்ணால் பார்க்கும் பிரபஞ்சம் –
மாணிக்கம் ஒளி போலே ஒடுங்கி –
சக்தி அற்ற பிரபை போலே
ஒருவனாய் நிற்கிற நிலை ஏக மூர்த்தி –
இரு மூர்த்தி -மூல பிரகிருதி மகான் கார்ய காரணங்கள்
நெருக்கம் இரண்டுக்கும்
அவயகதம்
வ்யக்தம்
மூன்று த்ரிவித மூர்த்தி
மூன்று அஹங்காரங்கள்
சாத்விக தாமாச-ராஜச அஹங்காரங்கள் –
பல மூர்த்தியாய்
ஐந்து பூதமாய் -பஞ்ச பூதங்கள்
11 இந்திரியங்கள் மனஸ் -கர்ம ஞான -சாத்விக
தாமச பூதங்கள்
இரண்டு சுடராய்–சூர்ய சந்திர யதா பூர்வமாக சிருஷ்டித்து
கார்யங்களுக்கு உப லஷணம்
அனுபிரவேசித்து -ஸ்ருஷ்டிதபின்பு வச்துத்வ நாம பாகத்வம் அடைய -அருவாகி
அசித் சித் -அருவம் சொலலாமா
ஜீவ அந்தர்ப்ரேவேசமும் உண்டே –
அசித் அழியாதே -ரூபம் மாறுமே -சரீரம் சாம்பல் போலே
இரண்டு அநு பிரவேசம் உண்டே –
பகுச்யாம் -சிருஷ்டி -ஆதமனா அநு பிரவேசம்
நாகம் ஏறி -பிரமாதிகள் சமாஸ்ரயணம் ஆகைக்கு -திருபாற் கடல் கண் வளர்ந்து அருளி
நாராயணன் -நார ஜாலம் அர்த்தம் –
செய்த்தலையிலெ குடில் கட்டி கிடக்குமா -க்ருஷிகன் போலே
நாராயணன் பிராப்தி சொல்கிறது
ஆகம் முற்றும்
திருமேனிக்கு வேண்டும் சாந்து போல்வன அகத்தடக்கி என்னிடமுள்ளவற்றை பண்ணி
இதுவே சிருஷ்டிக்கு பிரயோஜனம்
ஜகத் சிருஷ்டித்து சாந்து வஸ்திரம் ஆபரணம் வேண்டுமே
நெஞ்சை பாட்டை கொண்டான்
துக்கம் தீர்ந்தது அவனுக்கு
திரு உள்ளம் அல்லல் நசிக்கப் பெற்றதே
கிடைக்க வில்லையே
இத்தலையை கரை மரம் சேர்த்து நீ ஆனந்தம் அடைந்தாயே
என்னாவி அல்லல் தீர்ந்தது என்றுமாம்
அதவா
பரத்வம் ஏக பர வாசுதேவன்
வியூகம் இரு மூர்த்தி
மூன்று –
பல மூர்த்தி -விபவங்கள்
பல
சிருஷ்டிக்கு ரஷணம் சம்ஹாரம் கடவர்
இன்னார் சிருஷ்டிக்கு கடவர்
தானே உளன்
இப்படிப்பட்டவன்
அகத்தடக்கி
எனது ஹிருதயத்தில் வந்து அல்லல் தீந்தான்
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்.
வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.
Leave a Reply