திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -4-3-2–ஸ்ரீ M.A V .சுவாமிகள் —

பூசும் சாந்துஎன்நெஞ்சமே; புனையும்கண்ணி எனதுடைய
வாசக கம்செய் மாலையே; வான்பட்டாடை யும்அஃதே;
தேச மான அணிகலனும் என்கை கூப்புச் செய்கையே;
ஈசன், ஞாலம் உண்டுஉமிழ்ந்த எந்தை ஏக மூர்த்திக்கே.

பொ-ரை : ஈசனும் உலகத்தை எல்லாம் உண்டு உமிழ்ந்த என் தந்தையுமான ஏகமூர்த்திக்குப் பூசுகின்ற சந்தனம் எனது நெஞ்சமே ஆகும்; சார்த்துகின்ற மாலையும் என்னுடைய சொற்களாலே தொடுக்கப்பட்ட மாலையே ஆகும்; உயர்ந்த பொன்னாடையும் அந்த வாசகம் செய் மாலையே ஆகும்; ஒளி பொருந்திய அணியப்படுகின்ற ஆபரணங்களும் என் கைகளால் கூப்பித் தொழுகின்ற வணக்கமே ஆகும்.

    வி-கு : வாசகம் – சொற்கள். வாசகம் செய் மாலை – திருவாய்மொழி முதலான பிரபந்தங்கள். ஏகமூர்த்தி – தன்னை ஒத்த இரண்டாவது ஒரு பொருள் இல்லாதபடியான விக்கிரஹத்தையுடையவன். ‘ஏக மூர்த்திக்குச் சாந்து நெஞ்சமே; கண்ணி வாசகம் செய் மாலையே; பட்டாடையும் அஃதே; கலனும் கைகூப்புச் செய்கையே ஆம்,’ என்க.

    ஈடு : இரண்டாம் பாட்டு. 1‘என்னுடைய உறுப்புகளின் காரியங்களான நினைவு முதலானவைகளே எல்லாவற்றாலும் நிறைவுற்று விளங்கும் இறைவனுக்கு இன்பப் பொருள்கள் எல்லாம் ஆயின,’ என்கிறார்.

    பூசும் சாந்து என் நெஞ்சமே – சர்வேசுவரனுடைய திருமேனியின் வேறுபட்ட சிறப்பினையும், அவனுக்குத் தம் பக்கல் உண்டான விருப்பத்தையும் நினைத்துப் பின்னாடி மீளவும் சொல்லுகிறார், ‘பூசுஞ்சாந்து என் நெஞ்சமே’ என்று. புனையும் கண்ணி – 2வழக்கனான மாலை, அன்றிக்கே, சார்த்தப்படும் மாலை. என்னுடைய வாசகம் செய்மாலை – 3இவர் அவனுக்கு என்று சொல்ல வேண்டா; இவர் உண்மையாகில் அவனுக்கேயாய் இருக்கும்; ஆதலின், ‘எனதுடைய’ என்கிறார். 4இவர் நெஞ்சினைக்

காட்டிலும் வாக்குப் பரிமளம் விஞ்சி இருக்கும் போலே காணும். 1சாந்து மணம் கொடுப்பது பூவை அணிந்த பின்பே அன்றோ?

    வான் பட்டாடையும் அஃதே – அந்தச் சொற்கள்தாமே புருஷோத்தமனாம் தன்மைக்கு அறிகுறியான பரிவட்டமும். 2இவருடைய பா, நல்ல நூல் ஆதலின், வான் பட்டாடை ஆயிற்றுக்காணும்; ‘நல்ல நூலாக வேண்டும்’ என்று அடியிலே நோற்று நூற்றவர் அன்றோ? தேசமான அணிகலனும் – தனக்கு ஒளியை உண்டாக்குகிற ஆபரணமும். என் கைகூப்புச் செய்கையே – 3சேரபாண்டியன் தம்பிரானைப்  போன்று, அவனுக்கு ஒளியை உண்டாக்கா நின்றது இவருடைய அஞ்சலி. 4‘இவற்றாலே நிறம் பெற்றானாய் இருக்கிறவன்தான் ஒரு குறைவாளனாய் இருக்கின்றானோ?’ எனின், ஈசன் -சர்வேசுவரன் என்கிறார். ‘ஆயின், ‘இரட்சகன்’ என்னும் பெயரேயாய் உடைமை நோவுபட விட்டிருப்பவன் ஒருவனோ?’ எனின், ஞாலம் உண்டு உமிழ்ந்த -உலகத்திற்கு எல்லா வகையாலும் இரட்சகன் என்கிறார். எந்தை – அந்த இரட்சணத்தாலே என்னை அடிமை கொண்டவன். ஏகமூர்த்திக்கு – 5ஈடும் எடுப்பும் இல்லாததான திருமேனியையுடையவனுக்கு. ஏகமூர்த்திக்குப்

பூசும் சாந்து என் நெஞ்சமே – 1‘‘சர்வகந்த :’ என்கிற திருமேனியை உடையவனுக்குப் பூசும் சாந்து என் நெஞ்சம் ஆவதே! இது சேருமே!’ என்கிறார்.

வாசகம் பட்டாடை ஆயினவாறு யாங்ஙனம்?’ என்ன, அதற்கு விடையைச்
சிலேடையாக அருளிச்செய்கிறார், ‘இவருடைய பா’ என்று தொடங்கி. பா –
செய்யுள்; நூலின் சேர்க்கை. நூல் -சாஸ்திரம்; இழை. ‘அடியிலே நோற்று
நூற்றவர்’ என்றது.

  “கண்ட வாற்றால் தனதே உலகென நின்றான் றன்னை
வண்தமிழ் நூற்க நோற்றேன் அடியார்க்கு இன்ப மாரியே.” 

  என்றதனைத் திருவுள்ளம் பற்றி. (திருவாய். 4. 5 : 10.) நூற்றல் – நூல்
நூற்றல்; பிரபந்தத்தைச் செய்தல்.

சர்வேஸ்வரனின் பாலனாய் பதிகம்
தன்னை ஒழிய சத்தை இன்றி இருக்கிறான்
தானே விரும்பி ஏற்றுக் கொள்ளும் சாந்து போலே தனது நெஞ்சைக் கொண்டான் –
ஈசன் -எந்தை ஏக மூர்த்திக்கு
ஞாலம் உண்டு உமிழ்ந்தான்
பூசும் சாந்தாம் நெஞ்சு
புனையும் கண்ணி -எனது வாசகம் செய்யும் மாலையே
பட்டாடையும் அக்தே
தேசமான அணிகலனும் என் கை கூப்புச் செய்கையே
பூசும் சாந்து -பின்னாடி அருளுகிறார்
அவன் திருமேனி வை லஷ்ண்யம் அறிந்து
புனையும் -கன்னி மாலை
விசேஷித்து விரும்பி சாதிக் கொள்ளும் மாலை –
வழக்கமாக மாலை இன்றி –
எனது உடைய வாசகம்
இவர் உடைமை அவனுக்கு உகந்ததாக அனுபவிப்பான்
வாசகம் -செய் மாலை
நெஞ்சை விட வாசகம் பரிமளம் மிக்கு இருக்க
பூக்கட்டியே -பூ மலர்வது -சாந்து மணம் பெரும்
வான் பட்டாடையும் -அந்த உக்தி
புருஷோத்தம -சரியாக
இவருடைய பா நல்ல நூலாகையாலே பட்டாடை ஆனது
உண்டையும் பாவையும் ஒத்து இருக்க செய்தே –
நல்ல நூல் அடியிலே
ஏற்ற நோற்றேர்க்கு
நூலை நூக்குவது
தண் தமிழ் நோற்க நோற்றேன்
தேஜஸ் கரமான ஆபரணம்
சேர பாண்டியன் தம்பிரான் -போலே -கை கூப்பிச் செய்கை –
திருஆபரனம் சிம்காசனம் இரண்டும் சேர பாண்டியன் சமர்ப்பித்த
மகர திருஆபரணம் தேவ பெருமாள்
clive சமர்ப்பித்தாராம்
வராத ராஜன் –
என்ன கேட்டாலும் கொடுப்பானாம்
வெற்றி கிடைத்தால் காணிக்கை -சமர்ப்பித்து -மகர கண்டி சாதிக்கிறார்
அஞ்சலி –
ஆபரணம் திருமார்பில் சாதிப்பது போலே -நெஞ்சத்தில் கொள்கிறான்
இதனாலே நிறம் பெற்றதாக இருக்கிறான் –
குறைவாளன் இல்லைன்
சர்வேஸ்வரன் அனைவரையும் ரஷிக்கும் ஈசன்

தன்னுடைய உடைமையை நோவு பட்டு இருக்க ஒட்டாமல்
உண்டு உமிழ்ந்து
எந்தை பிராப்தி என்பதால்
இந்த ரஷண த்தால் எழுதிக் கொண்டவன்
ஏக மூர்த்தி அத்வதீயம்
நெஞ்சமே நெஞ்சமோ சேருமோ சர்வ கந்தன்

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply