செவிகளால் ஆரநின் கீர்த்திக் கனியெனும்
கவிகளே காலப்பண் தேன்உறைப் பத்துற்றுப்
புவியின்மேல் பொன்நெடுஞ் சக்கரத்து உன்னையே
அவிவுஇன்றி ஆதரிக் கும்எனது ஆவியே.
பொ-ரை : என் உயிரானது, செவிகள் வயிறு நிறையும்படியாக நின் கீர்த்தியின் உருவமான கனியென்னும் கவிகளை அவ்வக் காலங்கட்குரிய பண்களாகிய தேனைக்கலந்து அனுபவித்துப் பூமியின்மேலே அழகிய நீண்ட சக்கரத்தையுடைய உன்னையே இடைவிடாது ஆதரியாநின்றது.
வி-கு : ‘கனி என்னும் கவிகளே காலம் பண் தேன் உறைப்பத்துற்று’ என்னும் பகுதியை உற்று நோக்கல் தகும். அறிவு இன்றி – இடையீடில்லாமல். ‘எனதாவி ஆதரிக்கும்,’ என மாறுக.
ஈடு : ஆறாம் பாட்டு. 1‘என்னுடைய உயிரானது உன்னுடைய கீர்த்தியைத் தன் செவிகளாலே கேட்க ஆசைப்படாநின்றது,’ என்கிறார்; ‘ஆயின், உயிருக்குச் செவி உண்டோ?’ எனின், கன்னமிட்டுக்கொண்டும் கேட்க வேண்டும்படி அன்றோ பகவானுடைய கீர்த்தி இருப்பது?
செவிகளால் ஆர – செவிகள் வயிறு நிறையும்படியாக. நின் கீர்த்திக் கனியென்னும் கவிகளே – கீர்த்தி உருவமாய்க் கனி போலே இருக்கிற கவிகளை. ‘கவி கனிபோல் இருக்கையன்றிக்கே, இனிமையின் மிகுதியாலே கனி கவியாயிற்று,’ என்கிறார். காலம் பண் தேன் உறைப்பத் துற்று – செருக்கராய் இருக்கும் அரசபுத்திரர்கள் நல்ல பழங்களைத் தேனிலே தோய்த்து உண்ணுமாறு போன்று, உன் கீர்த்தியாகிற கனிகளைக் 2காலங்கட்கு அடைத்த பண்களாகிற தேனிலே, அத்தேன் மிஞ்சும்படி கலந்து அனுபவித்து‘ஆயின், அவ்வனுபவம் பரமபதத்தே போய்ப் பெறுவது ஒன்று அன்றோ?’ என்ன, புவியின்மேல் – ‘எங்கேனும் விடாய்த்தாரை எங்கேனும் விடாய் தீர்க்க ஒண்ணாது; பசித்த இடத்தே சோறு இடவேண்டும்,’ என்கிறார். ‘தேசம் இதுவே ஆனதைப் போன்று 1விஷயமும் இதுவேயாக வேண்டும்,’ என்கிறார் மேல்; பொன் நெடும் சக்கரத்து உன்னையே – விரும்பத்தக்கதாய், இனிமை எல்லை இன்றிக்கேயிருக்கிற திருவாழியை அடையாளமாக உடைய உன்னையே. ‘பரமபதத்தில் சக்கரத்தோடே இருக்குமோ?’ எனின், 2’பிரகிருதி மண்டலத்துக்கு மேலான ஸ்ரீ வைகுண்டத்தில் வசிப்பவர், திருவாழி திருச்சங்கு கதை இவைகளைத் தரித்திருப்பவர்’ என்பது ஸ்ரீ ராமாயணம். அவிவு இன்றி ஆதரிக்கும் – இடையீடு இன்றி ஆதரியாநின்றது. 3‘‘கிடைத்தற்கு அரியது’ என்று பாராமல் கிடைக்கும் விஷயத்திற்போலவே ஆசைப்படாநின்றது,’ என்றபடி. எனது ஆவியே – ‘தன்னடையே வரப்பெற வேண்டுங்காண்’ என்றால், அது கேளாது, ‘அவன் அருள் பெறுமளவில் நில்லாது’ என்னும்படியான ஆவி.
முடியானே யில் கரணங்கள் –
கன்னம் இட்டுக் கொண்டும் கேட்க வேண்டும்படியான விஷயம்
கர்ணம் -காது –
செவிகள் வயிறு நிறையும் படி
கீர்த்தி ரூபமாய் கனி போலே
கனி கவி ஆயிற்று போக்யதா அதிசயம் –
பழமே பாட்டாக வந்தது
கவி என்னும் கனி சொல்லாமல்
காலப் பண்ணில் தோய்த்து உண்ண ஆசைப்படுகிறார்
காலை பூபாள ராகம்
சயனம் காபி
நீலாம்பரி தூக்க வைக்க
தேனில் கலப்பது போலே
ராஜ புத்ரர்கள் பழம் தேனில் தோய்த்து உண்ணுவது போலே –
‘காலங்கட்கு அடைத்த பண்’ என்றது, ஒவ்வொரு காலத்திற்கும் பண்களைப்
பாகுபடுத்தி வரையறை செய்துள்ளார்கள்; அதனைத் திருவுள்ளம் பற்றி
அருளிச்செய்தபடி, பகற்காலத்திற்குரிய பண்கள்: புறநீர்மை, காந்தாரம்,
பியந்தைக் காந்தாரம், கௌசிகம், இந்தளம், தக்கேசி, சாதாரி, நட்டபாடை,
நட்டராகம், பழம்பஞ்சுரம், பஞ்சமம், காந்தார பஞ்சமம் என்னும்
பன்னிரண்டுமாம். இராக்காலத்திற்குரிய பண்கள்: தக்கராகம், பழந்தக்கராகம்,
சீகாமரம், கொல்லி, கொல்லிக்கௌவாணம், வியாழக்குறிஞ்சி,
மேகராகக்குறிஞ்சி, அந்தாளிக்குறிஞ்சி, குறிஞ்சி என்னும் ஒன்பதுமாம்.
இவ்விருவகைக் காலத்திற்கும் பொதுவான பண்கள்: செவ்வழி, செந்துருத்தி,
தாண்டகம் என்னும் மூன்றுமாம். வேறு வகையாகவும் பிரித்துக் கூறுவர்.
புகழ் சொல்லும் கவிகளை பண்ணிலே தோய்த்து -தேனில் தோய்த்த கனி போலே
விஞ்சும் படி கலந்து -அனுபவித்து –
பரம பதத்தில் இல்லை
புவியின் மேல்
பசித்த இடத்தே சோறு இட வேணுமே
எங்கேனும் விடாய்த்தாரை –
முடியின் மேல்
விஷயமும் இதுவே யாக வேணும்
பொன் -சக்கரத்துடன் சேவை
சங்க சகர கத்தர மண்டோதரி சேவை கொடுத்தாயே
விச்செதம் இன்றி
சாபலமாய்
கிடைக்கும் விஷயம் போலே நப்பாசை –
எனது ஆவியே
தன்னாக கிடைக்கும்
அருள் பெரும் அளவும் ஆவி நில்லாது மேலே பாசுரம்
ஆவி இத்தை ஆசைப்படுகிறது –
நம்பிள்ளை திருவடிகளே சரணம்.
வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.
Leave a Reply