துயர மேதரு துன்ப இன்ப
வினைக ளாய்அவை அல்லனாய்
உயர நின்றதுஓர் சோதி யாய்உலகு
ஏழும் உண்டுஉமிழ்ந் தான்தனை
அயர வாங்கும் நமன்த மர்க்குஅரு
நஞ்சி னைஅச்சு தன்தனைத்
தயர தற்கும கன்த னையன்றி
மற்றி லேன்தஞ்ச மாகவே.
பொ-ரை : ‘துன்பத்தையே தருகின்ற பாவங்களும் புண்ணியங்களுமாய், அவை அல்லாதவனுமாய், உயர்ந்து நின்றதாய் ஒப்பற்றதாயுள்ள ஒளி உருவமான திருமேனியையுடையவனாய், ஏழு உலகங்களையும் உண்டு உமிழ்ந்தவனாய், மயங்கும்படியாக உயிரைக் கொள்ளுகின்ற யமபடர்க்குப் போக்குதற்கரிய விஷமாயிருப்பவனாய், தன்னை அடைந்தவர்களை நழுவவிடாதவனாய் உள்ள சக்கரவர்த்தி திருமகனை அல்லாமல் வேறு ஒருவரைத் தஞ்சமாக உடையேன் அல்லேன்,’ என்றவாறு.
வி-கு : ‘துன்ப வினைகளாய்,இன்ப வினைகளாய்’ என்க. ‘துயரமே தரும்’ என்பது, மேற்கூறிய இரண்டற்கும் அடைமொழி. நல்வினையும் பிறத்தற்கு ஏதுவாதல் அறிக, தஞ்சம் – பற்றுக்கோடு. ‘தஞ்சமாக இலேன்’ என மாறுக.
ஈடு : எட்டாம் பாட்டு. 1சமுசாரிகளுக்கும் ருசி பிறக்கைக்காக, ‘நான் சக்கரவர்த்தி திருமகனை அல்லது வேறு ஒருவரை ஆபத்துக்குப் பற்றுக்கோடாகப் பற்றி இரேன்,’ என்று தம் சித்தாந்தத்தை அருளிச்செய்கிறார்.
துயரமே தரு துன்ப இன்ப வினைகளாய் – துயரத்தையே தரக்கூடியதான புண்ணிய பாப ரூபமான கர்மங்களை ஏவுகின்றவனாய். துன்ப வினையோடு வாசி அற இரண்டும் துக்கத்தையே பண்ணித்தரும் என்றாயிற்று இருப்பது இவர்: ‘இப்படி இவர் இருக்கைக்கு அடி என்?’ என்னில், 2பகவானுக்கு அடிமையாய் இருக்கும் தன்மைக்கு விரோதியாய்க்கொண்டு தடையாதல் இரண்டற்கும் ஒத்து இருத்தலால். 3‘புண்ணியத்தையும் பாவத்தையும் நீக்கி விட்டு முற்றுவமையை அடைகிறான்,’ என்பது உபநிடத வாக்கியம். அவை அல்லனாய் – கர்மங்கட்குக் கட்டுப்படாதவனாய்; 4‘வேறாக ஈசுவரன் கர்ம பலன்களைப் புசியாமல் மிகவும் பிரகாசிக்கிறான்,’ என்பது வேதவாக்கியம். ‘மிகவும் பிரகாசிக்கிறான்’ என்றது, தான் கர்மத்துக்குக் கட்டுப்படாதவன் அன்றிக்கே, ஏவும் தன்மையால் வந்த புகரையுடையனாயிருக்கிறபடியைத் தெரிவித்தபடி. உயர நின்றது ஓர் சோதியாய் – 1‘ரஜோ மயமான இந்தப் பிரபஞ்சத்திற்கு மேலே உள்ள பரமபதத்தில் நித்திய முத்தர்களோடு எழுந்தருளியிருக்கின்ற தேவரீரை’ என்றும், ‘பிரகிருதியைக்காட்டிலும் மேலே இருக்கின்றார் பரமாத்துமா,’ என்றும் சொல்லுகிறபடியே, இங்குள்ளாராற் சென்று கிட்ட ஒண்ணாததாய் இருக்கிற பிரகிருதிக்கு மேலே இருக்கிற பரமபதத்திலே எல்லை இல்லாத ஒளி உருவமான திவ்விய விக்கிரகத்தை உடையனாய் இருக்கிற இருப்பைச் சொல்லுகிறது. அன்றியே, 2‘வியஷ்டியாயும் சமஷ்டியாயும் இருக்கிற எல்லா உலகங்கட்கும் மேலே இருக்கிற பரமபதம்’ என்கிறபடியே, ‘உயர்த்தியையுடைத்தாய், நித்தியமாய், இரண்டாவது இல்லாததாய், ஒளிமயமான திவ்விய தேசத்தையுடையவன்’ என்னலுமாம்.
உலகு ஏழும் உண்டு உமிழ்ந்தான்தன்னை – இப்படி எல்லாம் நிறைந்தவனாய் இருந்தானேயாகிலும், தன் விபூதியில் ஒரு கூறான இவ்வுலகத்தைப் பிரளயங்கொண்டது என்றால், இங்கே வந்து வயிற்றிலே எடுத்து வைத்து நோக்கி, ‘இத்தனை போதும் காணப்பெறாமையாலே இவை என்படுகின்றனவோ!’ என்று உமிழ்ந்து பார்க்குமவனை; 3வழிபறிக்கும் நிலத்திற் போவார் சீரிய தனங்களை விழுங்கி பின்னை அமர்ந்த நிலத்திலே புக்கால் புறப்பட விட்டுப் பார்க்குமாறு போலே. அயர வாங்கும் நமன் தமர்க்கு அரு நஞ்சினை – தன் திருவடிகளைப் பற்றினாரை அறிவு கலங்கும்படிக்கு ஈடாக உயிரைப் பிரிக்கக் கூடியவர்களாயிருந்துள்ள யமபடர்க்குக் 4காற்றவொண்ணாத நஞ்சாக உள்ளவனை; 5‘உயிர்கொண்டுஉடல் ஒழிய ஓடும்போது ஓடி அயர வென்ற தீர்க்குமவனே அன்றோ? ‘எங்ஙனே கண்டோம்?’ என்னில், தயரதற்கு மகன் தன்னை – தான் அரசு செலுத்தாநிற்கச்செய்தே ஒரு பிராஹ்மணனுடைய குமாரனுக்கு அகால மரணம் உண்டாக, 1அவனை வாளாலே மீட்டும்; இராவணனைக் கொன்ற பின் 2படைக்குறி காணாநிற்கிற அளவிலே முதலிகளிலே சிலரைக் காணாதொழிய, 3இந்திரனை அழைத்துப் போகவிட்டு வரங்கேட்கிற வியாஜத்தாலே அவனை இடுவித்து அவர்களையும் கூட்டிக்கொண்டு போன சக்கரவர்த்தி திருமகனை; 4ஒரு முனிவனுடைய புத்திரனுக்கு அகால மரணம் வர, அப்பாலே மீட்டுக்கொடுத்தும் செய்தவை. ‘தயரதன் மகன்’ என்னாதே, 5தயரதற்கு மகன்தன்னை’ என்கிறது, ஒருகால் வெற்றிலைச் செருக்கிலே ‘அரசு தந்தேன்’ என்னா, மீண்டு பெண்ணுக்கு வசப்பட்டவனாய், ‘நான் தந்திலேன்; நீ காடு ஏறப் போ,’ என்னா, இப்படிச் சொல்லலாம்படி அவனுக்கு இஷ்ட வினியோகத்திற்குத் தக்க புத்திரனாய் இருந்தான் ஆதலின்.அன்றி மற்று இலேன் தஞ்சமாகவே – இவ்விடத்தைப் பட்டர் அருளிச்செய்யாநிற்க, நஞ்சீயர், ‘இவர் புக்க இடம் எங்கும் 1இப்படியே சொல்லுவர்; இவர்க்கு இது பணியே அன்றோ?’ என்ன, ‘இவர் மற்றோரிடத்தில் தலை நீட்டுவது 2பாவ நத்வத்தைப் பற்ற; இவர் 3தஞ்சமாக நினைத்திருப்பது சக்கரவர்த்தி திருமகனையே,’ என்று அருளிச்செய்தார். 4‘‘ஸ்ரீராமா, நீதான் எல்லா உலகங்களிலுள்ள எல்லா உயிர்கட்கும் பாவத்தைப் போக்குகின்றவனாய் இருக்கிறாய்,’ என்கிறது இல்லையோ இவரையும்?’ என்ன, 5‘அவனும் இவரோடு ஒத்தான் ஒருவன்; இவர் ‘இனிய பொருள் வேறில்லை’ என்றிருக்குமாறு போன்று, அவன் ‘பாவநத்துக்கும் இவர் ஒழிய வேறில்லை’ என்றிருப்பான் ஒருவனாயிற்று.’ 6பட்டர் இராமாவதாரத்தில் பக்ஷபாதத்தாலே அருளிச்செய்யுமது கேட்கைக்காக, சிறியாத்தான், ‘பெருமாளுக்கு எல்லா ஏற்றங்களும் அருளிச்செய்ததேயாகிலும், பாண்டவர்களுக்காகக் கழுத்திலே ஓலை கட்டித் தூது போன கிருஷ்ணனுடைய நீர்மை இல்லையே சக்கரவர்த்தி திருமகனுக்கு? என்ன, ‘அதுவோ! பெருமாள் தூது போகாமை அன்றுகாண்; இக்ஷ்வாகு குலத்தாரைத் தூது போக விடுவார் இல்லாமைகாண்,’ என்று அருளிச் செய்தார்.
‘அவ்வவதாரத்தில் அக்குறை தீருகைக்காக அன்றோ கிருஷ்ணனாக அவதரித்துத் தூது போயிற்று? 7‘முன்னோர் தூது வான ரத்தின் வாயில் மொழிந்து அரக்கன், மன்னூர்தன்னை வாளியினால் மாள முனிந்து அவனே, பின்னோர் தூது ஆதிமன்னர்க்காகிப் பெருநிலத்தார், இன்னார் தூதன் என்ன நின்றான் எவ்வுட் கிடந்தானே,’ என்பது மங்கை மன்னன் மறைமொழி; பாரதந்திரிய ரசம் அனுபவிக்கைக்காகப் போந்த பின் அதில் ஒன்று குறைந்தது என்று ஏன் இருக்க வேண்டும்?’ 1‘எம்பெருமானார் திருவாராதனம் பண்ணிப் போருவது வெண்ணெய்க்காடும் பிள்ளையாய் இருக்கும். இங்ஙனமிருக்கவும், ஒரு நாள் ஒரு ஸ்ரீ வைஷ்ணவர் சக்கரவர்த்தி திருமகனை எழுந்தருளப் பண்ணிக்கொண்டு வந்து கொடுத்தாராய் அவரைப் பார்த்து, இந்த ‘என் ஒருவனையே சரணமாகப் பற்று’ என்று தேவையிடாதார் எழுந்தருளினார்,’ என்றாராம்.
2ஆபிமுக்யத்தாலே பெறலாம் என்றால், அவ்வாபிமுக்கியந்தானும் பரமபத்தியைப் போன்று அரிதாய் இருக்கும் அன்றோ இம்மக்களைப் பார்த்தால்? ‘இத்தலையில் ஆபிமுக்கியத்திற்கு மேற்பட வேண்டா,’ என்று சொல்லுகிறவை எல்லாம், பற்றப்படுகின்ற சர்வேசுவரனுடைய நீர்மையைப் பற்றச் சொல்லுகிறது; இவனுக்கு வேண்டுவன சொல்லப்புக்கால் ‘மஹாவிஸ்வாச பூர்வகம் – மஹாவிசுவாசம் முன்னாக’ என்ன வேண்டும்படியாய் இருக்கும். 3‘ஒரு சிறாயை நம்பி ஆறுமாதங்கட்கு வேண்டும் சோறும் தண்ணீரும் ஏற்றிக்கொண்டு கடலிலே இழியாநின்றான்; அதைப் போன்ற நம்பிக்கையாகிலும் வேண்டாவோ பகவத் விஷயத்தைப் பற்றுகிறவர்களுக்கு?’ என்று அருளிச்செய்தார்
தனது சித்தாந்தம் -சம்சாரிகளுக்கு ருசி பிறக்க –
சக்கரவர்த்தி திருமகனை பற்ற உபதேசிக்கிறார்
மற்று இலேன் தஞ்சமாகவே
புண்ய பாப நிர்வாஹகன்
அச்சுதன் நழுவ விடாதவன்
தசரதன் மகனை அன்றி –
துக்கமே தரக்கடவ கர்மங்களுக்கு நிர்வாஹகன் -நியாமகன் –
புண்யமும் பாபம் போலே த்யாஜ்யம் -துயரமே தரு -துன்ப இன்ப வினைகள் -வாசியற
இரண்டும் துக்கமே பண்ணித் தரும் -மீண்டும் லோகத்தில் -பகவத் சேஷத்வ விரோதி
என்பதால் -புண்ய பாபே விதூயா -வேதம்
அவை அல்லனாய் அகர்ம வச்யனாய் –
ஒரு மரத்தில் இரண்டு பறவை -முன்பே பார்த்தோம்
தான் வச்யன் அன்றிக்கே -பெருமை தோற்றும்படி –
உண்ணாமல் புஷ்டியாய் இருப்பவன் –
உயர நின்ற தோர் ஜோதியாய் –
ரஜஸ் தமஸ் அப்பால் தமச்சஸ் பரஸ்தாத் -கிட்ட ஒண்ணாத வர்த்தமான தேசம்
நிரவதிக தேஜோ ரூபமான திவ்ய மங்கள விக்ரகம் கொண்டவன்
நித்தியமாய் அத்வதீயமாய் –
ஜோதி எழுந்து அருளி இருக்கிற ஸ்தானமே ஜோதி
உலகு இத்யாதி-சம்சாரத்தை பிரளயம் கொண்டால் வயிற்றில் வைத்து நோக்கி
மேன்மை பாராட்டி இருக்காமல் -விபூதி ஏக தேசமாய் இருந்தாலும் –
உமிழ்ந்து பார்க்கும்
வழி பறிக்கும் நிலத்தில் -மாணிக்கம் வாயில் அடக்கி
சீரிய தனங்களை விழுங்கி அமர்ந்த இடத்தில் வெளி இட்டு நோக்கி
அயரா வாங்கு ஹிம்சை செய்யும் -யமபடர்கள் –
அறிவு கலங்கும்படி –
யமபடருக்கு ஆற்ற ஒண்ணாத –
காற்றில் பட்டாலே விஷம் –
பரிகரிக்க ஒண்ணாத நஞ்சாய்
உயிர் கொண்டு–அயர்வு என்றவை தீர்ப்பான் பெயர் பாடி -சிந்தித்து வாழ்வாரே
நான்முகன் திருவந்தாதி பாசுரம் –
தயரதர்க்கு மகன் தன்னை –
தான் ராஜ்யம்
செம்புகன் தன்னை சென்று கொண்டு –
அகால மிர்த்யு உண்டாக
தபஸ் பண்ண கூடாத குளத்தில் பிறந்து தபஸ் பண்ணி -வாளாலே வீழ்த்தும்
படை– ராவணன் வதம் ஆனா பின்பு -முதலிகள் காணாமல் போக –
இந்திரனை அழைத்து -வரம் கேட்கும் வ்யாஜ்யமாக உயிர் கொடுத்து
ரிஷி புத்திரன் -சாந்திபினி -புத்ரன்மீட்டு கொடுத்து –
கிருஷ்ண வ்ருத்தாந்தம் –
மீட்டுக் கொடுத்த வ்ருத்தாந்தம் -அரு நஞ்சு –
தயரதன் மகன் -தயார்தற்கு மகன் –
சாதர்த்தே சதுர்த்தி -சேஷத்வ சதுர்த்தி -வட மொழி இலக்கணம்
அவனுக்கே அற்று தீர்ந்து -சேஷப்பட்டு இருந்தான் –
ராஜ்யத்தைதந்தேன் வெற்றிலை செருக்கிலே சொல்வான் –
ஸ்திரீ பர தந்த்ரனாய் நான் தந்திளேன் காடேறப் போ என்றாலும்
இஷ்ட விநியோக அர்க்யனாய்
பட்டர் -நஞ்சீயர்
இவர் புக்க இடம் எங்கும் இப்படியே அருளிச் செய்கிறார்
ஞானப் பிரானை அல்லல் இல்லை நான் கண்ட நல்லதுவே
கண்ணன் அல்லால் இல்லை கண்டீர் சரண்
பட்டர் -மற்றோர் இடத்தில் தலை நீட்டுவது பாவனத்வம் பற்றி
ஹிருதயத்தில் தஞ்சம் சக்கரவர்த்தி திருமகன்
போகய வஸ்து இவரை –
இந்த்ரன் கூட -பாவனதுவதுக்கு இவரை ஒழிய வேறு இல்லை என்பான் பிரமாணம்
ராமாவதார பஷ பாதி பட்டர் –
வாயை கிளறுவர்களாம் -சிறியாத்தான் தூது போகவில்லையே -வார்த்தை சொல்ல
பாண்டவர்களுக்கு கழுத்திலே ஓலை கட்டி -கண்ணன் தானே –
பெருமாள் தூது போகாமை அன்று
இஷ்வாகு வம்சரை தூது போக விடுவார் இல்லை
குறை போக கண்ணன் அவதாரம் —அவனே பின்னோர் தூது ஆதி மன்னர்க்காகி –
பாரதந்த்ர்ய ரசம் அனுபவிக்க வந்த இடம் இது குறை தீர்க்க மீண்டும் அவதரித்தான்
எம்பெருமானார் -திருவாராதானம் -வெண்ணெய்க்கு ஆடும் பிள்ளை –
காளிங்க நர்த்தனம் தப்பாக சொல்வார்கள் –
திருமலை நம்பி திருவாராதனம் வெண்ணெய் க்கு ஆடும் பிள்ளை
அடிசில் தருவார் யார்
அவர் கொடுத்து அருளி இருக்கலாம்
ஸ்ரீ வைஷ்ணவர் சக்கரவர்த்தி திருமகனை கொடுக்க
மாம் ஏகம் சரணம் வ்ரஜ-தேவை இடாதவரை –
நண்பன் பாவனை ஒன்றே போதுமே
மித்ர பாவேனே -எளியவன் -அல்லது மற்று இலேன் தஞ்சமாகவே
ஆபிமுக்யத்தாலே பெறலாம்
அது தான் பரம பக்தி போலே அரிதாய் இருக்குமே
மகா விசுவாசம் கிடைப்பது கஷ்டம்
செதனனை பார்த்தால் -சரண்யனின் நீர்மை –
மகா விசுவாச பூர்வகம் –
சிராய் விஸ்வசித்து -கப்பல் -ஆறு மாசம் ஆகாரம் சேர்த்து வைத்து போகிறவன் –
சர்வேஸ்வரன் ரஷிப்பான் -மகா விஸவாசம் வேண்டுமே
நஞ்சீயர் திருவடிகளே சரணம்.
நம்பிள்ளை திருவடிகளே சரணம்.
வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.
Leave a Reply