எழுமைக் கும்எனது ஆவிக்கு இன்அமு
தத்தி னைஎனது ஆருயிர்
கெழுமி யகதிர்ச் சோதி யைமணி
வண்ண னைக்குடக் கூத்தனை
விழுமி யஅம ரர்மு னிவர்வி
ழுங்கும் கன்னற் கனியினைத்
தொழுமின் தூயம னத்த ராய்;இறை
யும்நில் லாதுய ரங்களே.
பொ-ரை : எனது உயிர்க்கு எக்காலத்திலும் இனிய அமுதம் போன்றவனை, எனது உயிரோடே வந்து கலந்து அதனாலே பேரொளியுருவனானவனை, நீலமணி போன்ற நிறத்தையுடையவனை, குடக்கூத்து ஆடியவனை, சிறந்த நித்தியசூரிகளாலும் முனிவர்களாலும் நுகரப்படுகின்ற கன்னல் கனியினைப் பரிசுத்தமான மனத்தோடு வணங்குங்கள்; துன்பங்கள் சிறிதும் நில்லா.
வி-கு : கன்னல் – ஒரு மரவிசேடம்; கரும்புமாம். ‘தூய மனத்தராய்த் தொழுமின்; துயரங்கள் இறையும் நில்லா,’ என மாறுக.
ஈடு : ஏழாம் பாட்டு. 1‘இப்படிச் சுலபனானவன் பக்கல் அரியன் என்னும் ஐயத்தை நீக்கி அவனைப் பற்றுங்கோள், உங்களுடைய எல்லாத் துக்கங்களும் போம்படி,’ என்கிறார்.
எழுமைக்கும் எனது ஆவிக்கு இன் அமுதத்தினை – காலம் என்னும் பொருள் உள்ள வரையிலும் தன் 2சுவடு அறியாமல் இதர விஷயங்களில் ஈடுபாடு உள்ளதான என் நெஞ்சுக்கு மிக இனிய பொருள் ஆனவனை. 3பெரியனவற்றை ஏழாகச் சொல்லுதல் மரபு; ‘காலமெல்லாம்’ என்றபடி. எனது உயிர் கெழுமிய கதிர்ச்சோதியை – அநாதியாகப் பிறந்து இறந்து போந்த என் ஆத்துமாவோடே கலந்து அத்தாலே பேரொளியன் ஆனவனை. 4தாம் கிட்டுகை இறைவனுக்கு நிறக்கேடு என்று இருந்தார் இவர்; அது மற்றைப்படியாய்த் தம்மைச் செறியச் செறியப் பேரொளியனாய் இருந்தானாதலின், ‘கெழுமிய கதிர்ச்சோதியை’ என்கிறார். மணி வண்ணனைக் குடக்கூத்தனை – வடிவழகையும் மனத்தை அழிக்கும்படியான செயல்களையும் உடையவனை. வண்ணம் – நிறம். இனி, ‘நீலமணிபோலே முடிந்து ஆளலாம்படி இருக்கிறவன்,’ எனலுமாம். 5இத்தலையில் இசைவு பாராமலே அகப்படுத்திக்கொள்ளுகைக்கு ஏதுக்கள் இருக்கிறபடி.
விழுமிய அமரர் முனிவர் விழுங்கும் கன்னல் கனியினை – உண்டாக்கப்பட்ட தேவர்கள் அன்றிக்கே சீரியரான வைகுந்தத்து அமரர்க்கும் முனிவர்க்கும் கன்னல் போலவும் கனி போலவும்
தனக்குமேல் ஒரு இனிய பொருள் இல்லாதபடி இனியன் ஆனவனை. 1‘சர்வகந்த: சர்வரச:’ என்று சொல்லப்படுமவன் அன்றோ? இனி, 2கன்னல் கனி என்பதற்கு ‘மாங்கனி’ என்னுமாறு போன்று, ‘கன்னல் பழுத்த பழம் காணும் இது,’ எனப் பொருள் கூறலுமாம். தொழுமின் – இதுவன்றோ நான் உங்களுக்கு இடுகிற வேப்பங்குடி நீர்? பால்குடிக்கக் கால் பிடிக்கிறேன் அன்றோ? தூய மனத்தராய் – 3‘கிட்ட அரியனோ, எளியனோ? அறிய அரியனோ, எளியனோ? இவனைப் பற்றுவோமோ, அன்றி, பிரயோஜனத்தைக் கொண்டு அகலுவோமோ?’ என்று இங்ஙனம் சந்தேகத்தால் பீடிக்கப்பட்டவராய்ப் போகாமல், இவன்தன்னையே பிரயோஜனமாகப் பற்றுங்கோள். துயரங்கள் இறையும் நில்லா – இப்படிச் சந்தேகம் கொள்ளுகைக்கு அடியான மஹாபாபங்கள் வாசனையோடே பறிந்து போம். இனி, ‘பிறப்பு இறப்புகளால் உண்டான துக்கங்கள் அடியோடே போம்,’ என்றுமாம்.
எழுமைக்கும் -பரம போக்கியம்
தனது சுவடு அறியாதே
மயர்வற மதிநலம் அருளப்பெற்ற பின்பு -தானே அறிந்தார்
பெரியவற்றை ஏழு ஏழு சொல்வது போலே -காலம் எல்லாம் என்றபடி –
ஆத்மாவுடன் கலந்து -கெழுமிய
அத்தாலே உஜ்ஜ்வலனாய் –
விட்டுவைக்க தேஜஸ் குறைய இருக்க –
நைச்ய அனுசந்தானம் பண்ணி –
தேஜஸ் -தான் கிட்டுகை அத்தலைக்கு நிறம் கேடு என்று இருக்க
அணுக அணுக பிரகாசித்து -மணி வண்ணன்
இசைவு பாராமல் வசீகரிக்க மணி வண்ணன்
சௌலப்யம் முடிந்து ஆளலாம் படி
விழுமிய அமரர் -விழுமிய முனிவர் -உயர்ந்த -நித்ய சூரிகள் –
ஆற்றப் பட்ட தேவர்கள் போலே இன்றிகே சீரியரே -நித்ய சூரிகள்
வைகுந்தத்து அமரரும் முனிவரும் -இரண்டு வகை அங்கும்
கைங்கர்ய நிஷ்டர்
குண அனுபவ நிஷ்டர்
விரும்பும் கன்னல் கனி –
சர்வ கந்த சர்வ ரச-
தொழுமின்
மாங்கனி போலே கன்னல் பழுத்த பழம் காணும் இது
கன்னலாயும் கனியாகவும் இரண்டு அர்த்தம்
வேப்பம் சாரை குடிக்க சொல்கிறேனோ
குடகூத்தன் மணி வண்ணன் சேர்த்து வியாக்யானம்
வடிவழகையும் மனோஹாரி செஷ்டிதங்கள்
தூய மனத்தர் -சங்கை இன்றி -இவன் தன்னையே பிரயோஜனமாய்
இதர விஷய வைராக்யமாய்
தூ மலர் தூவி தொழுது
தூயோமாய் வந்தோம் –
ஆஸ்ரியித்தால் சாம்சாரிக்க துக்கம் போகும்
இங்கே இருப்பதே துக்கம்
நஞ்சீயர் திருவடிகளே சரணம்.
நம்பிள்ளை திருவடிகளே சரணம்.
வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.
Leave a Reply