தோற்றக் கேடுஅவை இல்ல வன்உடை
யான்அ வன்ஒரு மூர்த்தியாய்ச்
சீற்றத் தோடுஅருள் பெற்ற வன்அடிக்
கீழ்ப்பு கநின்ற செங்கண்மால்
நாற்றம் தோற்றம் சுவைஒ லிஉறல்
ஆகி நின்றஎம் வானவர்
ஏற்றை யேஅன்றி மற்றொ ருவரை
யான்இ லேன்எழு மைக்குமே.
பொ-ரை : தோன்றுதலும் அழிதலும் என்பவை இல்லாதவன், தோற்றக் கேடுகளையுடைய பொருள்களையெல்லாம் தனக்கு உடைமையாகவுடையவன், கர்மம் அடியாக வரும் பிறவி இல்லாதவன், ஒப்பற்ற நாசிங்க உருவமாகிச் சீற்றத்தோடு இருக்குங் காலத்தில் திருவருளைப் பெற்றவனான பிரஹ்லாதனானவன் திருவடிகளிலே அணையும்படியாக நின்ற சிவந்த கண்களையுடைய மால், நாற்றம் உருவம் சுவை ஒலி ஊறு இவை ஆகின்ற எம் வானவர் ஏறு ஆகிய இறைவனையே அன்றிக் காலம் என்னும் ஒரு பொருள் உள்ள வரையிலும் வேறொரு தெய்வத்தை யான் உடையேன் அல்லேன்.
வி-கு : தோற்றம் – தோன்றுதல்; பிறவி. மூன்றாமடியிலுள்ள ‘தோற்றம்’ என்பதற்குத் ‘தோன்றும் உருவம்’ என்பது பொருள். உறல் – உறுதல்; பரிசம். ஏறு – ஏறு போன்றவன்; ஏறு – இடபம். ‘எழுமைக்கும்’ என்பது, ஈண்டு ‘எப்பொழுதும்’ என்னும் பொருளைக் குறித்தது.
ஈடு : ஆறாம் பாட்டு. 1‘இவர்களைப் போலே கேட்க இராமல் உபதேசம் வேண்டாமலேயே நித்தியசூரிகளைப் போலே, தனக்குமேல் ஒரு இனிய பொருள் இல்லாதவனான நரசிம்ஹத்தை ஒழிய வேறு ஒருவரை உத்தேசியமாக உடையேன் அல்லேன், காலன் என்னும் ஒரு பொருள் உள்ள வரையிலும்,’ என்கிறார்.
தேரற்றம் கேடு அவை இல்லவன் – தோன்றுதல் அழிதல் அவை இல்லாதவன். மற்றை விகாரங்களையும் உபலக்ஷணத்தாற்கொள்க. உடையான் – தோற்றக்கேடுகள் உள்ள ‘பொருள்களை எல்லாம் தனக்கு அடிமையாக உடையவன். 2‘நிருபாதிக சேஷி’ என்றபடி. அவன் ஒரு மூர்த்தியாய் – கர்மம் அடியான பிறவி இல்லாதவன் அடியவன்பொருட்டு ஒரு விக்கிரஹத்தையுடையனாய். ஒப்பான பொருள் இல்லாததாய் மிகச்சிறந்த அழகினையுடையதாய் உள்ள நரசிம்ஹமாதலின் ‘ஒரு மூர்த்தியாய்’ என்கிறது. 3‘அழகியான் தானே அரியுருவன் தானே’ என்றார் திருமழிசைப்பிரான். சீற்றத்தோடுஅருள் பெற்றவன் அடிக்கீழ்ப் புக நின்ற – 1ஒரு விக்கிரஹத்தையுடையனான அதற்கு மேலேயும் ஒன்றே அன்றோ, சீற்றத்தையும் அருளையும் ஒரே காலத்தில் உடையனானதுவும்? இரணியன் பக்கல் சீற்றமும் செல்லாநிற்கச்செய்தே, திருவருளுக்கும் பாத்திரனான ஸ்ரீ பிரஹ்லாதாழ்வான் திருவடிகளின் கீழே வந்து புகுரலாம் படி நின்ற. இரணியன் துவேஷத்திற்கு விஷயம் ஆனாற்போலே இவன் அருளுக்கு விஷயமானான் ஆதலின், ‘சீற்றத்தோடு அருள் பெற்றவன்’ என்கிறது. இனி, ‘சீற்றத்தோடு’ என்பதனை ‘ஒரு மூர்த்தி’ என்பதற்கு 2அடையாக்கலுமாம். ‘இரணியன் பக்கல் சீற்றமும் செல்லாநிற்க, ஸ்ரீ பிரஹ்லாதாழ்வானுக்குக் கிட்டலாய் இருந்தபடி எங்ஙனே?’ என்று எம்பெருமானாரைச் சிலர் கேட்க, ‘சிம்ஹம் யானைமேலே சீறினாலும் குட்டிக்கு முலை உண்ணலாம்படி இருக்கும் அன்றோ?’ என்று அருளிச்செய்தார். ‘அடியாரிடத்துள்ள அன்பினாலே அவர்கள் விரோதி மேலே சீறின சீற்றமானால், பின்னை அவர்களுக்கு அணைய ஒண்ணாதபடி இருக்குமோ?’ என்று அருளிச்செய்தார் என்றபடி.
செம் கண் மால் – இரண்டினுடையவும் காரியம். என்றது, ‘இரணியன் பக்கல் சீற்றத்தாலும் சிவந்திருக்கும்; ஸ்ரீ பிரஹ்லாதாழ்வான் பக்கல் வாத்சல்யத்தாலும் சிவந்திருக்கும்’ என்றபடி. மால் – 3‘மஹாவிஷ்ணும்’ என்கிறபடியே, இரணியனுக்கும் கிட்டவொண்ணாதபடி பெரியனாயிருக்கும் இருப்பைச் சொல்லுதல்; ஸ்ரீ பிரஹ்லாதாழ்வானுக்குக் கிட்டலாம்படி வியாமோஹத்தை உடையவனாயிருக்கும் இருப்பைச் சொல்லுதல். நாற்றம் தோற்றம் சுவை ஒலி உறல் ஆகி நின்ற – 4வாசனை உருவம்சுவை ஒலி பரிசம் ஆகியவைகள் எல்லாம் எனக்குத் தானேயாய் நின்ற. எம் வானவர் ஏற்றை – நித்தியசூரிகளுக்கு எல்லா விதமான இனிய பொருள்களும் தானேயாய் நிற்குமாறு போன்று, எனக்கும் ஆகி நின்றான். அன்றி மற்று ஒருவரை யான் இலேன்-வேறு ஒருவரை உத்தேஸ்யமாக உடையேன் அல்லேன். 1’இது எத்தனை குளிக்கு நிற்கும்?’ என்னில், எழுமைக்குமே – 2காலம் என்னும் ஒரு பொருள் உள்ள வரையிலும். அவன் நித்தியசூரிகள் பக்கலிலே இருக்கக்கடவ இருப்பை என் பக்கலில் இருக்க, நான் வேறொன்றை இனிய பொருளாக நினைத்திருப்பேனோ? அவர்கள் அவனை ஒழிய வேறொன்றை இனிய பொருளாக நினைக்கில் அன்றோ நான் வேறொன்றை இனிய பொருளாக நினைப்பது?
அவதாரத்திலும் –
நிரசிம்ஹனை சொல்லி
சம்சாரிகளை போலே அன்றி நித்யர் போலே –
கால தத்வம் உள்ள அளவும் –
தோற்ற கேடு அவை இல்லாதவன் -வ்ருத்தி விநாசம் இன்றி -ஷட்பாவ விகாரம் இன்றி –
வஸ்துகளை சொத்தாக செஷமாக உடையவன் நிருபாதிக சேஷி
மூர்த்தியாய் -ஆஸ்ரித அர்த்தமாக
அடியவர்களுக்கு வேண்டும் என்று இச்சையால் அவதாரம் கொள்ளுகிறான்
ஒரு -அத்வதீயன்
அழகியான் தானே அரி உருவம் தானே
அழகிய சிங்கர் திருவல்லிக்கேணியில் சேவை
சீற்றமும் -ஹிரண்யன் மேல்
அருள் பெற்றவன் -பிரகலாதன்
இரண்டும் –
த்வேஷத்தால் ஹிரண்யன்
பிரகலாதன் அருளுக்கு விஷயம் ஆகும்படி அடிக் கீழ் புக நின்ற செங்கண் மால் –
பூம் கோதையாள் கூட வெருவ –
கோபம் இருந்தாலும் -அருளி –
எம்பெருமானார் -சிம்ஹம் யானை மேல் சீறி -குட்டிக்கு பால் கொடுப்பது போலே
யானை சிம்ஹத்தின் மேலே சீறினாலும்
கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே -பாசுரம் –
குட்டிகளுக்கு பால் கொடுக்க –
சீற்றமே இவனுக்காக தான்
செங்கண் -சீற்றம் வாத்சல்யம் இரண்டாலும்
மால் பெரியவன் கிட்ட ஒண்ணாத
மால் மையல் -வியாமோகம் உடையவன்
நாற்றம் கந்தம் பஞ்ச பூத குணங்கள் சொல்லி
ஆகி -தானே யாகி நின்ற
எம் வானவர் ஏற்றை
சர்வ வித போக்யமும் இவரே
எத்தனை குளிக்கு நிற்கும்
எழுமைக்கும்
நித்யர் பக்கல் இருப்பை காட்டிய பின்பு வேறு ஒன்றை நினைப்பேனோ
இங்கேயே ஞானம் கொடுத்து தன்னையும் காட்டி –
நஞ்சீயர் திருவடிகளே சரணம்.
நம்பிள்ளை திருவடிகளே சரணம்.
வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.
Leave a Reply