திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -3-6-1–ஸ்ரீ M.A V .சுவாமிகள் —

ஆறாந்திருவாய்மொழி – ‘செய்ய தாமரை’

முன்னுரை

    ஈடு : 1சர்வேசுவரன் திருவடிகளில் கைங்கரிய ருசியுடையார்க்கு அதனைக் கொடுக்கக் கடவனுமாய், அவ்வடிமைதான் அவன் தனக்கு இனியதாயிருக்கக்கடவதுமாய், அவ்வழியாலே இம்மக்களுக்கு உத்தேஸ்யமாகக் கடவதுமாயிருக்க, அதனை இழக்கையாலே நிந்திக்க வேண்டும்படி இருந்தமையின், இவ்வடிமையிலே சேர்ந்தவர்களைக் கூட்டிக்கொண்டு, அது இல்லாதாரை வெறுத்தவராய் நின்றார் மேல் திருவாய்மொழியில்; அவ்வாறு வெறுத்தல், தாமே விழுவாரைத் தடிகொண்டு அடித்தலைப் போன்றது என்று நினைந்து, ‘இவர்கள் பண்டே அறிவு கேட்டாலே வழி தப்பிப் போய்க் கேட்டினை அடையாநின்றார்கள்; நாம் இவர்களைக் கைவிட ஒண்ணாது; நலத்தைச் சொல்லுவோம்,’ என்று பார்த்து, 2பிராட்டி நலம் அருளிச் செய்தாற்போலே நலத்தை அருளிச்செய்கிறார் இத்திருவாய்மொழியில்.இராவணன் பிராட்டிபக்கல் 1‘பெற்றதாய்’ என்ற நினைவு இன்றிக்கே திருமுன்பே நின்று சிலவற்றைப் 2பிதற்றப் புக்கவாறே 3‘ஸ்ரீராமபிரான் யானையைப் போல எண்ணப்படுகிறார்; நீ மிகச் சிறிய முயலைப்போல எண்ணப்படுகிறாய்,’ என்று வெறுத்து வைத்து, பின்னையும் ‘ஐயோ! இவன் நினைவு இருந்தபடி என்? 4இவனுக்கு ஒரு நல்வார்த்தை சொல்லுவார் இன்றிக்கே ஒழிவதே!’ என்று இரக்கங்கொண்டு 5‘நீ ஸ்ரீராமபிரானோடு தோழமை கொள்,’என்று அவன்தனக்கே நலத்தை அருளிச்செய்தாற்போன்று, இவரும் மேல் திருவாய்மொழியில் அவர்களை நிந்தித்து வைத்து, இரங்கி இத்திருவாய்மொழியில் நலத்தை அருளிச்செய்கிறார்.

    ‘இவர்கள் தாம் வழி தப்பிப் போய்க் கேட்டினை அடைதற்குரிய காரணம் யாதோ, சம்பந்தம் ஒத்திருக்க?’ என்று பார்த்தார்; பகவானுடைய பரத்துவ ஞானம் இல்லாமையும் அவனுடைய சௌலப்ய ஞானம் இல்லாமையுமாயிருந்தது. அதாவது, ‘ஈசுவரனாகிறான் பெரியான் ஒருவனன்றோ? அவன், 1விசைக்கெர்ம்பு; நமக்கு அவனை எட்டப்போகாதொன்றாய் இருந்தது’ என்று சமுசாரிகள் கைவாங்க, ‘அவனுடைய சௌலப்யத்தை விரித்துப் பேசுவோம்,’ என்று பார்த்து, ‘நீங்கள் அவன் அரியவன் என்று கைவாங்க வேண்டா; அவன் அடைவதற்குச் சுலபன்; அவனை அடையுங்கோள்,’ என்கிறார். ‘ஆயின், மேல் ‘பத்துடையடியவர்’ தொடங்கிச் சௌலப்யமேயன்றோ சொல்லிக்கொண்டு போந்தது? இப்போதாகச் சௌலப்யம் சொல்ல வேண்டுகிறது என்?’ என்னில், அங்குச் சொன்ன சௌலப்யந்தான் பரத்துவம் என்னும்படி அர்ச்சாவதாரம் எல்லையான சௌலப்யத்தின் எல்லை நிலத்தை அருளிச்செய்கிறார்.

    2‘அர்ச்ய – சமுசாரிகளுக்கும் அர்ச்சிக்கலாம்படி வணங்கத் தக்கவனாய் இருக்கும். ‘சமுசாரிகளாகில் அர்ச்சிக்கிறார்கள்; அவர்கள் குற்றமே அன்றோ பண்ணுவது?’ என்னில், ஸர்வ ஸஹிஷ்ணு: – அவற்றையடையப் பொறுத்துக்கொண்டு நிற்கும். ‘ஆனாலும், நினைவு இரண்டாய் இராநின்றதே!’ என்னில், அர்ச்சக பராதீந அகிலாத்ம ஸ்திதி : – ‘நமக்கு ஒரு நினைவும் அவர்களுக்கு ஒரு நினைவுமாகில் அன்றோ சேராச் சேர்த்தியாவது?’ என்று அவர்களுக்கு ஈடாகத் தன்னை அமைத்து நிற்கும்,’ என்றார் பட்டர். 3‘தமர் உகந்தது எவ்வுருவம்? அவ்வுருவந் தானே; தமருகந்தது எப்பேர்?மற் றப்பேர் – தமருகந்து, எவ்வண்ணம் சிந்தித் திமையா திருப்பரே? அவ்வண்ணம் ஆழியா னாம்,’ என்றார் பொய்கையார். 4‘எவர் சிலர் அதிகாரிகள் யாதொருபடியாகவேண்டும் என்று நம்மை வணங்குகிறார்கள்? அவர்களைக் குறித்து அப்படிக் கிட்டலாம்படிக்கு ஈடாக நம்மை அமைத்துக்கொண்டு நிற்போம்; இப்படி அவர்கள் நினைவே நமக்கு நினைவாம்படி இருக்கையாலே அவர்கள் எல்லாரும் நம் வழி போனார் ஆவர்கள்,’ என்பது இறைவன் திருவாக்கு. 1‘சங்கல்பத்துக்குத் தகுதியாக நினைக்கப்படுகின்ற விஷ்ணு’ என்பது ஸ்ரீவிஷ்ணு புராணம். ‘நன்று; ‘சங்கல்பத்துக்குத் தகுதியாக’ என்பது, பரத்துவம் முதலான நிலைகளைச் சொல்லுகிறது என்று கொள்ளாமல், அர்ச்சாவதார விக்கிரஹத்தைச் சொல்லுகிறது என்று கொள்ளுதற்குக் காரணம் யாது?’ எனின், பரமபதத்தில் அசாதாரண விக்கிரஹத்தோடும் குணங்களோடும் இருக்கும்; விபவங்களில் வந்தால் அதுதன்னைத் தன்னின் வேறுபட்ட மற்றைச் சாதிகட்குத் தகுதியாக ஆக்கிற்றாய் இருக்கும்; இங்ஙன் அன்றிக்கே, 2அடியவன் தான் உகப்பது யாதேனும் ஒரு பொருளைத் திருமேனியாகக் கோலினால், அதனையே தனக்குத் திருமேனியாகக் கொண்டு, அதிலே அசாதாரண விக்கிரஹத்தில் பண்ணக்கூடிய அபிமானத்தைப் பண்ணி, இவ்வழியாலே முகங்கொடுக்கும்படியாய் இருப்பது இந்நிலை.மேலும், தன்னினின்றும் வேறுபட்ட எல்லாப் பொருள்களினுடையவும் சொரூபம், நிலை பேறு, தொழில் நடத்தல், தொழில் நடவாமை முழுதும் தன் அதீனமாம்படி இருக்கிற இறைவன், தன்னுடைய சொரூபம் நிலைபேறு முதலியவைகள் அடியார்களுடைய அதீனமாம்படியாய் அவர்களுக்கு வீடு நிலம் முதலியவைகளைப் போன்று கூறு கொள்ளலாம்படி நின்ற நிலை அன்றோ இது? மேலும், இவனுக்கு ருசி பிறந்த போது மற்றொரு இடத்தில் போக வேண்டாதே, இங்கே அனுபவிக்கலாம்படி நிற்கிற நிலையாய், இச்சரீர சம்பந்தமற்று ஒரு தேச விசேடத்திலே போய் அதற்கு ஈடாய் இருப்பது ஒரு சரீரத்தைப் பெற்றுச் செய்யக்கூடியனவான அடிமைகளை இதர விஷயங்களின் ஆசைக்கு உறுப்பான இவ்வுடம்போடே செய்யலாம்படியாய், இவன் வேறொன்றிலே நோக்குள்ளவனானஅன்றும் இவன் கையையே பார்த்திருக்கக் கூடியவனாய், இவன் தான் பசித்த போது உண்ணும் பொருளை ‘அமுது செய்ய வேண்டும்’ என்று விரும்பினால், அப்போதே அமுது செய்யக்கூடியவனாய், ஆசனம் படுக்கை அணிகள் முதலியனவெல்லாம் இவன் இட்ட வழக்காக்கி, திருமகள் கேள்வனாய், அடையப்பட்ட எல்லா விருப்பத்தையுமுடையவனான இறைவன் அடியார்கட்கு வசப்பட்டவனாய், இவன் யாதேனும் ஒரு பொருளை இட்டால் அதனைத் திருவாய்ப்பாடியில் யசோதை முதலானோர் வெண்ணெயைப் போன்று விரும்பக்கூடியவனாய், இப்படித் தன்னை அமைத்துக் கொண்டு நிற்கிற இடமே அன்றோ அர்ச்சாவதாரமாவது?

    1பரத்துவமே தொடங்கி அவதாரங்களிலே வர அவன் குணங்களைச் சொல்லிக்கொண்டு போந்து அர்ச்சாவதாரத்தின் எல்லை நிலமான சௌலப்யத்தின் எல்லை நிலத்தை உபதேசிக்கிறார். ‘ஆயின், இப்போது உபதேசிக்கப்புகுகிறது சௌலப்யமேயாகில், பரத்துவமே தொடங்கி உபதேசிக்க வேண்டுவான் என்?’ என்னில், ‘மேன்மையுடையவன் தாழாநின்றான்’ என்றால் அன்றோ குணமாவது? தாழ்ந்த நிலையினனான ஒருவன் தாழாநின்றால் சொரூபமாமித்தனையே அன்றோ? இப்படித் தாழ நிற்கிறவன் மேன்மையையுடையவன் என்கைக்காகச் சொல்லுகிறது. 2உபாயங்களில் பிரபத்திமார்க்கம் போன்றது, சௌலப்யங்களில் அர்ச்சாவதார சௌலப்யம். ‘தான் உகந்த பொருளைத் திருமேனியாகக் கொண்டு சந்நிதி பண்ணுவானேயாயின், கௌரவபுத்தி உண்டாகுமோ?’ எனின், தாய்க்கும் பெண்களுக்குரிய தன்மை ஒத்திருந்தும் பண்ணுகிற உபகாரங்களைக் காண்கையாலும் 3சாஸ்திரம் சொல்லுகையாலுமன்றோ கௌரவிக்கிறது? அப்படியே,பிரமாணத்தை நம்புகிறவனுக்கு அடையத்தக்க இடம் அர்ச்சாவதாரம் ஒழிய இல்லை என்று இவ்வளவான சௌலப்யத்தின் எல்லை நிலத்தை உபதேசிக்கிறார் ஆதலின், கௌரவபுத்தி உண்டாகும்.

278

செய்ய தாமரைக் கண்ண னாய்உலகு
ஏழும் உண்ட அவன்கண்டீர்
வய்யம் வானம் மனிசர் தெய்வம்
மற்றுமற் றும்மற்றும் முற்றுமாய்
செய்ய சூழ்சுடர் ஞான மாய்வெளிப்
பட்டுஇ வைபடத் தான்பினும்
மொய்கொள் சோதியோடு ஆயி னான்ஒரு
மூவர் ஆகிய மூர்த்தியே.

    பொ-ரை : ஒப்பற்ற மூவராகிய மூர்த்தியாய், செந்தாமரைக் கண்ணனாய், உலகேழும் உண்டவனாய் உள்ள அவன்தான் பூமியும் தெய்வலோகங்களும் மனிதர்களும் தேவர்களும் விலங்குகளும் தாவரங்களும் மற்றும் எல்லாப் பொருள்களும் உண்டாகும்படி, எல்லாவற்றையும் சூழ்ந்துள்ள சுடரையுடைய சிறந்த சங்கல்ப ரூப ஞானத்தையுடையவனாய்த் தோன்றி இவற்றைப் படைத்தான்; அதற்கு மேலும், செறிந்த ஒளியுருவமான பரம பதத்தோடு கூடியிருக்கின்றவனும் ஆயினான்.

    வி-கு : கண்டீர் – முன்னிலையசைச்சொல். ‘முற்றுமாய்’ என்பதில், ஆய் என்பது, செயவெனெச்சத் திரிபு. மூர்த்தத்தையுடையவன் மூர்த்தி; மூர்த்தம் – திருமேனி.

    இத்திருவாய்மொழி எழுசீர்க்கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்.

    ஈடு : முதற்பாட்டில், 1‘உலக காரணனாதல் தாமரைக் கண்ணனாதல் முதலிய குணங்களையுடையவன் பற்றத்தக்கவன்; அவனைப் பற்றுமின்,’ என்கிறார். அன்றியே, ‘உலகத்திற்குக்காரணப் பொருளை உத்தேசித்து அப்பொருளுக்கே தாமரைக் கண்ணனாதல் முதலியவைகளை விதிக்கிறார்,’ என்னுதல்.

    செய்ய தாமரைக் கண்ணனாய் – 1‘சூரியனுடைய ஒளியால் மலர்ந்த தாமரை மலர் எவ்வண்ணம் இருக்கும்? அவ்வண்ணமே அந்தப் பரம்பொருளான நாராயணனுடைய திருக்கண்கள் இருக்கின்றன,’ என்றும், 2‘யாகங்களுக்கு ஈஸ்வரனாயும் யாகபுருஷனாயும் தாமரைக்கண்ணன் என்னும் பெயரையுடையவனாயுமிருக்கிற அந்த விஷ்ணு’ என்றும் சுருதி ஸ்மிருதி முதலியவைகளில் சொல்லப்படாநின்றுள்ள அப்போது அலர்ந்த செவ்வித்தாமரை போலே இருந்துள்ள திருக்கண்களையுடையவனாய். உலகு ஏழும் உண்ட அவன் – வடிவழகில் தாமரைக் கண்ணன் ஆதலைப் போன்று குணங்களில் பிரளய ஆபத்தில் துணைவன் ஆயினமையும். ‘வையம்’ என்றது, பூமியை. ‘வானம்’ என்றது, மேலே உள்ள உலகங்களை. ‘மனிசர்’ என்றது, வையத்தில் உள்ளாரை. ‘தெய்வம்’ என்றது, வானத்தில் உள்ளாரை. ‘மற்றும்’ என்றது, விலங்கு பறவை தாவரங்களை. மீண்டும், ‘மற்றும்’ என்றது, அவற்றுக்குக் காரணமான ஐம்பெரும்பூதங்களை. மீண்டும் மற்றும் என்றது, அவைதமக்கும் காரணமான மகான் முதலிய தத்துவங்களை. ‘முற்றும்’ என்றது, மேற்கூறியவை எல்லாவற்றையும்.  ‘முற்றுமாய் வெளிப்பட்ட இவற்றை, செய்ய சூழ் சுடர் ஞானமாய்ப் படைத்தான்’ என்னுதல்; அன்றியே, 3‘தனிமாப் புகழே எஞ்ஞான்றும் நிற்கும்படியாகத் தான் தோன்றி’ என்றும் 4‘பல பொருள்களாக ஆகக்கடவேன்’ என்றும் சொல்லுகிறபடியே, முற்றவும், உண்டாகைக்காக 1இவையாய்க்கொண்டு தான் தோன்றி இவற்றைப் படைத்தான் என்னுதல். அப்போது, வெளிப்பட்டு என்கிறது, ‘படைத்தலில் கருத்து உள்ளவனாய்த் தோன்றி’ என்றபடி. செய்ய சூழ் சுடர் ஞானமாய் – ஞானத்துக்குச் செவ்வையாவது, வருத்தம் அற்று இருக்கை. அன்றியே, 2‘முன்பு படைத்த வண்ணமே படைத்தார்’ என்கிறபடியே, ‘அதனுடைய கர்மத்துக்குத் தகுதியாகப் படைத்த செவ்வை’ என்னுதல். சூழ்தலாவது, காரியக் கூட்டத்தில் எல்லாம் பரந்திருக்கை. சுடராவது, மழுங்காத ஞானமாய் மிக விளக்கமாயிருக்கை. ‘ஞானமாய்’ என்றது, ‘இப்படிப்பட்ட நினைவின் உருவமான ஞானத்தை உடையவனாய்’ என்றபடி. ‘வெளிப்பட்ட இவை’ என்றது, ‘பிரமாணங்களால் அறியப்படுகின்ற இவை’ என்றபடி. ஆக, இதுகாறும் உலக காரணன் ஆதல் சொல்லிற்று. மேல் நித்திய விபூதியையுடையவனாய் இருத்தலைச் சொல்லுகிறது:

    பின்னும் – லீலாவிபூதியையுடையனானதற்கு மேலே. மொய் கொள் சோதியோடு ஆயினான் – 3’சூரியன் சந்திரன் அக்நி இவர்களைக்காட்டிலும் கோடி மடங்கு அதிகமாய் விளங்குகிற, மஹாத்துமாவான விஷ்ணுவினுடைய அந்த ஸ்ரீ வைகுண்டம்’ என்கிறபடியே, செறிந்துள்ள ஒளியை உடைத்தான நித்திய விபூதியையுடையனாய் இருக்கும் இருப்பைச் சொல்லுகிறது. அன்றியே, ‘ஒளி நிறைந்துள்ள கல்யாண குணங்களையுடையவன்’ என்னுதல்; சோதி – குணம். ‘சோதி’ என்றது, குணங்களுக்கெல்லாம் உபலக்ஷணம். 4‘இப்போது குணங்களைச் சொல்லுகிறது என்?’ என்னில், குணங்களையுடைய பொருள் அன்றோ பற்றத்தக்கது? ஆதலால், சொல்லுகிறது. ஒரு மூவராகியமூர்த்தி – பிரம ருத்திரர்களுடைய சரீரங்களையும் ஆத்துமாக்களையும் தனக்குச் சரீரமாகக்கொண்டு, 1அவற்றில் உள்ளுயிராய் நின்று படைத்தல் அழித்தல்களைச் செய்தும், தன் உருவத்தோடு நின்று பாதுகாத்தலைச் செய்தும் போருகிற சர்வேசுவரன். ‘ஆயின், மூர்த்தி என்னும் சொல் சர்வேசுவரனைக் காட்டுமாறு யாங்ஙனம்?’ எனின், மூர்த்தி என்னும் சொல், பரத்துவத்தைக் கூறுவதாம். அன்றியே, பிரமன் உருத்திரர் இவர்களோடே இந்திரனையுங் கூட்டி மூவர் என்று சொல்லவுமாம்.

    ‘மொய் கொள் சோதியோடு ஆயினான் ஒரு மூவராகிய மூர்த்தி பின்னும் வையம் வானம் மனிசர் தெய்வம் மற்றும் மற்றும் மற்றும் முற்றுமாய், வெளிப்பட்ட இவற்றை, செய்ய சூழ் சுடர் ஞானமாய்ப் படைத்தான்: செய்ய தாமரைக் கண்ணனாய், உலகு, ஏழும் உண்ட அவன்கண்டீர்: ஆன பின்பு, அவனைப் பரவுமின்,’ எனக் கூட்டுக.

_____________________________________________________
1. தாம் உபதேசிக்கிற அதிகாரிகளுக்கும் தம்மைப் போன்று கைங்கரியத்தில்
பிராப்தியுண்டு என்று காட்டுகைக்காக ‘ஒழிவில் காலமெல்லாம்’ என்ற
திருவாய்மொழி தொடங்கிச் சங்கதி அருளிச்செய்கிறார், ‘சர்வேஸ்வரன்’ என்று
தொடங்கி. ‘சர்வேஸ்வரன்’ என்றது முதல் ‘உத்தேஸ்யமாகக் கடவதுமாயிருக்க’
என்றது முடிய, ‘ஒழிவில் காலமெல்லாம்’ என்ற திருவாய்மொழியின் நுவாதம்.
அதற்குமேல் ‘வெறுத்தவராய் நின்றார்’ என்றது முடிய, மேல்
திருவாய்மொழியின் அநுவாதம். ‘இப்படி நிந்திக்கத் தக்கவர்கட்கு
உபதேசிக்கைக்குக் காரணம் என்?’ என்ன, ‘அருள் கண்டீர் இவ்வுலகினில்
மிக்கதே’ என்கிறபடியே, மிக்க பேரருளே காரணம் என்கிறார், ‘அவ்வாறு
வெறுத்தல்’ என்று தொடங்கி.

2. ‘நண்ணாதார் மெய்யில் ஊன் ஆசை நிர்வேதத்தோடே ஆஸ்திக்ய
அமாநித்வாதிகள் விஞ்சின பிரணிபாத அபிவாதந பரிப்ரச்ந சேவாபரர்க்கு
உளங்கொள் பேசுமளவன்று என்னும் அர்த்தத்தை வம்மின் விரோதம் ஈனச்
சொல் எவ்வுயிர்க்கும் அறிய என்று அடைவுகெட அதபஸ்கர்க்கு
உபதேசிக்கிறது ஞாலத்தார் பந்தபுத்தியும் அநர்த்தங்கண்டு
ஆற்றாமையும் மிக்க கிருபையுமிறே.’ ‘தாய்க்கும்
மகனுக்கும் தம்பிக்கும்
இவர்க்கும் இவர் அடிபணிந்தவர்க்குமே இவையுள்ளது’ என்னும்
ஆசார்யஹ்ருதய ஸ்ரீசூக்திகளை இங்கு அநுசந்திக்கத் தகும்.

(திருதீயபிரகரணம். சூ. 54, 55)

ஸ்ரீராமா சுந். 21 : 19.

      இந்தச் சுலோகத்திற்கு வியாக்கியாதா அருளிச்செய்த பொருள் வருமாறு:
மித்ரம் ஒளபயிகம் கர்த்தும் ராம :- ‘பெருமாளைச் சரணம் புகு’ என்றால்
அப்பையல் அதனைத் தனக்கு எளிவரவாக நினைத்திருக்குமே? அதற்காகத்
‘தோழமை கொள்’ என்கிறாள். தங்களைச் சரணம் புக்காரைத் தங்களிற்
காட்டில் குறைய நினைத்திருப்பதில்லையே இவர்கள்; ‘மித்ரபாவேந’ என்றும்,
‘மித்ரம் ஒளபயிகம் கர்த்தும்’ என்றுமிறே இருவர் படியும். ஸ்தாநம் பரீப்ஸதா
– வழியடிப்பார்க்கும் தரையிலே கால் பாவி நின்று வழியடிக்கவேணுமே?
உனக்கு ஓர் இருப்பிடம் வேண்டியிருந்ததேயாகிலும் அவரைப் பற்ற
வேணுங்காண். எளிமையாக எதிரி காலிலே குனிந்து இவ்விருப்பு இருப்பதில்
பட்டுப் போக அமையும் என்றிருந்தாயோ? வதஞ்சாநிச்சதா கோரம் –
அப்படி உன்னை நற்கொலைப்பட விடுவரோ? உன்னை வைத்து உன்
முன்னே உன் சந்தான கூட்டத்தைக் கொன்று பின்னை உன்னைச்
சித்திரவதை பண்ணுகையாகிற இவ்வதத்தை இச்சித்திலையேயாகிலும் அவரைப்
பற்ற வேணுங்காண். த்வயா – உன் நிலை இருந்தபடியால் விசேடித்து உனக்கு
அவரைப் பற்றவேணும். அசௌ-உருவெளிப்பட்டாலே
முன்னிலையாயிருக்குமிறே இவளுக்கு; அவனுக்கும் தானே மாயாமிருகத்தின்
பின்னே போகிற போது கண்ட காட்சியாலே அச்சத்தாலே எப்போதும்
முன்னிலையாயிருப்பரிறே. புருஷர்ஷப:- ‘நான் பண்ணின அபராதத்துக்கு
என்னை அவர் கைக்கொள்ளுவாரோ?’ என்றிருக்க வேண்டா; இவற்றை
ஒன்றாக நினைத்திரார்காண்; அவர் புருஷோத்தமர்காண். அசௌ
புருஷர்ஷப: ராம: த்வயா மித்ரம் கர்த்தும் ஒளபயிகம்.

அன்பிலா மூடரை நிந்தித்து -அன்பால் ஆட் செய்வாரை ஆதரித்து
இதில் அர்ச்சாவதார சௌலப்யம் –
பெரிய பிரவேசம் -இதற்க்கு
அடிமை செய்வதே -பித்தி கொடுப்பதும் -அதுவும் இனிமையாக
இருவருக்கும் -இனிமை
அவ்வழியாலே உத்தேயம் சேதனனுக்கு -இருந்தும் இழந்து
இதனால் சிலரை நிந்தித்து -போந்தவர் –
தாமே விளுவாரை தடி கொண்டு அடிப்பார் -போலே
செத்த பாம்பை அடிப்பதா
பண்டே அறிவு கேட்டு அநர்தப் பட்டு போனவருக்கு ஹிதம் அருளிச் செய்கிறார்
பிரகிருதி -இப்படி -அருளிச் செயாமல் இருக்க முடியாதே
கிருபை உந்த தல
உறங்கினால்-வீடு நெருப்பு பற்றி எரிய
தாய் மகன் தம்பி இவர் இவர் அடிபணிந்தவர் -ஐவருக்கும் இப்படி -ஆசார்ய ஹிருதயம்
பர ஸ்மிர்தியே பேறாக கொண்டவர்கள் -ஸ்ரீ வைஷ்ணத்வம்
ஐயோ இரங்காவிடில் வைஷ்ணத்வம் இல்லையே நஞ்சீயர் வார்த்தை
ராவணன் பிராட்டி பக்கல் ஜனனி என்றட நினைவு இன்றி
திரு முன்பு சில வார்த்தைகள் ஜல்ப்பிக்க
இவன் நினைவு இருந்தபடி என்
இவனுக்கு நல் வார்த்தை சொல்வாரே இல்லையா
நல்லவர்கள் இருக்கிறார்களா இல்லையா
ஸந்தி ந அனுவர்த்தி இருந்தும் பின் பற்ற வில்லையே
வெறுத்து அவன் தனக்கு உபதேசம்
ஹிதம்  அருளிச் செய்தல் போலே

நீசமான முயல் குட்டி போலே -ராமன் சிங்கம் -முதலில் வைது வைத்து
மித்ர -ஹிதம் அருளி செய்தால் போலே
மித்ரம் -நண்பனாக போக ஔ பரிதம் கர்த்தும்ராகவா
சரண் அடைய சொன்னால் பையல் -கர்வம் காரணமாக போக மாட்டானே
காலை பிடிக்காமல் கையை பிடிக்க சொல்லி

சரணம் புக்காரை தங்களை காட்டில் தாழ நினைக்க மாட்டார்களே
தம்மையே ஒக்க -வணங்கி தொழுவாருக்கு
மித்ர பாவேன -பெருமாளும்சொல்லி –
இருவர் ஒத்த வார்த்தைகள் அருளி –
ஔபரிகம் உபாயமாக கொண்டு –
த்வ்யாஉன்னாலே -இடம் தேடி -வதம் ஆசைப்படாமல் இருந்தால்
ராம புருஷ ரிஷப –
மித்ரம் கர்த்தும் ஔ பரிதம்
வழி அடிப்பாருக்கும் காலை நின்று செய்ய வேண்டும் பற்றாவிடில் ஸ்தானம் இல்லையே
பட்டுப் போகாமல் இருக்க –
எளிமையாக காலைப்பிடிப்பதை விட பட்டுப் போகலாம் என்று நினைத்தால் கோரம் வதம்
ஏற்படுமே -சித்ரவதம் -சந்தானம் ஹிம்சித்து உன் கண் முன்னால் –
பின்பு இறுதியில் உன்னை சித்ரவதம் செய்யும் வதம்
அசவ் புருஷ ரிஷப -இந்த ராமர்
உரு வெளிப்பாட்டிலே -ராவணனும் ராமன் போலே தொடருமே இந்த ராமன் காலில் விழு
பாவனா பிரகர்ஷம் உண்டே திவ்ய மங்கள விக்ரகம் முன்னிலையாக
அவனுக்கும் அச்சத்தாலே முன்னிலையாக இருக்குமே
மாயா மான்  பின் போன பொழுது பார்த்து -அச்சத்தால் அவனுக்கும்
கைக் கொள்ளுவாரோ நினைக்க  வேண்டாம் -அபசரம்செய்தாலும்
புருஷ ச்ரேஷ்டர் –
புருஷோத்தமன் –
அபசார சர்வம் ஷமஸ்வ புருஷோத்தமா நித்யம் அனுசந்திக்கிறோமே

வழி தப்பி அநர்தப் படும் முகம் பார்ப்பார்கள்-நித்யர்கள் போலே பிராப்தி ஒத்து இருக்க –
அறியாமல் அநர்தப் பட்டு போகிறோமே -பகவத் பூர்வ ஞானம் இல்லாமை
சௌலப்ய முகம் அறியாமை
ஈஸ்வரன் பெரியான் விசைக் கொம்பு உச்சாணிக் கொம்பு -எட்டக் கனி
விசையை உடைய கொம்பு
நலுபே ராக வளைத்த போது தாழ்ந்து விடபோதே எட்டாமல் இருக்கை
மூங்கில் சூர்ய கிரணம் பட்டு -உயர்ந்து இருக்குமே

சம்ஸ்க்ருத ஞானம் உள்ளவர்களுக்கு அரும் பதம் அருளி திராவிட வேதம் அறிவிக்க
உபய வேத ஐ க்யம் தெரிவிக்க
அரியவன் என்று  விலக வேண்டாம்
பத்துடை -சொன்னது –
அங்கு சொன்னது பரத்வம் என்னும்படி அர்ச்சை
அது விபவம்
இது அர்ச்சை –
சௌலப்யம் -பட்டர் ஸ்லோகம் –
அர்ச்சக பராதீன –
சீலத்தால் உறுதி
அவதாரங்களும் -குண ராசிகளும் -வெளிப்படுத்த
குண பரிவாகங்கள்
கிருகங்களிலும் அர்ச்சிகப்பட்டு பொறுத்து
அர்ச்சகபராதீனன் ‘
ஜடிபூயதே
அர்ச்சக -சம்சாரிகள் -அபராதம் செய்தவர்களாலும் -சர்வ சகிஷ்ணு
அபராதங்களை பொறுத்துக் கொண்டு –
அர்ச்சகபராதீன
அவர்களுக்கு ஈடாக தன்னை அமைத்து இருக்கும்
அர்சிக்கிரவன் அர்ச்சகன் –
அகில ஆத்ம ஸ்திதி அனைத்தும்
தமர் உகந்தது எவ்வுருவம் அவ்வுருவம் தானே
திருமேனி திருநாமம் எல்லாம்

எப்படி  அனுபவிக்க நினைத்தாலும் அப்படி அமைத்து கொண்டு
மம -என்னுடைய வழியை பின் செல்கிறார்கள் மமவர்த்தம் அனுவர்தம
அவர்கள் நினைவே எனது நினைவு -இருந்தபடியால் –
எனது வழி வந்தார்கள் கீதை ஸ்லோகம்
அதிதி தேவகி பிரார்த்தித்த படி அவதரித்தானே

சங்க;ல்ப அனுவர்த்தி
சங்கு சக்கரத்துடன்
சங்கல்ப மா ஸ்ம்ருதம்
அதிதி தேவபுத்திரன் ஆசைப்பட்டு
அசாதாரண திவ்ய சமஸ்தானம் இதர சஜாதீ யம் ஆக்கி கொண்டு -விபவம்
இங்கு இதர வஸ்துவாக
எந்த த்ரவ்யம்
குறும்பு அறுத்த நம்பி
சிலா சுதை திருமேனி
ஆஸ்ரித உகந்த த்ர்வ்யத்தை திருமேனியாக கொண்டு பிரீதியாக
அர்ச்சாவதார -ஸ்வரூப ஆவிர்பாவம் –
சஜாதீயம் அங்கே -வஸ்துவே ஆகி இங்கே -அது போலே இல்லை
அசாதர விக்ரக ப்ரீதியை இங்கே காட்டிக் கொண்டு
ஸு வ்யதிக்ர்த வஸ்து -ஸ்திதி பிரவ்ருத்தி நிவ்ருத்தி தானே
க்ருக ஷேத்ரங்கள் கூறு கொள்ளலாம் படி
பெருமாளையும் பங்கு போட்டுக் கொள்கிறார்கள் –

ருசி பிறந்த பொழுது மற்று ஒரு இடங்களில் போக வேண்டாதபடி
சுயார்ச்சை -இருக்கும் இடத்திலே அனுபவிக்கலாம்படி
தேச விசேஷம் போக வேண்டாதபடி
தேகம் மாற்றி-இல்லாமல் இவ் வுடம்புடன் இதர விஷய ப்ராவண்யம் கொள்ள
அந்ய பரர்னாக இருந்தும் இவன் கையை எதிர்பார்த்து இருக்க கடவன்
இவன் தான் பசிக்கும் பொழுதும் புசித்து -அமுது செய்ய அபெஷித்தால் அப்பொழுதே அமுது செய்து
ஆசன -இவன் இட்ட வழகசோதாதிகள் வெண்ணெய் யோபாதி இவன் கொடுக்கும் ஏதோ
த்ரவ்யத்திலும் வைத்து
ஜலதரங்கம் போலே -அல்ப த்ரவ்யம்
தன்னை அமைத்துக் கொண்டு நிற்கிறான்
பரத்வம் தொடங்கி அவதாரம் சொல்லி அர்ச்சாவதார காஷ்டை
இவன் கையை எதிர்பார்த்து கொண்டு
அறையோ பிறையோ -கோயில் ஆழ்வார் –
ஒன்பதாவது பாட்டில் அர்ச்சாவதாரம்
எட்டு பாட்டில்
நெஞ்சினால் நினைப்பான் எவன் அவன் ஆகும் நீள் கடல் வண்ணன்
மேன்மை உள்ளவன் தாழ நின்றான் புரிய வைக்க -அருளுகிறார்
உபாயங்களில் பிரபத்தி போலே அர்ச்சை -ஐந்தாவது நிலை
ஆசார்ய அபிமானமே -ஐந்தாவது நிலை
ஜனனிக்கும் -மற்ற ஸ்திரீ களுக்கும்வாசி
கௌ ரவிக்க –
பிரமாணிகர் ஆஸ்ரேயே ன இடம் அர்ச்சை
ஜகத் காரணத்வம் -புண்டரீகாட்ஷன் முதல் பாசுரம்
ஸ்வரூபம் திவ்ய மங்கள விக்ரகம்
வேதம் போலே -இரண்டையும்
தஸ்ய உதிது நாமா கப்யாசம் எவம் பிண்டரீகா ட்ஷம் அ ஷணீ
எல்லா வச்துவும்ஞானமுமாய்
படைத்தான்
மூவராகிய மூர்த்தி
செய்ய தாமரைக் கண்ணனாய்
யஞ்ஞ புருஷ புண்டரீகாட்ஷா
அப்போது அலர்ந்த செவ்விய தாமரைக் கண்ணன்
பாஷ்ய காரர் வியாக்யானம் –
சாந்தோக்ய உபநிஷத் ஹிரண் யா தஸ்ய உதித நாம
வேதார்த்த சன்க்ரஹம்
கம்பீராம்ப -மெல்லிய நாளம்
ரவி கர விசதித
சுருதி ஸ்ம்ருதி சொல்லியபடி
உலகளு ஏழும் உண்டவன்
பிரளய ஆபத் சஹச்தம்குணம் -புண்டரீகாட்ஷன் போலே
வையம் வானம் பூமியையும் மற்ற உலகங்களையும்
மனிதர் தெய்வம்
மற்றும் திர்யக் ச்தாவரங்கள்
மற்றும் -பஞ்ச பூதாதிகள்
மற்றும் -மகத்தாதிகள்
முற்றுமாய் -எலாவற்றையும் வெளிப்பட்ட இவற்றை படைத்தான் /உண்டான்
இரண்டுக்கும் அந்வயம்
தனிமா புகழ் பஹுச்யாம் பிரஜாயேய போலே
வெளிப்பட்டு -இவனே சிருஷ்டி உன்முகன்
செய்ய -ஞானம் வருத்தம் அற்று இருக்கை ஸுத சித்த ஞானம்
செவ்வை -தத் கர்ம அனுரூபமாக படைத்து

சூழ் வியாபித்து
சுடர் மழுங்காத ஞானம்
செய்ய ஞானம்
சூழ் ஞானம்
சுடர் க்ஹ்நானம்
வெளிப்பட்டு இவை -பிரமாண சொல்லி
ஜகத் காரணத்வம் சொல்லி
பின்னும் -மொய் கொள் சோதி பரமபதம் போலே
தேஜஸ் மிக்கு -செறிந்து இருந்துள்ள தேஜஸ் நித்ய விபீதி உக்தனாய் இருக்கும்
தேஜஸ் முதலிய கல்யாண குணங்கள் கொண்டவன்
குணாதிக வஸ்துவே ஆஸ்ரேயன தாழ விட்டுக் கொண்டு வந்தது
பற்றுவதற்கு எளியவன் -செய்ய சக்தி கொண்டவன்

பிரம ருத்ராதிகள் சரீரம்
அந்தராத்மா சிருஷ்டி சம்காரம்
விஷ்ணு -காத்து பாலன கர்மம்
மூர்த்தி பரத்வமான அந்தர்யாமி
அன்றிக்கே இந்திரனையும் கூட்டி -ச சிவ -இத்யாதி
மொய் கொள் சோதி ஆயினான் –
ஆனா பின்பு அவற்றை பற்றும் கோள்
முற்றுமாய் -கார்ய காரண பாவம் சாமானாதி கரண்யம்
வஸ்துக்கள் சொல்லும் பொழுது அவனைக் குறிக்குமே நிர்வாஹகன் அந்தர்யாமி
ஞானமாய் -சாமானாதி கரண்யம் இல்லை
ஞானமே வடிவு கொண்டு
தத்வ சாராதவ சாரமாகவே இருக்கிறான் -ஸ்ரீ பாஷ்ய ஸ்ரீ ஸூ க்தி
உடம்பு எல்லாம் மூளை போலே
அறிவு மிகுதியாக உள்ள இடத்தில் அறிவு சப்தமாகவே சொல்வது போலே
குண குணி பாவம் -ஞானமாய்

நஞ்சீயர் திருவடிகளே சரணம்.

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply