கருமமும் கரும பலனும்
ஆகிய காரணன் தன்னைத்
திருமணி வண்ணனைச் செங்கண்
மாலினைத் தேவ பிரானை
ஒருமை மனத்தினுள் வைத்து
உள்ளம் குழைந்துஎழுந்து ஆடிப்
பெருமையும் நாணும் தவிர்ந்து
பிதற்றுமின் பேதைமை தீர்ந்தே.
பொ-ரை : கருமங்களும் கருமங்களால் அடையப்படும் பலன்களுமாகி அவற்றிற்குக் காரணமுமாய் இருக்கின்றவனை, அழகிய நீலமணி போன்ற நிறத்தை உடையவனை, செங்கண் மாலினை, தேவர்களுக்கு உபகாரகனை ஒன்றுபட்ட மனத்திலே வைத்து மனம் குழைந்து எழுந்து ஆடி, பெருமையும் நாணமும் தவிர்ந்து, அறிவின்மையும் நீங்கி அடைவு கெடப் பாடுமின்.
வி-கு : ‘வைத்து குழைந்து எழுந்து ஆடி தவிர்ந்து, தீர்ந்து பிதற்றுமின்,’ என்க. ‘பேதைமை தீர்ந்து பிதற்றுமின்,’ என மாறுக.
ஈடு : பத்தாம் பாட்டு. மேலே கேவலரை நிந்தித்தார்; இப்பாசுரத்தில், ‘வேறு பிரயோஜனங்களைக் கருதாதவராய் அவன் குணங்களை அநுசந்தித்து உரையும் செயலும் வேறுபட்டவர் ஆகுங்கோள்; உங்கட்கு இதுவே புருஷார்த்தம்,’ என்கிறார்.கருமமும் கருமபலனும் ஆகிய – புண்ணிய பாவ ரூபமான கர்மங்களுக்கும் கர்மபலங்களுக்கும் ஏவுகின்றவனாய்; 1கருமங்கள் உண்டானாலும் கருமங்களைச் செய்கின்றவன் ஒருவன் வேணுமே? ஆதலின். ‘கருமங்களைச் செய்கின்றவனுமாயிருக்கின்றான்’ என்பார், ‘கருமமும் ஆகிய’ என்கிறார்; என்றது, ‘கருமங்களைச் செய்கின்றவன் வழியாகக் கருமங்களை நிர்வஹிக்கிறவன்’ என்றபடி. கருமங்களைச் செய்தாலும் அவற்றிற்கு ஒருவன் பலன் கொடுக்காத போது அவை பழுதையைப் போன்று கிடக்குமத்தனையேயன்றோ, அவை அசேதநக்கிரியை ஆகையாலே? ஆதலால், ‘அவற்றிற்குப் பலத்தைக் கொடுக்கின்றவனுமாய் இருக்கிறான்,’ என்பார், ‘கரும பலனுமாகிய’ என்கிறார். காரணன்தன்னை – புண்ணியங்களைச் செய்யத் தூண்டவும் பாவங்களைப் போக்கவும் அவற்றிற்குப் பலன் கொடுக்கவும் ஒரு தலைவன் வேண்டுமே? அவற்றிற்குக் காரணனாயும் உள்ளவனை. திரு மணிவண்ணனை – 3உபாசகனுக்கு விக்கிரஹத்தைப் பற்றுக்கோடாகச் சொல்லாநின்றதேயன்றோ? ஆதலின், அவனுக்கு உத்தேஸ்யமாய் இருந்துள்ள விக்கிரஹத்தையுடையவனை; ஒளி மிக்கிருந்துள்ள நீலமணி போலே சிரமத்தைப் போக்குகிற வடிவையுடையவன் என்றபடி. திரு – ஒளி. செம் கண் 3மாலினை – அகவாயில் வாத்சல்யத்துக்குப் பிரகாசகமான திருக்கண்களையுடையவனை; 4காரணப் பொருளுக்கு இலக்ஷணமாகத் தாமரைக்கண்ணனாய் இருக்குந் தன்மையை விதியாநின்றதேயன்றோ?தேவ பிரானை – அவ்வடிவழைகையும், அக்கண்ணழகையும் நித்தியசூரிகளை அனுபவிப்பிக்குமாறு போன்று என்னை அனுபவிப்பித்து, எனக்கு உபகாரகன் ஆனவனை. ஒருமை மனத்தினுள் வைத்து – ஒரு பிரயோஜனத்துக்காக அன்றி, நெஞ்சிலே இருக்கை தானே பிரயோஜனமாக நெஞ்சிலே வைத்து. இதனால், மேற் பாசுரத்திலே 1பிரயோஜநாந்தரபரரை நிந்தித்தார் என்னுமிடம் தோன்றுகிறதே அன்றோ? உள்ளம் குழைந்து எழுந்து ஆடிப் பெருமையும் நாணும் தவிர்ந்து பேதைமை தீர்ந்து பிதற்றுமின் – இப்படி வேறு பலனைக் கருதாதவராய் நெஞ்சிலே வைத்தவாறே, அகவாய் நெகிழ்ந்து அந்த நெகிழ்ச்சியோடே இருந்த இடத்தில் இராமல் ஆடி, ‘பகவானுடைய குணங்களைக் கேட்டார் உரையும் செயலும் வேறுபட்டவராதல் நமக்குப் போருமோ?’ என்கிற செருக்கின் காரியமான மேன்மையும், ‘நாம் பிறர் அறியும்படி உரையும் செயலும் வேறுபட்டவராதல் எங்ஙனே?’ என்றிருக்கிற நாணமும், ‘எல்லாவளவிலும் நம் அகவாய் ஒருவர்க்கும் தெரியாதபடி மறைத்துக்கொண்டு இருக்க வேண்டாவோ?’ என்றிருக்கிற அறிவு கேட்டையும், இவற்றை அடையப் போகட்டு, அடைவுகெட ஏத்துங்கோள். இதுவே உங்களுக்குப் புருஷார்த்தம் என்கிறார்.
அநந்ய பிரயோஜனரை கொண்டாடி
உருக வேண்டும்
இதுவே புருஷார்த்தம் என்கிறார்
கர்மம் கர்ம பலனும் காரணன் அவனே
கூத்தாடி -கர்வம் இன்றி -வெட்கமும் தவிர்த்து
பர வசம் -ஸுவ வசம் இன்றி பிதற்றி
புண்ய பாப ரூபம் கர்மம் கர்ம பலன்களுக்கு நிர்வாஹகன் அவன் தானே
அனுஷ்டாதா -ஏற்படுத்தி
தவாரா நிர்வாஹகன்
பலன் கொடுப்பவனும் அவனே
அசேதன கிரியை கர்மம்
போக்தா பிரபு இரண்டும் அவனே கீதை
காரணன் தன்னை -காரண பூதன்
திரு மணி வண்ணன் உபாசகனுக்கு திருமேனி ரசம்
த்யானம் செய்ய சாந்தகாரம் ஈடுபாட்டை விலைக்க
சுபம் ஆச்சர்யம் இரண்டும் சுபாஸ்ர்யம்
விக்ரகம் டையவன்
திரு காந்தி மிக்க நீல மணி
செங்கண் அகவாய் -சிவந்த லஷணம் புண்டரீகாட்ஷா
காரணன் தன்னை செங்கண் மாலை
தேவபிரானை
நித்யர் எனக்கும் உபகாரகன்
நெஞ்சிலே நினைத்து இருப்பதே பிரயோஜனம்
கீழில் பிரயோஜனாந்தர பரரை நிந்தித்து
அகவாய் சிதிலமாய்
கூத்தாடி -பாடி போக வேண்டும் –
நமக்கு தகாது அபிமானம் கூடாது
வெட்கமும் கூடாதுபுடவை வஸ்த்ரம் எறிந்து கூத்தாடி
பன்குனிஉத்தரம் இன்றும் உண்டே
உடையவர் சாத்து முறை விஜயீபவ இன்றும் சொல்லி
பேதமையும் தவிர்ந்து அறிவு கேடு
அடைய போகட்டு அடைவு கெட ஸ்தோத்ரம் செய்வதே புருஷார்த்தம்
நஞ்சீயர் திருவடிகளே சரணம்.
நம்பிள்ளை திருவடிகளே சரணம்.
வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.
Leave a Reply