மனிசரும் மற்றும் முற்றும்ஆய்
மாயப் பிறவி பிறந்த
தனியன் பிறப்பிலி தன்னைத்
தடங்கடல் சேர்ந்த பிரானைக்
கனியைக் கரும்பின்இன் சாற்றைக்
கட்டியைத் தேனை அமுதை
முனிவுஇன்றி ஏத்திக் குனிப்பார்
முழுதுஉணர் நீர்மையி னாரே.
பொ-ரை : மனிதர்களும் தேவர்களும் விலங்கு தாவரங்களுமாகி ஆச்சரியமான இப்பிறவிகளிலே பிறந்த தனியனும், பிறப்பு இல்லாதவனும், பெரிய கடலிலே சேர்ந்திருக்கின்ற உபகாரகனும், பழம் கரும்பின் சாறு சாற்றின் கட்டி தேன் அமுது இவை போன்ற இனியனுமான எம்பெருமானை வெறுப்பு இல்லாமல் துதித்து ஆனந்த மேலீட்டினால் நடனம் செய்யுமவர்கள் எல்லாவற்றையும் அறிந்த அறிவுள்ளவர்கள் ஆகின்றார்கள்.
வி-கு : ‘ஆகிப் பிறந்த தனியன்’ என்க. முழுது உணர் நீர்மையினார்-முற்றறிவினர். குனிப்பார்-வினையாலணையும் பெயர்,ஈடு : ஆறாம் பாட்டு. 1‘ஈசுவரனுடைய இனிமையைச் சொன்னால் உளமும் செயலும் வேறுபட்டவர்கள் ஆவார்களாகில், அவர்கள் எல்லா அறிவின் பலமும் கைவந்தவர் ஆவார்கள்,’ என்கிறார்.
மனிசரும் மற்றும் முற்றுமாய் – 2‘தேவர்கள் மனிதர்கள் விலங்குகள் தாவரங்கள் இவற்றின் நடுவே அவதரித்தவனாய்’ என்கிறபடியே, மனிதர் தேவர்கள் சொல்லப்படாத விலங்கு தாவரங்கள் எல்லாமாய். மாயப் பிறவி பிறந்த – ஆச்சரியமான பல அவதாரங்களை எடுக்குமவன். கர்மங்கட்குக் கட்டுப்படாதவனாய் இருந்து கர்மங்கட்குக் கட்டுப்பட்டவர்களும் பிறக்கமாட்டாத பிறவிகளிலே பிறக்கின்றானாதலின், ‘மாயப்பிறவி’ என்கிறது. ‘ஒரு காரணமும் இல்லாமல் காரணமுடையார்க்கும் அவ்வருகே பிறக்க வல்லவன்’ என்பதாம். தனியன் – இப்படி அவதரித்தும், போகும் அன்று உடுத்த 3ஒலியலோடே ஆயிற்றுப் போவது. ‘சேர்ந்து போனார் ஒருவரும் இலரோ?’ எனின், தொடர்ந்து செய்த இவ்வவதாரங்களிலே இராமாவதாரம் ஒன்றிலும் ‘நாலிரண்டு பேர் கூடப்போனார்கள்’ என்று கேட்டோமித்தனையேயன்றோ? ‘சேர்ந்து போனார் இலரேயாயினும், இங்கிருந்த நாளில் பரிவருண்டோ?’ எனின், ‘இவன் நமக்காகப் பிறந்தான்’ என்று நினைக்கைக்கும் ஒருவரும் இலரே அன்றோ? பிறந்த அது தன்னையே 4குற்றமாக விரித்துப் பேசுகின்றவர்களேயன்றோ உளராவது?
பிறப்பிலிதன்னை – இப்படிப் பிறருக்காக அவதரித்தால் அவ்வவதாரத்தால் பயன் முழுதும் பெறாதே ஒழிந்தாலும், ‘நாம் வருந்தியும் இது பலித்தது இல்லையே!’ என்று கைவாங்குகையன்றி,இவர்களுக்கு ஒன்றுஞ்செய்யப்பெற்றிலோம்’ என்று, பிறந்திலனாய்ப் பிறக்கைக்கு ஒருப்பட்டானாய் இருப்பவன். தடங்கடல் சேர்ந்த பிரானை – இன்னமும் பிறக்கைக்குத் தவயோகம் பண்ணுகிறபடி. திருப்பாற்கடலிலே அநிருத்த உருவமாய்க் கொண்டு கண்வளர்ந்தருளுகிற இடம் அவதாரத்திற்கு மூலமேயன்றோ? 1‘வெள்ளத்தரவில் துயிலமர்ந்த வித்தினை’ என்றார் ஸ்ரீஆண்டாள். 2இவர்கள் பிறவி என்னும் பெருங்கடலைப் போக்குகைக்காக அன்றோ அவன் கடலிலே வந்து கிடக்கிறது? கனியை – 3கடல் பழுத்தபடி. அன்றி, ‘பாலிலே பழுத்த படி’ என்னுதல். 4அங்குச் சாய்ந்து கிடக்கிற போதை வடிவழகால் வந்த இனிமையை ‘சர்வரஸ:’ என்று ஒரு சொல்லாலே சொல்லமாட்டார்; எல்லாம் சொல்லப்புக்கால் சொல்லித் தலைக்கட்டமாட்டார்; அவற்றால் போதரும் கூற்றிலே வைத்துச் சிலவற்றைச் சொல்லுமித்தனை, ஆகையாலே, ‘கனியை’ என்கிறார்.
கனியை கரும்பினின் சாற்றை கட்டியை தேனை அமுதை – கண்ட போதே நுகரவேண்டும் கனியும், கோது அற்ற இனிய கருப்பஞ்சாறும், உடல் முழுதும் ரசத்தையுடைய கட்டியும், எல்லா ரசமும் சேர்ந்திருக்கிற தேனும் நுகர்கின்றவனை என்றும் உள்ளவனாகச் செய்யும் அமுதமும் போலே இனியனானவனை. கண்ட போதே நுகரலாம்படியாய், அதுதான் கோதுகழிந்த ரசாமிசமாய், அதுதன்னைத் திரட்டினதாய், அதுதான் பருகலாம்படியாய், இனிமையேயன்றிச் சாவாமல் காக்கமதாய் இருக்கையைத் தெரிவித்தபடி. மேல் திருவாய்மொழியில் ‘நலங்கடல் அமுதம்
என்கோ!’ என்று தொடங்கி அனுபவித்த இனிமை பின் நாடின படி இது.
முனிவு இன்றி ஏத்திக் குனிப்பார் – பகவானுடைய குணங்களைக் கேட்டால் அசூயை பண்ணாமல் ஏத்திக் குனிப்பவர்கள்; ‘ஆனால் ஈசுவரனிடத்தில் அசூயை பண்ணுவர்களோ?’ எனின், தன்னைப் போல்வான் ஒருவனுக்கு ஓர் உயர்வு சொல்லுகையன்றிக்கே, ஈசுவரனுக்கு ஓர் உயர்வு சொன்னால் அது பொறாதேயன்றோ இருப்பது? குணம் கண்ட இடத்தே குற்றங்களை ஏற்றுகிறவர்கள் பலரேயன்றோ? ஆதலால், 1அவதார சௌலப்யமாகிற இம்மஹா குணத்திலே இறைமைத்தன்மை இல்லை என்ற குற்றத்தை ஏற்றாமல் என்கிறார். 2‘நம்முடைய சொரூப ரூப குண விபூதிகளைச் சொன்னவிடத்தில் சிவீல் என்று இருந்திலை; உன்தனை அதிகாரிகளைக் கண்டிலோம்; இன்னம் சொல்லிச் சொல்லாதவைகளையும் சொல்லும்படி கிட்ட வாராய்,’ என்றானேயன்றோ ஸ்ரீ கீதையில்?
‘ஆனால், அனுகூலர் அசூயை பண்ணுவர்களோ?’ எனின், 3சங்கநிதி பதுமநிதிகளைக் கொண்டு வந்து கொடுத்து, கடலைச் செறுத்துப் படைவீடு செய்து, தங்கள் எதிரிகளோடே புறப்பட்டு மார்விலே அம்பு ஏற்று, இப்படி ரக்ஷியாநின்றால், 4சோறு சுட்டவாறே, ‘இது ஒரு கிருஷ்ணனும், நடுவில் பெருங்குடியாட்டமும் என் என்பதுதான்?’ என்னாநிற்பர்கள். மேலும், ‘காக்குந் தன்மை என்பது ஒரு சொல் அளவேயாய் இவர்களுக்கே தாழ்வு செய்து திரிந்தேன்; நல்லது கண்டால், எனக்கு என்று இராமல் பகுத்திட்டு ஜீவித்துப் போந்தேன்; இங்ஙனம் இருக்கவும், இவர்கள்
கூறும் கொடுஞ்சொற்களை எல்லாம் பொறுத்துப் போந்தேன்,’ என்றான் அன்றோ? மேலும், 1ஒரு மணி கெட்டு யாரேனும் கொண்டுபோக, கிருஷ்ணன் தலையிலே ஏறிட, நம்பி மூத்தபிரானும் இது சுட்டித் தீர்த்தயாத்திரை போகவேண்டும்படி இருந்ததேயன்றோ?
இனி, ‘முனிவு இன்றி ஏத்திக் குனிப்பார்’ என்பதற்கு, முனிவாகிறது, வெறுப்புத் தன்மையாய், அது இன்றிக்கே ஒழிகையாவது, கலங்குகையாய், அடைவு கெட்டு ஏத்திக் குனிப்பார் என்று பொருள் கூறுவாரும் உளர். முழுது உணர் நீர்மையினாரே – ‘ஒன்றை (பரம்பொருளை) அறிந்ததனாலே எல்லாம் அறிந்தவர் ஆகிறார்கள்,’ என்கிறபடியே, அவர்கள் எல்லாவற்றையும் அறிந்தவர்கள் ஆகிறார்கள்; அவர்கள் முற்றறிவினர்கள் ஆகிறார்கள்: ஞானபலமான இது உண்டான போதே ஞான விசேடத்தில் இல்லாதது இல்லையன்றே? ‘ஆயின், மனத்தின்கண் உள்ள ஞானத்தை அறிந்தவாறு என்?’ எனின், அவர்கள் சரீரத்தில் பிறந்த விகாரத்தைக்கொண்டே அவர்களுடைய ஞானமிகுதியை அறியலாம்.
‘குற்றமாக … பேசுகின்றவர்களே’ என்றது, சாபத்தாற்பிறந்தான் என்பது
போன்றவற்றைக் கூறல்.
‘கோதண்டத் தானத்தன் வாள்கதை நேமியன் கோலவட
வேதண்டத் தானத்தன் இன்னிசை யான்மண்ணும் விண்ணுமுய்ய
மூதண்டத் தானத் தவதரித் தானெனின் முத்தி;வினைத்
தீ்தண்டத் தானத் தனுவெடுத் தானெனில் தீநரகே.’
என்றார் பிள்ளைப்பெருமாளய்யங்கார்.
செம்பிலும் கல்லிலும் வெட்டி வைத்தால் நிரந்தரம்
ஸ்ரீ பாஷ்யம் செம்பிலும் ஸ்ரீ பாஷ்யகாரர் அருளி வைத்து கருட சந்நதி பின்னில் இருக்கலாம்
மானிடர் அல்ல என்று நிச்சயம்
அனைத்தும் எம்பெருமான் விபூதி கீழ் திருமொழியில்
இதில் என்னாத மானிடத்தை கழித்து கூட்டி -உத்தேயம் காட்டி அருளுகிறார் –
நிந்தித்தும் ஆதரித்தும்
இவ்வாகாரம் கிடக்கச் செய்தே -எம்பெருமான் சொத்து
எல்லாப்படிகளும் உடைத்து ஆழ்வாருக்கு
எல்லார் தன்மை யும் ஆழ்வாரும் உண்டே
முக்தர் படி கீழ் திரு வாய் மொழி
முமுஷுக்கள் படியில் இத் திருவாய் மொழி
ஆக இரண்டு நிலையம் உண்டே ஆழ்வாருக்கு
ஈஸ்வர போக்யதை அனுசந்தித்து -உருகி விகிர்த்தராய் போகிறவர்கள்
நினைத்தவர்களை கொண்டாடுகிறார் -இதில்
முனிவின்றி ஏத்தி -முழுதும் உணர்ந்தவர்
மனிசராய் -மாயப் பிறவி பிறந்த தனியன் பிறப்பிலி –
இனிமையான வஸ்துக்கள் எல்லாம் -அவனே
முனிவு -கோபம் /
மனுஷ்யர் தேவர் திர்யக் ஸ்தாவரங்கள் யோநிகள் தோறும் அவதரித்து –
கைக்கு எட்டும்படியான மா மரமாகவும் அவதரித்தானாம் –
சுர நர -மாயாப்பிறவி ஹேது இன்றி
மாயம் -அஜோபிசன் சம்பவாமி ஆத்மா மாயய –
பூதானாம் ஈச்வரனாய் இருந்த போதும் –
மாயம் -இல்லாத ஒன்றது செப்பிடு விதை காரன் சங்கரர்
மாயா -ஞானம் -சங்கல்பத்தால் இச்சையால் பிறந்து ராமானுஜர் –
அகர்ம வச்யராய் இன்றி -கிருபை அடியாக பிறந்து –
தனியன் -தனிமையாக -தனிப்பட்டவன்
உத்தரியதுடன் போகிறான் –
நாலு இரண்டு பேர் கூடாமல் –
தனியாக
இவர் நமக்காக பிறந்தார் நினைப்பவரும் இல்லையே
சூழ்ந்து அடியார் -தோன்றாது விட்டாலும் -வாழ்த்துவர் -மாயன் -திரு விருத்தம் பாசுரம்
பிறந்ததே குற்றமாக கொள்வார்களே உண்டே
அவஜானந்தை மூடா பரார்தமாக அவதரித்து -ஒன்றும் செய்யப் பெற்றிலேன் -பிறக்க மீண்டும் உத்தேசித்து –
பிறந்தது இல்லை என்று கொள்கிறான் பிறப்பிலி
திருப்பாற்கடல் -யோகி -அவதார மூலம்
வெள்ளத் தரவில் துயில் அமர்ந்த வித்து
பிறவி என்னும் பெரும் கடல் வற்ற போக்க அவன் கடலில் சேர்ந்து
கனி -கடலில் பழுத்த கனி சாய்ந்து கிடந்த வடிவு அழகு போக்யதை
சர்வ ரச -ஒரே சப்தத்தால் சொல்ல மாட்டார் –
எல்லாம் சொல்லப் புக்காலும் சொல்லி தலைக்கட்ட மாட்டார்
கரும்-கோள் கனிந்த ரசம்
கட்டி -ரசமே -எல்லா இடத்திலும் தித்திக்கும்
தேன் -பருகலாம்படி
அமுதம் -போக்யதை மட்டும் இன்றி தன்னை சாவாமல் காத்து
முனிவின்றி -குறைவாக
அவருக்கு போதாதே
குக்யதமம் அனசூயைவே -பக்தி ரசம் உபதேசிக்க போகிறேன் கீதை
ஸ்வரூப குணம் -சொலி சொல்லாதவை சொல்லும்படி கிட்ட வாராய்
யாதவர்களுக்கு பலவும் செய்து –
கடலை செறுத்து
எதிரிகளாலே புறப்பட்டு மார்பில் அம்பு ஏற்று
சோறு சுடவில்லை -சொல்லி குறைப்பட்டு நிற்பார்கள்
ஐஸ்வர் யாதி -பாஷணங்களை பொறுத்துப் போந்தான்
சமந்தக மணி வ்ருத்தாந்தம்
கண்ணன் மேல் பழி வந்து –
ஜாம்பவதி திருக்கல்யாணம் –
நம்பி மூத்த பிரானும் இதனால் தீர்த்த யாத்ரைபோகும்படி
முனிவின்றி -இப்படி இல்லாமல்
முநித்வம் -இன்றிக்கே
அறிவு கேடு ஏத்தி குதிப்பார் என்னவுமாம்
ஒன்றை அறிந்தால் -எல்லாம் அறிந்தவர் -முழுதுவதும் உணர்ந்த
ஞானம் பலம் கிடைத்த பின்பு –
சரீரம் பிறந்த விகாசம் கொண்டு ஞானாதிகர்என்று அறியலாம்
நஞ்சீயர் திருவடிகளே சரணம்.
நம்பிள்ளை திருவடிகளே சரணம்.
வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.
Leave a Reply