திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -3-5-5-ஸ்ரீ M.A V .சுவாமிகள் —

சாது சனத்தை நலியும்
கஞ்சனைச் சாதிப் பதற்கு
ஆதிஅம் சோதி உருவை
அங்குவைத்து இங்குப் பிறந்த
வேத முதல்வனைப் பாடி
வீதிகள் தோறும்துள் ளாதார்
ஓதி உணர்ந்தவர் முன்னா
என்சவிப் பார்மனி சரே?

    பொ-ரை : ‘நன்மக்களை வருத்திய கஞ்சனைக் கொல்லுவதற்காக ஆதியஞ்சோதியுருவை அங்கு இருக்கிறபடியே தன் பக்கலிலே வைத்துக்கொண்டு இங்கே பிறந்த வேதமுதல்வனைப் பாடி வீதிகள் தோறும் துள்ளாதவர்கள், ஓதி உணர்ந்த ஞானிகளுடைய சந்நிதியில் எதனை ஜபிப்பார்கள்? இவர்கள் மனிதர்களா? அல்லர்,’ என்றவாறு.

    வி-கு : ‘சாதிப்பதற்குப் பிறந்த வேதமுதல்வன்’ என்க. சாதித்தல் – கொல்லுதல்; ‘சா’ என்பது பகுதி. ‘தொறு என்பது, தான் சார்ந்த மொழிப்பொருட்குப் பன்மையும் இடமாதலும் உணர்த்தி நிற்கும்,’ என்பர் சேனாவரையர். ‘சேரி தோறிது செல்வத் தியற்கையே’ என்பது சிந்தாமணி.      (செய். 129.) ‘தொறு’ என்பது, ‘தோறு’ என நீட்டல் விகாரம் பெற்று வந்தது. துள்ளாதார்: வினையாலணையும் பெயர். ‘மனிசரே’ என்பதில் ஏகாரம், எதிர்மறையின்கண் வந்தது.ஈடு : ஐந்தாம் பாட்டு. 1‘அடியார்களுடைய விரோதிகளை அழிக்கும்பொருட்டு அசாதாரண திவ்ய ரூபத்தோடு கூடினவனாய்க்கொண்டு திருவவதாரம் செய்த குணத்தை அநுசந்தித்தால் உள்ளமும் செயலும் வேறுபடாதார் மக்கள் ஆகார்,’ என்கிறார்.

    சாது சனத்தை நலியும் கஞ்சனைச் சாதிப்பதற்கு – சாது சனத்தை நலிந்த கஞ்சனை அழிக்கைக்காக; ‘சாதுசனம்’ என்றது, ஸ்ரீ வசுதேவரையும் தேவகியாரையும். ‘கஞ்சன் இவர்களை நலிந்தானோ?’ எனின், 2‘தந்தையாக அடைய வேண்டும் என்று நிச்சயித்தார்’ என்று தான் அவதரிக்க நினைத்த இவர்களையன்றோ அவன் நலிந்து நெடுநாள் சிறையிட்டு வைத்தது? 3‘சாதுக்களுடைய நலத்திற்காகவும் துஷ்டர்களுடைய நாசத்திற்காகவும் தர்மத்தை நிலை நிறுத்தும்பொருட்டும் ஒவ்வொரு யுகத்திலும் அவதரிக்கிறேன்’ என்கிற பிரமாணப் பிரசித்தியைப் பற்ற ‘சாது சனத்தை நலியும் கஞ்சனைச் சாதிப்பதற்குப் பிறந்த வேத முதல்வன்’ என்கிறார்.

    ஆதி அம் சோதி உருவை – இவ்வருகு உண்டான காரியவர்க்கத்துக்கு எல்லாம் ஊற்றாய், ஞானம் முதலிய குணங்களுக்குப் பிரகாசகமாய், ‘குணங்களின் கூட்டமே விக்ரஹம்’ என்று மயங்குவார்க்கும் மயங்கலாம்படியேயன்றோ திருமேனிதான் இருப்பது? அங்கு வைத்து இங்குப் பிறந்த – அங்கு இருந்தபடியே வைத்துக்கொண்டு இங்கே வந்து பிறந்த; 4‘என்னுடையதான தன்மையை நிலைக்களமாகக் கொண்டு என்னுடைய சங்கற்பத்தினால் அவதரிக்கிறேன்,’ என்றான் ஸ்ரீ கீதையில். ‘நித்திய விபூதியில் உள்ளார் 5அனுபவிக்கிறபடியே லீலா விபூதியில் உள்ளாரும்அனுபவிக்கும்படியாக அவதரித்தான்,’ என்றபடி. படி – திருமேனி; 1‘படிகண்டு அறிதியே’, 2‘செவ்விப் படிக்கோலம்’ என்பன அருளிச்செயல். 3‘பல படிகளாலும் இவர்களை நாம் பாதுகாக்க வேணும்,’ என்று அவன் வந்து அவதரித்தால் ஒரு படியாலும் திருந்தாதபடியே அன்றோ இவர்கள் படி இருப்பது? ‘ஆயின், பல படிகளால் அவதரிக்குமோ?’ எனின், 4‘கர்மம் காரணமான பிறப்பு இல்லாமலிருக்கிற சர்வேசுவரன் இச்சையடியாக அநேக விதங்களாக மற்றைய இனத்தினனாய் வந்து அவதரிக்கிறான்,’ என்றும், 5‘அந்தப் பரமாத்துமாவினுடைய சரீரமானது பஞ்ச பூதங்களின் சேர்க்கையால் உண்டாயது அன்று,’ என்றும், 6‘அந்தப் பரமாத்துமாவுக்குச் சதை கொழுப்பு எலும்பு இவைகளால் உண்டான இவ்வுலக சம்பந்தமான சரீரம் இல்லை,’ என்றும், 7‘கல்பந்தோறும் கல்பந்தோறும் உம்முடைய திருமேனியோடு அவதரித்தவராய் அடைந்தவர்களான எங்களைக் காப்பாற்றவேண்டும்,’ என்றும், 8‘முன்னை வண்ணம் பாலின் வண்ணம் முழுதும் நிலைநின்ற, பின்னை வண்ணம் கொண்டல் வண்ணம்’ என்றும், 9‘பாலின் நீர்மை செம்பொன் நீர்மை பாசியின் பசும்புறம், போலு நீர்மை பொற்புடைத் தடத்து வண்டு விண்டு உலாம் நீல நீர்மை’ என்றும் சொல்லுகிறபடியே பல படிகளாலே அன்றோ திருவவதரிப்பது?

    ‘பல விக்கிரஹங்களாலே’ என்றபடி. இப்படிப் பிறவா நின்றாலும், 10‘பிரபுவான கிருஷ்ணன் கர்ப்பவாசம் செய்யும் தன்மையை அடையவில்லை; யோனியிலும் வசிக்கவில்லை’ என்கிறபடியே, கர்ப்பத்தில் சம்பந்தமில்லை. ‘இதுதான் கூடுமோ?’ என்ன ஒண்ணாது; ‘என்னை?’ எனின், இக்ஷ்வாகு வமிசத்திலே யுவநாஸ்வான் என்பான் ஒருவன் மந்திரத்தாலே சுத்தம் செய்யப்பட்ட தண்ணீரைக் குடிக்க, அவன் வயிற்றிலே கர்ப்பம் உண்டாயிற்றேயன்றோ ஒரு சத்தி விசேஷத்தாலே? அங்கு ஆணும் பெண்ணுமாய்க் கலந்து பிறந்தமை இல்லையே? அப்படியே, இங்கும் சர்வ சத்தி யோகத்தாலே இவ்வர்த்தம் பொருத்தமாகத் தட்டு இல்லையேயன்றோ? இதற்குப் பிரமாணம் 1‘அஜாயமாந:’ என்ற சுருதியேயன்றோ? அதனைச் சொல்லுகிறார் மேல்:

    வேத முதல்வனைப் பாடி – வேதங்களால் அறியப்படுகின்றவனைப் பாடி; அன்றி, ‘வேதங்களாலே முதல்வனாகச் சொல்லப்படுகின்றவனைப் பாடி’ என்னுதல். ‘பிறந்த முதல்வனைப் பாடுகிறது என்? வளர்ந்த விதங்களையும் பாடலாகாதோ?’ எனின், ‘பிறந்தவாறு எத்திறம்?’ என்னா, வளர்ந்தவாற்றில் போகமாட்டாதே அன்றோ இருப்பது? 2‘எத்திறம்!’ என்றால், பின்னையும் ‘எத்திறம்!’ என்னுமித்தனை. 3‘உபாசகர்கள் சர்வேசுவரனுடைய அவதாரத்தைச் சுற்றும் சுற்றும் வாரா நிற்பர்கள்,’ என்கிறபடியே, அதனைச் சுற்றும் சுற்றும் வாராநிற்குமத்தனை. வீதிகள்தோறும் துள்ளாதார் – மனிதர்கள் உள்ள பெருந்தெருவேயன்றி, குறுந்தெருவோடு நெடுந்தொருவோடு ஆடாதார். 4இங்கே, மிளகாழ்வான் வார்த்தையை நினைப்பது. ‘இப்படி ஆடாதாருமாய், அறிவு கேடருமாய் இருப்பாரையோ நீர் நிந்திப்பது?’ என்னில், 1ஓதி உணர்ந்தவர் முன்னா – கற்றுக் கேட்டு முற்றறிவினர்களாய் இருக்கிறவர்கள் முதலாக. ‘இவர்கள் நிந்திக்கத் தக்கவர்களில் முதன்மை பெற்றவர்களானபடி யாங்ஙனம்?’ எனின், வித்துவான்கள் சாஸ்திரத்தைக் கடந்தால் அவர்களுக்குத் தண்டனை அதிகமேயன்றோ? என் சவிப்பார் – ‘இவர்கள் இருந்து 2செவிப்பறை பறைந்து ஜபிக்கிறது என்?’ என்னுதல். ‘இவர்கள் சாப அநுக்கிரஹங்களைச் செய்யும் ஆற்றலரோ?’ என்னுதல். 3மனிசரே – இவர்கள் சாஸ்திரங்களுக்கு வசப்பட்டவர்களாய் மனிதப் பிறவியில் பிறந்தமை உண்டாகமாட்டாது என்னுமதினும் ஐயம் இன்மையைத் தெரிவிக்கிறார். ‘மானிடவர் அல்லர் என்று என்மனத்தே வைத்தேனே’ என்றார் திருமங்கை மன்னன்.

    4மேல் திருவாய்மொழியிலே, அவன் உடைமை என்னும் தன்மையாலே இவ்விபூதிமுழுதும் உத்தேஸ்யம் என்று அனுபவித்தார்; இத்திருவாய்மொழியில், இவ்விபூதிதன்னிலே, ‘எண்ணாத மானிடத்தை எண்ணாத போதெல்லாம் இனியவாறே’ என்றும், ‘பேராளன் பேரோதும் பெரியோரை ஒருகாலும் பிரிகிலேனே’ என்றும் சொல்லுகிறபடியே, சிலரைக் கழித்துச் சிலரைக் கூட்டிக்கொள்ளாநின்றார்; ‘இது சேருகிறபடி யாங்ஙனம்?’ என்னில், 1இவ்வாகாரமும் கிடக்கச்செய்தே, 2வேறு ஆகாரம் தோற்றாதபடியான பாகம் பிறந்தவாறே, அவன் உடைமை என்னும் தன்மையே தோற்றி, மேல் திருவாய்மொழியில் உபாதேயம் என்று அநுசந்தித்தார். 3‘இவர்தாம் எல்லார் படிகளும் உடையராயன்றோ இருப்பது? முத்தர் படியையுடையர் என்னுமிடம் சொல்லிற்று மேல் திருவாய்மொழியாலே. முமுக்ஷீக்கள் படியையுடையர் என்னுமிடம் சொல்லுகிற இத்திருவாய்மொழியாலே,’ என்று அருளிச்செய்வர்.

அனுபவிக்கிற படியே’ என்றது சிலேடை; அனுபவிக்கிற பிரகாரமும்,
அனுபவிக்கிற திருமேனியும்.

இந்த ஐதிஹ்யத்தை இத்திருவாய்மொழியில் எட்டாம் திருப்பாசுரத்தின்
வியாக்கியானத்தில் காணலாகும். ‘துள்ளி ஆடினால் உலகத்தார் சிரியாரோ?’
என்ன, அதற்கு விடையாக, ‘மிளகாழ்வான் வார்த்தையை நினைப்பது’
என்கிறார். இதனால், ‘உலகத்தாருடைய நகையே பூஷணமாய்விடும்,’ என்பது
கருத்து.

மனிசரே’ என்பதில் ஏகாரம்: எதிர்மறை. ‘மனிதர் அல்லர்’ என்றபடி.
அதற்குப் பிரமாணம், ‘மானிடவரல்லர்’ என்னும் பாசுரம். இது, பெரிய
திருமொழி, 11. 7 : 9.
இதற்கு, ஈட்டு வியாக்கியானத்திலுள்ள பொருள் பின்
வருமாறு: ‘மனிதப் பிறவிக்கும் பலம் பகவானை அடைதலேயாயிருக்க, அது
இல்லாதார் மனிதரே அல்லர்’ என்கிறார்; இனி, ஈசுவரன் கிருபையாலும்
செய்யலாவதில்லை; ‘செம்பிலும் கல்லிலும் வெட்டிற்று’ என்னுமாறு போன்று.
என்றது, ‘ஈசுவரன் கை விட்டாலும் விடாத என் நெஞ்சிலும் அவர்களை
உபேக்ஷித்தேன் என்கிறார்,’ என்றபடி.

குப்த கட்டம் தன்னை மறைத்துக் கொண்ட இடம் சரயுவில் இன்றும் சேவிக்கலாம்
கிருஷ்ண அவதாரத்திலும் ராம அவதாரத்திலும் -சரம திருமேனி –
கடைசியில் த்ரௌ பதிக்கு கடன் –
ஜகன்னாத திருமேனி 12 வருஷம் ஒருதடவை மாற்றி -சமுத்ரத்தில்
-முதல் நாள்  இரவில் -பழைய திருமேனி -புதிய திருமேனி பூஜை
செய்பவர் யாரும் இருக்க மாட்டார்கள்
கேள்விபட்ட விஷயம் –
பஞ்ச உபநிஷத் திருமேனி இதர சஜாதீயம் ஆக்கி
அவதரித்து கண்முன்னே -சகல ஜன விஷயம் ஆகும்படி –
இதை கேட்டும் உருகாதவர் அவஸ்துகள் என்கிறார் –
பிறக்கும் பொழுதே சங்கு சக்கரம் உடன் அவதரித்து –
சாதி சனத்தை நலியும் கஞ்சன் –
தண்ட காரண்யா ரிஷிகள் பட்ட பாடு நாம் இன்று பட வில்லையே
உடம்பை காட்டி –
அதுவே காரயமாக கொண்ட கஞ்சன்
அங்கு வாய்த்த படியே -ஆதி  அம் சோதி -உருவை –
வீதிகள் தோறும் பாடி துள்ளாதார் –
ஒதி உணர்ந்தவர் -என் செவிப்பார்
சாது சனம் வசுதேவர் தேவகி போல்வாரை
பிதரம் மாதரம் யார் என்று தெரிந்து எடுக்கப்பட்டவர்கள் –
பரித்ராணாம் சாதுநாம் இத்யாதி –
சோதி தேஜஸ்
அழகிய
ஆதி மூல காரணம்
மூத்ததாய் -ஞானாதி குணங்களுக்கு பிரகாசமாய் சோதி -குணா
சமுதாயமே விக்ரகம் என்று பிரமிப்பாருக்கும் -அம் -மூன்று விசெஷணங்கள்

வைத்து பிறந்த -அங்கே உள்ள திருமேனி –
கோயிலிலே வைத்து பார்த்தேன் -பிரயோஜனம் இன்றி வைத்து
அப்படியே கொண்டு பிறந்தான்
ஸ்வாம் பிரகிருதி அதிஷ்டாயாம் -தன்னுடைய பிரகிருதி -திவ்ய சமஸ்தானம்
நித்ய சூரிகள் அனுபவிக்கும் படியை -திருமேனியை நாமும் அனுபவிக்க
படி -திருமேனிக்கு பெயர்
படியே
செவ்விப்படி கோலம் திருமேனி அர்த்தம்
பல படிகளாலும் இவனை ரஷிக்க அவதரித்தான் -பல வகைகளால் -பல திருமேனி கொண்டான்
ஒருபடியாலும் திருத்த முடிய வில்லை
எந்த வகையிலும்
எந்த திருமேநியாலும்
இவர்கள் படி இப்படி
தேகம் –
அஜாயமான பகுதா விஜாயதே பலபடியாக
ந பூத சர்க்கம் -சத்ய -கல்பே கல்பே ஜாயமானே ஸு மூர்த்தி பிரமாணங்கள் உண்டே

முன்னை வண்ணம் பாலின் வண்ணம் –
செம்பொன் நீர்மை -பாசியின் பசும் புறம் போல் நீர்மை
பாலின் -நீர்மை -நீல நீர்மை யுகம் தோறும்
பலபடிகளால் திருமேனி
இப்படி பிறவா நின்றாலும் -கர்பத்தில் அந்வயம் இன்றி –
யோநியில் உட்காராமல் –
இஷ்வாகு -வம்சத்தில் மந்திர பூர்வகமான -தண்ணீர் குடிக்க -கரு உண்டானதே
அவனுக்கே பிறந்ததே -சக்தி விஷயத்தாலே
இங்கும் சர்வ சக்தி யுக்தன் கர்ப்ப வாசம் இன்றி புக தட்டில்லை
அஜாயமான சம்சாரிகள் போலே பிறவாதவன் –

அகடிதகடனா சமர்த்தன்
வேத முதல்வன் -வேதத்தாலே அறியப்படுபவன்
பிறந்தவாறு எத்திறம் என்ன வளர்ந்தவாறு போக ஒட்டாமல்
பிறந்த சொல்லி மேலேபோகவில்லை எத்திறம் –
மோகித்து -பல எத்திறம்
தஸ்ய யோனி லீலா -அறிவு கொண்டு மோகித்து ஈடுபடுகிறார்கள் பரிஜானாந்தி
சுற்றி சுற்றி அங்கேயே எத்திறம் -உருகாதவர்கள்
வீதிகள் துள்ளாதார் -மிளகு ஆழ்வான் விருத்தாந்தம்
தோறும் -குறுக்கு சந்து நெடு வீதி
பார்க்க பிரயோஜனம் இன்றி குதிப்பதே பிரயோஜனம்
கற்று கேட்டு சர்வஞ்ஞாராக இருப்பார்கள் -அவர்கள் முன்னாக -நிந்தித்து
விஷயம் அறிந்தவர்கள் செய்யும் தப்புக்கு தண்டனை அதிகம் கொடுக்க வேண்டுமே
இருந்து செவி பறை திறந்து ஜபிப் பது எதற்கு
ஒத்து உணர்ந்தவராய் இருந்தும் பிரயோஜனம் இல்லையே

பண்பன் பெயரை சொல்லாமல் ஆடாமல் உருகாமல் -இருப்பது என்ன பிரயோஜனம் –
என் சவிப்பார் சாபம் கொடுத்தாலும் ஒன்றும் பழிக்காதே
அவர்கள் மனிசரோ
மானிட ஜன்மத்தில் பிறந்து இருந்தாலும் –
சாஸ்திர வச்யதை மனுஷ்யர் -உண்டாக மாட்டாது
மானிடர் அல்ல என்று என் மனத்தில் வைத்தேன்
ஆடு மாடு போலே தான்
மானுடர்வர் அல்லாதார் என்று என் மனத்தே வைத்தேன் கலியன்
ஈச்வரனாலும் கிருபை பண்ணி போக்க முடியாத
கல்லிலும் செம்பிலும் வெட்டி வைத்த -கல்வெட்டு அழியாத –
ஸ்ரீ பாஷ்யம் செம்பு பட்டயம் எழுது வைத்து இருக்கிறாராம்

நஞ்சீயர் திருவடிகளே சரணம்.

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply