வம்புஅவிழ் கோதை பொருட்டா
மால்விடை ஏழும் அடர்த்த
செம்பவ ளத்திரள் வாயன்
சிரீதரன் தொல்புகழ் பாடிக்
கும்பிடு நட்டம்இட்டு ஆடிக்
கோகுஉகட்டு உண்டுஉழ லாதார்
தம்பிறப் பால்பயன் என்னே
சாது சனங்க ளிடையே?
பொ-ரை : ‘வாசனையோடு மலர்கின்ற மலர் மாலையையுடைய நப்பின்னைப் பிராட்டி காரணமாகப் பெரிய இடபங்கள் ஏழனையும் கொன்ற செம்பவளத் திரள் வாயன், சிரீதரன், அவனுடைய இயல்பாகவே அமைந்துள்ள புகழ்களைப் பாடி, வணக்கத்தோடு நடனத்தையும் செய்து ஆடி, அடைவு கேடான ஆரவாரத்தைச் செய்து திரியாதவர்களுடைய பிறப்பால், நன்மக்கள் நடுவில் என்ன பயன் உண்டு? ஒரு பயனும் இன்று,’ என்பதாம்.வி-கு : ‘பொருட்டாக’ ஈறு கெட்டது. ‘தொல்’ என்பது, ஈண்டு இயல்பினைக் குறித்தது. ‘கோகுகட்டு’ என்பதனை, ‘கோகு உகட்டு’ என்று பிரித்து, ‘அடைவு கேடு தலைமண்டையிட்டு’ என்று வியாக்கியாதா அருளிச்செய்யும் பொருள் நினைவில் இருத்தற்பாலது. உழலாதார் – வினையாலணையும் பெயர்.
ஈடு : நாலாம் பாட்டு. ‘நப்பின்னைப் பிராட்டிக்காக ஏழு எருதுகளையும் அடர்த்து அவளோடே கலந்த காதல் குணத்தை அநுசந்தித்து ஈடுபடாதவர்கள், ஸ்ரீ வைஷ்ணவர்கள் நடுவே என்ன பிரயோஜனத்துக்காகப் பிறந்தார்கள்?’ என்கிறார்.
வம்பு அவிழ் கோதைபொருட்டா – நறுநாற்றம் கமழாநின்றுள்ள மாலையைத் தரித்த மயிர் முடியையுடைய நப்பின்னைப்பிராட்டியின் நிமித்தமாக. வம்பு அவிழ் வாசையோடு மலர்ந்த. கோதை – மாலை; மயிர் முடிக்கு ஆகுபெயர். நப்பின்னைப் பிராட்டியை ஒப்பித்து நிறுத்தினார்கள் ஆயிற்று ‘இந்த இடபங்களை வென்றார்க்கு இவளைக் கொடுக்கக் கடவோம்’ என்று. ஒப்பனையழகையும் மயிர் முடியையுங்கண்டவாறே தன்னைப் பேணாதே ‘தவாஸ்மி – உனக்காக இருக்கிறேன்’ என்று அவளுக்காகத் தன்னை ஓக்கினான் என்றபடி. மால் விடை – பெரிய இடபங்கள். வடிவில் பெருமை தன்னைக் கண்ட போதே பிற்காலிக்கும்படியாயிற்று இருப்பது; அதனால் ‘மால் விடை’ என்கிறார். ஏழும்-‘பெரியோர்களுக்குங்கூட நற்காரியங்களுக்குப் பல தடைகள் உண்டாகின்றன,’ என்று சொல்லுகிறபடியே, ஒன்று இரண்டு அன்றிக்கே, ஏழு விரோதிகள். அடர்த்த – பின்னர் அணையப் புகுகிறது அவள் தோள்களை ஆகையாலே 1கிரமப் பிராப்தி பற்றாமே ஒரு காலே ஊட்டியாக நெரித்தான் ஆயிற்று. செம்பவளம் திரள் வாயன் – விருப்பத்திற்குத் தடையாய் இருந்தவைகள் போகையாலே புன்முறுவல் செய்தபடி. அன்றியே, ‘அவை திருத்தோள்களுக்கு இரை போராமையாலே புன்முறுவல் செய்து நின்றபடி’ என்னுதல். சிரீதரன் – இவ்விடைகள் ஏழையும் வென்று வீர லக்ஷ்மியோடே நின்ற நிலை. அன்றி, ‘அவள்
அணைக்கும்படியாக நின்ற நிலை’ என்றுமாம். 1’பிராட்டி பெருமாளை அணைத்தது போன்று நப்பின்னைப்பிராட்டி அணைக்க நின்றபடி’ என்றவாறு.
தொல்புகழ் பாடி – அந்தப்புரத்திலுள்ளாரைப்போன்று சொரூபத்தோடு கட்டுப்பட்டதான காதல் குணத்தைப் பாடி; 2‘நின்வல மார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு’ என்பவர்களேயன்றோ அவர்கள்? கும்பிடு நட்டம் இட்டு ஆடி – வணங்குவது ஆடுவது. அன்றியே, அஞ்சலியுடன் ஆடவுமாம். கோகு உகட்டு – அடைவு கேடு தலைமண்டையிட்டு, உண்டு – 3அதுவேஜீவனமாய். உழலாதார் – இதுவே வாழ்க்கையாக நடத்தாதார். தம் பிறப்பால் பயன் என்னே சாது சனங்களிடையே – ‘கும்பிடு நட்டம் இட்டு ஆடிக் கோகு உகட்டு உண்டு உழலுகிறவர்கள் நடுவே இவர்கள் பிறந்த இத்தால் இவர்கள் தாம்கொண்ட பிரயோஜனம் என்? வைஷ்ணவர்கள் நடுவே இவர்கள் மனித சரீரம் எடுத்தது என்ன பிரயோஜனத்துக்காக?’ என்கிறார் என்றபடி. 1‘திருப்புன்னைக்கீழ் ஒருவர் இருக்குமிடத்திலே நம் முதலிகள் பத்துப்பேர் கூட நெருக்கிக்கொண்டிருக்கச்செய்தே, கிராமணிகள், மயிரெழுந்த பிசல்களும் பெரிய வடிவுகளும் மேலே சுற்றின இரட்டைகளுமாய் இடையிலே புகுந்து நெருக்குமாறு போலேகாண்’ என்று பிள்ளைப்பிள்ளை அருளிச்செய்வர்.
தந் திருஷ்ட்வா – பிரணயதாரையில் ரசிகத்வமேயாயிற்று முன்பு கண்டு
போந்தது, ‘அந்தப் போகத்துக்கு விரோதிகளானவற்றைப் போக்க வல்லர்’
என்று கண்டது இன்றாயிற்று. வேட்டைக்குப் போனால், ‘இன்ன
துஷ்டமிருகத்தைக் கொன்றார்; இன்ன ராக்ஷசனைக் கொன்றார்,’ என்று
கூடப்போனவர்கள் சொல்லக் கேட்குமத்தனை முன்பு; அவ்வளவன்றிக்கே,
கண்ணாலே கண்டது இன்றாயிற்று. ஸத்ருஹந்தாரம் – தம் திருமேனியில் ஒரு
வாட்டம் வாராமே எதிரிகளே நோவுபடும்படியாக. அம்போடே வெட்டோடே
போகாமே எதிரிகளை முதல் அற மாய்த்து வந்தவரை. மஹர்ஷீணாம்
சுகாவஹம் – பார்யை பக்கல் முகம் பெறுகைக்குப் பிரஜையை
எடுத்துக்கொண்டு போவாரைப்போலே, இருடிகட்கு விரோதிகளான
ராக்ஷசரைக் கொன்று பிராட்டியை அணைக்கைக்கு அது பச்சையாக வந்தார்.
பபூவ – ராக்ஷசருடைய குரூரத் தன்மையையும் பெருமாள்
சௌகுமார்யத்தையும் அநுசந்தித்து, ‘என் புகுகிறதோ!’ என்று ‘சத்தையில்லை’
என்னும்படியிருந்தவள், வெற்றியோடே கண்டு உளளானாள், ஹ்ருஷ்டா –
தர்மியுண்டானால் தர்மங்களும் உண்டாமிறே. வைதேஹீ – ‘வீரவாசியறியும்
குடியிலே பிறந்தவள்’ என்னுதல்; அன்றிக்கே, ‘ஒரு வில்லை முரிக்க
என்னைக் கொடுத்த எங்கள் ஐயர், தனியே நின்று பதினாலாயிரம்
ராக்ஷசரைக் கொன்ற வீரவாசியைக் கண்டாராகில், என்படுவரோ!’ என்று
அவரை நினைத்தாளாகவுமாம். பர்த்தாரம் – ‘ஐயர் நீர் வார்த்துக்
கொடுத்தவர்’ என்று விரும்பிப் போந்தாள் முன்பு: இப்போதாயிற்று
‘ஆண்பிள்ளை’ என்று அணைத்தது; ‘ஆண் வடிவாக இருக்கின்ற பெண்’
என்றவளேயன்றோ முன்பு? பரிஷஸ்வஜே – யுத்தவடு உள்ள இடமெங்கும்
திருமுலைத் தடத்தாலே வேது கொண்டாள். அப்படியே. நப்பின்னைப்
பிராட்டி அணைக்க நின்றபடி. பிராட்டி – சீதாபிராட்டி. பெருமாள் –
ஸ்ரீராமபிரான்.
பகவானுடைய குணங்களைக் கேட்டு ஆனந்தத்தால் வேறுபாடு
இல்லாதவர்கள் நடுவே வந்தால் அவர்களுக்கு அஸஹ்யமாயிருக்கும் என்று
கூறுதற்குத் திருவுள்ளம் பற்றி, அதற்கு ஆப்த சம்வாதம் காட்டுகிறார்,
‘திருப்புன்னைக் கீழ்’ என்று தொடங்கி. பிள்ளைப்பிள்ளை – கூரத்தாழ்வான்
சிஷ்யர்.
நப்பின்னை பிராட்டிக்காக வம்பு பரிமளம்
நப்பின்னை கூந்தல் பின்னை பெயர் காரணம் –
கோதை மாலை அணிந்தவள்
செம் பவள வாயை உடைய ஸ்ரீ தரன்
அவிழ்கை -பிரவகிக்கை
நறு நாற்றம் உடையவள் –
விசேஷணம் -கோதை பொருட்டா -கோதையை உடையவள் நப்பின்னை பிராட்டிக்காக
மால் விடை ஏழும் -அடர்த்த -நப்பின்னை பிராட்டி
சிலை இருத்த -சீதை பிராட்டி
வாராரும் முலை மடவாள் பொதுவாக இருவருக்கும் சொல்லி
அழகை பார்த்து ஒப்பித்து நிறுத்தி
ஒப்பனைஅழகையும் மயிர் முடியையும் கண்டவாறே
தன்னை பேணாதே தவாஸ்மி
தடுமாறி பாய்ந்தாலும் அனைய வேண்டிய வஸ்து இ றே
கருமாரி பாய்வது இன்றும் உண்டே
அடலாயர் தம் கொம்பினுக்கு
மால் விடை -வடிவில் பெருத்து கருமை பெருமை மால்
ஸ்ரேயாசி பஹு விக்னானி தடைகள் பல உண்டே சுபாஷிதம்
அடர்த்த -அநந்தரம் அனைய போவது இவள் தோள்
க்ரம ப்ராப்தி பாராமல் ஒன்றாக ஒருகாலே ஊட்டியாக கழுத்தை நிறுத்தி
செம்பவள -அப்பொழுது அபிமத விரோதி போகையாலே-ஸ் மிதம் பண்ணி
திரு தோள்களுக்கு இறை போகாமல் சிரித்தானாம்
ஸ்ரீ தரன் -வீர லஷ்மி உடையவன்
நப்பின்னை பிராட்டியும் ஸ்ரீ தானே
ஆலிங்கனம் கொண்டாள்
சீதை பிராட்டி த்ருஷ்ட்வ சத்ரு ஹன்தானாம்
மகரிஷி சுகம் தந்தவன்
அந்த ராமனை பார்த்து -முன்பு பிரணயி –
இன்று விரோதி போக்க வல்லவன் -இன்று கண்ணாலே கண்டு –
சத்ரு ஹன்தாரம் திருமேனியிலே வாட்டம் வாராமல் –
அம்போடு போகாமல் முழுக்க தீர்த்து -அடியோடு மாய்த்து
சுகாகவகம் மகா ரிஷிகள் -சமாதானம் பண்ண குழந்தை கொண்டு போவது போல்
இத்தை பச்சையாக கொண்டு அணைக்க
பெயர் சொல் சொல்லி வினை சொல்
ராமன் வந்தான்
வந்தான் ராமன்
வைதேகி ஹ்ருஷ்டா பகுவா -என்பதற்கு ரசமான வியாக்யானம்
இருந்தாள் -ஆனாள் –
ராஷசர் க்ரவ்யம் -பெருமாள் சுகுமாரம் அனுசந்தித்து -என்ன ஆகுமோ
இருப்பே கொள்ளாமல் இருக்க -மீண்டு
தான் உளள் ஆனாள் -பகுவா
சத்தை இன்றி இருக்க இப்படி தானுள
சந்தோஷம் விதேக ராஜபுத்ரி என்பதால்
வீரவாசி அறியும் குடி
ஒரு வில்லை விரித்த வீரத்துக்கு கொடுத்தார் ஐயர்
14000 பெயரை முடித்து
பார்த்தாராம் -தகப்பனாரால் கொடுத்தவர் -தாரை வார்த்தை
இப்பொழுது பர்த்தா என்று உணர்ந்தாள்
இவன் அன்றோ ஆண் பிள்ளை அனைத்து
ச்த்ரீயம் புருஷ விக்ரகம்
நன்றாக அணைத்து
புண்களுக்கு திருமுலைத் தடத்தால் ஒத்தனம் கொடுத்து
ஸ்ரீ தர நப்பின்னை பிராட்டி அணைக்க
தோல் -பழைமை குணம் பாடி அந்தபுரம் பரிகிரம் போலே மங்கையும் பல்லாண்டு
கும்பிடு -வணங்கி
அஞ்சலி உடனாடுவது
போக்கு கட்டு அடைவு கெட் டு தலை மட்டம்
யாத்ரையாக
நடக்காதவர் பிறப்பால் என்ன பலன்
வைஷ்ணவர் டு வில் பிறந்து என்ன பலன்
கோஷ்டி நடுவில் -திருப்புன்னை –
கிராமணிகள் இடையிலே புகுந்து நெருக்குமா போலே மயிர் எழுந்த
மேல் சுற்று அங்கவஸ்திரம் இரட்டை கொண்டு நெருக்குமா போலே
துபாடி ஸ்ரீ த்படம்
இரட்டை சப்தம் –
பெரும் குழு கண்டு இசைந்து -அபாகவதர்கள் இருக்க –
நஞ்சீயர் திருவடிகளே சரணம்.
நம்பிள்ளை திருவடிகளே சரணம்.
வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.
Leave a Reply