ஸ்ரீ திரு மாலை-அவதாரிகை- -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் அருளிய -வியாக்யானம் –

அவதாரிகை
நித்ய ஸூரிகளோடு ஒத்த ப்ராப்தி நமக்கு உண்டாய் இருக்க
அத்தை அறியாதே –
அநாதி காலம்
தேகமே ஆத்மா என்றும் –
சப்தாதி விஷயங்களே போக்யம் என்றும் -விரும்பி
சம்சாரத்திலே கை கழிந்த ஆழ்வாரை –

ஸ்ரீ பெரிய பெருமாள் தம்முடைய
ஸ்வரூப ரூப குண விபூதிகளுக்கு வாசகமான திருநாம பிரபாவத்தை நிர்ஹேதுகமாக
காட்டி அருளக் கண்டு –
தாமும் அனுபவித்து –
அனுபு பூஷுக்களையும் அனுபவிக்கவும் வல்லராய் –
ஸ்ரீ பெரிய பெருமாளையும் உகப்பித்து தலைக் கட்டுகிறார்

சம்சாரிகள் ஆகிறார் –
ஐஹிகத்தில் புண்ய பாப ரூபமான கர்மங்களை ஆர்ஜித்தும்
ஆமுஷ்முகத்தில் ஸ்வர்க்க நரகங்களிலே அதினுடைய பல அனுபவத்தைப் பண்ணியும் –
இப்படி கதாகதம் பண்ணித் திரிவார் சிலர் ஆய்த்து –

அது தன்னிலும்
புண்ய பாப ரூபமான கர்மங்களை ஸ்வர்க்க நரகங்களிலே அனுபவித்து –
கர்ம சேஷத்தோடே பூமியிலே
கர்ப்ப வாசம் பண்ணுகைக்கு வரும் வழியிலே –
இவ்வாத்மா படும் எளிவரவை
வேதாந்தத்தில் பஞ்சாக்னி வித்யை என்ற ஒரு பிரதேசத்தில் ஓதி வைத்தது –
அதாவது
யாதனா சரீரத்தாலே நரக அனுபவம் பண்ணி –
அச் சரீரத்தை அங்கே பொகட்டு
அநந்தரம்
புண்ய சரீரத்தை பரிக்ரஹித்து ஸ்வர்க்க அனுபவம் பண்ணி –
அங்கே அச் சரீரத்தை பொகட்டு
ஸூஷ்ம சரீரத்தோடே நிராலம்பமான ஆகாசத்திலே பதிக்கக் கடவன்

ஆதித்யன் தன் கிரணங்களாலே -ஹிமவானின் ஹிமத்தை உபாதானம் பண்ணி –
அத்தாலே
ஆகாசத்திலே மங்கிக் கிடக்கிற ஆத்மாவை கிரகித்து மேகத்திலே புக விடக் கடவன் –
அங்கே
அந்த ஹிமம் வர்ஷ ரூபேண வர்த்திக்கும் அளவும் கிடந்து வர்ஷ தாரகைகளோடே
பூமியிலே பதிக்க கடவன் –
அந்த ஜலம் சச்யத்துக்கு தாரகமாய் புகும் அளவிலே தத்த்வாரா
சச்யத்திலே புகக் கடவன் –
அந்த சஸ்யம் பக்வமாய்
அன்ன ரூபேண பரிணமிக்கும் அளவிலே அங்கே கிடந்து –
அன்னமானது புருஷ சரீரத்திலே புகுந்து சுக்லமாய் பரிணமிக்கும் அளவும் செல்ல
அங்கே கிடந்து –
ஸ்திரீ புருஷ சம்யோகத்தாலே சுக்லத் த்வாரா ஸ்திரீ சரீரத்திலே புகுந்து
பஞ்சம் யாமா ஹூதாவாப புருஷ வசசோ பவந்தி -என்கிறபடியே
கர்ப்பமாய் பரிணமிக்கக் கடவன் –

கர்ப்ப வாசம் பண்ணும் போது
அத்யம்லகடு தீஷ்ண உஷ்ண லவணைர் மாத்ரு போஜனை அதிதாபி பிரத்யர்த்தம் வர்த்தமாநாதி வேதன என்கிறபடியே
மாத்ரு போஜனத்திலே அந்தர்பூதங்களான க்ரூர த்ரவ்யங்களாலே தொடரிலிட்ட
ஈயம் போலே துடியா நிற்கும்

இந்த கிலேசத்தோடே கர்ப்ப தும்பமாகிற பையிலே கட்டுண்டு
அவயவங்களை நீட்ட முடக்க மாட்டாதே
கிலேச அந்நின்ஷ்க்ராந்திம் ஆப்நோதி ஓதி ஜடரான் மாதுராதுர -என்கிறபடியே
கிலேசேனே ஜனித்து
பால்ய தசையிலே அசுசிபிரவசங்களிலே கிடந்து –
கண்டுயனே அபி சாசக்த பரிவர்த்தே அப்யநீச்வர ஸ்நானா பாநானி சாஹாரமவாப்நோதி பரேச்சயா என்கிறபடியே
நின்ற இடத்தை சொறிதல் கடிதவற்றை துடைத்தல் செய்ய மாட்டாதே
தாரகாதிகளும் பராதீனமாய் –
இப்படி கிலேசேன அதிசைவ காலத்தை போக்கி –
தானே ஒரு பிரவர்த்தி பண்ண ஷமன் ஆன அளவிலே –

தஸ்மாத் பால்யே விவேகாத்மா யதேத ஸ்ரேயசே சதா -என்கிறபடியே –
பகவத் ப்ரவணனாக பிராப்தமாய் இருக்க
பாலே க்ரீடந சக்தா என்கிறபடியே லீலையோடே காலத்தைப் போக்கி
யௌ வன அவஸ்தையிலே நரக ஹேதுவான விஷயாந்தரங்களோடே போது போக்கி –
ஜரையிலே வந்து அகப்பட்டு அசக்தியோடே கால ஷேபத்தை பண்ணி நினைவு இன்றியே இருக்கச் செய்தே
மரணம் பிராப்தமாக கிலேச அதுக்ராந்தி மாப்நோதி யாமா கிங்கர பீடித-என்கிறபடியே
உதக்ரமண தசையில் கிலேசத்தை அனுபவித்து அநந்தரம் மிருத்யு பரவசனாம்

இப்படி சம்சாரிகளுடைய அநர்த்த பரம்பரைகளைக் கண்டு
ஸூ ஹ்ருதம் சர்வ பூதாநாம் -என்கிறபடியே
பரம ஸூஹ்ருதான சர்வேஸ்வரன் இவனுடைய உஜ்ஜீவன அர்த்தமாக –
மாநம் பிரதீபமிவ காருணிகோ ததாதி -என்கிறபடியே
சாஸ்த்ரத்தை காட்டிக் கொடுத்தான் –
எங்கனே என்னில்

வேதாந்தத்திலே
ஷரம் பிரதானம் இத்யாதி வாக்யங்களாலே –
சித் அசித் ஈஸ்வர தத்வ த்ரயங்களையும் பிரியக் காட்டிக் கொடுத்து –
அந்தர்யாமி பிராஹ்மணத்தாலே –
ஏஷ சர்வ பூத அந்தராத்மா -என்று
ஜாத்யந்தனுக்கு கண்ணைக் காட்டிக் கொடுத்தால் போலேயும் –
இருட்டறையிலே விளக்கு ஏற்றிக் காட்டிக் கொடுத்தால் போலேயும் –
சேதன அசேதனங்கள் சரீரம்
ஈஸ்வரன் சரீரி என்று ஈஸ்வரனோடு சேதன அசேதனங்களுக்கு உள்ள  சம்பந்தத்தை காட்டிக் கொடுத்து –
த்வா ஸூ பர்ணா -இத்யாதி வாக்யங்களாலே –
சேதனனுக்கு அசித் சம்பந்தம் கர்மோபாதிகம் என்று காட்டிக் கொடுத்து –
ததா வித்வான் புண்ய பாபே விதூய -இத்யாதி வாக்யங்களாலே –
ஔ பாதிகமான அசித் சம்சர்க்கம் அற்று ஒரு தேச புருஷார்த்தம் என்று காட்டிக் கொடுத்து –

இப்படி ஈஸ்வரன் உபகரித்த விடத்திலும்
பாப ப்ராகர்யத்தாலே இத்தை கைவிட்டு
வேத பாஹ்யராயும் –
இதுக்கு உள்ளே புகுந்து –
தத்ரைவ கே அபி சபலா சலபீ பவந்தி -என்கிறபடி
விளக்கில் விட்டில் என்று சில பதார்த்தங்கள் நசித்து போமா போலே
வேத தாத்பர்யம் அறியாமையாலே குத்ருஷ்டிகளாயும் நசித்துப் போக –

தாம் பண்ணின வேத பிரதானம் அகிஞ்சித்கரமாய் அறுகையாலே
ஓலைப் புறத்திலே செல்லாத தேசத்திலே எடுத்து விடும் ராஜாக்கள் போலே –
சம்சாரி சஜாதீயனாய் வந்து அவதரித்த விதத்திலும் –
வைது நின்னை வல்லவா பழித்து –திருச்சந்த விருத்தம் -111-என்கிறபடியே –
உள்ள சக்தி அடங்க பகவத் நிந்தைக்கு உடலாயும் –
ஹிரண்ய ராவணாதி ரூபத்தாலே எதிர் அம்பு கோத்து நசித்தும் –

இப்படி அவதாரமும் கார்யகரம் ஆகாத இடத்திலும் –
உடையவன் உடைமையை விடமாட்டாத சாபலத்தாலே
இவர்களுடைய ஆபிமுக்யத்திலே அவசர பிரதீஷனாய் வர்த்திக்க
சேதனர் பக்கலிலே யாத்ருச்சிக ஸூஹ்ருதம் என்று ஓன்று பிறக்க –
அது வியாஜமாக விசேஷ கடாஷம் பண்ணி –

அத்தாலே அத்வேஷம் பிறந்து –
அதடியாக பண்ணின விசேஷ கடாஷத்தாலே -ஆபிமுக்யம் பிறந்து –
அநந்தரம்
சாஸ்திர வாசனையாலும் –
ஆசார்ய உபதேசத்தாலும்
ஈஸ்வரன் நிருபாதிக சேஷி என்றும் –
இவ்வ்வாத்மா அவனுக்கு அனந்யார்ஹ சேஷம் என்றும் யதாஞ்ஞானம்  பிறந்து –

அநந்தரம் –
ஸ்வரூப அநு ரூபமான புருஷார்த்தத்திலே ருசி பிறக்கும் அளவும் விசேஷ கடாஷத்தாலே புகுர நிறுத்தி –
புருஷார்த்த லாபத்துக்கு உபாயம் ஏதோ என்று புபுத்ஸை பிறந்த அளவில்
சாஸ்திர சித்தமான கர்மாதி உபாயங்களைக் காட்டிக் கொடுத்து –

இது துஷ்கரம் என்றும் –
விளம்பித பலப்ரதம் என்றும்
பிரமாத சம்பாவனை உள்ளது என்றும் –
இவற்றில் இழிய
இறாய்த்தவர்களுக்கு வேதாந்த சித்தமான தன்னுடைய உபாய பாவத்தைக் காட்டிக் கொடுக்க –

பக்தியினுடைய துஷ்கரதையோபாதி
பிரபத்தி நிஷ்டா ஹேதுவான மஹா விஸ்வாசமும் சிலருக்கு கிட்டுகை அரிது ஆகையாலே
இதில் இழியக் கூசினவர்களுக்கு
சர்வாதிகாரமான யாத்ருச்சிக பகவன் நாம சங்கீர்த்தனமே
சேதனருடைய பாபத்தைப் போக்கி ஸூஹ்ருத அநு கூலமாக –
கர்ம யோகாதிகளிலே மூட்டுதல் –
பிரபத்தியிலே மூட்டுதல் –
விரோதியைப் போக்கி ப்ராப்யத்தைக் கொடுக்கைக்கு
தானே நிர்வாஹகம் ஆதலாம்படியான வைபவத்தை உடைத்தாய் ஆய்த்து
திருநாமத்தின் உடைய வைபவம் இருப்பது –

அதற்க்கு பிரமாணம் ஏது என்னில்
கிம் ஜபன் முச்யதே ஜந்துர் ஜன்ம சம்சார பந்தனாத் -என்றும் –
யாதி ப்ரஹ்ம சநாதனம் – என்றும் –
உபோத்காத பல ஸ்ருதிகளிலே சொல்லி –
நடுவே திருநாமத்தை சொல்லுகையாலே
இவ் வாழ்வார் இப்படிப்பட்ட திரு நாமத்திலே இழிந்தவர் ஆகையாலே
அத் திருநாம வைபவத்தை பேசுகிறார் இப் பிரபந்தத்திலே-

திரு நாமத்தில் இவர் இழிகைக்கு அடி
ஸ்ரீ விஷ்ணு தர்மம் –
அது தனக்கு வக்தா ஆர் –
ஸ்ரோதா ஆர் –
அது விளைந்தபடி என் -என்றால் –

பாண்டவர்களுக்கு அவ் வருகே நாலைந்து தலை முறை சென்ற அளவிலே
சதாநீகன் என்பான் ஒருவன் ராஜா உளனாய்
அவன் பகவத் விஷயீ காரம் உள்ள சந்தாநந்திலே பிறந்தான் ஒருவன் ஆகையாலே
பரம சத்விகனாய் அபிஷிக்தன் ஆனவன்றே தொடங்கி
சிறியதை பெரியது நலியாதபடி நாட்டை ரஷித்து –
அத்ருஷ்ட சேஷமாக இவர்களுக்கு நம்மால் செய்யல் ஆவது என்
என்று ஸ்ரீ சௌநக பகவான் பக்கலிலே சென்று –
தேக போஷண பரராய் மூலையடியே திரிகிற சம்சாரிகளுக்கு உஜ்ஜீவன உபாயமாய்
இருப்பதொன்று அருளிச் செய்ய வேணும் என்று கேட்க –

காலம் கலி காலமாய் இருந்தது –
பாப ப்ராசுர்யத்தாலே வேறொன்றுக்கு அதிகாரிகள் இல்லை –
சர்வாதிகாரமான பகவன் நாம சங்கீர்த்தனமே ஆத்மாக்களுக்கு உஜ்ஜீவன
உபாயமாய் இருப்பது என்று அருளிச் செய்தான் –

அங்கு ஸ்ரீ சௌநக பகவான் வக்தா –
சதாநீகன் ஸ்ரோதா –

இங்கு ஆழ்வார் வக்தா –
பெரிய பெருமாள் ஸ்ரோதா –

அங்கு அஞ்ஞான ப்ரசனம்
இங்கு ஞான ப்ரசனம்

ஞானம் ப்ரசன விஷயம் ஆவான் என் என்னில் –
கிம் ம்ருஷ்டம் ஸூ த வசனம் என்கிறபடியே
ஆழ்வார் வாயாலே திருநாம வைபவத்தை அருளிச் செய்ய கேட்கையால்
உண்டான ப்ரீதி யாலே

இன்னமும் இவ் வாழ்வாருக்கு
பகவத் விஷயத்தை பிரகாசிப்பிக்கிற ஸ்ருதிகளிலும்
வேத உபப்ப்ரும்ஹணம் பண்ணின ரிஷிகளிலும் –
அல்லாத ஆழ்வார்களிலும்
நெடுவாசி உண்டு -எங்கனே என்னில் –

யதோ வா இமானி பூதாநி -இத்யாதி வாக்யங்களாலே
ஜக ஜன்ம ஸ்திதி லய ஹேதுவான ஜகத் காரண வஸ்துவை சொல்லி –
காரணந்து த்யேய என்கிறபடியே
அதுவே உபாஸ்யம் என்று இவ்வளவாலே த்யேய வஸ்துவை சொல்லி
சத் ப்ரஹ்ம ஆத்மா இத்யாதி சாமாந்யவாசி சப்தங்களுக்கு
விசேஷ ஆகாங்ஷை உண்டாகையாலே
ஸ்ருஷ்டி வாக்ய கதி ஸாமான்ய ந்யாயத்தாலே –
ஏகோ ஹை வை நாராயண ஆஸீத் -என்று விசேஷித்து –
இவ்வளவு ஆய்த்து ஸ்ருதி சொல்லிற்று –

வேத உபப் ரும்ஹணம் பண்ணின ரிஷிகள் –
அஜாய மாநோ பஹுதா விஜாயதே என்கிற
ஸ்ருதி உப ப்ரும்ஹணமான இதிஹாச புராண முகத்தாலே
திரு வவதாரங்களைப் பிரகாசிப்பித்தார்கள் –
அதில் ஸ்ரீ வால்மீகி பகவான் ராம அவதாரத்தில் மண்டினார் –
ஸ்ரீ பராசர பகவான் ஸ்ரீ கிருஷ்ண அவதாரத்தில் மண்டினார்
ஸ்ரீ சௌநக பகவான் –
அர்ச்சாவதார வைபவத்தை –
தாம் அர்ச்சயேத் தாம் ப்ரண மேத் தாம் பஜேத் தாம் விசிந்தயேத் –இத்யாதிகளாலே பிரகாசிப்பித்தான் –

ஆழ்வார்களிலே
முதல் ஆழ்வார்கள் -மேன்மைக்கு எல்லையான பரத்வத்திலும்
நீர்மைக்கு எல்லையான திருமலையிலும் மண்டினார்கள் –
நம் ஆழ்வாரும் பெரியாழ்வாரும் கிருஷ்ண அவதாரத்திலே ஊன்றி இருப்பார்கள் –
திருமங்கை ஆழ்வார் உகந்து அருளின நிலங்கள் எல்லாவற்றிலும் மண்டினார் –
அர்ச்சாவதார சாமான்யமும் அன்றிக்கே
பெரிய பெருமாளை அல்லாது வேறு அறியாது
இருப்பார் ஒருவர் ஆய்த்து இவர் –

அர்ச்சாவதார சாமான்யத்தில் காட்டில்
கோயிலுக்கு ஏற்றம் என் என்னில் –
காவேரியானது பிரவாகமும் ஏக ரூபமாய் –
ஸ்தலமும் அதுவே இருக்கச் செய்தே –
தீர்த்த விசேஷங்களிலே ரச விசேஷங்கள் உண்டாகிறாப் போலே –
போக்ய அதிசயத்தால் வந்த ஏற்றம் வேறு ஒரு இடத்துக்கு இல்லை –

அல்லாதாரில் இவருக்கு உண்டான எற்றம் போலே –
பிரபந்தாந்தரங்களில் காட்டில் இப் பிரபந்தத்துக்கு நெடு வாசி உண்டு –
எங்கனே என்னில்
நீராய் நிலனாய் -என்று தொடங்கி –
சிவனாய் அயனாய் என்று சேதன அசேதன வாசி சப்தங்களாலே
ஈஸ்வரனை சொல்லுகிற இந்த சாமாநாதி கரண் யத்துக்கு
அனுபிரவேச க்ருதம் சாமாநாதி கரண்யம் என்று நிர்வஹிக்க வேண்டும் என்ற அருமை யாதல் –
முனியே நான்முகனே முக் கண் அப்பா -என்று தோற்றுகிற
த்ரி மூர்த்தி சாம்யத்தை நிர்வஹிக்க வேண்டும் என்ற அருமை யாதல்-
இன்னமும் சப்தத்தில் அருமையாலே
ஸ்வார்தத்தை அறிக்கைக்கு அருமைப் பட -வேண்டுதல்
செய்யும் இக்குறைகள் ஒன்றுமே இன்றிக்கே இருக்கையும் –

இன்னமும் கடல் பேர் ஆழமாய் இருக்கச் செய்தேயும்
நீர்த் தெளிவாலே தரை தோற்றுமா போலே –
சப்தத்தின் செவ்வாயாலே ப்ரேமம் கனத்து இருக்கச் செய்தேயும் உள்ளது
அடங்கத் தோற்றும்படி இருக்கையும்

இன்னமும் பிரணவம் போலே
சப்தம் அத்யல்பமாய்
அர்த்த க்ரஹணம் அரிதாய் இருத்தல் –
இவ்விரண்டு குறையும் இன்றிக்கே
ஒரு சேதனனுக்கு ஞாதவ்யங்களை –
பரந்த சடங்குகளை சுருங்க ப்ரயோக வ்ருத்தி செய்து கொடுத்தாப் போலே
சகல அர்த்தங்களும் இப் பிரபந்ததுக்குள்ளே உண்டாகையாலும்
பிரபாந்தரங்களில் காட்டிலும் இப் பிரபந்தத்துக்கு நெடு வாசி உண்டு

———

திருமாலை அறியாதார் திருமாலை அறியாதவர் ஆவர்

கலியுகம் -289-பிரபவ சம்வச்தரம் -மார்கழி -கிருஷ்ண பஷ சதுர்த்தசி –
செவ்வாய் கிழமை -கேட்டை நஷத்ரம்
வைஜயந்தி வனமாலை அம்சம்
திரு மண்டங்குடி திருவவதாரம்
விப்ர நாராயணர் -தேவதேவி –

கோதண்டே ஜ்யேஷ்ட நக்ஷத்ரே மண்டங்குடி ப்ரோத்பவம்
சோளோர் வ்யாம் வந மால அம்சம் பக்த பத்ரேணும் ஆஸ்ரயே –வைஜயந்தி என்னும் வந மால அம்சம்

மன்னிய சீர் மார்கழியில் கேட்டை இன்று மா நிலத்தீர்
என் இதனுக்கு ஏற்றம் எனில் உரைக்கேன் துன்னு புகழ்
மா மறையோன் தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் பிறப்பால்
நான்மறையோர் கொண்டாடும் நாள்-

—————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே .சரணம்.
ஸ்ரீ தொண்டர் அடிப்பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply