திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -3-5-2-ஸ்ரீ M.A V .சுவாமிகள் —

தண்கடல் வட்டத்துஉள் ளாரைத்
தமக்குஇரை யாத்தடிந்து உண்ணும்
திண்கழற் கால்அசு ரர்க்குத்
தீங்குஇழைக் கும்திரு மாலைப்
பண்கள் தலைக்கொள்ளப் பாடிப்
பறந்தும் குனித்தும்உழ லாதார்
மண்கொள் உலகிற் பிறப்பார்
வல்வினை மோத மலைந்தே.


பொ-ரை :
‘குளிர்ந்த கடல் சூழ்ந்த பூமியில் உள்ளவர்களைக் கொன்று தங்களுக்கு உணவாக உண்ணுகின்ற வலிய வீரக்கழலைக் கட்டிய கால்களையுடைய அசுரர்களுக்குத் தீங்கினைச் செய்கின்ற திருமகள் கேள்வனை, பண்கள் தம்மில் கலக்கும்படியாகப் பாடிப் பூமியில் கால் பாவாமல் நடனத்தைச் செய்துகொண்டு திரியாதவர்கள் மண்கொண்ட இவ்வுலகத்தில் வல்வினை மலைந்து மோதும்படி பிறப்பார்கள்,’ என்றவாறு.

    வி-கு : ‘தடிந்து இரையாக உண்ணும் அசுரர், வல்வினை மலைந்து மோதப் பிறப்பார்,’ என மாறுக. தலைக்கொள்ளுதல் – ஒன்றோடு ஒன்று கலத்தல். மோத – அடிக்க. மலைதல் – ஈண்டு, வருத்துதல். மண்கொள் உலகு – அணுக்களைக் கொண்ட உலகு, ‘மண் திணிந்த நிலனும்’ என்ற இடத்து ‘அணுக்கள் செறிந்த நிலனும்’ என்று உரை கூறினர் புறநானூற்று உரையாசிரியர். இனி, பொன்னுலகை விலக்குவதற்கு ‘மண் கொள் உலகு’ என்கிறார் எனலுமாம்; இனச்சுட்டுள்ள அடை.

    ஈடு : இரண்டாம் பாட்டு. 1‘ஸ்ரீ கஜேந்திராழ்வானுக்கு உதவின உதவி, நித்தியசூரிகட்கு உதவிய உதவி என்னலாம்படியன்றோ, தங்களுக்கு இடர் உண்டு என்று அறியாத சமுசாரிகளுடைய விரோதியைப் போக்கி உதவி செய்வது? அங்ஙனம் உதவி செய்யும் அந்நீர்மையை அநுசந்தித்தால், விகாரமில்லாத வராயிருப்பவர்கள் மஹா பாவம் அனுபவிக்கப் பிறக்கிறவர்கள்,’ என்கிறார்.

    தண்கடல் வட்டத்துள்ளாரைத் தமக்கு இரையாகத் தடிந்து உண்ணும் திண்கழல் கால் அசுரர் – அசுரர்கள் பிராணிகளைக் கொன்று உண்டு, அதனாலே ஜீவிப்பார்களாயிற்று. ‘இவர்களைக் கொல்லுதற்கு இவர்கள் செய்த அபகாரம் என்?’ என்னில், தண் கடல் வட்டத்துள்ளார் – ஒரே தேசத்தில் வசிக்கும் காரணத்தால் வந்த சம்பந்தமே காரணமாக ஆயிற்று நலிவது. சர்வேசுவரன் ரக்ஷிக்கைக்கு ஏது யாது ஒன்று? அதுவே ஆயிற்று இவர்கள் நலிவதற்குக் காரணமும். 2‘தேவரீருடைய தேசத்திலே வசிக்கின்ற நாங்கள் உம்மாலே ரக்ஷிக்கத் தகுந்தவர்கள்,’ என்பதுஸ்ரீராமனைப் பார்த்த மகரிஷிகள் கூற்று. ஆக, ‘இவர்கள், தங்கள் கண் வட்டத்திலே உண்டு உடுத்துத் திரிகிற இதுவே காரணமாக நலிவர்கள்,’ என்பதாயிற்று. ‘தங்களுடைய சரீரப் பாதுகாப்பிற்காகப் பிறரைக்கொன்று ஜீவிக்கிற திண்ணிய வீரக்கழலைக் காலிலேயுடைய அசுரர்கள். இறைவன், ரக்ஷிக்கைக்கு 1‘அது எனக்கு விரதம்,’ என்று அறுதியிட்டு இருக்குமாறு போன்று, இவர்கள் பிறரை நலிவதற்கு அறுதியிட்டு வீரக்கழலைக் கட்டியிருப்பவர்கள்’ என்பார், ‘கழல் கால் அசுரர்’ என்கிறார். ‘அவனுடைய ரக்ஷணத்துக்கு ஈடான கிருபையைத் தவிர்க்கிலும், இவர்கள் பிறரை நலிவதற்கு இட்ட வீரக்கழலைத் தவிர்க்க ஒண்ணாது,’ என்பார், ‘திண்கழல்’ என்கிறார்.

    தீங்கு இழைக்கும் திருமாலை – 2‘இவர்களும் நம்மாலே படைக்கப்பட்டவரன்றோ?’ என்று குடல் தொடக்கைப் பார்த்திருப்போமாகில், நம் விபூதி அழியும்; இவர்களை அழியச்செய்தாகிலும் விபூதியை நோக்கும் விரகு ஏதோ?’ என்று, 3‘சினேகிதன் என்று நெருங்கி வந்த இவனை, என் உயிருக்குக் கேடு வருவதாக இருப்பினும் விடமாட்டேன்; அவனிடம் தோஷம் இருப்பினும் இருக்கட்டும்; இந்த விபீடணனை ஏற்றுக்கோடலைப் பெரியவர்கள் நிந்திக்கமாட்டார்கள்,’ என்னும் தானும், 1‘திரிசடை சொன்னவைகள் உண்மையாக இருக்குமேயாயின், அபயம் தந்து உங்களைப் பாதுகாக்கிறேன்,’ என்னுமவளும் கூட இருந்து எண்ணுவார்கள் ஆயிற்று. என்றது, 2‘களை பிடுங்கி அடியார்களை இரக்ஷித்தோமாம் விரகு யாதோ?’ என்று இருவரும்கூட விசாரியாநிற்பர்கள் என்றபடி.

    பண்கள் தலைக்கொள்ளப் பாடி – 3‘திருமகள் கேள்வனைப் பாடாநின்றார்கள்’ என்று, பண்கள்தாம் ‘என்னைக்கொள், என்னைக்கொள்’ என்று வந்து தலை காட்ட. என்றது, ‘பண் சுமக்கப் பாடி’ என்றபடி. அன்றி, ‘பண்கள் தலைமை பெறும்படி பாடி’ என்றுமாம். என்றது, ‘தலையான பண்ணிலே பாடி’ என்றபடி. அன்றி, ‘அன்பினாலே அடைவு கெட்டு, ஒரு பண்ணிலே எல்லாப் பண்களும் வந்து முகங்காட்டும்படி பாடி’ என்னலுமாம். பறந்தும் குனித்து உழலாதார் – கால் தரையிலே பாவாதே கூத்தாடி, அதுவே வாழ்க்கையாகத் திரியாதார்; ‘பறந்துகொண்டு குனித்து இதுவே வாழ்க்கையாக இராதார்’ என்றபடி. மண் கொள் உலகில் வல் வினை மலைந்து மோதப் பிறப்பார் – வல்வினை மலைந்து மோத மண் கொள் உலகிற்பிறப்பார். என்றது, ‘பகவானுடைய குண அனுபவம் பண்ணும் போது ‘நாம் விகாரமில்லாதவர்களாய் இருக்கவேணும்,’ என்று குறிக்கொண்டு இறுக்குவாதம் பற்றினாற் போலே இருப்பவர்கள் 4சாதுர்த்திகம் வந்து எடுத்து எடுத்துஎற்றப்புக்கால் செய்யலாவது இல்லையே!’ என்றபடி. ‘பிறப்பு’ என்ற இது, மற்றைத் துக்கங்களுக்கும் உபலக்ஷணம்.

கஜேந்திர ஆழ்வானுக்கு உதவிய நீர்மை முதலில் சொல்லி
இதில் –சூரிகளுக்கு உதவினது -என்று இருப்பாரே -தமது இடரை
பிரார்தியாமல் இருக்கச் செய்தே தானே நீக்கும் தன்மையன் –
இடர் உண்டு என்று கூட அறியாத சம்சாரிகளின் இடரை போக்குமவன் –
இத்தை அனுசந்தித்து உருகி -உணராமல் அவிக்ருதராய் இருப்பார் –

வல் வினை மோத பிறப்பார்கள்
அசுரருக்கு தீங்கு இளைக்கும் திருமால்
பண் கொள் தலைக்கொள்ள  பாடி –
எகிறி குதித்து ஆனந்தத்தால் -பஜனை கோஷ்டி இன்றும்
பறந்தும் குதித்தும் -ஆடாதார் –
அசுரர் யார் -கடல் வட்டது உள்ளவரையி ஆகாரமாக கொண்டு ஹிம்சை பண்ணும் –
திண் கழல் சூட்டிய வீரர்கள் தீமைகள் செய்குந்தா –
மண் கொள் உலகினில் பிறப்பார்
அசுரர்கள் ஹிம்சிகைக்கு அபகாரம் ஒன்றும் இன்றி -ஏக தேச வாசியாய்
இருப்பதே காரணமாய் -அசூயை அறிந்தவர்கள் உயர்ந்த கதி அடைந்தால் தானே –
கடல் வட்டத்து உள்ளாரை
குளிர்ந்த வட்டமான கடலில் -பூமியில் உள்ளாரை
ஏக தேச வாசம்
ரஷிக்க அவன் பார்வையில் இருந்தால்

ஆர்த்த ரஷணம் -தண்ட காரணிய -ஆர்தர்
வாசிகள் என்பதே காரணம் -தபசுக்காக இல்லை –
தபசே ரஷிக்க -விஷயத்திலே கண் வட்டத்திலே இருக்க –
சுபிரயத்ன பரர் அன்று -கண் அழிவு வரலாமே அப்படி இருந்தால்
காக்க வல்ல  எல்லைக்கு புறம்பாய் இல்லையே

தண்டனை கொடுக்க வேறு தேசம் கடத்த முடியாதே பகவானால்
ராஜாவால் முடியுமே -பெரியவன் தான் பண்டிதன் வார்த்தை  –
புறம்பு சொல்ல முடியுமானால் சொல்லிக் காண் -ரிஷிகள் வார்த்தை –
திரு விருத்தம் பாசுரம் -பிரமாணம் காட்டி –
எல்லையே இல் லாதது
அது போலே எல்லாரையும் ஹிம்சிகை தன கண் வட்டத்தில் உண்டு உடுத்து இருப்பாரை
தமக்கு இறை சரீர போஷணம் தடித்து ஹிம்சித்து உண்ணும்
கால் வீரக் கழல் அரசர் சூடுமா போலே
இவர்களும் ஹிம்சிகைக்கு அடையாளம் கழல்
ஏதத் வ்ரதம் மம அவனது தீஷை போலே
இவர் ஹிம்சிகைக்கு வரதம் தீஷை கழல்
கிருபை கை விட்டாலும் -ஸ்வா தந்த்ர்யம் வரலாம்
இவர்களுக்கு மறந்தும் கிருபை வாராதே
அப்படிப் பட்டவர்களுக்கு தீங்கு
குடல் துவக்கை பார்த்து இருக்காமல் -இவர்களால் விபூதி அழியும
தேவானாம் தானவானம் -சமம் -இருந்தாலும்
இவர்களுக்கு தீங்கு இழைத்து விபூதியை நோக்கும் –
தேவர்களுக்கு கட்டளை -அவர்களை ஹிம்சிகை
ராஜ்ஜியம் பரித்து -கட்டளை கெடாமல் இருக்க தண்டிக வேண்டுமே
மித்ர பாவேன -அனுக்ரகம் செய்பவன் –
தீங்கு இளைத்தாலும் ராஷசிகளை -நான் இருக்கிறேன் –
திருமாலே -இருவரும் சேர்ந்து –
களை பிடிங்கி ரஷிப்பார்கள் –
நினைத்தவாறே மனம் உருக வேண்டாமோ

பண்கள் தலைக் கொள்ள பாடி
ஸ்ரீ ய பதியை -என்னைக் கொள் என்னைக் கொள் முன் வந்து நிற்குமே –
தலை காட்ட அவற்றை கொண்டு பாடி
பாட் டினால் பண்களுக்கு பெருமை
ப்ரீதியாலே அடைவு கெட -ராகமாலிகை ஒரு பண்ணிலே பல பண்களில் பாடி
தரையில் கல் படாதே கூத்தாடி
பரந்து இதுவே யாத்ரையாக
அவிக்ருதராய் இருக்க -உருகாமல் -மாற்றம் இன்றி –
இருக்கு வாதம் பற்றினாரைப் போலே -ஆடாமல் அசையாமல் இருக்க
அவர்கள் கூட குளிர் ஜுரம் வந்தால் தூக்கி போட-
சாதுர்த்தகம் நான்கு நாள் ஜுரம்
அப்படி பாடினாலும் -அல்லாத துக் கங்களுக்கு உபலஷணம்

நஞ்சீயர் திருவடிகளே சரணம்.

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply