திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -3-5-1-ஸ்ரீ M.A V .சுவாமிகள் —

ஐந்தாந்திருவாய்மொழி – ‘மொய்ம்மாம்பூம்பொழில்’

முன்னுரை

    ஈடு : 1‘புகழும் நல் ஒருவன்’ என்ற திருவாய்மொழியிலே, பகவானுடைய சொரூப ரூப குண விபூதிகளை அனுபவித்து, அதனால் வந்த ஹர்ஷப் பிரஹர்ஷத்தாலே களித்து அவ்வனுபவமில்லாதாரை நிந்தித்து, அவ்வனுபவமுடையாரைக் கொண்டாடிச் சொல்லுகிறது ‘மொய்ம்மாம்பூம்பொழில்’ என்ற இத்திருவாய் மொழி. இவர் ‘முந்நீர் ஞாலம்’ என்ற திருவாய்மொழியில், சரீர சம்பந்தத்தை அநுசந்தித்தும், மற்றைய விஷயங்களில் ஈடுபாட்டினை அநுசந்தித்தும் சோகித்த சோகம் சிலர்க்கு நிலமாகில் அன்றோ, இத்திருவாய்மொழியில் பகவானை அனுபவித்த அனுபவத்தாலே மகிழ்ச்சி கொண்டவரான இவருடைய மகிழ்ச்சி சிலர்க்கு நிலமாவது? ‘ஆயின், இவரும் பகவானை அனுபவம் பண்ணுகிறார்; நாமும் அவ்விஷயத்திலே கைவைக்கிறோம்; இவருக்கு இங்ஙன் இருப்பான் என், நமக்கு இங்ஙன் இராதொழிவான் என்?’ என்னில், நாமாகிறோம் கண்டார்க்கு ஒளிக்க வேண்டுமவையாய், சாஸ்திரங்களெல்லாம் ஒருமுகஞ்செய்து நீக்குகின்றவையாய், முதல்தன்னிலே கிடையாதவையாய், கிடைத்தாலும் நிலை நில்லாதவையாய், பின்னர் நரகத்திலே மூட்டிக் கேட்டினை விளைக்கக்கூடியனவான மற்றைய விஷயங்களினுடைய லாபாலாபங்களில் பிறக்கும் சோகமும் மகிழ்ச்சியுமே ஆயிற்று அறிவது.

    ‘நன்று; ஆசையற்றவராய், சத்துவ குணத்தையுடைய பெரியோர்கட்குத் தலைவராய் இருக்கிற இவர்க்குச் சாஸ்திரங்கள் ‘கூடாதவை’ என்று விலக்கிய சோகமும் மகிழ்ச்சியும் கூடினபடிஎங்ஙனே?’ எனின், ‘இவருடைய சோகமும் மகிழ்ச்சியும் சாஸ்திரங்களிலே விலக்கிய சோகமும் மகிழ்ச்சியும் அல்ல; சமஸ்த கல்யாணகுணாத்மகனான சர்வேசுவரனை அனுபவித்து அவ்வனுபவத்தால் உண்டான பிரீதியாயிற்று இவர்க்கு மகிழ்ச்சியாவது. ‘இப்படி வகுத்த சர்வேசுவரனை அநாதிகாலம் இழந்து இதர விஷயத்தில் ஈடுபாடு உடையோமாய்க் கேட்டினை அடைவோமே!’ என்னுமதாயிற்று இவர்க்குச் சோகமாவது. மேலும் 1‘காமம் ஆகாது’ என்று விலக்கியிருக்கவும், 2‘இடைவிடாது தியானம் செய்யத் தக்கவன்’ என்று கொண்டு பகவத் காமத்தைச் சாஸ்திரங்கள் விதியாநின்றனவே அன்றோ? இனி, 3முத்தரும் பகவானுடைய அனுபவத்திலே 4‘நான் பரமாத்துமாவுக்கு இனியவனாய் இருக்கிறேன்; நான் பரமாத்துமாவாகிறஇனிய பொருளை அனுபவிக்கிறவன்,’ என்று களியாநிற்பர்கள் அன்றோ? 1‘இறந்தகாலம் எதிர்காலம் இவற்றில் நடந்த நடக்கும் காரியங்களைச் சொல்லுகிறவராயும், ஒன்றிலும் ஐயம் இல்லாதவராயும், எல்லாத் தர்மங்களையும் அறிந்தவராயுமுள்ள நாரதர்’ என்று சொல்லப்படுகிற நாரதர் முதலிய முனிவர்களும் பகவானுடைய சந்நிதியில் வந்தவாறே ஆடுவது பாடுவது ஆகாநிற்பர்கள் அன்றோ? விரக்தரில் முதல்வனான திருவடியும் பிராட்டியைக் கண்டுவந்த மகிழ்ச்சியினாலே முதலிகளைப் பார்த்து, 2‘நீங்கள் மதுவனத்தை அழித்து உண்ணுங்கோள்! நான் உங்களுடைய விரோதிகளைத் தடுக்கிறேன்!’    (விரோதிகளாவார், காத்திருந்த ததிமுகன் முதலியோர்) என்றானன்றோ? மஹாராஜர்க்கு, ‘உம்முடைய காவற்காடு அழிந்தது’ என்று அறிவிக்க, ‘நம்மோடு கூறிப்போந்த காலமுந்தப்பி, நாந்தாம் ‘தீக்ஷ்ண தண்டர்’ என்று அறிந்திருந்தும், இவர்கள் காவற்காட்டை அழிக்கும் போது, 3‘செய்யவேண்டிய காரியத்தைச் செய்யாதவர்கட்கு இப்படிப்பட்ட ஆரம்பம் உண்டாகமாட்டாது. ஆதலால், எல்லாப்படியாலும் பிராட்டியைத் திருவடி தொழுதார்களாக வேண்டும்,’ என்று அப்போது உண்டான மகிழ்ச்சி, இருந்த இடத்தில் இருக்கவொட்டாமல், வாலானது ருஸ்யமூக பர்வதத்தின் கொடுமுடியிலே சென்று அறைந்ததாயிற்று. 1நடுவே ‘காவற்காடு’ என்று ஒன்று உண்டாயிற்று, ராஜபுத்திரர்களுடைய ஜீவன அத்ருஷ்டமாயிற்று; அன்றாகில், முதலிகளுடைய மகிழ்ச்சி இராஜபுத்திரர்கள் முதுகோடே போமாயிற்று.

    2வெற்றிலைச்சாறு சிறிது மிடற்றுக்குக் கீழே இழியப்பெற்ற ஒருவன், தன்னைத்தான் அறிகின்றிலன்; அங்ஙனம் இருக்க, 3உள்கலந்தார்க்கு ஓர் அமுதமாய், அமுதிலும் ஆற்ற இனியனாய், 4எனக்கே தன்னைத் தந்த கற்பகம் என் அமுதம்,’ என்று தாமே முற்றூட்டாக இவ்வமுதத்தை உண்ட இவர்க்கு மகிழ்ச்சி உண்டாகச் சொல்ல வேண்டாவே அன்றோ? நிற்க.இப்படிப்பட்ட பகவானுடைய அனுபவத்தால் வந்த பிரீதியின் மிகுதியினாலே முதலிலே இதில் அறிவில்லாதாரையும், அறிவுண்டாய்ப் புறம்பே கருத்தூன்றினவர்களாயிருப்பாரையும், சந்தி செய்தல் முதலிய ஒழுக்கங்களையே முக்கியமாகக் கொண்டவர்களாய், ‘அநுஷ்டான காலங்களில் திருநாள் சேவிக்கலாகாது,’ என்று இருப்பாரையும், அறிவு உண்டாகியே புறம்பே பரபரக்கற்று ‘அதற்கும் இதற்கும் வாசி என்?’ என்று சமானபுத்தி பண்ணி இருப்பாரையும், தங்களை ஆஸ்திகராகப் புத்தி பண்ணி அவ்வாஸ்திக்யத்துக்குப் ‘புறம்பே விநியோகம்’ என்று இருப்பாரையும், இராஜச தாமசங்கட்கு ஒத்தனவான அற்பப் பலன்களைக்கொண்டு போவாரையும், அந்த அந்தப் பலன்களுக்காகத் தாமத தேவதைகளை அடைகின்றவர்களையும் எடுத்து, அவர்களுக்குப் புறம்பே எல்லா நன்மைகளும் உளவேயானாலும், பகவானுடைய குணங்களை அநுசந்தித்தால் அவிக்ருதராகில், ‘அவர்கள் அவஸ்துக்கள்’ என்று அவர்களை நிந்தித்து, ‘உயர்குடிப்பிறப்பு, உயர்ந்த தொழில், ஞானம் இவைகள் இல்லாதிருப்பினும், பகவானை அனுபவம் பண்ணி விக்ருதராமது உண்டாகில், அவர்களுக்கு நான் அடிமை’ என்று அவர்களைக் கொண்டாடிப் பிரீதராகிறார்.

பொய்ம்மாம் பூம்பொழிற் பொய்கை
முதலைச் சிறைப்பட்டு நின்ற
கைம்மா வுக்குஅருள் செய்த
கார்முகில் போல்வண்ணன் கண்ணன்
எம்மா னைச்சொல்லிப் பாடி
எழுந்தும் பறந்தும்துள் ளாதார்
தம்மால் கருமம்என்? சொல்லீர்,
தண்கடல் வட்டத்துஉள் ளீரே!

    பொ-ரை : ‘வண்டுகள் மொய்க்கின்ற பூக்களையுடைய சோலையாற்சூழப்பட்ட பொய்கையிலுள்ள முதலையால் பிடிக்கப்பட்டு நின்ற கைம்மாவுக்குத் திருவருள் புரிந்த, கார்காலத்து எழுந்த மேகம் போன்ற நிறத்தையுடையவன் கண்ணன் எம்மான் ஆன எம்பெருமானைச் சொல்லிப் பாடி எழுந்தும் பறந்தும் துள்ளாதவரால் காரியம் யாது? குளிர்ந்த கடலாற்சூழப்பட்ட பூமியில் உள்ளவர்களே! நீங்களே சொல்லுங்கள்,’ என்கிறார்.

    வி-கு : ‘தண்கடல் வட்டத்துள்ளீர், சொல்லீர்’ என மாறுக.

    இத்திருவாய்மொழி அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்.

    ஈடு : முதற்பாட்டில், ‘அடியவன் இடர்ப்பட்ட மடுவின் கரையிலே, கலங்காப்பெருநகரினின்றும் அரை குலையத் தலை குலைய வந்து விழுந்த நீர்மையை அநுசந்தித்தால் மனமும் உடலும் வேறுபடாதவர்கள் 1மக்கள் ஆகார்,’ என்கிறார்.

    2மொய்ம் மாம் பூம் பொழில் – மொய்க்கப்பட்ட வண்டுகள் பொருந்திய பூக்களையுடைய பொழில். அன்றி, ‘செறிந்துள்ள மாமரங்களையுடைய அழகிய பொழில்’ என்னுதல். அன்றியே, ‘விரும்பத்தக்கதாய்ப் பரந்துள்ள மலர்ந்த பொழில்’ என்னுதல். பொழில் – சோலை. மொய் மாம் பூம் பொழில் பொய்கை – 3பூவார் கழல்களிலே பணி மாறப் பூத்தேடிக் கிடையாமையாலே 1இடர்ப்பட்டு வருகின்றவன், தூரத்திலே குளிர்ந்த சோலையும் பூத்த பொய்கையுமாய்த் தோற்றக்கண்டு ‘உள்ளே கொடிய முதலை கிடந்தது’ என்று அறியாமல் மேல் விழுந்து வந்து பறித்தான் ஆயிற்று. ‘உத்தேஸ்யனான ஈசுவரனை விட்டு, பொழிலையும் பொய்கையையும் இப்போது வர்ணிப்பது என்?’ எனின், 2அப்போது அவனுக்கு உத்தேஸ்யம் ஆயினமை போன்று, அச்சோலையோடு பொய்கையோடு வேற்றுமை அற இவர்க்கு உத்தேஸ்யமாயிருத்தலின் வர்ணிக்கிறார். அன்றியே, 3‘தயரதன் பெற்ற மரகத மணித்தடத்துக்கு இப்பொய்கையும் போலியாய் இருத்தலின், வர்ணிக்கிறார்,’ என்னுதல். அன்றியே, 4‘தாமரைக்காடு மலர்க்கண்ணொடு கனிவாய் உடையதுமாய்’ என்கிறபடியே, உபமான முகத்தாலும் விரும்பத்தக்கதாய் இருக்கிறதாதலின், வர்ணிக்கிறார் என்னுதல்.

    பொய்கை முதலைச் சிறைப்பட்டு நின்ற – 5தன் நிலம் அல்லாமையாலே வேறுபட்ட சாதியது ஒன்றன் கையிலே அகப்பட்டது; வெளி நிலமாகில் யானையே வெல்லுமன்றோ? யானைக்கு யானை யன்று; யானைக்குச்சிங்கம் அன்று; அற்பமாய் இருப்பதொரு நீர்ப்புழுவின் கையிலே அகப்பட்டது என்பார், ‘முதலைச் சிறைப்பட்டு’ என்கிறார். 6‘தெய்வ ஆண்டில் அநேகம் ஆயிரம் ஆண்டு முதலை நீருக்கு இழுக்க, யானை கரைக்கு இழுக்க’ என்கிறபடியே, இரண்டினுடையவும் செயல்களாய்ப் போந்தது, பின்பு அது தவிர்ந்து, முதலையின் செயலேயாய் யானையின் செயல் ஒழிந்ததாதலின், ‘நின்ற’ என்கிறார். யானைக்குத் தன் நிலம் அல்லாமையாலே வலிமை குறைய நேர்ந்தது; முதலைக்குத் தன் நிலம் ஆகையாலும், ‘விரும்பியது பெற்றோம்’ என்ற எண்ணத்தாலும் வலிமை இரட்டித்திருக்குமன்றோ? 1‘முழுவலி முதலை’ என்றாரே அன்றோ திருமங்கை மன்னனும்? 2‘தன் விருப்பம் முற்றுப் பெறுதற்கு ஒரு கறையடி காண வல்லோமே!’ என்று மனக் கிலேசத்தோடே கிடக்கையாலே வலிமை குறைந்திருந்தது; இப்போது அது பெறுகையாலே முழுவலியாயிருந்தது என்றபடி. தன் விருப்பம் முற்றுப்பெறுதற்கு இதுதான் 3கால்வாசி அறிந்தே அன்றோ பற்றிற்று? முன்பு ஒன்றைப் பிடித்தது இல்லையே? நெடுங்காலமெல்லாம் நம் சாபம் நீங்குதற்கு ஒரு 4கறையடி காண வல்லோமே!’ என்று கிடக்கிறது, அது பெற்றால் விடாதேஅன்றோ? கறையடி – யானை.   கைம்மாவுக்கு – யாதேனும் ஒன்று வந்தாலும் நம்மைக் கைம்மிஞ்சி வாராது,’ என்று கையைக் கண்டிருந்த யானைக்கு வந்து நோவு ஆதலின், ‘கைம்மா’ என்றது. அன்றியே, ‘துதிக்கையும் முழுகிப் போய்விட்ட துன்பம் ஆதலின், ‘கைம்மா’ என்கிறது ‘என்னுதல். ‘இடர்ப்படும்போதும் தன் பெருமைக்குத் தக்க படியாகவே பட்டது’ என்றபடி. 5‘ஆனையின் துயரம்’ என்னக்கடவதன்றோ? அருள் செய்த – துதிக்கை மூழ்கியும் பூவுக்கு ஒரு வாட்டம் வாராதபடி எடுத்துப் பிடித்துக்கொண்டு நின்றதாயிற்று, அதிற்செவ்வி மாறாதபடி திருவடிகளிலே இடுவித்துக்கொண்டு நின்ற நிலை. என்றது, ‘யானைக்கு நெடுங்கைநீட்டாக ஒண்ணாது என்று 1‘தூவாய புள் ஊர்ந்து வந்து’ பூ இடுவித்துக்கொண்டான் என்றபடி. அன்றி, ‘முதலையின் வாயிலே அகப்பட்ட யானையின் காலைத் திருக்கையாலே பரிசித்துக்கொண்டு குளிரக் கடாக்ஷித்து நின்ற நிலை’ என்னுதல்; யானையின் காலில் 2விலங்கை அன்றோ வெட்டிவிட்டது? ‘கொடிய வாய் விலங்கே’ அன்றோ? ஆக முதலையின் வாயிலே அகப்பட்ட யானையின் காலைத் திருக்கையாலே தொட்டு, 3திருமால் சக்கரத்தால் முதலையைப் பிளந்தார்’ என்கிறபடியே, அதனுடைய 4கிராஹத்தைப் போக்கி நின்ற நிலையைத் தெரிவித்தபடி.

    5‘‘காலைக் கதுவிடுகின்ற கயலொடு வாளை விரவி’ என்பது, என் சொல்லியவாறோ?’ எனின், ஸ்ரீ கோபிமார் கரையிலே திருப்பரிவட்டங்களை இட்டுவைத்துப் பொய்கையில் இழிந்தவாறே, பரிவட்டங்களையெல்லாம் வாரிக்கொண்டு ஒரு குருந்தின்மேலே ஏறி நிற்க, தங்களால் ஆன அளவெல்லாம் வருந்திப் பார்த்த இடத்திலும் அவன் பின்னையும் கொடாதே ஒழிய, அவர்களிலே ஈசுவரனுடைய திருவுள்ளத்தை அறிவாள் ஒருத்தி சொல்லுகிற வார்த்தை இது: ‘கயலோடே கூட வாளையானது காலைக் கதுவாநின்றது’ என்கிறாள். என்றது, ‘தன்னைப் புகல் புக்கதொரு யானையை ஒரு நீர்ப்புழு நலிய, அது பொறுக்கமாட்டாமல் விரைந்து வந்து விழக்கூடிய அவன், அந்தரங்கர்களான நாம் நோவுபடாநின்றால் வாராதிரான்’ என்னுமதனாலே சொல்லுகிறாள். ‘யானையை ஒரு நீர்ப்புழுவாயிற்று அங்கு நலிந்தது; 1அபலைகளான எங்களை இரண்டு நீர்ப்புழுக்கள் அலவோ நலிகின்றன?’ என்கிறாள்; ‘இதனைக் கேட்டபோதே பரிவட்டங்களையும் கொண்டு அரை குலையத் தரை குலைய விழும் என்றிருக்கிறாள்’ என்றபடி. ‘ஆயின், ஆய்ச்சியர்கட்கு ஈசுவர மர்மம் தெரியுமோ?’ எனின், 2வைஷ்ணவ சந்தானத்திலே பிறந்தார்க்கு ஈசுவர மர்மங்கள் தெரியுமன்றோ? ‘இன்னதற்கு வருவர், இரங்குவர்’ என்று அறிகின்றவர்கள் அவர்களேயாவர்.

    கார் முகில் போல் வண்ணன் கண்ணன் – யானையின் இடரைப் போக்கின போது வடிவிற்பிறந்த துடிப்பும் குணத்திற் பிறந்த துடிப்பும் இருக்கிறபடி. வடிவழகையனுபவிப்பித்து யானைக்குக் கையாளாய் நின்ற நிலை; தன்னை அனுபவிப்பித்துத் தாழ நின்றாயிற்றுப் போக்கிற்று. ‘ஆயின், ‘கண்ணன்’ என்றால், ‘கையாள்’ என்று காட்டுமோ?’ எனின், ‘கிருஷ்ணன் என்றால், தன்னை அனுபவிப்பார்க்குக் கையாளாயிருக்கும்,’ என்னுமிடம் பிரசித்தமன்றோ? 1யானையின் இடரைப் போக்கின விசல்ய கரணியும் சந்தான கரணியும் இருக்கிறபடி. எம்மானை – யானைக்கு உதவியவதனால் அதன் சிறை விட்டது; அந்நீர்மையிலே தாம் சிறைப்படுகிறார்; 2ஒரு ஜன்மமாதல், ஒரு ஞானமாதல், ஒரு ஒழுக்கமாதல் ஒன்றும் இன்றியே ருசிமாத்திரமேயுடைய ஸ்ரீ கஜேந்திராழ்வானுக்கு உதவினபடியை அநுசந்தித்து, ‘இது என்ன நீர்மை!’ என்று அதனாலேயாயிற்று இவர் அவனுக்கே உரியவர் ஆயிற்று. பட்டர், இவ்விடத்தை அருளிச் செய்யும் போது 3மேலும் இயலைச் சொல்லச் செய்து ‘அவன் நூறாயிரம் செய்தாலும் மனமும் செயலும் வேறுபடாதிருப்பதற்கும் நாமே வேணும்; நமக்கு ஒரு ஆபத்து உண்டானால் இருந்தவிடத்தில் இருக்கமாட்டாமல் விரைந்து வருவதற்கும் அவனே வேணும்,’ என்று அருளிச்செய்தார். சொல்லிப் பாடி எழுந்தும் பறந்தும் துள்ளாதார் – யானைக்கு உதவின நீர்மையை வாயாலேசொல்லி பிரீதியினால் தூண்டப்பட்டவராய்ப் பாடி, பின்னை உடம்பு இருந்தவிடத்தில் இராமல் எழுந்தும், தரையில் கால் பாவாதே பறந்தும், இப்படிக் களிப்போடு கூடி நடனம் செய்யாதார். தம்மால் கருமம் என் – ‘இவன் தன் படைப்பால் கொண்ட பிரயோஜனம் என்? 1தன்னுடைய பிறப்பால் பிரயோஜனம் கொள்வான் தானே அன்றோ? ஆதலால், தான் சரீரத்தை எடுத்த இதனால் என்ன பிரயோஜனம் கொண்டானானான்?’ என்கிறார். தண் கடல் வட்டத்து உள்ளீர் சொல்லீர் – எங்களைப் போன்று வேறுபட்டவராயிருத்தலின்றியே இருந்தீர்களேயாயினும், சரீரத்தை எடுத்துப் பகவானை பஜனை செய்யாதே. இதர விஷயங்களிலே ஈடுபட்டவர்களாயுள்ளவர்களோடு ஒரே சாதியராய்ச் செல்லுகிற நீங்கள்தாம் சொல்லிக்காணீர். ‘ஆயின், விசேஷஜ்ஞர்களைக் கேளாமல், ‘தண்கடல் வட்டத்து உள்ளீர்’ என்று பொதுவிலே கேட்பது என்?’ எனின், கடலுக்குட்பட்ட பூமியிலுள்ளார் அடைய விசேஷஜ்ஞர்களாய் இரார்களே? ‘ஆயின், இதர விஷயங்களில் ஈடுபட்டுள்ளவர்களாய்ச் செல்லுகின்றவர்களைக் கேட்பின் தெரியுமோ?’ எனின், விசேஷஜ்ஞர்களோடு அல்லாதாரோடு இவ்வர்த்தம் பிரசித்தம் என்று இருக்கிறார்.

பெரிய திருமொழி, 6. 8 : 3.

      ‘அருள்செய்த’ என்பதற்கு இரண்டு வகையில் பொருள் அருளிச்
செய்கின்றார்:முதற்பொருள், ‘பூவின் செவ்வி மாறாதபடி திருவடிகளிலே
இடுவித்துக்கொண்டு யானையின் துயரைப் போக்கிய’ என்பது. இங்குச் ‘சிறை’
என்பதற்குப் ‘பறித்த மலரைத் திருவடிகளிலே சார்த்தப்பெறாமையால்
உண்டான துக்கம்’ என்பது பொருள். இரண்டாவது பொருள், ‘விலங்கை
வெட்டி அருள் செய்தான்’ என்பது. இங்குச் ‘சிறை’ என்பதற்கு ‘விலங்கு’
என்பது பொருள். இப்பொருளில் ‘அருள்செய்த’ என்றதனொடு பின்
வருகின்ற ‘கண்ணன்’ என்ற சொல்லையும் கூட்டிப் பொருள் காண்க.
கண்ணன் – கண்ணையுடையவன்; இதனையே ‘குளிரக் கடாக்ஷித்து நின்ற
நிலை’ என்கிறார் வியாக்கியானத்தில்.

2. ‘விலங்கு’ என்றது, சிலேடை: கால் விலங்கு, முதலை, ‘முதலையை ‘விலங்கு’
என்றல் கூடுமோ?’ எனின், அதற்குப் பிரமாணம் காட்டுகிறார், கொடிய வாய்
விலங்கு’ என்று. இது, பெரிய திருமொழி, 5. 8 : 3.

இறைவனுடைய செயல்கள் பல இருக்க, யானைக்கு அருள் செய்த
இச்செயலை எடுத்து முதல் முன்னம் கூறும் கருத்து யாது?’ என்னும்
வினாவை எழுப்பிக்கொண்டு, அதற்கு விடையாக, அது ஈசுவரனை
வசீகரிப்பதற்குச் சிறந்த சாதனமாம்’ என்று கூறத் திருவுள்ளம் பற்றி அதற்குச்
சம்வாதம் காட்டுகிறார், ‘காலைக் கதுவிடுகின்ற’ என்ற திருப்பாசுரம்,
நாய்ச்சியார் திருமொழி, 3 : 5.

வடிவழகையும் குணத்தையும் சொல்லுவதற்கு ஒரு ரசோக்தி ‘யானையின்
இடரைப் போக்கின போது’ என்று தொடங்கும் வாக்கியம். துடிப்பு –
அதிசயம். ‘கார்முகில்போல் வண்ணன்’ என்றதனை நோக்கி, ‘வடிவழகை
அனுபவிப்பித்து’ என்கிறார். ‘கண்ணன்’ என்றதனை நோக்கிக் ‘கையாள்’
என்கிறார்.

அனுபவிக்கும் பாக்யசாலி களை கொண்டாடியும்
அன்பால் ஆஸ்ரியிப்பாரை ஆதரித்தும்
ஆஸ்ரியிக்காதவரை நிந்தித்தும் –
ஹர்ஷ பிரகர்ஷத்தால் களித்து –
முந்நீர் ஞாலத்தில் பிரகிருதி சம்பந்தம் இதர விஷயம் அனுசந்தித்து சோகம்
விச்லேஷத்தாலும் -அந்நாள் நீ தந்த ஆக்கையின் வழி உழல்வேன்
தங்களையும் ஈஸ்வரனையும் மறந்து
ஈஸ்வர கைங்கர்யமும் இழந்து
இழந்தோம் என்கிற இழவும் இன்றிக்கே
அது நிலம் ஆகாதது போலே இந்த ஹர்ஷமும் நிலம் இல்லை
நாம் கை வைத்தாலும் ஆழ்வார் நிலை அறியோம்
கூடாது சாஸ்திரம் செய்பவை செய்து –
கண்டாருக்கு ஒளிக்க வேண்டும்படி தப்பு கார்யம் செய்து –

முதல் தன்னிலே கிடையாதவை
நரகத்தில் மூட்டி அனர்த்தம் விளைவிக்கும்படியாக
சோகம் முந்நீர் ஞாலம் ஹர்ஷம் இதில் ஆழ்வாருக்கு
பகவத் விஷயம் ஒன்றாலே இரண்டும் –
அன்பிலா மூடரை நிந்தித்தும்
சாஸ்திரம் சுக துக்கே சமம் லாப அலாப -சொல்லியும் இப்படி செய்யலாமா
ஸ்தித பிரதிஞ்ஞன் -கீதை சமமாக வைக்க வேண்டுமே -தகுமா –
பீத ராகராய் -எதிலும் பற்று இன்று-அற்றது பற்று உபதேசிக்கிறார்
சாத்விக அக்ரேசர் -இவர் -இது கூடினபடி எங்கனே என்னில் –
சாஸ்த்ரங்களில் நிஷேதித்த சுகதுக்கங்கள் இல்லை
அது விஷயாந்தரங்களை பற்றி –
அனுபவ ஜனித ப்ரீதி -உண்டாக்கலாமே
வகுத்த விஷயம் இழந்து விஷய ப்ரவண ராய் அனர்த்த படுகிறார்களே
காமம் ஆகாது என்று சொல்லியும்
நிஷித்யாதிவ்யா பகவத் காமம் த்யானம் செய்ய சொல் லிற்றே
கண்ணனுக்கு  காமம் -இதற்க்கு என்று உரைத்தான்

இனி -முக்தரும் -முக்தப்ராயர் -நாரதாதி முனிவர்களும் ரிஷிகளும்
அஹம் அன்னம் களியா நிற்ப்பார்கள்
ஹாவு ஹாவு ஹாவு ஆனந்தம் வெளிப்பாடு சப்தம்

இட்டீடிட்டு விளையாடும் -சப்தங்கள் இட்டு
ஆதித்ய அதீனம்
பகவத்  ஹர்ஷம் நாரதர் கூத்தாடி –
சர்வ சம்சய நிர்முக்தர் சர்வ வித் அவர்களும் ஆடுவது பாடுவது ஆகா நிற்ப்பார்கள்
திருவடியும் -பிராட்டி கண்டதும் -சந்தோசம் -கூத்தாடி
சிறிய திருவடி பெயர் ஆசார்யர்கள் சொல்வது இல்லை –
மதுவனம் பட்டபாடு -farm house -ததிமுகன் மாமா காவல்
சுக்ரீவன் -விரக்தி அக்ரேசர் கொண்டாட அனுமதிக்க
தடுப்பவரை நான் பார்த்துக் கொள்கிறேன் –
காவல் கத்துக் கொண்டு இருந்த ததிமுகாதிகளை நான் தொட்டு தருகிறேன்
மகாராஜர் -சுக்ரீவன் பரிபாஷை -பெருமாள் உகந்த பெயர்
காவல்காடு அழிந்தது என்று -கேட்டதும் அவனும் கூத்தாடி
வாலை எடுத்து அடித்து -தீஷ தண்டனை அறிய செய்தேயும்

பிராட்டியை திருவடி தொழுது ஆகி இருக்க வேண்டும் –
வால் நீண்டு ரிஷ்ய முக பர்வதம் முகட்டில் அடித்து வெளிப்படுதினானே சுக்ரீவனும் –
கொடுமுடி -சிகரம்
ராஜபுத்ரர்கள் பிழைத்தார்கள் -எம்பார் வார்த்தை –
முதுகு -திருகோவலூர் பாசுரம்
திருநெடும் தாண்டகம் -பெண்ணையாறு கரை அழித்து வர
நிலம் பரந்து -கரை இருந்ததோ திருக்  கோவலூர் பிழைத்ததோ –
மதுவனம் இல்லாமல் இருந்தால் – முதுகோடு போகுமே
திருவிருத்தம் பட்டர் அருளிச் செய்த வார்த்தை-கொண்டாடி எம்பார் வார்த்தை என்று
ராஜ புத்ரர்கள் ஜீவன அதிர்ஷ்டம் –
சந்தோஷம் படுவது தப்பு இல்லை காட்ட இந்த திருஷ்டாந்தம்

தலை கால் தெரியாமல்
வெற்றிலை சாறு உண்டு -உள்ளே இறங்கி
உள் கலந்தாருக்கு அமுதம்
எனக்கே தன்னை தந்த அமுதம்
முற்றூட்டாக அனுபவித்து
அறிவில்லாதாரை நிந்தித்தார்
சிஷ்டாசாரம் அனுஷ்டிப்பாரை -கொண்டாடி திருநாள் சேவிக்காமல்
கிரகண காலத்தில் பூரணமாக திருமஞ்சனம் நம்பெருமாளுக்கு
தர்ப்பணம் -எப்பொழுது
சாஸ்திர மரியாதையை -கைங்கர்யம் -செய்பவர் –
கர்மம் தேக அனுபந்தி
கைங்கர்யம் ஆத்ம அனுபந்தி
தோல் புரையே போம் அது
விசிஷ்ட வேஷம் விஷயம் -கர்மம்
நிஷ்கிரிஷ்த வேஷம் விஷயம் -கைங்கர்யம்
ஜாதி ஆஸ்ரம -கர்மம் –
அத்தாணி சேவகம் செய்பவனுக்கு நழுவும்

அந்தர்யாமி யாக கொண்ட தேவதைகளுக்கு அனுஷ்டானங்கள்
நேராக செய்யும் கைங்கர்யம் இது –
சாஷாத் -விசேஷம்
அறிவுடையராய் புறம்பே பரப்பு அற்று அதுக்கும் இதுக்கும் சமானபுதி செய்து
கர்மம் கைங்கர்யம் சமம் என்று சொல்வாரை நிந்தித்து
யாகம் யஞ்ஞம் கொண்டாடி -இருப்பாரையும் நிந்தித்து
சூத்திர பலன்கள் கொண்டு போவாரையும் ரஜஸ் தமஸ் காரியங்கள் கொண்டு
நிந்தித்து -தாமச தேவதைகளை ஆஸ்ரிப்பாரையும்
உள்ளம் உருகி -அவிக்ருதர்கள் -அவஸ்துக்கள் நிந்தித்து
பகவத் குணம் அனுபவித்து உருகி -ஜன்ம வருத்தங்கள் இன்றி இருந்தாலும்
அன்பிலா மூடர் ஏழு பாட்டில்
கொண்டாடி மேலே பாசுரங்கள்
ஆனைக்கு அரை குலைய உடை குலைய ஓடி வந்து
இடிச்சபுளி மாறுதல் அடையாதே
அது போல் இருப்பாரை நிந்தித்து அவஸ்து என்கிறார்

பொய்கை -முதலை -யானை -ஆனந்தம் படாமல் -என்ன பிரயோஜனம்
மொய்மா பூம் பொழில் வண்டுகளால் மொய்க்க பட்ட நெருக்கமான சோலை செறிவு
மா பொழில் மாந்தோப்பு
பூத்த பொழில் மனோகரத்வம்
பொய்கை -கஜேந்திர ஆழ்வானை மயக்க -செய்த-காமரு பொய்கை –
பூவார் கழலில் பூவை இட –
குளிர்ந்த சோலை பூத்த பூவும் கண்டு மேல் விழுந்து
உள்ளே துஷ்ட முதலை இருக்கும் அறியாமல்
சோலை பொய்கை எல்லாம் உத்தேச்யம் ஆழ்வாருக்கும்
தயரதன் பெற்ற மரகத மணித்தடம் –
தாமரைக் காடு -உபமானமாக சொல்லியும் மனோகரம் ஆழ்வாருக்கு

அதி ரசம் தேன்குழல் சமஸ்க்ருதம் தமிழ்
மணி பிரவாளம்
தித்யோதனம் புளியோரை -இதுவும் மணி பிரவாளம்
பிரசநகாத் இதை சொல்லி –
தடாகத்தில் தாமரை -போலி
கைவண்ணம் தாமரை
இலை போலும் திருமேனி
வாசத் தடாகம் போல் வருவானை
உபமானம் தாமரை தடாகம்
இவ்வளவு விசெஷணம் இதனால் சொல்லி –
முதலை யாகிய சிறை பட்டு நின்று

முதலைச் சிறைப்பட்டு -சொல்ல  வேண்டும்
தன்னிலம் இன்றி
ஜலத்தில் பலம் முதலைக்கு –
யானைக்கு பலம் இன்றி
வெளி நிலம் ஆகில் -யானைக்கு யானை வெல்லும்
சிம்மத்தையும் வெல்லும்
விசஜாதி வஸ்து
நீர்புழு கையில் அகப்பட்டு
சிறைப்பட்டு நின்று ஆயிரம் தேவ வர்ஷம்

விஷ்ணு தர்ம பிரமாணம் –
முதலையின் வியாபாரமாய் -ஆனையின் செயல் ஓய்ந்து
அபிமத சித் தியாலும் தன்னிலமாகையாலும் -முழு பல முதலை –
கரை அடி -யானைக்கால் இருப்பவரை சொல்வது வழக்கம்
கால் வாசி அறிந்து பற்றிற்று –
முன்பு ஒன்றை பிடித்தது இல்லை
சாப விமோசனத்துக்கு கரை அடி -பெற்று –
தனி மாவுக்கு -கைம்மா -கை தட்டி ஆபத்து போக்கும்
பரிமா -குதிரை அரிமா சிங்கம்
ஏதேனும் ஓன்று வந்தாலும் கை விஞ்சி போகாது என்று இருக்கும் யானை கைமமா

துதிக்கையும் முழுக்க -மூச்சு விடலாமே இத்தால் -இடர் படும் பொழுதும் தனது
யானைக்கு தக்க வாதம் -யானையின் துயரம் தீர -புள்ளூர்ந்து
அருள் செய்த -பூவுக்கு ஒரு வாட்டம் வாராதபடி எடுத்து பிடித்து
செவ்வி மாறாமல் திருவடியில் இட்டுக்  கொண்டு –
கால் ரணம் –
கரையில் வந்து நின்று ஆழி தொட்டானே
வாயாலே ஒத்தனம் கொடுத்து –
திருக்கையாலே ஸ்பர்சித்து கடாத் ஷிது
நெடும் கை நீட்டாது –
விலங்கு அறுத்து -சம்சாரம் நீக்கி முதலையை வெட்டி விட்டு
கொடியவை விலங்கு –கொண்ட சீற்றம் உண்டு
கிராகம் போக்கி துக்கம் முதலைஇரண்டு அர்த்தம்
கிராகம் சக்ரேன மாதவா -விஷ்ணு தர்ம ஸ்லோகம் –

கோபிகள் நீராட -வஸ்த்ரம் பரிக்க –
காலை கதுவிட விட்ட
கோல கரிய பிரானே குருந்திடை கூறை பணியாயே
இங்கும் பொய்கை –
ஆன வழியும் பார்த்து ஈஸ்வர மர்மஞ்ஞை அறிந்த ஒருத்தி வார்த்தை
கயலொடு வாளை -இரண்டும் காலை கதுவா நின்றதே
ஒரு நீர் புழு
முதலை மேல் சீறி வந்தார் -உம்பரால் அறியலாக ஒளி உளார் –
பிரகலாதன் துருவன் நம் ஆழ்வார் இல்லை
ஆனைக்காகி
ராவணன் இல்லை -நீர் புழுக்கு
நம்பரமாயதுண்டே
த்வரித்து கொண்டு விளக் கடவ -அந்தரங்கர் நாம் நோவு படாநிற்க
இரண்டு நீர் புழு நலிய –
கெட போதே பரிவட்டங்கள் கொண்டு அரை குலைய தலை குலைய
ஈஸ்வர மர்மங்கள் அறிவார் ஸ்ரீ வைஷ்ணவ சம்பத் –
உள்ளவர்கள்
கார் முகில் போல் வண்ணன் -இடரை போக்கி வடிவில் வந்த புகர்

ஆனைக்கு கையாள் -கண்ணன்
கிருஷ்ணன் என்றால் அனுபவிப்பாருக்கு கையாள்
யசோதை பாண்டவர்கள்
கரணி சந்தான -மருந்து -இரண்டும் தனக்கே
அனுபவித்து தாழ நின்றான்

எம்மானை -நீர்மையில் தான் சிறைப்பட்டார்
யானைக்கு சிறை விடுவித்தான்
ஜன்மம் ஆதல் -ஞானம் ஆதல் -வருத்தம் ஆதல் இன்றி
ருசி மாத்ரமே நீர்மை ஈடுபட்டு அனந்யார்கர் ஆனார்
மேலேயும் இயலை சொல் லப்பண்ணி பட்டர் –
நாம் அவன் நூறு ஆயிரம் செய்தாலும் விகிர்தர் ஆகாமல் நாம் இருக்க
இருந்த இடத்தில் விகிரதா ஆகி ஓடி வந்து -சின்ன
எம்மானை பாடி ஆடி துள்ளாதார் -கேட்டு -பட்டர் அருளிச் செய்த வார்த்தை

வாயாலே சொல்லி
ப்ரீதி தூண்ட ஆடி
எழுந்தும்
கால் பாவாதே
துள்ளியும் பண்ணாதார்
தன்னுடைய உத்பதிக்கு என்ன பிரயோஜனம்
சரீரம் பரிக்ரகம் கொண்டதால் என்ன பிரயோஜனம் -கொண்டான் –
தன்மையான கடலால் சூழப்பட பூமியில் உள்ளவரே சொல்லீர்
துள்ளாதவர் -எங்களைப் போலே ஆழ்வார்களைப் போலே
பகவத் பஜனம் பண்ணாமல் இதர பிரவணராய்
அனைவருக்கும் இவ்வர்த்தம்
விசெஷஞ்ஞாருக்கும் சாதாரண சம்சாரிகளுக்கும் பிரசித்தம் –என்கிறார்

நஞ்சீயர் திருவடிகளே சரணம்.

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply