பால்என்கோ! நான்கு வேதப்
பயன்என்கோ! சமய நீதி
நூல்என்கோ! நுடங்கு கேள்வி
இசைஎன்கோ! இவற்றுள் நல்ல
மேல்என்கோ! வினையின் மிக்க
பயன்என்கோ! கண்ணன் என்கோ!
மால்என்கோ! மாயன் என்கோ
வானவர் ஆதி யையே.
பொ-ரை : ‘தேவர்களுடைய இருப்பு முதலானவற்றிற்கெல்லாம் காரணனான இறைவனைப் பால் என்பேனோ! நான்கு வேதங்களாகிய பயன் என்பேனோ! வைதிக சமயத்துக்குரிய இதிகாச புராணங்கள் என்பேனோ! கேட்பார்களை ஈடுபடுத்துகின்ற கேள்வியையுடைய இசை என்பேனோ! இதுகாறும் கூறியவற்றுளெல்லாம் வேறுபட்டதாய் மேம்பட்டதாய் இருப்பது ஒன்று என்பேனோ! சிறிய முயற்சியால் பெரிய பயனைக் கொடுப்பது ஒன்று என்பேனோ! கண்ணன் என்பேனோ! மால் என்பேனோ! மாயன் என்பேனோ! யாது என்பேன்?’ என்றபடி.
ஈடு : ஆறாம் பாட்டு. 1வேதம் தொடக்கமான இயலும் இசையுமான ஒலிகளின் கூட்டத்தை விபூதியாக உடையனாயிருக்கிறபடியைப் பேசுகிறார்.
பால் என்கோ – 2மேற்பாசுரத்தில் கூறிய சுவை பின் நாடினபடி. நான்கு வேதப் பயன் என்கோ – நாலு வகைப்பட்ட பிரமாணக் கூட்டத்தில் சாரமாய் இருக்கிற வேதமாகிற பிரயோஜனம் என்பேனோ! வேதங்களில் வேறேயும் ஒரு கூறு வேறு ஒருவனைத் துதித்தாலேயன்றோ ‘நான்கு வேதங்களில் பயன்’ என்ன வேண்டுவது? அது இல்லையாதலின் ‘நான்கு வேதப் பயன்’ என்கிறார். இனி, வேதமானது ஆராதன சொரூபம் சொல்லுமிடமும், ஆராதிக்கப்படும் இறைவன் சொரூபம் சொல்லுமிடமுமாய்க் கட்டடங்க இவனையே சொல்லுகையாலே, வேதத்தில் நாலு மூலைக்கும் உள்ள பயன் இல்லாத இடம் இல்லையாதலின், ‘நாலு வேதப் பயன்’ என்கிறார் என்னுதல்: 3‘பூர்வபாகம் உத்தரபாகம் என்று பிரிவுபட்டுள்ள எல்லா வேதங்களாலும் நான் அறியப்படுமவன்’ என்பது ஸ்ரீ கீதை. சமய நீதி நூல் என்கோ – வைதிக சமயத்துக்கு நிர்வாஹகமான இதிகாச புராணங்கள் என்பேனோ! இவை வேதங்களின் பொருள்களை விரித்துக் கூறுவனவாதலின், ‘நீதி நூல்’ என்கிறார். நீதி – நிர்வாஹகம். 4‘வேதமானது இதிகாசங்களாலும் புராணங்களாலும்
விவரிக்கப்பட வேண்டியது’ என்பது ஸ்மிருதி வாக்கியம். நுடங்கு கேள்வி இசை என்கோ – கேட்டாரை நஞ்சுண்டாற் போன்று மயங்கச்செய்கிற கேள்வியையுடைத்தான இசை என்பேனோ!
இவற்றுள் நல்ல மேல் என்கோ – மேலே கூறியவற்றுளெல்லாம் வேறுபட்டதாய் அவ்வருகாய் இருப்பது ஒன்று என்பேனோ! 1’எல்லாம் சொல்ல வேண்டும், எல்லாம் சொல்லமாட்டார்’ ஆதலின், ‘இவற்றுள் நல்ல மேல் என்கோ’ என்று தொடங்கி அருளிச்செய்கிறார். வினையில் மிக்க பயன் என்கோ – சிறிய முயற்சியால் பல விதமான பலத்தைப் பலிப்பது ஒன்று என்பேனோ! ‘என்றது, என் சொல்லியவாறோ?’ எனின், கலநெல்லை வித்தி நூறாயிரக் கலமாக விளைத்துக்கொள்வாரைப் போன்று, இத்தலையிலுள்ளது நட்புத்தன்மையேயாய் அதற்கு 2’நத்யஜேயம்-நான் விடமாட்டேன்’ என்னும்படி இருக்கையைக் கூறியபடி. கண்ணன் என்கோ – 3’உனக்கு நான் இருந்தேனே’ என்று ‘மாசுச:- நீ துக்கப்படவேண்டா’ என்னும் கிருஷ்ணன் என்பேனோ! ‘‘நான் தரும் அதனை நீ விலக்காமல் ஏற்றுக்கொள்ளுமித்தனையே வேண்டுவது; உனக்கு நான் இருந்தேன்,’ என்றவனன்றோ?’ என்றபடி. மால் என்கோ – அடியார்களிடத்தில் வியாமோகத்தையுடையவன் என்பேனோ! ‘நான் இருக்கிறேன் நீ துக்கப்படாதே’ என்று அருச்சுனனை நோக்கிக் கூறியவன், உடனே 4‘உனக்கு ஞானமுண்டாகும் நிமித்தமாகச் சொன்ன இந்தக் கீதை, தவஞ்செய்யாதவனுக்கும் பத்தி இல்லாதவனுக்கும் சிரத்தை இல்லாதவனுக்கும் என்னிடத்தில் அசூயையுடையவனுக்கும் உபதேசிக்கத் தக்கதன்று,’ என்று கூறினானாதலின், ‘அடியார்களிடத்தில் வியாமோகத்தையுடையவன் என்பேனோ!’ என்கிறார். 1‘‘இதம் து தே குஹ்ய தமம் பரவக்ஷ்யாமி’ என்றது போன்று 2‘இதம் தே நாத பஸ்காய’ என்ற சுலோகத்தையும் முன்னரன்றோ சொல்லல் வேண்டும்? அங்ஙனஞ்செய்யாது, ‘சர்வ தர்மாந்’ என்ற சுலோகத்தை முந்துறச் சொல்லிப் பின்னர், ‘இதந் தே நாத பஸ்காய’ என்றான்; இதற்கு அடி என்?’ என்று நஞ்சீயர் பட்டரைக் கேட்க, ‘திரௌபதி குழலை விரித்துக் கிடக்கையாலே அது முடிக்கைக்காக, செய்வது அறியாமையாலே மூலையில் கிடந்தாரை முற்றத்தே இட்டான்; பின்னை அர்த்தத்தின் சீர்மையை அநுசந்தித்து, ‘ஆர் அதிகாரிகளாகச் சொன்னோம்? கைப்பட்ட மாணிக்கத்தைக் கடலிலே போகட்டும்,’ என்று 3பதண்பதண் என்றான்காணும்,’ என்று அருளிச்செய்தார். மாயன் என்கோ – அடியார்கட்குத் தூது போதல் சாரதியாதல் முதலியவற்றைச் செய்யும் ஆச்சரியத்தையுடையவன் என்பேனோ! 4‘தூதர்கள் தாம் வந்த காரியம் முடிந்த பின்னர்த் தூது வந்த வீட்டில் உண்பர்கள்; ஆதலால், யானும் வந்த காரியம் முடிந்த பின் உன் வீட்டில் உண்கிறேன்,’ என்று கூறியதனால் தூது சென்றமை உணரலாகும். வானவர் ஆதியை – பிரமன் முதலானோர்களுடைய சத்து முதலியவைகள் தனக்கு உரிமையாம்படி இருக்கிறவன், என் அதீனமான சத்து முதலியவைகளையுடையவனாயிருக்கிற இருப்பை நான் எத்துணை என்று அளவிட்டுக் கூறுவது?
பாரதம், உத்தியோகபர்வம். இவ்விடத்தில்,
‘என்னி னின்னிலொரு பேத மில்லையிது என்னி னின்னிலது என்னினும்
மின்னின் முன்னிலகு விறல்நெ டும்படைவி தூரன் வந்தெதிர் விளம்பினான்;
உன்னி வின்னமுள தொன்று: பஞ்சவ ருரைக்க வந்தவொரு தூதன்யான்;
நின்னி லின்னடிசி லுண்டு நின்னுடன்வெ றுக்க எண்ணுவது நீதியோ?’
என்ற வில்லி பாரதச் செய்யுள் ஒரு புடை ஒப்பு நோக்கலாகும்.
வேதம் தொடக்கமான இயல் இசை சப்த விஷயங்கள்
காதுக்கு உண்டான விஷயங்கள்
நாவுக்கு உண்டானது முன்பு சொல்லி
பால் பின்னாட்டி
சார பூதமான வேதம் பிரமாணம்
வேதைச்ய சர்வைகி
ஆராதன ஸ்வரூபம் சொலும் பொழுதும் கட்டடங்க இவனையே சொலும்
கர்ம காண்டம் -பிரம காண்டம் –
நான்கு மூலைக்கும் இவனே பிரயோஜனம்
சமயம் -வைதிக சமய இதிகாச புராணங்கள் வேதம் விஷயீகரிக்கும் -இவற்றுக்கும்
இவனே -விஷயம் -வேதம் வேதார்த் அர்த்தம்நிர்ணயம்
நீதி நூல் தர்ம சாஸ்த்ரங்கள்
நுடங்கு நஞ்சு உண்டாரை போலே கேட்டாரை உருகி -இசை
அதற்கும் இவனே ஆதாரம்
இவற்றுள் நல்ல மேல்
எல்லாம் சொல்ல ஆசை பாரிப்பு ஆழ்வாருக்கு முடியாதே
பாட்டுக்குள் வைக்க முடியாதே அதனால் மேல்
என்கிறார் விபூதி கீதையில் அருளியது போல்
வினையில் வினை இல்லாத மிக பலன்
அல்ப யத்னத்தால் அநேக பலம் கொடுப்பவன்
காலன் நெல்லை வித்தைது நூறாயிரம் களம் விளைவிப்பாரை போலே மித்ரா பாவமே இத்தலையில் உள்ளது
நத்ஜயே தம் ஏதத் விரதம் என்பான்
கண்ணன்-என்கோ உனக்கு நான் இருந்தேன் மாசுச சொல்லிய கிருஷ்ணன்
தர்மத்தை –விலக்காதே -தன்னை சுவீகரித்து இத்தனையே வேண்டுமது
நாம் தரும் அத்தை நீ விலக்காதே -விலக்காமையே வேண்டும்
மல்-ஆஸ்ரித வியாமோகம் கொண்டவன்
இப்பாசுரத்தை சொல்ல -உனக்கு அனைத்தையும் கொடுப்பேன்
ஒன்பதாவது அத்யாயம் பக்தி யோகம் ஆரம்பிக்க
இதம் தே குக்ய தமம் ரகஸ்ய ராஜா இது சொல்லி -கவனமாக கேள்
சரம ஸ்லோஹம் உபதேசிக்கும் பொழுது -சோகம் பீடித்து இருக்க
முடித்த பின்பு தான் உணர்ந்தான் பரம ரகஸ்யம்
இரண்டையும் ஒப்பிட்டு நஞ்சீயர் கேட்ட ஐதீகம்
மால் என்பதால் இத்தையும் மீறி சொல்லி –
திரௌபதி குழல் முடிக்க அனைத்தையும் முற்றத்தில் கொட்டி
பாசுரம் சொல்லும் முன்பு சொல்லாமல் –
இதம் தே நாதம் பஸ்காய
செய்வது அறியாமையாலே -குழல் முடிக்க வைக்க –
மூலையிலே கிடந்ததை முற்றத்தில் இடுவாரைப் போலே
துடப்பம் நடுவில் வைப்பது போலே வேற இடத்தில் இப்படி அருளுவர்கள் –
அர்ஜுனன் துடப்பம்
அர்த்தம் சீர்மை அனுசந்தித்து பின்பு -யார் அதிகாரிகள்
கைபட்ட மாணிகத்தை கடலில் பொகட்டொம் என்று
பதண் பதண் என்றான் காணும்
யுத்தம் முடிந்த பின்பு அனைத்தும் மறந்தானே அர்ஜுனன்
அறிவிலாதவன் -என்று கண்ணனே கூருவது அறிவோமே
மாயன் என்கோ தூத்ய சாரத்யங்கள்
தூது நிறைவேறாமல் கை நனைக்க கூடாதே –
வானவர் ஆகி பிரமாதிகள் சத்தா திகள் இவன் அ தீனம்
நஞ்சீயர் திருவடிகளே சரணம்.
நம்பிள்ளை திருவடிகளே சரணம்.
வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.
Leave a Reply