அச்சுதன் அமலன் என்கோ!
அடியவர் வினைகெ டுக்கும்
நச்சுமா மருந்தம் என்கோ!
நலம்கடல் அமுதம் என்கோ!
அச்சுவைக் கட்டி என்கோ!
அறுசுவை அடிசில் என்கோ!
நெய்ச்சுவைத் தேறல் என்கோ!
கனிஎன்கோ! பால்என் கேனோ!
பொ-ரை : ‘அழிவில்லாதவனாய்க் குற்றமற்றவன் என்பேனோ! அடியார்களுடைய பாவங்களைப் போக்குகின்ற விரும்பப்படுகின்ற உயர்ந்த மருந்து என்பேனோ! கடலிலே கிடக்கின்ற சிறந்த அமிருதம் என்பேனோ! அமிருதத்தின் சுவையையுடைய கருப்புக்கட்டி என்பேனோ! அறுசுவைகளையுடைய உணவு என்பேனோ! மிக்க சுவையுடைய தேன் என்பேனோ! கனி என்பேனோ! பால் என்பேனோ! யாது என்பேன்?’ என்றவாறு.
வி – கு : ‘கெடுக்கும் மருந்து’ எனக் கூட்டுக.
ஈடு : ஐந்தாம் பாட்டு. 3சுவையுடைய பொருள்களை விபூதியாக உடையனாயிருக்கிறபடியை அருளிச்செய்கிறார்.அச்சுதன் அமலன் என்கோ – 1நித்திய விபூதியோடே கூடியிருக்கும் இருப்புக்கு ஒருநாளும் அழிவில்லாதபடியிருப்பவனாய், குற்றம் ஒன்றும் தீண்டப்படாதவனாய், நற்குணங்கட்கெல்லாம் தானே இருப்பிடமானவனாய் உள்ளவன் என்பேனோ! அடியவர் வினை கெடுக்கும் – தன் பக்கல் 2நியஸ்தபரரானவருடைய எல்லாத் துக்கங்களையும் போக்கிப் பாதுகாக்குமவன்; இதனால், 3இப்படிச் ‘சேய்மையில் உள்ளவன்’ என்று அடியார்கள் இடர்ப்பட வேண்டாதபடி, யானை இடர்ப்பட்ட மடுவின் கரையிலே விழும் தன்மையன் என்பதனைத் தெரிவித்தபடி. நச்சு மா மருந்தம் – இடர்ப்பட்ட போதாகப் போய் மலை புக வேண்டாமல், ‘அவன் தூரத்தனானானேயாகிலும் நாம் ஆபத்துக்குள்ளான சமயத்திலே வந்து பாதுகாக்கும்’ என்று நம்பலாம்படி இருப்பான் ஒருவன். இனி, ‘ஆசைப்படும் ஓர் மருந்து’ என்னுதல். 4மா மருந்து – பெரிய மருந்து; வியாதியினளவு அல்லாத மருந்து; ‘என்றது, என் சொல்லியவாறோ?’ எனின், 5மேல்காற்றிலே காட்ட நோய் தீருமாயிருக்கையைத் தெரிவித்தபடி. இனி, ‘மா மருந்து’ என்பதற்கு, ‘ஒரே மூலிகையாய் எப்பொழுதும் உண்ணக்கூடியதாய் இருக்கிற மருந்து’ என்னுதல். இனி, ‘பத்தியமில்லாத மருந்து’
என்னுதல்; என்றது, இவன் 1பிராமாதிகமாகப் பண்ணும் பாவங்களையும் காணாக் கண்ணிட வல்லனாயிருக்கை. தான் அறிந்து செய்கின்ற அன்று, பிறந்த ஞானத்தோடு மாறுபடும்; தன்னையறிந்த பின்பு முதலிலே இவற்றில் மூளான்; ஆன பின்பும், 2விரோதியான சரீரம் தொடர்ந்து வருகையாலே நெஞ்சு இருண்டு பாவங்களைச் செய்தல் தவிரான்; பின்னர் ஞானம் பிறந்தவாறே அதற்கு வருந்திப் பின் வாங்குவான். அவ்வாறன்றி, அறிந்தே பாவங்களைச் செய்வானாயின் ஞானம் பிறந்ததில்லையேயாமித்தனை.
நலம் கடல் அமுதம் என்கோ – கடலிலே கடையாமல் வந்த அமிருதம் என்பேனோ! அச்சுவைக் கட்டி என்கோ – அவ்வமிருதத்தைச் சார்த்து ‘அச்சுவைக் கட்டி’ என்று சுட்டுகிறாராதலின், ‘கட்டி’ என்பது கருப்புக்கட்டியாமித்தனை. அவ்வமிர்தத்தோடொத்த சுவையையுடைய கருப்புக்கட்டி என்பேனோ! அறுசுவை அடிசில் என்கோ – ஆறுபடிப்பட்ட சுவையையுடைய அடிசில் என்பேனோ! அறுசுவையாவன: ‘கைப்பு, புளிப்பு, கார்ப்பு, தித்திப்பு, துவர்ப்பு, உவர்ப்பு’ என்பன. நெய்ச்சுவைத் தேறல் என்கோ – மிக்க சுவையையுடைய தேன் என்பேனோ! நெய் – மிகுதி. இனி, ‘சுவை’ என்பதனை இடைநிலைத் தீவகமாகக் கொண்டு, ‘சுவையையுடைய நெய், சுவையையுடைய தேறல்’ என்னுதல். கனி என்கோ பால் என்கோ – ‘ஒரு காலத்தில் இனியதாம் பழம் என்பேனோ! இனியதான பால் என்பேனோ! யாது என்பேன்?’ என்றபடி.
மேற்பாசுரத்தில் ‘ஆதியஞ்சோதி’ என்பதனைக் கடாக்ஷித்து, ‘நித்திய
விபூதியோடே கூடியிருக்கும் இருப்புக்கு’ என்று அருளிச்செய்கிறார். அச்சுதன்
– அழிவில்லாதவன். ஹேயப்பிரத்தியநீஹதை புக்க இடத்தே உபலக்ஷணத்தால்
கல்யாணகுணங்களும் புகுமாதலின், ‘அமலன்’ என்றதற்குக் குற்றம் ஒன்றும்
தீண்டப்படாதவனாய் நற்குணங்கட்கெல்லாந் தானே இருப்பிடமானவனாய்’
என்று பொருள் அருளிச்செய்கிறார்.
மேல் காற்றிலே காட்ட நோய் தீருமாயிருக்கை’ என்னும் இவ்விடத்தில்,
‘நமனும்முற் கலனும் பேச, நரகில்நின் றார்கள் கேட்க,
நரகமே சுவர்க்க மாகும் நாமங்க ளுடைய நம்பி’
என்ற திருமாலைப்பாசுரம் அநுசந்திக்கத் தகும்.
ரசவ பிரார்தங்களை -விபூதியாககொண்டவன்
அச்சுதன்
அமலன்
கல்யாணகுணங்கள் இருப்பிடம் கொண்டவன்
வினைக்கு நச்சு
தூரச்தன் இல்லை ஆஸ்ரிதர் அடியவர் வினை யானைக்கு ஓடி வந்து விழும்
சகல துரிதங்கள் போக்கி
நச்சு மா மருந்து -வினை -நஞ்சு அமிர்தம்
நச்சு அடைதல் -இடர் கெட மலை தேடி போகாமல் -ஆபத்தில் வந்து ரஷிப்பான்
சஞ்சீவி மலை தேட போக வேண்டாமே
கை கண்ட மருந்து நச்சப்பட கிட்டே உள்ள மருந்து
விஸ்வசிகலாம்
ஆசைப்படும் ஒரு ஔ ஷதம்
மகா வியாதி விட அளவு பெருகிய மருந்து
மேல் காற்றில் காட்ட நோய் தீருமே
ஏக மூலிகையாய் -சர்வ ரோக நிவாரணி
சதுர் செவ்யன் ஒரு தடவை
அபத்யம் சகிக்கும் -பத்தியம் இருக்க வேண்டாமே
பிராமாதிகமாக பாணின பாபங்கள் -அறியாமல் செய்பவை காணாக் கண் இட வல்லனாய்
கண்டு கொண்டாலும் -கண்டுக்காமல் கண்டு கொள்ளாமல் இருபது –
தொண்டர் பல் ஆயிரம் பிழைகள் -பார்த்து இருந்தும் காணும் கண் இல்லாதவன் -அருளாள பெருமாள் நாயனார்
பார்ப்பது வேற காணுதல் வேற -அழகிய பாசுரம் –
தாமரை இலை தண்ணீர்- போலே ஒட்டாதே –
புத்தி பூர்வகமாக பண்ணாமல் -தெரியாமல் -நம்மை அறியாமல் –
எம்பெருமான் வைபவம் பார்த்தல் எல்லாம்
ஞானம் பிறக்க வில்லை அறிந்தே செய்தால்
அறிந்த பின்பு போகான்
விரோதி தேகம் அனுவர்த்திகையாலே கொஞ்சம் இறங்க தூண்டும்
ஞானம் பிறவா அநந்தரம் -பச்சா -தாபம் அனுதாபம் லஜ்ஜை
பாபம் செய்து -பயம் -அனுதாபம் -லஜ்ஜை மூன்றும் இருக்க வேண்டும் –
மணவாள மா முனிகள் நைச்ய அனுசந்தானம் நமக்காக அருளி
மோகத்தால் மூன்றும் இல்லை தஸ்மாத் புனர் புனர் குர்வே –
எம்பெருமானார் இடம் அருளி -அன்று நான் பிறந்திலேன் பிறந்த பின் மறந்திலேன்
பின்னும் பிழை செய்தா ல் ஞானம் பிறந்து இல்லையாம்
மா மருந்தாம்
கடலில் கடியாமல் வந்த அமிர்தம்
அமிர்தம் அநந்தரம் சொல்லும் கட்டி –
கறுப்புக் கட்டு அரு சுவை –
கைப்பு புளிப்பு தித்திப்பு உவர்ப்பு போலே
நெய் சுவை தேறல்
நெய்தது மிகுதி சுவை உடைய தேன்
கனி என்கோ இனியதன பழம்
பால் என்கோ
நஞ்சீயர் திருவடிகளே சரணம்.
நம்பிள்ளை திருவடிகளே சரணம்.
வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.
Leave a Reply