திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -3-4-2-ஸ்ரீ M.A V .சுவாமிகள் —

கூவுமாறு அறிய மாட்டேன்,
குன்றங்கள் அனைத்தும் என்கோ!
மேவுசீர் மாரி என்கோ!
விளங்குதா ரகைகள் என்கோ!
நாவியல் கலைகள் என்கோ!
ஞானநல் ஆவி என்கோ!
பாவுசீர்க் கண்ணன் எம்மான்
பங்கயக் கண்ண னையே.

பொ-ரை : ‘பரந்த புகழையுடைய கண்ணனாய், எனக்குத் தலைவனாய், தாமரை போன்ற கண்களையுடையவனாயிருக்கிற இறைவனைச் சொல்லும் வகை அறியமாட்டேன் எல்லா மலைகளும் என்பேனோ! பொருந்திய சிறப்பையுடைய மழை என்பேனோ! விளங்குகிற நக்ஷத்திரங்கள் என்பேனோ! நாவால் இயற்றப்பட்ட அறுபத்து நான்கு கலைகள் என்பேனோ! ஞானத்திற்குக் காரணமான ஒலி என்பேனோ! யாது என்பேன்?’ என்றவாறு.

    வி-கு : ‘சீர்த்தி மிகுபுகழ்’ என்றார் தொல்காப்பியனார்.

    ஈடு : இரண்டாம் பாட்டு. மேற்கூறிய ஐம்பெரும்பூதங்களினுடைய காரியங்களை முறையாகப் பேசுகிறார்.

    கூவுமாறு அறிய மாட்டேன் – பாசுரமிட்டு அழைக்கும்படி அறிகின்றிலேன். அர்த்தங்களில் அறியக் கூடாதது ஒன்று உண்டாய்ச் சொல்லுகிறாரல்லர்; பகவானுடைய திருவருளால் வந்த வெளிச்சிறப்பால் அர்த்தங்கள் அடைய அறியக் கூடியவாயிராநின்றன. ‘பின்னை என்னை?’ எனின், பத்தியினாலே பரவசப்பட்டுப் பேசமாட்டுகின்றிலேன் என்கிறார். அன்றி, ‘இவ்வளவு என்று சொல்லத்தக்க அளவு கடந்திருக்கையால் பேச மாட்டுகின்றிலேன் என்கிறார்,’ என்னுதல். குன்றங்கள் அனைத்தும் என்கோ – பூமியினுடைய வன்மை ஓரிடத்திலே திரண்டாற்போலேயாய், பூமிக்கு ஆதாரமாயிருக்கிற மலைகள் என்பேனோ! இது, மேல் ‘பொரு இல் சீர்ப்பூமி’ என்றதனுடைய காரியம். மேவு சீர் மாரி என்கோ – கண்டார் மேவும்படியான வடிவழகையும் குளிர்த்தியையுமுடைய மேகம் என்பேனோ! 1மேகம் இவர்தமக்கு இரண்டொரு காரியமாம்; திருமேனியில் அழகுக்குப் போலியாயிருக்கையாலேயும் விடமாட்டார். இது, மேல் ‘திகழுந்தண் பரவை’ என்றதன் காரியம். விளங்கு தாரகைகள் என்கோ – விளங்குகின்ற நக்ஷத்திரங்கள் என்பேனோ! தாரகைகளைக் கூறியது, ஒளி காரணமான எல்லாப் பொருள்களுக்கும் உபலக்ஷணம். இது, மேல் ‘தீ என்கோ!’ என்றதன் காரியம். நா இயல் கலைகள் என்கோ -நாவாலே இயற்றப்பட்ட அறுபத்து நான்கு கலைகள் என்பேனோ! இது, மேல் ‘வாயு என்கோ! என்ற வாயுவின் காரியம். ‘ஆகாயத்தின் குணமான ஒலியானது வாயுவின் காரியமாமாறு என்?’ என்னில், 1ஒலிகளினுடைய பிரகாசம் காற்றினுடைய காரியமன்றோ? ‘அதற்கு அடி என்?’ என்னில், முயற்சியால் உண்டாக்கத் தக்கதாய் இருத்தலினாலே. ‘முயற்சியால் உண்டாகக்கத் தக்கதாயிருந்தால் காற்றின் காரியம் ஆமாறு என்?’ என்னில், முயற்சிதான் காற்றினைக் காரணமாக உடைத்தாயன்றோ இருப்பது?

    ஞான நல் ஆவி என்கோ – ஆவி என்பது, ஆகுபெயராலே ஒலியினைச் சொல்லுகிறது; ஞானத்தைப் பொதிந்துகொண்டன்றோ ஒலியானது இருப்பது? இந்திரியம் முதலானவற்றைப் போன்று ஒலிக்கு ஒரு விதக் குற்றமும் இல்லாமையாலே, ‘நல் ஆவி’ என்கிறார். இது, மேல் ‘நிகழும் ஆகாசம் என்கோ!’ என்ற ஆகாசத்தின் காரியம். ‘ஆகாசம் என்கோ’ என்ற ஆகாசத்தின் குணமேயன்றோ ஒலி? 2திரவியத்தினுடைய காரண குணமேயன்றோ அந்தக் காரியத்தினுடைய குணத்திற்கும் காரணம்? நூலிலுள்ள வெண்மை நிறமேயன்றோ வஸ்திரத்திலுள்ள வெண்மை நிறத்துக்கும் காரணம்? பாரிசேடியத்தின் பிரயத்தனத்தாலே ஆகாச குணத்தையே சொல்லிற்றாமத்தனையன்றோ இதில்?

    பாவு சீர்க்கண்ணன் – 1‘எல்லாராலும் அறியப்பட்டவர்’ என்கிறபடியே, எங்கும் ஒக்கப் பரம்பின கல்யாண குணங்களையுடைய கிருஷ்ணன். எம்மான் பங்கயக் கண்ணன் – கண்ணழகாலேயாயிற்று இவரை 2ஒடியெறிந்தது. ‘‘பங்கயக் கண்ணன்’ என்றதனோடு ‘குன்றங்கள் அனைத்துமென்கோ!’ என்பது போன்றவைகளைச் சேர்த்துச் சொல்வான் என்?’ என்னில், ‘பங்கயக் கண்ணன்’ என்றதனோடு ‘குன்றங்கள் அனைத்தும்’ என்றதனோடு வாசியற்றிருக்கிறதாயிற்று இவர்க்கு. அன்றிக்கே, 3‘பெரும் புறக்கடல்’ என்கிற திருமொழி நிர்வஹிக்கிற கிரமத்திலே ‘குன்றங்களனைத்தும்’ என்றது, 4‘நின்ற குன்றத்தினை நோக்கி’ என்னுமாறு போன்று வடிவிற்குப் போலியாய், ‘மேவு சீர் மாரி’ என்று மேகத்தைச் சொன்னவிடம் திருநிறத்துக்குப் போலியாயிருக்கிறது’ என்று நிர்வஹிப்பாருமுண்டு.

கீழ் சொன்ன –
பாசுரம் இட்டு கூவுதல் அழைக்க கூவ கூவ நீ போது யெல்
பக்தி பாரவச்யம் -விஷய வை லஷண்யம் இரண்டாலும்
மலைகள் -பூமியின் கார்யம் கடின தன்மை -ஆதாரமாக இருக்கும் பர்வதங்கள்
மாரி -பரவை காரணம் -இது கார்யம்
மேவு கண்டார் மேவும் வடிவு அழகு குளிர்ச்சி உடைய மேகம்
இரண்டும் சொல்லி -திரு மேனி அழகுக்கு போலியானதால் விடமாட்டார்
நட்ஷத்ரம் -தீ -தேஜஸ் கார்யம் -உப லஷணம்
நாவியல் கலைகள் -வாயுவின்கார்யம்
காற்றால் சப்தம் -நாவால் இயற்ற பற்ற 64 கலைகள் –
பிரயத்னம் வாயுவால் தானே

ஆகாசம் கார்யம் -சப்தம் வாயு சப்த குணம் ஆகாசம் –
பூமி ஐந்து குணம்
ஆகாசம்
வாயு சப்தம் ஸ்பர்சம்
ஜலம் நான்கு குணங்கள்
த்ரவ்யத்தின் காரண குணம் காரியத்தில் -நூல் வெளுப்பு வஸ்த்ரம் வெளுப்பு
ஞானம் பொதிந்து கொண்டு சப்தம்
சுதகா தோஷம் இல்லை என்பதால் நல்
பாவு சீர் பரவும் கல்யாண குணங்கள் எங்கும் ஒக்க பரவி
எம்மான் -கண் அழகால் பங்கயக் கண்ணன் -வசமாக்கி
பாவு சீர்  கண்ணன் பங்கயக் கண்ணன் -குன்றங்கள் உடன் வாசி இன்றி
அவயவம் தானே இவை-
பெரும் புறம் கடல் -நின்ற குன்றத்தை நோக்கி குன்றம் போன்றவன் –
ஸ்வா பாவம் கொண்டவன் என்றும் பொருள்
மேகம் போன்ற ஔ தார்யம் நிறத்துக்கு போலியாக
திருவாய்மொழிக்கு ஓடும் ரசம் இல்லை
விபூதி அனுபவம் தானே இவருக்கு
குணம் சொல்கிறது என்றால் இப்படியும் கொள்ளலாம்

நஞ்சீயர் திருவடிகளே சரணம்.

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading