நான்காந்திருவாய்மொழி – புகழும்நல் ஒருவன்’
முன்னுரை
ஈடு : மேலே ‘ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி வழுவிலா அடிமை செய்ய வேண்டும் நாம்,’ என்று அடிமை செய்யப் பாரித்தார்; இவர் பாரித்த பாரிப்புக்கெல்லாம் போரும்படி ஈசுவரனும் தன்னுடைய 1சர்வாத்தும பாவத்தைக் காட்டிக் கொடுத்தான்; அதனை அநுசந்தித்துச் சொற்களைக்கொண்டு அடிமை செய்கிறார் இத்திருவாய்மொழியில்.
“உடனாய் மன்னி வழுவிலா அடிமை செய்யவேண்டும்,’ என்று பாரித்த இவர், சொற்களை மாத்திரம் கொண்டு அடிமை செய்வான் என்?’ எனின், இருவரும் 2இலையகலப்படுக்குமித்தனை போக்கி அவனும் அடிமை கொள்ளமாட்டான்; இவரும் அடிமை செய்யமாட்டார்; 3‘ஜனார்த்தனன் ஒன்றையும் விரும்புவது இல்லை,’ என்கிறபடியே, எளிய முறையில் ஆராதிக்கத் தக்கவனாய் இத்தலையில் பெற்றதுகொண்டு மனம் நிறைவு பெறுமவனே அவ்விறைவன்; 4‘புனையும் கண்ணி எனதுடைய வாசகஞ்செய் மாலையே; வான் பட்டாடையும் அஃதே,’ என்கிற இவருடைய சொல் அளவையே எல்லாமாகக் கொள்ளும் தன்மையனேயன்றோ அவ்விறைவன்? இவருடைய காதல்தானே 5‘ஆராத காதலே’ அன்றோ? இவருடைய பாரிப்புக்குத் தகுதியாக அவன் சர்வாத்தும பாவத்தைக் காட்டிக்கொடுத்த இடத்தில் அடிமை செய்கையின்றியே’, அவனுடைய குணங்களை அநுசந்தித்து நிலை குலைந்த அந்தக்கரணங்களை உடையராய் 6‘காலாழும்நெஞ்சு அழியும் கண்சுழலும்’ என்னும் தன்மையரே 1இவரும். அவன் சொரூபத்தோடு குணத்தோடு விபூதியோடு செயல்களோடு வேறுபாடு இல்லாமலே எல்லாம் உத்தேஸ்யமாய் இருக்கின்றது இவர்க்கு; ‘இறைவனுடைய குணங்களுக்கும் விபூதிக்கும் இவர்க்கு வேற்றுமை இல்லை,’ என்பது கருத்து. 2அவை தம்மைக் கண்ட கண்ட இடங்களில் அனுபவிக்கையன்றிக்கே, மாணிக்கத்தையும் வயிரத்தையும் முத்தையும் ஓர் ஆரத்திலே சேர்த்து அனுபவிப்பாரைப் போலே அவற்றை அடைய அவன் பக்கலிலே சேர்த்து அனுபவிக்கிறார். அன்றியே, ‘குணங்களுக்குப் பிரித்து நிலையுதலாதல் தோன்றுதலாதல் இல்லையாமாறு போன்று, விபூதிக்கும் அவனை ஒழிய நிலையுதலாதல் தோன்றுதலாதல் இல்லாமையாலே, சேர்த்து அனுபவிக்கிறார்,’ என்னுதல்; அன்றியே, ‘முத்தனுக்கு லீலா விபூதியும் ததீயத்வ ஆகாரத்தாலே அனுபவிக்கப்படும் பொருள் ஆகாநின்றதேயன்றோ? அத்தன்மையாலே அனுபவிக்கிறார்,’ என்னுதல். ‘ஆயின், முத்தன் 3‘இச்சரீரத்தை நினையாமலே நான்கு பக்கங்களிலும் சஞ்சரிக்கின்றான்,’ என்று கூறப்பட்டுள்ளதே?’ எனின், அவ்விடத்தில் கர்மம் காரணமான உருவத்தை நினையான் என்கிற இத்தனையேயாம். ஆக, கர்மங்காரணமான உருவம் நினைவிற்கு விஷயம் ஆகாதபடியான பாகம் பிறந்தால், எல்லாம் அவனுடைய பொருள் என்றே தோன்றி, எல்லாம் ஒக்க அனுபவிக்கப்படும் பொருளாகவே இருக்கும். இவர்க்கு அவன் குணங்களோடு விபூதியோடு வேற்றுமை அற அனுபவிக்கப்படும்பொருளாகும்படியன்றோ மயர்வற மதிநலம் அருளிற்று? கர்மம் காரணமான நினைவு பின் நாடாதபடியன்றோ இவர்க்கு ஈசுவரன் வெளிச்சிறப்புப் பண்ணிக்கொடுத்தது?
‘நன்று; இவ்விபூதிதன்னிலே 1‘எண்ணாத மானிடத்தை எண்ணாதபோது எல்லாம் இனியவாறே,’ என்று சிலரைச்சொல்லி, 2‘பேராளன் பேரோதும் பெரியோரை ஒரு காலும் பிரிகிலேனே,’ என்று ஒரு சிலரை மறக்கவொண்ணாதபடியாகவும் சொல்லா நின்றதே?’ எனின், 3ஞானம் பிறந்த நிலையிலே இருக்கும்படியாயிற்று இது; பிராப்தி சமயத்தில் வந்தால், இவ்வேறுபாடின்றி எல்லாம் ஒக்க அனுபவிக்கப்படும் பொருளாகவே இருக்கும். எல்லாம் ஈசுவர விபூதியாக இருக்கச்செய்தேயன்றோ சிலரைப் 4‘பொல்லாத தேவரைத் தேவரல்லாரைத் திருவில்லாத் தேவரைத் தேறேன்மின் தேவு’ என்கிறது? இங்ஙனம், அவ்வந்நிலைகள் காரணமாக விஷயங்களைப் பாகுபாடு செய்யாதொழியின், சாஸ்திரங்கள் எங்கும் ஒக்கச் சேரக் கிடக்கும்படி பார்க்கும் போது நின்ற நின்ற நிலைகளிலே 5ஹேய உபாதேய விபாகம் பண்ணி அநுசந்திக்க வேண்டி வருமேயன்றோ?
இவர்க்கு, இறைவன் தன் ஸ்வரூப குண விபூதி முதலானவைகளை அடையக் காட்டிக்கொடுக்கக் கண்டு, 6விபூதி காரணமான பூதங்கள் பௌதிகங்கள் அவற்றில் பிரகாசிக்கின்ற மாணிக்கம் முதலானவைகள் சுவைப்பொருள்கள் செவிக்குஇனிய இசை முதலானவைகள் மோக்ஷம் முதலான புருஷார்த்தங்கள் இவ்வுலகிற்குப் பிரதானரான பிரமன் முதலானோர் இவற்றுக்கு அடையக் காரணமான பிரகிருதி புருஷர்கள் ஆகிய இவை முழுதினையும் விபூதியாகவுடையனாய் இவற்றினுள்ளே அந்தராத்துமாவாய் அநுப்பிரவேசித்து இவற்றோடே கலந்து நிற்கச் செய்தேயும் இவற்றினுடைய தோஷங்கள் தீண்டப்படாதவனாய், 1’ஈசுவரன் தான் கர்மபலத்தைப் புசியாமல் மிக அதிகமாகப் பிரகாசிக்கிறான்,’ என்கிற பிரமாண பலத்தாலே இவ்வாத்துமாவுக்கு வரக்கூடியதான இன்ப துன்பம் முதலானவைகள் தன்பக்கல் தட்டாதபடி நிற்கையன்றிக்கே, எல்லாப்பொருள்களையும் ஏவுகின்ற தன்மையால் வந்த புகரையுடையவனுமாய், விபூதியில் அவ்வப்பொருள்கட்கு வாசகமான சொற்கள் அசித்தையும் அசித்தாலே அபிமானத்தையுடைய ஆத்துமாவையும் காட்டுகிற கணக்கிலே அவற்றுக்குள் அந்தர்யாமியாய் இருக்கிற பரமாத்துமாவையும் காட்டி இக்கூட்டத்துக்குப் பெயர்களாய் அவன் பக்கலிலே முடிவு அடைந்திருக்கையாலே அசாதாரணமான நாராயணன் முதலான சப்தங்களோடு வேற்றுமை அற எல்லாச் சொற்களும் அவனையே சொல்லுகின்றனவாயிருக்கிறபடியையும், இவ் விபூதிதான் புறம்பாய் விஞ்சிக் காட்டுகையன்றிக்கே 1தோளில் கிடக்கின்ற தோள் மாலையைப்போன்று தகுதியாய் அனுபவிக்கப்படும் பொருள்களிலே அடங்கியிருக்கிறபடியையும் அநுசந்தித்துப் பேறு பெற்றாராய்ப் 2பாரித்தபடியே எல்லா அடிமையும் செய்யமாட்டாமையாலும், அவன்தான் ‘கோவை வாயாள்’ என்ற திருவாய் மொழியிற்கூறியபடியே, ஒன்றையே எல்லா அடிமையுமாகக் கொள்ளும் தன்மையனாதலானும், சொற்களைக் கொண்டு செய்கிற அடிமையிலே இறங்கியவராய், 3மஹா வாதத்திலே பலோபாதாநம் பண்ணுவாரைப் போன்று ‘அத்தைச் சொல்லுவேனோ, இத்தைச் சொல்லுவேனோ!’ என்று இங்ஙனம் அலமருகிறார். ஆக, இத்தால், ‘வழுவிலா அடிமை செய்ய வேண்டும் நாம்’ என்று தாம் பாரித்தபடியே அடிமைசெய்து தலைக்கட்டுகிறார்.
256
புகழும்நல் ஒருவன் என்கோ!
பொருஇல்சீர்ப் பூமி என்கோ!
திகழும்தண் பரவை என்கோ
தீஎன்கோ! வாயு என்கோ!
நிகழும்ஆ காசம் என்கோ!
நீள்சுடர் இரண்டும் என்கோ!
இகழ்வுஇல்இவ் வனைத்தும் என்கோ!
கண்ணனைக் கூவு மாறே.
பொ-ரை : ‘எல்லாப் பொருள்கட்கும் உள்ளுயிராய் நிற்கும் கண்ணபிரானைக் கூறும் விதம், புகழப்படுகின்ற குணங்களை யுடைய ஒப்பற்றவன் என்பேனோ! ஒப்பில்லாத சிறப்பையுடைய பூமி என்பேனோ! விளங்குகிற குளிர்ந்த கடல் என்பேனோ! தீ என்பேனோ! காற்று என்பேனோ! உளதாகின்ற ஆகாசம் என்பேனோ! மிக்க ஒளியையுடைய இரண்டு சூரிய சந்திரர்கள் என்பேனோ! கொள்ளத் தக்கதாக இருக்கின்ற இப்பொருள்கள் எல்லாம் என்பேனோ! யாது என்பேன்?’ என்கிறார்.
வி-கு : ‘நல்’ என்பது, குணங்களுக்கு ஆகுபெயர். ஓகாரங்கள், ஐயத்தின்கண் வந்தன. ‘நாடன் என்கோ, ஊரன் என்கோ, பாடிமிழ் பனிக்கடல் சேர்ப்பன் என்கோ, யாங்ஙனம் மொழிகோ ஓங்குவாட் கோதையை.’ (புறம். 49)’ சொல்லென்கெனோ, முழுவேதச் சுருக்கென்கெனோ, எவர்க்கும் நெல்லென்கெனோ, உண்ணும் நீரென்கெனோ, மறை நேர் நிறுக்கும் கல்லென்கெனோ, முதிர் ஞானக்கனி என்கெனோ, புகல வல்லென்கெனோ குருகூர் எம்பிரான் சொன்ன மாலையையே.’ (சடகோபரந். 19) என்ற இடங்களிலும் ஓகாரம் ஐயப்பொருளில் வந்துள்ளமை காணலாகும்.
இத்திருவாய்மொழி அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்.
ஈடு : முதற்பாட்டில், அவனுடைய குணங்களையும் விபூதி காரணமான ஐம்பெரும்பூதங்களையும் சேரப்பிடித்து, இத்திருவாய் மொழியில் மேல் 1விரிவாகச் சொல்லப்படும் அர்த்தத்தையெல்லாம் சுருக்கமாக அருளிச்செய்கிறார்.
புகழும் நல் ஒருவன் என்கோ – 2‘உயர்வற உயர்நலம்’ தொடங்கி இதுகாறும் தாம் அனுபவித்த குணங்களையடைய ஒரு சொல்லாலே ‘புகழும் நல் ஒருவன் என்கோ’ என்கிறார். இனி, ‘சுருதி ஸ்மிருதி இதிகாசம் முதலானவைகளெல்லாம் கையெடுத்துக் கூப்பிடாநின்றுள்ள வேறுபட்ட சிறப்பையுடையனான ஒத்தாரை மிக்காரை இலையாய புருஷன் என்பேனோ!’ என்னுதல்; இனி, ‘புகழும் என்கோ, நல் என்கோ, ஒருவன் என்கோ’ எனத் தனித்தனியே கூட்டி, ‘எல்லாராலும் நன்றாகப் புகழப்படுமவன் என்பேனோ! நல்ல ஆனந்தம் முதலிய குணங்களையுடையவன் என்பேனோ! ஒத்தாரை மிக்காரை இலையாய அரியவன் என்பேனோ!’ என்னுதல். ஆக, குணத்தின் சேர்க்கையால் வந்த வேறுபட்ட சிறப்பினைச் சொல்லி, மேல் விபூதியைச் சொல்லுகிறார்: ‘ஆயின், குணங்களோடு சேர விபூதியைச் சொல்லு வான் என்?’ எனின், 1‘முடிச்சோதி யாயுனது முகச்சோதி மலர்ந்ததுவோ!’ என்று திருமுகத்தினழகையும் திருமுடியினழகையும் சேர்த்து அனுபவித்தது போன்று, குணங்களுக்கும் செல்வங்களுக்கும் உண்டான சேர்த்தியாலே குணங்களோடு ஒக்கச் செல்வத்தையும் சேர்த்து அனுபவிக்கிறார். பொரு இல் சீர்ப் பூமி என்கோ-ஒப்பில்லாத பொறுமை முதலிய குணங்களையுடைய பூமி என்பேனோ! இனி, 2‘பூமி திருவடியிலே பிறந்தது’ என்கிறபடியே பூமி அடியிலே பிறந்துடையது ஒன்று ஆகையாலே ‘பொரு இல் சீர்ப்பூமி’ என்கிறார் என்னுதல். திகழும் தண் பரவை என்கோ-காரணத்தின் அடியாக வந்த புகரையுடைத்தாய்ச் சிரமத்தைப் போக்குகிற தண்ணீர் என்பேனோ! மேற்கூறிய பூமியானது வன்மையாயிருப்பது ஒன்றாதலின், அந்தப் பூமியைக் காரியங்கொள்ளும்போது வன்மையை நெகிழ்த்துக்கொள்ள வேண்டுமன்றே? அந்த வன்மையை நெகிழ்த்துக்கொடுப்பது தண்ணீராதலின், அதன் பின்னர்த் தண்ணீரை அருளிச்செய்கிறார். தீ என்கோ-மேல் நோக்கி எரிகின்ற நெருப்பு என்பேனோ! அந்நெகிழ்ச்சி காரியங்கொள்ளவொண்ணாத அளவானால், அந்நெகிழ்ச்சியை வலிக்கப்பண்ணித்தருவது தீ ஆதலின், தண்ணீரின் பின் தீயை அருளிச்செய்கிறார்.
வாயு என்கோ – காற்று என்பேனோ! அந்நெருப்பு உறைத்தால் அதனை ஆற்றச்செய்வது காற்று ஆதலின், தீயின் பின் காற்றினை அருளிச்செய்கிறார். நிகழும் ஆகாசம் என்கோ-எல்லார்க்கும் மூச்சு விடுகைக்கு இடம் தருகின்ற ஆகாசம் என்பேனோ! இனி, நிகழுதல் – உள்ளதாதல்; அதாவது, ‘இவ்வருகில் நான்கு பூதங்களும் அழிந்து தன் பக்கல் வருமளவும் உளதாயிருத்தல்’ என்றாதல்; அன்றியே, ‘பொருள்களெல்லாம் தன் பக்கலிலே தங்கியிருக்கும்படி இடங்கொடுத்தல்’ என்றாதல்.ஆக, காரணமான ஐம்பெரும்பூதங்களையும் அருளிச்செய்தார். நீள் சுடர் இரண்டும் என்கோ – காரியமான கூட்டத்துக்கு அடைய உபலக்ஷணமாகச் சந்திர சூரியர்களைச் சொல்லுகிறார். 1′இவற்றின் நீர்க்களிப்பையறுக்கைக்கும் தாபத்தை ஆற்றுகைக்கும் படைத்த சந்திர சூரியர்களைக் கூறுகின்றார்,’ என்றபடி. 2இகழ்வு இல் இவ்வனைத்தும் என்கோ – ஒன்று ஒழியாமே எல்லாம் என்பானோ! 3‘எல்லாப் பூதங்களுக்கும் காரணமான வித்து யானே; என்னை அன்றிச் சராசரங்கள் இல்லை,’ என்றான் இறைவனும். இனி, இவைதாம் சில பொருள்களாகத் தோன்றுகை யன்றிக்கே அவனுடைய செல்வமாகத் தோன்றுகையாலே, விடத்தக்கது ஒன்றுமின்றிக் கொள்ளத்தக்கனவாகவே இருத்தலின், ‘இகழ்வு இல்’ இவ்வனைத்தும்’ என்கிறார் என்னுதல். கண்ணனைக் கூவுமாறு – கண்ணனைச் சொல்லும் வகை. ‘கண்ணனைக் கூவுமாறு’ என்பதனைப் ‘புகழும் நல் ஒருவன் என்கோ!’ என்பது முதலானவற்றோடு தனித்தனியே கூட்டுக. ‘அவனுக்கேயுரிய நாமத்தையிட்டுக் கண்ணனைக் கூவவொண்ணாதோ? ‘பூமி’ என்பான் என்?’ எனின், அருச்சுனன், ‘ஏ கிருஷ்ண’ என்றத்தோடு தாம் ‘பொரு இல் சீர்ப் பூமி’ என்றத்தோடு ஒரு வேற்றுமையற்று இருக்கிறதாயிற்று இவர்க்கு.
இலையகலப்படுக்குமித்தனை’ என்றது, ‘உணவு உண்பதற்கு இடப்பட்ட
இலையை மிகப் பெரிதாக இடவேண்டும் என்று நினைத்தல் இத்தனை’
என்றபடி. அகலப்படுத்தல் – விரிவுபடுத்துதல்; ‘பெரிய இலையாக இருத்தல்
வேண்டும்’ என்றபடி.
வெளிச்சிறப்பு – ஞானம்.
இத்திருவாய்மொழியில், முதற்பாசுரத்தை நோக்கி, ‘விபூதி காரணமான
பூதங்கள்’ என்கிறார். இரண்டாம் பாசுரத்தைத் திருவுள்ளம் பற்றிப்
‘பௌதிகங்கள்’ என்கிறார். நாலாம் பாசுரத்தில் முதலிரண்டு அடிகளைத்
திருவுள்ளம் பற்றி, ‘அவற்றில் பிரகாசிக்கின்ற மாணிக்கம் முதலானவைகள்’
என்கிறார். ஐந்தாம் பாசுரத்தில் ‘நலங்கடல் அமுதம்’ என்பது
முதலானவைகளைத் திருவுள்ளம் பற்றிச் ‘சுவைப்பொருள்கள்’ என்கிறார்.
ஆறாம்.பாசுரத்தில் ‘நுடங்கு கேள்வி இசை என்கோ’ என்றதனைத் திருவுள்ளம்
பற்றிச் ‘செவிக்கினிய இசை முதலானவைகள்’ என்கிறார். ஏழாம் பாசுரத்தைத்
திருவுள்ளம் பற்றி, ‘மோக்ஷம் முதலான புருஷார்த்தங்கள்’ என்கிறார்.
எட்டாம் பாசுரத்தைத் திருவுள்ளம் பற்றி, ‘இவ்வுலகிற்குப் பிரதானரான
பிரமன் முதலானோர்’ என்கிறார். ‘யாவையும் எவரும் தானே’ என்றதனைத்
திருவுள்ளம் பற்றி, ‘இவற்றுக்கு அடையக் காரணமான பிரகிருதி புருஷர்கள்’
என்கிறார். ‘யாவையும் எவரும் தானாய்’ என்றதனைத் திருவுள்ளம் பற்றி,
‘இவை முழுதினையும் விபூதியாகவுடையனாய்’ என்கிறார். ‘தோய்விலன்’
என்றதனைத் திருவுள்ளம் பற்றி, ‘இவற்றினுடைய தோஷங்கள்
தீண்டப்படாதவனாய்’ என்கிறார். ‘எல்லாப் பொருள்களையும் ஏவுகின்ற
தன்மையால் வந்த புகழையுடையவனுமாய்’ என்றது, ‘தோய்விலன்’ என்றதன்
பொருள் ஆற்றலால் போந்த பொருள். ‘கண்ணனை, சங்கு சக்கரத்தன்’
முதலான அசாதாரணமான பெயர்களோடு விபூதியில் அவ்வப்பொருள்கட்குச்
சாமாநாதி கரண்யம் சொல்லுகைக்கு ஏதுவை அருளிச்செய்கிறார், ‘விபூதியில்
அவ்வப் பொருள்கட்கு’ என்று தொடங்கி. வாசகமான சொற்கள் – தேவர்கள்,
மனிதர்கள் முதலான சொற்கள்.
பதினோராம் பாசுரத்தைத் திருவுள்ளம் பற்றித் ‘தோளில் கிடக்கின்ற தோள்
மாலையைப் போன்று’ என்கிறார்.
முன்னர்க்கூறிய ‘புனையுங் கண்ணி எனதுடைய வாசகஞ் செய்மாலையே’
என்றதனையும், ‘இவருடைய காதல்தானே ஆராத காதலேயன்றோ?’
என்றதனையும் மீண்டும் அநுவதிக்கிறார், ‘பாரித்தபடியே’ என்று தொடங்கி.
3. ‘என்கோ!’ என்பது ஐயப்பொருளதாதலின், அதனை உதாரண முகத்தால்
விளக்குகிறார், ‘மஹாவாதத்திலே பலோபாதாநம் பண்ணுவாரைப் போன்று’
என்று. மஹாவாதம் – பெருங்காற்று; பல உபாதாநம் – பழங்களைச்
சேகரித்தல். என்றது, பெருங்காற்று அடிக்கின்ற காலத்தில் மரங்களினின்றும்
கீழே விழுந்து சிதறிக்கிடக்கின்ற பழங்களை எடுக்கின்றவர்கள் ‘இதனை
எடுப்போமா, அதனை எடுப்போமா!’ என்று மனம் சுழன்று அலைவது
போன்று’ என்றபடி.
திண்சுட ராழி யரங்கேசர் திக்குத் திருச்செவியில்
மண்கழ லில்சத்ய லோகம் சிரத்தில் மருத்துயிரில்
தண்கதிர் உள்ளத்தில் வானுந் துயில்செந் தரணிகண்ணில்
ஒண்கன லிந்திரன் வாழ்முகப் போதி லுதித்தனரே.’
என்றார் திவ்வியகவியும்,
(திருவரங்கத்து மாலை, 8.)
‘பொருவில் சீர்ப்பூமி’ என்பதற்குக் கூறும் பொருள் வகை இரண்டனுள்
முதற்பொருளில், ‘பொரு இல்’ என்பது, சீர்க்கு அடை; இரண்டாவது
பொருளில், பூமிக்கு அடை.
நீர்க்களிப்பை அறுத்தற்குப் படைத்த சூரியன்’ என்றும், ‘தாபத்தை
ஆற்றுகைக்குப் படைத்த சந்திரன்’ என்றும் கூட்டிப் பொருள் கொள்க.
நீர்க்களிப்பு – நீரால் உண்டாய பசை.
2. ‘இகழ்வில்’ என்பதற்கு, ‘ஒன்றும் ஒழியாமல்’ என்றும், ‘இகழ்ந்து
தள்ளப்படாத’ என்றும் இரு வகையான பொருள் கொள்க.
மானசிகமாக செய்ய மனம் உருக
காயிகமாக செய்ய முடியாமல்
வாசிகமாக செய்கிறார் இதில் –
சாரம் -பிரவேசம் -சங்கதி -பாரித்ததை நடத்துகிறார் -தானேயாய் நிற்பதை காட்டி மகிழ் மாறன் எங்கும் அடிமை செய்ய இச்சித்து அங்கு அடிமை -செய்தார் அங்கு திருவேம்கடத்தி
-தான் பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யானம் -இதுவும் திருவேம்கடமுடையான் திருவாய்மொழி என்கிறார் -சர்வாத்ம பாவம் காட்டிக் கொடுத்தான் –
யானை பசிக்கு சோளப் பொரி -பாரிக்க பாரிக்க -பெரிய வஸ்துவாக இருப்பதாய் காட்டிக் கொடுக்க -இவரும் இலை அலகு படுத்தல் –
ஊன் அத்யாயம் படித்தல் -பாரித்தல் -இலை தடவி -வயிறு கொள்ளும் அளவு தானே உண்ண முடியும் -அனுபவித்து முடித்து விட மாட்டார் –
நித்யருக்கும் அப்படி தானே -விஷய வை லஷண்யம் அப்படி -அவனும் முழுவதும் அடிமை கொள்ள மாட்டான் -நசேதது ஜனார்த்தன –
அந்ய பூர்ணா -சஞ்சயன் வார்த்தை த்ருதார்ஷ்டிரன் இடம் -பூர்ண கும்பம் -அந்ய குசல -பல்லாண்டு பாட -அந்ய பாத -ஆராதனைக்கு எளியவன் -பரிவதில் ஈசனை பாடி பதிகம் –
விதுரர் சொன்ன வார்த்தை கிரந்தம் இப் பொழுது -பூர்வர் சஞ்சயன் வார்த்தை யாக -ஆராய்ந்து நிர்ணயம் செய்ய வேண்டும் -மணவாள மா முனி பிரமாண திரட்டு -அப் பொழுதே
கிரந்தம் மாறி இருப்பது அறிகிறோம் -வல்லார் வாய் கேட்டு உணர்க -ச்வாரதனாய் –
திருப்தனாய் இட்டது கொண்டு -இவரது ஆராத காதல் -அடிமை செய்து முடியவில்லை –
சிதில அந்த கரணராய் –
கால் ஆளும் நெஞ்சு அழியும் -கண் சுழலும் -சக்தி அற்றவராய்
வாசிகமான கைங்கர்யம் மட்டுமே செய்கிறார் -எப்படி –
வாசிககைங்கர்யமே -கோவை வாயாள் பொருட்டு -வாசகம் செய் மாலையே புனையும் கண்ணி –
உக்தி மாதரத்தை எல்லாவாகமாகவே கொள்பவன் அவன் –
பூமி வாயு ஆகாசம் என்கோ
ஸ்வரூபம் ரூபம் குணம் விபூதி சேஷ்டிதம் எல்லாம் உத்தேயம் இவருக்கு –
கண்ட கண்ட இடங்களில் அனுபவிக்கை அன்றிக்கே
மாணிக்கம் வயிரம் முத்தை ஹாரத்தில் சேர்த்து அனுபவிப்பது போலே –
மாற்றி மாற்றி கலந்து அனுபவிக்கிறார் –
குணங்கள் விபூதிகள் வாசி இன்றி இருக்க –
குணங்கள் -தனித்து இருக்காதே -குணம் கூட கூடியே இருக்கும்
கோத்வம் இல்லாத பசு இல்லை -வெண்மை வஸ்த்ரம் தனி ஸ்திதி இல்லை
ஸ்திதியாலே -பற்றுக்கோடு ஆஸ்ரயணம் -வேண்டுமே –
பூமி ஆகாசம் -அந்தராத்மாவாக கொண்டு ஸ்திதி உபலம்பனம்- ஆதாரம்
சரீரம் ஆத்மா -இன்றி ஸ்திதி உபலம்பனம் இல்லையே
த்ருஷ்டாந்தம் காட்ட இவை இரண்டையும் சிருஷ்டித்து காட்டி –
சர்வ ஆத்மாபவன் அவன் அனைத்துக்கும் –
இன்னமும் விபூதியில் உயர்ந்த நித்ய -லீலா விபூதி -எனபது இல்லை
ததீயத்வ ஆகாரத்தால் முக்தனுக்கும் இதுவும் அனுபவம் உண்டே –
எம்பெருமான் பொன் மலையில் ஏதேனும் ஆவேனே –
அனந்தாழ்வான் ஆசைப்பட்டு மரமாக -இருந்து இன்றும் –
திர்யக் ஸ்தாவர -ஆசைப்பட்டு அவனை அனுபவிக்க
கர்ம நிபந்தனம் இல்லை –
அரசனுக்கு சிறைச் சாலையும் சொத்து -அதையும் பரிபாலிப்பானே –
நோபஜனம் -கர்ம நிபந்தன சம்பந்தம் ஸ்மிர்த்தி விஷயம் ஆகாது –
ததீயம் -எல்லாம் ஒக்க அநு பாவ்யம்
அடங்கு எழில் சம்பந்து -ஈசன் அடங்கலில் –
தாஜ் மஹால் ஈஸ்வரன் சொத்து -என்று பார்க்கலாம் –
தேஜோ சம்பவம் கீதை
தனக்கு என்றால் த்யாஜ்யம் –
எண்ணாத மானிடத்தை எண்ணாத போது
இறைப் பொழுதும் எண்ணோமே
பேர் ஓதும் பெரியோரை பிரியோனே
இது ஞான தசையில் –
பிராப்தி சமயத்தில் அனைவரும் -உத்தேச்யம் ஈஸ்வர விபூதியை இருக்க செய்தே
பொல்லாத தேவரை -திருவில்லா தேவரை -ஸ்வரூபம் சேர
தேவதைகள் என்று பற்ற வேண்டிய தசையில் த்யாஜ்யம்
ஈஸ்வர விபூதி –
சமாஸ்ரயான தேவதையாக கொள்ள கூடாது
பரன் திறம் அன்றி மற்று தெய்வம் இல்லை –
அடைந்து விட்ட தசையில் -பிராப்தி தசையில் எல்லாம் உத்தேச்யம்
நின்ற நின்ற நிலைகளில் ஹேய உபாதேய வுபகம் பண்ணி –
வெளிச் சிறப்பு உயர்ந்த ஞான விசேஷம் -கர்ம நிபந்தன ஸ்ம்ருதி இன்றி
மயர்வற மதி நலம் அருளி –
ஸ்வரூப ரூப குண விபூதி செஷ்டிதங்கள் காட்ட
மாணிக்கம் -ரச்யமான அறுசுவை அடிசில்
இனிய கானம்
மோஷாதி புருஷார்த்தங்கள்
பிரமாதி -புருஷர்கள் பிரகிருதி -அந்தராத்மதயா கலசி இருக்க
தத் தோஷம் இன்றி –
மரம் இரண்டு பறவை உண்ணாமல் -ஒன்றும் உண்டும் ஒன்றும் -பிரமாணம்
சரீரம் -ஆத்மா பரமாத்மா -ஞான ஆனந்த சாமான்யம் -இரண்டும் –
சுக துக்கங்கள் தன் பக்கல் தட்டாதபடி –
சாமானாதி கரணம் -அந்தர்யாமியான பகவான் பக்கல் -முடிந்து -பர்யவசித்து
எல்லா சப்தங்களும் அவனையே குறிக்கும்
நாராயண சப்தம் உடன் வாசி அற –
தோளில் தோள் மாலை போலே பொருத்தமாய் அனைத்தும் –
விபூதியும் இப்படி என்பதால் அனுபவிக்கிறார் –
அனுபாவ்யத்தில் அந்தர்பூதம்
பாரித்த படியே -ஒன்றையே எல்லா அடிமையாக கொள்பவன் –
மகா காற்றில் பழம் உதிருவது போலே
பொறுக்குபவன் -பார்த்து பொறுக்குவது போலே
அனுபவத்துக்கு விஷயம் ஆக்குகிறார்
இங்கனே அலமந்து அத்தை சொல்வேனோ இத்தை சொல்வேனோ
வழு இலா அடிமை செய்து தலைக் கட்டுகிறார்-
குணங்கள் பூதங்கள் சேர பிடித்து முதல் பாசுரத்தில் தொகுத்து
பூத பஞ்சகங்கள் சரியான வார்த்தை
மேலே பரக்க சொல்வதை சந்க்ரகென அருளி -இது தான் நிதான பாசுரம் இந்த திருவாய் மொழிக்கு -புகழும் நல் ஒருவன் -கல்யாண குணங்கள் உடையவன்
பூமி ஆகாசம் பரவை -ஜாலம் தீ வாயு
அனைத்தும் என்கோ
கூவுமாறு அறிய மாட்டேன்
அனுபவித்த குணங்களை தொகுத்து புகழும் நல் ஒருவன் –
ஸ்ருதி ஸ்ம்ருதி கை கூப்பி புகழும்
எல்லாராலும் எல்லாவற்றாலும்
நல் ஒருவன் அத்வதீயன்
குணா யோக வை லஷண்யம்
மேலே விபூதி ஐஸ்வர்யம்
திரு குருகை பிரான் பிள்ளான் வார்த்தை -எல்லாரும் புகழப் படுபவன்
வேதம் முதலிய நூல்களால் புகழப் படுபவன் -முதல் அர்த்தம்
நல் -ஆனந்தம் முதலிய குணங்கள்
ஒருவன் -அத்வதீயம்
தனித் தனியாக கொண்டு வியாக்யானம்
சமப்த்யதிக தரித்திரன் ஒத்தார் மிக்கார் இல்லாத
ஹேய குண தரித்திரன்
தரித்திர நாராயண -பொரு இல் சீர் -ஒப்பு இல்லாத பூமி
திருமுடி கிரீடம் -திருவடி அனுபவம் போலே -குணம் விபூதி
பொறை பூமிக்கு ஒப்பு இல்லாத குணம் -பிராட்டி பூமா தேவி -போலே
வெட்டினாலும் பள்ளம் நிறையும் -தரிசு
மரம் கொந்து -தளிர்க்கும் வரம்
ஸ்திரீகள் பிரசவம் பிழைத்து -தீட்டு பாப இந்த்ரன் பாப்பம் ஏற்று கொண்டதால் வேத கதை
திருவடியிலே பிறந்தது
முதலில் பூமி
திருவடியில் இருந்து பூமி ஒப்பு உண்டோ
பரவை -கெட்டியாக இல்லாமல் -இளக பண்ண நீர் வேண்டுமே
க்ரமத்தில் சொல்வதற்கு அர்த்தம் –
காரண பிரயுக்தம் புகர் தேஜஸ் ஸ்ரமகரம்
நெகிழ்ச்சி கார்யம் -கொள்ளாவிடில் கெட்டியாக நெருப்பு வேண்டுமே
தேஜஸ் தீ என்கோ மேல் நோக்கியே எரியும்
வாயு -அது உறைத்தால் ஆற்றி கார்யம் கொள்ள
திகழும் ஆகாசம் மூச்சு விடுகைக்கு இடம் வேண்டும்
வர்திக்கை -திட -விசும்பு முதலில் உற்பத்தி -இறுதியில் லயம் –
பழம் தின்று கொட்டை போட்டது -பழையவன் -அர்த்தம்
பூத சதுஷ்டயமும் அழிந்து தனது இடத்தில லயம் -அவகாச பிரதானம் பண்ணும்
காரணம் -உப லஷனம் சந்தரன் சூர்யன்
தாபம் ஆற்ற -நீர் கடுப்பை அகற்ற சூர்யன்
எல்லாம் -என்பேனோ –
வியாபிக்க படாத வஸ்து ஒன்றும் இல்லையே
உபாதேய தமம் அனைத்தும் -எம்பருமானை சொல்வேனா
ஹே கிருஷ்ணா -ஹே சகே-ஹே யாதவா அர்ஜுனன் சொன்னது போலே இவர் பூமி எனபது
வாசி இன்றி –
ஜகத் சரீரம் சர்வம் தே -கண்ணனை கூவுமாறு –
அனைத்தும் என்கோ -அலமந்து
நஞ்சீயர் திருவடிகளே சரணம்.
நம்பிள்ளை திருவடிகளே சரணம்.
வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.
Leave a Reply