திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -3-2-2-ஸ்ரீ M.A V .சுவாமிகள் —

வன்மா வையம் அளந்தஎம் வாமனா!நின்
பன்மா மாயப் பல்பிறவியில் படிகின்றயான்,
தொன்மா வல்வினைத் தொடர்களை முதல்அரிந்து,
நின்மா தாள்சேர்ந்து நிற்பதுஎஞ் ஞான்றுகொலோ?

பொ-ரை : வலிய பெரிய உலகத்தையெல்லாம் அளந்த, என் வாமனனே! உன்னுடைய பல வகைப்பட்ட தாண்ட முடியாத பெரிய மாயை காரணமாக வருகின்ற பல வகையான பிறவிகளில் உழலுகின்ற யான், பழையதாய் வருகின்ற அளவிடற்கரிய வலிய வினைகளாகிற கட்டினை அடியோடு அரிந்து, உன்னுடைய பெருமை பொருந்திய திருவடிகளைச் சேர்ந்து நிற்பது எக்காலமோ?

    வி-கு : ‘யான் அரிந்து சேர்ந்து நிற்பது எஞ்ஞான்று?’ என முடிக்க. நிற்பது – தொழிற்பெயர். ‘கொல், ஓ’ என்பன அசைநிலைகள்.

    ஈடு : இரண்டாம் பாட்டு. 1உம்முடைய உடம்புகொண்டு நாம் இருந்த இடத்தே வந்து கிட்ட மாட்டிற்றிலீராகில், நம்முடம்பைக்கொண்டு நீர் இருந்த இடத்தே வந்து கிட்டினோமே! வாமன வடிவைக்கொண்டு மஹாபலி முன்னே வந்து நின்றோமே! அங்கே கிட்டமாட்டிற்றிலீரோ?’ என்ன, ‘அதற்குந் தப்பினேன்’ என்கிறார்.

    வன் மா வையம் அளந்த – 2வன்மையையுடைத்தான பெரிய பூமியை அளந்த. 3‘வடிவிணை இல்லா மலர்மகள் மற்றை நிலமகள் பிடிக்கும் மெல்லடியை’க்கொண்டு காடும் மலையுமான பூமியை அளந்தானாதலின் ‘வன்வையம் அளந்த’ என்கிறார். வன்மை என்பது ஈண்டு வையத்துக்கு அடை. இனி, வையத்தை ஆகுபெயராக்கி, வன்மையை ஆகுபெயர்ப்பொருளுக்கு அடைமொழியாக்கி, அவன் தானே தன்னைக் கொடுவந்து காட்டின இடத்திலும் நெஞ்சில் நெகிழ்ச்சியின்றியிருந்த சமுசாரிகளுடைய நெஞ்சில் வன்மையைச் சொல்லுகிறார் என்னுதல். இப்பொருளில் ‘அசுரத் தன்மையையுடைய மஹாபலிக்கு உள்ள இரக்கமும் இல்லையே! சுக்கிரன் முதலானோர் விலக்கவும் அவர்கள் வழி போயிற்றிலனே அவன்!’ என்று இவர்கள் மனநெகிழ்ச்சியின்மைக்கு இரங்குகின்றமை தோன்றும். இனி, மஹாபலி

தோள் மிடுக்காலே ஒருவர்க்கும் நுழைவதற்கு அரிதான வன்மையை உடைத்தாயிருந்ததாதலின், ‘வன் மா வையம்’ என்கிறார் என்னுதல். எம் வாமனா – பிறரால் கவர்ந்துகொள்ளப்பட்ட ராஜ்யத்தையுடையவனான இந்திரனுக்காக அன்று, 1வாமனாவதாரமும் தம்பொருட்டு என்றிருக்கிறார். நின் – 2‘எனது மாயையினை ஒருவராலும் தாண்ட முடியாது,’ என்று சொன்ன இது என் ஒருவனுக்கும் பலித்துவிட்டது. பன் மா மாயம் – பல விதமான பெரிய மூலப்பகுதி. 3தேவர்கள் முதலான பல்வகைப் பொருள்களாகிய காரியத்தின் பன்மையைக் காரணத்தின்மேலிட்டு உபசார வழக்கால் ‘பன்மாயம்’ என்கிறார். இனி, ‘மூலப்பகுதி முக்குணங்களுக்கும் இருப்பிடமாயிருக்கையாலே குணபேதங்களை இட்டுப் ‘பன்மாயம்’ என்கிறார்,’ எனலுமாம்.

    சுக்கிரன் தடுத்தமையையும், மஹாபலி அவன் வார்த்தைகளைக் கேளாமையையும் கம்பராமாயணம், பாலகாண்டம், வேள்விப்படலத்தில் 25 முதல் 34 முடிய உள்ள செய்யுள்களிற் காண்க. அவற்றுள்,

‘கண்ட திறத்திது கைதவம் ஐய!
கொண்டல் நிறக்குறள் என்பது கொள்ளேல்;
அண்டமு முற்றும் அகண்டமும் மேனாள்
உண்டவ னாம்இது உணர்ந்துகொள் என்றான்.’

‘வெள்ளியை யாதல் விளம்பினை; மேலோர்
வள்ளிய ராக வழங்குவ தல்லால்
எள்ளுவ என் சில? இன்னுயி ரேனும்
கொள்ளுதல் தீது; கொடுப்பது நன்றால்.’

பல் பிறவியில் – மூலப்பகுதி சம்பந்தங்காரணமாக உண்டாகிற பல வகைப்பிறவிகளிலே. படிகின்ற – தரை காணாமல் முழுகுகிற. இக்கேட்டிலே வெறுப்பின்றிப் பொருந்தியிருந்தாராதலின், ‘விழுகின்ற’ என்னாது, ‘படிகின்ற’ என்றார். ‘படிகின்ற’ என்ற நிகழ்காலத்தால், ‘இன்னம் தரை கண்டதில்லை’ என்பது போதரும். யான் – சமுசாரத்தின் வழியிலே செல்லுகிற நான். தொல் மா வல்வினைத் தொடர்களை முதல் அரிந்து – இவ்வாத்துமாக்கள் உள்ளவன்றே உள்ளனவாய், அனுபவித்தாலும் அழியாதனவாய், ஈஸ்வரன் போக்கு மன்றும் ஒரு நிலை நின்று போக்கவேண்டும்படி பிரபலமாய், ஒன்றோடொன்று தொடர்ந்து தாம் கூட்டமாயிருக்கிற பாபங்களை வாசனையோடே போக்கி. தொடர் – விலங்கு. நின் மா தாள் சேர்ந்து – 1பரமப் பிராப்பியமாய் நிரதிசய போக்கியமாயிருக்கிற திருவடிகளைக் கிட்டி. நிற்பது – நித்திய சமுசாரிகளுக்குப் பகவானையடைதல்; 2‘பறக்கிற தொன்றிலே பாரம் வைத்தாற்போலே இருப்பதொன்று’ ஆதலின், ‘நிற்பது’ என்கிறார். 3‘பயமில்லாமைக்காகப் பரம்பொருளிடத்தில் இடைவிடாத நினைவின் ரூபமான நிஷ்டையையடைகிறவன் பயமின்மையை அடைகிறான்,’ எனப்புகலும் உபநிடதம். நிற்பது எஞ்ஞான்றுகொலோ – 4‘அது எந்நாளாக வற்றோ? ‘காட்டினின்றும் மீண்டு வருகிற உன்னை எந்த நாளில் பார்ப்பேனோ, அந்தநாள் இந்த நாளாகவேண்டும்,’ என்பதுபோன்று ‘எஞ்ஞான்று கொலோ!’ என்கிறார் என்றபடி. இனி, இதற்கு ‘இந்நாள் என்று ஓரவதி பெற்றதாகில், இன்று பெற்றதோடொக்கும் என்றும் பொருள் அருளிச்செய்வர்.

உம்முடைய உடம்பு கொண்டு கிட்டாவிடில்
அவதரித்து
அந்தர்யாமி
மூன்றையும் அவதாரிகை காட்டி
என்னுடையசரீரம் கொண்டு நானே வாமனனாக வந்தேனே
மகா பலி முன் நின்றோமே
அதுக்கும் தப்பினேன் -என்கிறார் –
கொடுமையான வையம்
நின் பல மாய பல் பிறவிகள் படிந்து
தொல் மா வல் வினை
தன்னைக் காட்டினாலும் -நெஞ்சு கடிந்து –
மகா பலியே உருகி
உருகாமால் பூமி வன்மை -யாக இருந்ததே
சுக்ராதிகள் விலக்க செய்தேயும் -கொடுத்தான்
மகா பலி அளக்க முடியாத பூமி
மெல்லடி கொண்டு -வடிவு இணை இலா மலர்மகள் மற்றும் நிலா மகள் பிடிக்க கூசும் -வன்மை
மகா பலி -தோள் வலிமையால் யாரும் பிரவேசிக்க முடியாத வன்மை
இந்தரனுக்கு அன்றி தமக்காக எம் வாமனா
நின் பல் பிறவி -மாய பல் பிறவி -வன் மாயபால் பிறவி
மம மாயா என்று கீதை -நின் -எனக்கு பலித்தது
மாயம் மூல பிரகிருதி
வன்மை -கார்ய -காரணம் ஏறிட்டு சொல்லுதல்
தேவ மனுஷ திர்யக் ஸ்தாவரம் -குண பேதங்கள் இட்டு பல் பிறவி
அவற்றில் படிகின்ற -படிந்து தரை காணாமல் -விழுகின்ற
பொருந்தி இருந்து –
படிகின்ற நிகழ காலம் இன்னும் தரை கண்டது இல்லை -வர்த்தமானம் உழன்று இருக்கின்றேன்
மலையாள படு குழி விழுந்து கொண்டே இருக்கின்றேன் -போலே
சம்சார ஆபன்ணன் –
தொன் மா வல் வினை -தொன்மை
அனுபவித்தாலும் நசியாமல்
அவனே நின்று நிலைத்து போக்கும் படி
சிகள்
தான் குவாலாய் இருக்கும் பாப கூட்டங்கள்
முதல் அறிந்து வாசனை உடன் போக்கி
விலங்கு -நீக்கி
நின்பரம ப்ராப்யம் நிரதிசய போக்கியம்
நிற்பது என்று -கொலோ
பறந்து கொண்டு இருக்கிறோம் –
சம்சாரத்தில் பறக்கும் என் மேல் உனது திருவடி வைத்து
பயம் போக்க –
என்று -இன்று கூடாதோ
இந்நாள் -அவதி பட்டதாகில் இன்று கிடைத்ததாக கொள்வோம்
நாள் குறித்து வாயால் அருளும்

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading