திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -2-9-11–ஸ்ரீ M.A V .சுவாமிகள் —

விடலில் சக்கரத்து அண்ணலை மேவல்
விடலில் வண்குரு கூர்ச்சட கோபன்சொல்
கெடலில் ஆயிரத் துள்இவை பத்தும்
கெடலில் வீடுசெய் யும்கிளர் வார்க்கே.

    பொ – ரை : ‘நீக்குதல் இல்லாத சக்கரத்தையுடைய பெருமையிற் சிறந்த இறைவனைப் பொருந்தி விடுதல் இல்லாத வளப்பம் பொருந்திய திருக்குருகூரில் அவதரித்த ஸ்ரீசடகோபரால் சொல்லப்பட்ட கெடுதல் இல்லாத ஆயிரம் திருப்பாசுரங்களுள் இப்பத்துப் பாசுரங்களையும் முயற்சியோடு கற்கின்றவர்கட்கு இவையே அழிதல் இல்லாத மோக்ஷ உலகத்தைக் கொடுக்கும்’ என்றபடி.

    ஈடு : முடிவில், 2‘இத்திருவாய்மொழியைக் கற்க வல்லவர் இதிற்சொன்ன பேற்றினைப் பெறுவர்,‘ என்கிறார்.

    3‘நாம் விடுகிறோம்’ என்று ஐயம் கொள்வது என்? நாம் ஒருவரையும் விடோங்காணும்’ என்று கையில் திருவாழியைக் காட்டினான்; ‘விடல் இல் சக்கரத்து அண்ணலை’ என்கிறார். அதாவது, ‘ஒருநாளும் விடாத திருவாழியைக் கையிலேயுடைய சர்வேஸ்வரனை’ என்கிறார். மேவல் விடல் இல் வண்குருகூர்ச் சடகோபன் சொல் – அவன் தன்மையாலே கிட்டி அவனைப் பிரியில் தரியாதபடி பரம உதாரரான ஆழ்வார் அருளிச்செய்த. வண்மையாவது, இவ்வனுபவத்துக்குப் பாசுரமிட்டு உபகரித்த உபகாரம். கெடல் இல் ஆயிரத்துள் இவை பத்தும் – இவ்வாத்துமாவுக்குக் கேட்டின் வாசனையும் வாராதபடி நன்மையை ஆராய்ந்து அருளிச்செய்த ஆயிரத்துள் இப்பத்தும். 4கிளர்வார்க்குக் கெடல் இல் வீடு செய்யும் – ‘வரில்

போகடேன், கெடில் தேடேன்’ என்று இருக்கை அன்றி, நம்பிக்கையுடையவர்க்குக் கேட்டின் வாசனையும் இல்லாததாய் அகங்கார மமகாரங்களை உடைத்து அன்றிக்கே, ‘தனக்கேயாக வேணும்’ இவர் பிரார்த்தித்தபடியே இவ்வாத்துமாவினுடைய சொரூபத்திற்குத் தகுதியான பேற்றினைச் செய்து கொடுக்கும்.                          

(11)

    முதற்பாட்டில், உடல் சம்பந்தமான பேற்றினை விரும்பினார்; இரண்டாம்பாட்டில், மனத்தின் சம்பந்தமான பேற்றினை விரும்பினார்; மூன்றாம் பாட்டில், வாசிகமான பேற்றினை விரும்பினார்; நான்காம் பாட்டில், சொரூபத்திற்குத் தகுதியான பேற்றினை அறுதியிட்டார்; ஐந்தாம்பாட்டில், ‘நீர் யாராய் இப்பேற்றினை விரும்பினீர்?’ என்ன, ‘நான் யாராயினுமாக; உன்னை அனுபவித்து மகிழும்படி செய்தருளவேண்டும்’ என்றார்; ஆறாம் பாட்டில், ‘முக்கரணங்களாலும் உன்னைப் பிரீதி முன்னாக அனுபவிக்கச் செய்தருள வேண்டும்’ என்றார்; ஏழாம் பாட்டில், அப்படிச் சடக்கெனச் செய்யாமையாலே இன்னாதானார்; எட்டாம் பாட்டில், ‘சொரூபத்திற்குத் தகுதியாக நீ கணநேரம் என்னோடே அனுபவிக்கப் பெறில் பின்புள்ள காலமெல்லாம் வேண்டேன்’ என்றார்; ஒன்பதாம் பாட்டில், ‘உன்னை அனுபவிக்க இட்டுப் பிறந்து வைத்து அது கிடையாதபடி நானே கேட்டினைச் சூழ்த்துக்கொண்டேன்’ என்றார்; பத்தாம் பாட்டில், ‘ஞான விசேடத்தைப் பண்ணித் தந்தோம் அன்றே?’ என்று, என்னை ஒருநாளும் என்கையில் காட்டித் தாராதொழிய வேண்டும் என்றார்; முடிவில், இது கற்றார்க்குப் பலம் சொல்லித் தலைக்கட்டினார்.

நிகமத்தில் -பிராப்யம் -அவன் ஆனந்தத்துக்கு செய்யும் கைங்கர்யம் பெறுவார்
விட்டு விடாதே கொள் -பிரார்ததும்
சக்கரத்து அண்ணல் -சக்கரம் போலே என்னையும் நழுவ விடாமல்
சேர்த்து இருக்க ஆசை விடாமல்
இப்பத்தும் -வீடு செய்யும்-கேடலில் வீடு கேடு இல்லாத மோஷ பலம்
விடுவோம் அதி சங்கை எதற்கு கையில் திருவாழி காட்டி -யாரையும் விடேன்
விடலில் சக்கரத்து அண்ணல்
அவன் ஸ்வா பாவத்தால் கிட்டி –
ஆழ்வார் வள்ளல் அனைவரும் அனுபவிக்க பாசுரம் இட்டு உபகரித்த உபகாரம்
ஆத்மாவுக்கு அநர்த்த கந்தம் வாராத படி
இப்பத்தும் –
வரில் புகடேன் கெ டில் தேடேன் -வந்தால் வரட்டும் -என்று இருக்காமல் ஆசை உடன்
கேடு இல்லாத மோஷம் அஹங்கார மமகாரம் இன்றி
தனக்கே யாக கொள்ளும் கைங்கர்யம்
பரஸ்பர நீச பாவத்துடன் நித்யர் போலே
ஸ்வரூப அனுரூபமான பேறு
காகிக மானச வாசகமான -அனுரோபமான பேற்றை
யாராலும் ஆனாலும் -சடக்கென -பாட்டு தோறும் அர்த்தம் அருளி –

திருவாய்மொழி நூற்றந்தாதி

        எம்மாவீ டும்வேண்டா என்றனக்குஉன் தாளிணையே
அம்மா அமையுமென ஆய்ந்துரைத்த – நம்முடைய
வாழ்முதலாம் மாறன் மலர்த்தா ளிணைசூடிக்
கீழ்மைஅற்று நெஞ்சே! கிளர்.
                      

எம்மா வீடும் வேண்டா
உனது தாள் இணையே வேண்டும்
வாழ் முதல் மாறன் அடி சூடி
கீழ்மை அற்று நெஞ்சுக்கு உபதேசிக்கிறார் –

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading