திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -2-9-5–ஸ்ரீ M.A V .சுவாமிகள் —

சிறப்பில் வீடு சுவர்க்கம் நரகம்
இறப்பில் எய்துக, எய்தற்க; யானும்
பிறப்புஇல் பல்பிற விப்பெரு மானை
மறப்புஒன்று இன்றி என்றும் மகிழ்வனே.

    பொ-ரை : யானும் சிறப்புடைய மோக்ஷம் என்ன, சுவர்க்கம் என்ன, நரகம் என்ன இவற்றை இறக்கின்ற காலத்தில் பொருந்துக. பொருந்தாதொழிக; பிறப்பு இல்லாத பல பிறவிகளையுடைய பெருமானை மறதி என்பது சிறிதும் இல்லாமல் எப்பொழுதும் அனுபவிப்பேன்.

    வி-கு : ‘சிறப்பில்’ என்பதில் ‘இல்’ பெயர்ச்சொல்; சிறப்பிற்கு இடமாயுள்ளது என்பது பொருள். எய்துக, எய்தற்க – வியங்கோள் வினைமுற்று. பின்னது, எதிர்மறை. ‘பிறவாப் பிறப்பிலை பிறப்பித்தோர் இலையே’ என்ற பரிபாடலின் பகுதி இங்கு மூன்றாம் அடியோடு ஒப்பு நோக்குக.

    ஈடு : ஐந்தாம் பாட்டு. மேல், ‘மனம் வாக்குக் காயங்கள் இவை மூன்றாலும் உண்டான பேற்றை ஆசைப்பட்டு, இவை மூன்றாலும் உண்டான அனுபவத்தில் உன்னுடைய பிரீதியிலே உள் அடங்கி இருக்குமிதற்கு மேற்பட எனக்காய் இருக்கும் தன்மையைத் தவிர்க்க வேண்டும்’ என்றார். ‘இதுதான் சம்சாரிகள் பக்கல் நடையாடுவது ஒன்று அன்று; இவர்தாம் தம்மை யாராக நினைத்து இப்பேற்றை விரும்புகிறார் என்று ஆராய்ந்து பார்ப்போம்,’ என்று

1‘நீர் யாராகத்தான் நம்மை இப்படி விரும்புகிறீர்?’ என்ன, ‘தேகமே ஆத்துமா’ என்பார்; கேவலம் தேகத்திற்கு இந்திரியம் ஒழிய அனுபவம் இல்லாமையாலே ‘இந்திரியங்களே ஆத்துமா’ என்பார்; அந்த இந்திரியங்களும் மனத்தின் துணை இல்லாத போது பொருள்களை அறியமாட்டாமையாலே ‘மனமேகாண் ஆத்துமா’ என்பார்; அம் மனந்தனக்கும் பிராணங்கள் துணை புரிய வேண்டுகையாலே, 2‘பிராணங்காண் ஆத்துமா’ என்பார்;பிராணன் – பத்துவாயுக்களுள் சுவாசத்தை நிகழ்விப்பது,( பத்து வாயுக்களாவன, பிராணன்.
அபானன், உதானன், வியானன், சமானன், நாகன், கிருகரன், தேவதத்தன், தனஞ்சயன்
என்பன.)
‘இவை எல்லாம் உண்டாயினும் உறுதிவேண்டுமே? அதற்குக் கருவி புத்தி ஆதலின், ‘புத்தி தத்துவமேகாண் ஆத்துமா?’ என்பார்; ‘இவை இத்தனைக்கும் அவ்வருகாய் ஞானமாகிய குணத்தை உடையதாய், ஞானசொரூபமாய் இருப்பது ஒன்று ஆத்துமா’ என்பர் ஆகாநிற்பர்கள்; அதில் எனக்கு ஒரு நிர்ப்பந்தம் இல்லை; ஏதேனுமாக, உண்டான பொருள் தேவர்க்கு உறுப்பாமிதுவே வேண்டுவது’ என்கிறார். 3‘நான் சரீரம் முதலியவற்றுள் ஏதாவதொன்றாகவும், குணத்தினாலும் யாதேனும் ஒரு படிப்பட்டவனாகவும் இருக்கக் கடவேன்; அவற்றில் எனக்கு ஒரு நிர்ப்பந்தம் இல்லை

‘மாத வங்களென் றோத வங்களின் மருவு சீவனொன் றொருவ! நீ பெரும்
பூத மல்லைஇந் திரிய மல்லைஐம் புலனு மல்லைநற் புந்தி அல்லைகாண்;
சீத ரன்பரந் தாமன் வாமனன் றிருவ ரங்கனுக்கு அடிமை நீ; உனக்கு
ஏதும் இல்லைஎன் றறி:அ றிந்தபின் ஈதின் மாதவ மில்லை எங்குமே.’–(திருவரங்கக்கலம். 63.)

  என்ற அருமைச்செய்யுள் ஈண்டு நினைப்புக்கு வருகின்றது.

ஆனால், இந்த ஆத்துமாவானது உன்னுடைய திருவடித்தாமரைகளில் இப்பொழுதே என்னால் சமர்ப்பிக்கப்பட்டது,’ என்றார் ஸ்ரீ ஆளவந்தார்.

    சிறப்பில் வீடு சுவர்க்கம் நரகம் இறப்பில் எய்துக எய்தற்க யானும் – ‘நித்திய சம்சாரியாய்ப் போந்தவன் நித்தியசூரிகளுடைய அனுபவத்தைப் பெற்று அனுபவிக்கக் கூடியதாகச் சொல்லுகிற மோக்ஷம், அளவிற்கு உட்பட்ட சுகத்தையுடைய சுவர்க்கம், கலப்பு

அற்ற துக்கமேயான நரகம், இவற்றை உடலை விடுகின்ற காலத்தில் அடைக, அடையாதொழிக,’ என்றது, ‘சரீரத்திற்கு வேறுபட்டதாய் இருப்பது ஓர் ஆத்துமா உண்டாகவுமாம்: சரீரமே ஆத்துமா ஆகவுமாம்; இதில் எனக்கு ஒரு நிர்ப்பந்தம் இல்லை,’ என்கை. அதாவது, ‘சரீரத்திற்கு வேறுபட்டதாய் இருப்பது ஒரு பொருள் உண்டானால் அன்றோ சுவர்க்கம் முதலான அனுபவங்கள் உள்ளது? கேவல சரீரம் இங்கே எரிந்து போதலைக் காண்கிறோமே!’ என்றபடி. 1சொரூப நிர்ணயத்திலே நிர்ப்பந்தம் இன்று, ‘தாம் யாரேனுமாக அமையும்’ என்று இருக்கிறவராதலின், ‘யானும்’ என்கிறார். இனி ‘இப்பேற்றைப் பெறுதற்குத் தகுதி இல்லாதவன்’ என்பார், ‘யானும்’ என்கிறார் எனலுமாம்.

    பிறப்பு இல் பல் பிறவிப் பெருமானை – பிறத்தற்குக் காரணமான கர்மம் இல்லாதிருக்கவும், கர்மங்கட்குக் கட்டுப்பட்டவர்களும் பிறவாத பிறவிகளிலே பிறக்க வல்ல, எல்லார்க்கும் தலைவனை. 2‘கர்மம் காரணமான பிறப்பு இல்லாமல் இருக்கிற சர்வேஸ்வரன் இச்சை அடியாகப் பல விதமாக அவதரிக்கிறான்; அதன் காரணத்தைப் பெரியோர்கள் அறிவார்கள், ‘என்பது மறைமொழி. மறப்பு ஒன்று இன்றி – அவதாரங்களிலும்  அவ்வவதாரங்களில் செய்யப்படும் செயல்களிலும் ஒரு மறதியும் இன்றி. இத்தலையில் உள்ளன எல்லாம் மறக்கலாம். அத்தலையில் உள்ளனவற்றுள் ஒன்றும் நழுவஒண்ணாது ஆதலின், ‘மறப்பு ஒன்று இன்றி’ என்கிறார். என்றும் மகிழ்வன் – என்றும் அனுபவிப்பேன். ‘மகிழ்ச்சி, அனுபவம்’ என்பன ஒரு பொருட்சொற்கள். ‘என்றும் அனுபவிப்பேன்’ என்கிறார். ஆக, இப்பாசுரத்தால் ஆத்துமசொரூபத்தை வெளியிடுகிறார்; ‘பெருமான்’ என்கையாலே தம்முடைய சேஷத்துவமும், ‘மறப்பொன்றின்றி’ என்கையாலே 3ஞாத்ருத்துவமும், ‘என்றும்’ என்கையாலே,நித்தியத்துவமும், ‘மகிழ்வு’ என்கையாலே போக்துருத்துவமும் அருளிச்செய்தமை காண்க.

மநோ  வாக்கு காயங்கள் மூன்றாலும் மூன்று பாட்டிலும் அபேஷித்து
இவை மூன்றிலும் உன்னுடைய ஆனந்தத்துக்கு என்று சொல்லி –
இது தான் சம்சாரிகள் பக்கல் பரிமாறுவது ஓன்று இல்லையே
யாராக தன்னை நினைந்து பிரார்த்திக்கிறார் என்று பார்ப்போம்
யாராவது ஆயிடுக –
தேகமே ஆத்மா என்று இருப்பார் போலேயும் –
இந்த்ரியன்களே ஆத்மா என்று இருப்பார் போலேயும் –
மனஸ் சக்காரி வேண்டுமே -மனஸ் தான் ஆத்மா என்பார் போலேயும் –
மனஸ் தனக்கும் பிராணன் -அதுவே ஆத்மா
உறுதிக்கு புத்தி ஆத்மா என்பார் போலேயும்
ஞான குணகமாய் ஞான ஸ்வரூபமாய் -ஆத்மா
ஏதேனும் உண்டான வஸ்து தேவரீருக்கு என்று உண்டான ஒன்றாக வேண்டும் என்கிறார் -தவ பாத பத்ம -பகு ளாதி -குணதாக -ஆளவந்தார் இது போலே அருளுகிறார்
மோஷம் அடைந்தாலும் அடையாவிடிலும்
பிறப்பில் பல் பிறவி பெருமானை
மறுப்பு ஒன்றி இருந்து என்றும் மகிழ்வேன்
நித்ய சூரிகள் அனுபவம் சிறப்பை உடைய மோஷம் -நித்ய சம்சாரியாக இருப்பவன் –
முடியாத எல்லையில் அந்நலம்
ஸ்வர்க்கம் பரிமித சுகம் அளவு பட்டு
நரகம் நிஷ்கிரிஷ்ட துக்கமே
இவற்றை சரீர விநியோக சமயத்தில் கிடைத்தாலும் இல்லா விடிலும் –
ஸ்வர்க்கம் அடையாதவன் தேகமே ஆத்மா நினைப்பவன்
இதில் நிர்பந்தம் இல்லை –
கேவல தேகம் பஸ்மமாக காண்பதால் –
யானும் -உம்மை தொகை -நான் கூட -இந்த பேறு ஞானம் இல்லாத நானும்
ஸ்வரூப நிர்ணயம் இல்லாத யாரேனும் ஆகட்டும் என்பதால்
விபரீத ஞானம் -தேகமே ஆத்மா இருந்து தொலையட்டும் என்பதால் –
பிறப்பில் பிறப்பு இல்லாதவன் -கர்மம் இல்லையே
பல் பிறப்பு -கர்மம் வஸ்யர் பிறக்காத ஜன்மங்கள் மீனோடு –இத்யாதி
பெருமான்
அஜாயமான பகுதா விஜாயதே வேதம் தமிழ் செய்த மாறன்
பிறவாதவன் பிறக்கிறான் -தேவை இல்லாதவன் -சங்கல்பம் கிருபை அடியாக
மறுப்பு ஒன்றி இன்றி
அவதாரங்கள் செஷ்டிதன்கள்
இத்தலையில் உள்ளது எல்லாம் மறக்கலாம்
அத்தலையில் உள்ளது ஒன்றும் மாறாக கூடாதே
என்றும் மகிழ்வேனே
மகிழ்ச்சி அனுபவம் வேவேறே இல்லை
அனுபவமே மகிழ்ச்சி
ஆக இத்தால் ஸ்வரூபம் -தெரிவிக்கிறார்
பெருமான் -சேஷத்வம்
மறுப்பு ஒன்றி ஞாத்ருத்வம் சொல்லி
என்றும் -நித்யத்வம்
மகிழ்வு போக்த்ருத்வமும் உண்டு -அவனை ஆனந்திப்பித்து தான் ஆனந்திக்க
நான்கும் ஜீவாத்மா ஸ்வரூபம் என்று காட்டி அருளுகிறார் –

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading