தீர்த்தன் உலகுஅளந்த சேவடிமேல் பூந்தாமம்
சேர்த்தி அவையே சிவன்முடிமேல் தான்கண்டு
பார்த்தன் தெளிந்தொழிந்த பைந்துழா யான்பெருமை
பேர்த்தும் ஒருவரால் பேசக் கிடந்ததே?
பொ-ரை : ‘அருச்சுனன், உலகங்களை அளந்த தீர்த்தனுடைய செம்மைபொருந்திய திருவடிகளின்மேல் அழகிய மாலையினை அணிந்து, அணிந்த அம்மாலையினையே சிவனுடைய சடையின்மேலே தானே நேரில் கண்டு, கண்ணபிரானே இறைவனாவான் என்று தெளிந்து அறுதியிட்ட பசிய திருத்துழாய் அணிந்த கண்ணபிரானுடைய பெருமை இப்பொழுது மீண்டும் ஒருவரால் ஆராயவேண்டும்படி இருக்கின்றதோ? இன்று’ என்றபடி.
வி-கு : சேர்த்தி கண்டு தெளிந்தொழிந்த பெருமை என்க. சிவன். மங்களத்தையுடையவன். பார்த்தன் – பிரதையின் புத்திரன். பிரதை என்பது குந்தியின் பெயர். கிடந்ததே என்பதில் ஏகாரம், எதிர்மறை.ஈடு : ஆறாம் பாட்டு. ‘நீர் சொல்லுகிறவனுக்கு இந்த உயர்வுகளெல்லாம் உண்டோ?’ என்ன, ‘முன்பே அருச்சுனன் நிரூபித்து நிர்ணயித்த அர்த்தம், நாம் இன்று ஆராயும்படி குறைபட்டு இருந்ததோ?’ என்கிறார்.
தீர்த்தன் –1‘தன் தலையிலே தரிக்கப்பட்டிருக்கிற எவருடைய ஸ்ரீபாத தீர்த்தமான கங்கையினால் அச்சிவன் பரிசுத்தன் ஆனான்?’ என்றும், 2‘நான் தக்கோன் ஆனேன்’ என்னும் நிச்சயக் கருத்தால் பரிசுத்தத்திற்காகத் தன் சடைமுடியில் கங்கையைத் தரித்தான் என்றும் சொல்லுகிறபடியே, தன் திருவடிகள் தீண்டுதலாலே அசுத்தரையும் சுத்தர் ஆக்க வல்ல சுத்தியை உடையவன். ‘இது எப்பொழுது செய்தது?’ என்னும் அபேக்ஷையிலே, ‘உலகு அளந்த காலத்திலே’ என்று அதனை நிரூபிக்கிறார் மேல். 3‘குறைகொண்டு’ என்றார் திருமழிசை மன்னனும். உலகு அளந்த சேவடிமேல்பூந்தாமம் சேர்த்தி அவையே சிவன் முடிமேல் தான் கண்டு –1அருச்சுனனுக்கு ஒரு தேவதை பக்கலிலே ஒரு பாணம் பெற வேண்டுவதாய் அவன் அதற்கு முயலுகின்ற காலத்திலே, இவன் சிரமத்தை ஆற்றுகைக்காகப் ‘புஷ்பங்களை நம் காலிலே இட்டு ஜீவி’ என்று அருளிச்செய்ய, அவனும் திருவடிகளிலே இட, அந்தத் தெய்வம் இராத்திரியிலே கனாவிலே அந்த மலர்களைத் தன் தலையிலே தரித்துக்கொண்டு வந்து தோன்றிப் பாணத்தைக் கொடுத்தாகச் சொல்லப்பட்டுள்ளது. அன்றே? அதனை அருளிச்செய்கிறார். பூந் தாமம் -அழகிய மாலை என்னுதல்; பூமாலை என்னுதல். அவற்றோடு ஒத்த மலர்கள் அன்றி அம்மலர்களையே கண்டான் ஆதலின், ‘அவையே’ என்றும், பாடே பார்ஸ்வத்திலே அன்றி அவன் தலை மேலே கண்டானாதலின், ‘சிவன் முடிமேல்’ என்றும், ஆப்தர் சொல்லக் கேட்கை அன்றியே, சுருதி ஸ்மிருதிகளால் ஆதல் அன்றியே, தானே கண்டானாதலின், ‘தான் கண்டு’ என்றும் அருளிச்செய்கிறார். காணுதல் – 2பிரத்யபிஜ்ஞார்ஹமாம்படிகாண்டல். ‘ஆயின், இவ்விடத்தில் கிருஷ்ணனுடைய சரிதை ஆயிற்றுச் சொல்லுகிறது; ஸ்ரீவாமன அவதாரம் என்?’ என்னில், 1கிருஷ்ணாவதாரத்துக்கும், வாமன அவதாரத்துக்கும் வரையாதே எல்லாரோடும் பொருந்துமது உண்டு ஆகையாலே சொல்லுகிறார். பார்த்தன் தெளிந்து ஒழிந்த – இறைவன் சாரதியாய்த் தாழ நிற்கச் செய்தேயும், அவனுடைய இறைமைத்தன்மையில் கலங்காமல், ‘அந்தப் பார்த்தன் பெரிய ஞானத்தையுடையவன்’ என்கிறபடியே பேரறிஞனான அருச்சுனன் நிரூபித்து நிர்ணயித்து, 2‘தேவரீருக்கு முன் பக்கத்திலும் வணக்கம், பின் பக்கத்திலும் வணக்கம்,’ என்று கூறிப் பின் பற்றிய. பைந்துழாயான் பெருமை பேர்த்தும் ஒருவரால் பேசக்கிடந்ததே – அறப்பெரிய முதன்மைக்கு அறிகுறியான திருத்துழாய் மாலையையுடைய சர்வேஸ்வரனுடைய பரத்துவம், இன்று அறிவு கேடர் சிலரால் 3செல்லவிட்டு ஆராயுமளவாய் இருந்ததோ?
‘புவிஅ ளந்தவன் பொன்னடித் தாமரை
தவழும் கங்கைஅம் தண்புனல் பொன்னென
அவிர்ச டாமுடி மீதுவைத் தன்றுகொல்
சிவனும் ஓர்சிவ னாகித் திகழ்ந்தனன்.’
என்ற செய்யுள் ஒப்பு நோக்கலாகும்.
(பாகவதம், 3-ஆம் ஸ்கந்தம், கபிலர் தத்துவம் உரைத்த அத். செய். 51).
‘தேனந்து சோலை அரங்கேசர் சேவடி மேல்விசயன்
தானந்த நாளையிற் சார்த்திய மாலையும் தாள்விளக்கும்
வானம் தரும்கங்கை நன்னீரும் சென்னியில் வைக்கப்பெற்ற
ஆனந்தத் தான்அல்ல வோமுக்க ணான்மன்றுள் ஆடுவதே?’
(திருவரங்கக்கலம். 45.)
என்ற திவ்விய கவியின் கவிச்சித்திரம் இங்குக் கண்முன் நிற்கிறது.
3. ‘குறைகொண்டு நான்முகன் குண்டிகைநீர் பெய்து
மறைகொண்ட மந்திரத்தால் வாழ்த்திக் – கறைகொண்ட
கண்டத்தான் சென்னிமேல் ஏறக் கழுவினான்
அண்டத்தான் சேவடியை ஆங்கு.’
(நான்முகன் திருவந். 9.)
‘குறைகொண்டு – தன்னுடைய செல்லாமையை முன்னிட்டுக்கொண்டு. நான்முகன்
குண்டிகைநீர் பெய்து – அருகே நின்ற தர்ம தத்துவம் ஜலமாய் இவன் குண்டிகையிலே
பிரவேசித்தது, மறைகொண்ட மந்திரத்தால் வாழ்த்தி -ஸ்ரீ புருஷசூக்தாதிகளைக் கொண்டு
துதித்து. கறை கொண்ட கண்டத்தான் சென்னிமேல் ஏறக் கழுவினான் -‘யுக்தாயுக்த
நிரூபணம் பண்ண அறியாதே இவன் அநீதியிலே கைவளராநின்றான்; அது போக
வேணும்’ என்று இவன் ஜடையிலே ஏறும்படி அவன் திருவடிகளை விளக்கினான்;
ஸ்ரீபாததீர்த்தம் கொண்டு துஷ்புத்திரர்கள் தலைகளிலே தெளிக்குமாறு போன்று’ என்பன
மேல் பாசுரத்துக்கு வியாக்கியாதா அருளிச்செய்த பொருள்
இச்சரிதப் பகுதியை, வில்லிபாரதம் (மதுரைத் தமிழ்ச்சங்கப் பதிப்பு) பதின்மூன்றாம்
போர்ச்சருக்கம், 193 முதல் 221 முடிய உள்ள செய்யுள்களில் காண்க. மேலும்.
பண்டைக்காலத்துப் புலவர் ஒருவர், ‘பூவை நிலை’ என்னும் துறையில் அமைத்துப்
‘பாண்டிய! நீ கண்ணனாய்ப் பாரதப்போர் நடத்திய காலத்தில் தேர் லிசயன் உன்
அடிகளில் சார்த்திய மலர்கள், சிவன் முடியின்மேல் காணப்பட்டன; இன்று, முடி மன்னர்
தத்தம் முடிகளிலே சூடிய மலர்கள் நின் அடிமிசையே காணப்படுகின்றன; இஃது
என்னே!’ என்ற கருத்தமைய,
‘செங்கண் நெடியான்மேல் தேர்விசயன் ஏற்றியபூப்
பைங்கண்வெள் ளேற்றான்பால் கண்டற்றால் – எங்கும்
முடிமன்னர் சூடியபூ மொய்ம்மலர்த்தார் மாறன்
அடிமிசையே காணப் படும்.’
(முத்தொள்ளாயிரம், செய் 3.)
என்று பாடிய பாட்டும் இங்கு ஒப்பு நோக்கலாகும்.
இதற்கு வேறு வகையாகக் கூறும் பொருள் சிறவாமை காண்க. இங்ஙனம் பொருள்
கூறலே நூலாசிரியர் கருத்து என்பதனை இதற்குப் பின் அடுத்து வருகின்ற
‘கூந்தன்மாக் கொன்று குடமாடிக் கோவலனாய்ப்
பூந்தொடியைப் புல்லிய ஞான்றுஉண்டால் -யாங்குஒளித்தாய்
தென்னவனே! தேர்வேந்தே! தேறுநீர்க் கூடலார்
மன்னவனே! மார்பின் மறு?’
(முத்தொள்ளாயிரம், 4.)
என்ற செய்யுளால் உணரலாகும்.
.
நீர் சொல்லும் மேன்மை -அர்ஜுனன் –
பாசுபதாஸ்த்ரம் -பெற்ற விருத்தாந்தம் –
கண்ணன் திருவடியில் போட்ட புஷ்பம் ருத்ரன் தலை மேல் கண்டு –
தீர்த்தன் -உலகு அளந்த சேவடி -பூம் தாமம்
அவையே சிவன் முடி மேல் தான் கண்டு
பார்த்தன் தெளிந்து ஒழிந்தான்
தீர்த்தன் -தீர்த்தம் கொடுத்தவன் -ஸ்ரீ பாத தீர்த்தம் –
பாத உதகென பாவனார்த்தம் ஜடா மத்யே யோக்யதை ஈஸ்வர சம்ஹிதை பிரமாணம்
சத்யா லோகம் வர -திருவடியை -தர்ம தேவதை உருகி -கமண்டலம் -அதையே தீர்த்தமாக சேர்த்து –
சிரசா தரித்து -பாவனார்த்தம் ஜடா மத்யே -யோக்யன் ஆனேன் –
ருத்ரன் முதலில் பெயர் கங்கை தீர்த்தம் தரித்து சிவன் ஆனான் மங்களம் –
பாத உதகென ச சிவன் ஆனான் –
பாவனார்த்தம் புனித தன்மை பெற தரித்து கொண்டான் –
அசுத்தனையும் சுத்தனாக்கும் தன்மை தீர்த்தன்
உலகு அளந்து சேவடி காலத்தில் நடந்த
குறை கொண்டு நான்முகன் -அண்டத்தான் சேவடி ஆங்கு
தம்முடைய ஆகிஞ்சன்யம் -குறை
குண்டிகை நீர் -அருகில் தர்ம தேவதை
மறை கொண்ட மந்தரத்தால் ஸ்ரீ புருஷ சூக்தி
கரை கொண்ட கண்டத்தான் -சென்னி மேல் ஏற
யுக்தா யுகத நிரூபணம் அநீதியில் கை பட நின்றான் –
துர் குணம் போக ஜடையில் ஏறும்படி விலக்கினான் –
ஸ்ரீ பாத தீர்த்தம் -விபூதி மேலே பட -ஸ்ரீ பாத தீர்த்தம் சேர்த்து வர ஆண்டாள் சொல்ல –
பிள்ளை உறங்கா வல்லி தாசர் சிவிகை ஏழப் பண்ணும் ஸ்ரீ பாத தீர்த்தம் போகிறது –
அவர் இடம் வாங்கி உள்ளே வந்தார் –
பார்த்தன் தெளிந்து ஒழிந்த –
கிருஷ்ண விருத்தாந்தம் வாமன அவதாரம் –
சௌலப்யம் -பொது –
ஓங்கி உலகு அளந்த உம்பர் கோமானே -கண்ணன்
ரூபம் -மழலை பேச்சு -மூவடி மாவலி தா -செஷ்டிதன்கள்
மனோஹாரி
குனாகுனம் நிரூபணம் பண்ணாமல் அனைவரையும் தீண்டி –
பூம் தாமம் -சேர்த்தி –
ஒரு தேவதை பக்கலிலே அஸ்தரம் பெற வேண்டி –
புஷ்பங்களை நம் காலில் இட்டு ஜீவி –
அந்த புஷ்பங்களை தரித்து அஸ்த்ர பிரதானம் பண்ணின விருத்தாந்தம் –
அவையே -அவற்றோடு சஜாதீயங்கள் அன்றி அவையே –
முடி மேல் தான் -தலை மேல் கண்டு
பர தேவதை –
தெளிந்து ஒழிந்தான் -தான் காண்டு ஆப்தர் சொல்ல கேட்க அன்றிக்கே சுருதி மூலம் அன்றிக்கே
பிரத்யட்ஷமாக சாஷாத்கரித்து
சாரதியாய் இருந்தும் கலங்காதே -தெளிந்து –
கம்பீரமான மனச உள்ளவன் அர்ஜுனன் -கேசவச்யாத்மா கிரிஷ்ணனுக்கு தாரகன் –
சேவித்து -நம -முன்பும் பின்பும் போய் சேவித்து -சூழ்ந்து இருந்து ஏத்துவர் பல்லாண்டு
அழகு வெள்ளம் தள்ள -சௌந்தர்யா அலை யில் சுற்றி சுற்றி சேவித்து –
பெருமையை உணர்ந்து கொண்டான் –
திரு துழாய் மலை சர்வ ஸ்மாத் பரன் -சர்வாதிகன் காட்டும் –
ஒருவரால் பேச முடியுமா
அறிவு கேடர் விசாரம் செய்யும் படி இல்லையே –
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
Leave a Reply