(முனியே நான்முகன் -10-10-இதன் விவரணம்
முனியே நான்முகனே முக்கண் அப்பா என் பொல்லாக்
கனிவாய்த் தாமரைக் கண் கரு மாணிக்கமே என் கள்வா
தனியேன் ஆர் உயிரே என் தலை மிசையாய் வந்திட்டு
இனி நான் போகல் ஒட்டேன் ஒன்றும் மாயம் செய்யேல் என்னையே–10-10-1-
சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்த முடிவு இல் பெரும் பாழேயோ
சூழ்ந்து அதனில் பெரிய பர நன் மலர்ச் சோதீயோ
சூழ்ந்து அதனில் பெரிய சுடர் ஞான இன்பமேயோ
சூழ்ந்து அதனில் பெரிய என் அவா அறச் சூழ்ந்தாயே–10-10-10-
அவா அறச் சூழ் அரியை அயனை அரனை அலற்றி
அவா அற்று வீடு பெற்ற குருகூர்ச் சடகோபன் சொல்
அவா இல் அந்தாதிகளால் இவை ஆயிரமும் முடிந்த
அவா இல் அந்தாதி இப்பத்து அறிந்தார் பிறந்தார் உயர்ந்தே–10-10-11-
அவன் சேற்றில் கால் வைத்து இடந்து எடுப்பதை அனுசந்திக்கவே
நாம் சம்சார சேற்றில் உழல வேண்டாமே
நானும் பிறந்து நீயும் பிறக்க வேண்டுமோ -கீதாச்சார்யன்
ஆழ்வார் தாமாக அருளிச் செய்கிறார் இதில்
பொய் நிலம் -பொல்லா வருவினை மாய வன் சேற்று அள்ளல் பொய் நிலமே – விவரணம்
பொல்லா பிரகிருதி
அருமையான-அரிய – பிரகிருதி
வினை பிரகிருதி -கர்மங்களுக்கு காரணம்
மாய பிரகிருதி –
வன் ப்ரக்ருதி -ஈஸ்வரனால் மட்டுமே போக்க முடியும்
சேற்று அள்ளல் ப்ரக்ருதி
சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்த முடிவு இல் பெரும் பாழேயோ -பிரகிருதி விவரணம் அங்கு )
அவதாரிகை –
நீர் பகவத் பிரசாத லப்த ஜ்ஞானத்தை உடையீருமாய் –
இப்படி அறுதி இட்டு காண்கைக்கு ஈடான-நன்மையை உடையீருமாய் இருக்கையாலே
நீர் இப் பேறு பெற்றீர் –
உம்மைப் போலே ஜ்ஞானம்-இன்றிக்கே
பாக்ய ஹீனருமாய்
பிற்பாடருமான சம்சாரிகள் செய்வது என் என்ன –
அவர்களுக்கு என் தன்னை ஜ்ஞானமில்லையே யாகிலும் –
நான் சொன்ன இப் பாசுர மாத்ரத்தையே- சொல்ல –
அவர்களும் எல்லாம் நான் பெற்ற பேறு பெறுவார்கள் -என்கிறார் –
நூல் பயன்
நல்லார் நவில் குருகூர் நகரான் திரு மால் திருப்பேர்
வல்லார் அடிக் கண்ணி சூடிய மாறன் விண்ணப்பம் செய்த
சொல்லார் தொடையில் இந்நூறும் வல்லார் அழுந்தார் பிறப்பாம்
பொல்லா வருவினை மாய வன் சேற்று அள்ளல் பொய் நிலமே – – 100-
பாசுரம் -100-நல்லார் நவில குருகூர் நகரான் —
துறையடைவு–
முனியே நான்முகன் -10-10-
பதவுரை
நல்லார்–நல்ல குணங்களையும் நல்ல காரியங்களையுமுடையரான மஹான்கள்
நவில்–புகழ்ந்து கூறப் பெற்ற
குருகூர் நகரான்–திருக்குருகூரென்னும் திருப்பதியில் திருவவதரித்தவரும்.
திருமால்–லக்ஷ்மீபதியான எம்பெருமானது
திருபேர்–திருநாமங்களை
நல்லார்–பயின்றவரான அடியார்களுடைய
அடி–திருவடிகளாகிற
கண்ணி–பூமாலையை
சூடிய–தமது முடிக்கு அணியாகக் கொண்டவருமான
மாறன்–நம்மாழ்வார்
விண்ணப்பம் செய்த–(பகவத் ஸந்நிதாநத்திலே) விஜ்ஞாபநஞ்செய்த
சொல் ஆர் தொடையல்–சொற்களைக் கொண்டு தொடுக்கப்பட்ட மாலை வடிவமான
இ நூறும்–இந்த நூறு பாசுரங்களையும்
வல்லார்–கற்று வல்லவர்கள்
பிறப்பு ஆம்–ஸம்ஸாரத்திற்குக் காரணமும் காரியமுமாகிய
பொல்லா அருவினை–ஆத்மாவை கெடுக்க வல்ல கொடியவையாய் போக்க முடியாதவையான அரியதான ஊழ்வினைகளாகிற
மாயம் வல் சேறு அள்ளல்–ருசி வாசனைகளை பிறப்பித்து வஞ்சிக்குமதான கொடிய சேற்றின் அடர்த்தியை யுடைய
பொய் நிலத்து–பொய்யாகிய பிரகிருதி மண்டலத்தில்
அழுந்தார்–அழுந்த மாட்டார்கள் (முக்தராகப் பெறுபவர்கள் என்றவாறு.)
வியாக்யானம் –
நல்லார் நவில் –
லோகத்தில் சத்துக்கள் அடைய -ஆழ்வார் ஆழ்வார் -என்னா நிற்கும் இத்தனை –
ராமோ ராமோ ராம -இதிவத் -(ராமோத்வைதம் போல் ஆழ்வார் ஒருவரே இங்கு பேசப்படுகிறார் )
சர்வதாபி கதஸ் சத்பி –
பெருமாள் சிரமம் செய்து விட்டு ஒரு-நிழலிலே இருந்த அளவிலே –
பர சம்ருத்யை ஏக பிரயோஜனாந்தர வர்கள் அதுக்கு உறுப்பான-கற்கைக்காக படு காடு கிடப்பர்கள் –
சமுத்திர இவ சிந்துபி -இப்படி கிடக்கிறது -இவர் குறை-நிரம்புக்கைக்கோ என்னில் –
பண்டே நிரம்பி நிற்கிற கடலை நிரப்புக்கைக்கு அன்றிக்கே ஆறுகள் வந்து புகுருகிறது –
நடுவு தரிப்பு இல்லாமை இத்தனை இறே –
திரு மால் இத்யாதி-
அவர்கள் அடைய ஆழ்வார் என்னா நிற்க செய்தே –
இவர் தாம் –
பயிலும் திரு உடையார் எவரேலும் அவர் கண்டீர் —என்னை யாளும் பரமரே –என்கிறார் –
திருமால் திருப்பேர் வல்லார் அடிக் கண்ணி சூடியதைப் பற்றி -பெரும் பேறு பெற்றீர் -என்கிறார் –
ஸ்ரீ ய பதி உடைய திரு நாமங்களைச் சொல்லுகைக்கு அதிகாரம் உடையவர்கள் உடைய-
திருவடிகள் ஆகிற மாலையை சூடுகையே நிரூபகமாக உடைய ஆழ்வார் –
விண்ணப்பம் செய்த –
அடியேன் செய்யும் விண்ணப்பமே -என்று தொடங்கி –
விண்ணப்பம் செய்து-தலைக் கட்டின வார்த்தை யாயிற்று –
சொல்லார் தொடையல் –
ஆப்த வாக்கியம் என்று ஆதரிக்க வேண்டா –
பாட்யே கேயே ச மதுரம் -என்கிறபடியே
இதில் சாரஸ்யத்துக்கும் ஆக ஆதரிக்க வேணும் –
இந்நூறும் –
மகா பாரதம் போலே பரந்து இருத்தல் –
பிரணவம் போலே சுருங்கி இருத்தல் -செய்யாதே –
நூறு பாட்டாய் –
ஜ்ஞாதவ்யாம்சம் அடைய உண்டாய் இருக்கை –
வல்லார் அழுந்தார் –
பலத்தை முற்பட சொல்லுகிறார் -(த்ருஷ்டா ஸீதா -கண்டேன் என்று முற்படச் சொன்னது போல் -வீடுமின் முற்றவும் முதலில் சொன்னது போலவும் )
எதில் அழுந்தார் என்கிறது என்னில் –
1-பிறப்பாம் பொல்லா –
ஜன்மமாகிற பொல்லா –
ஜ்ஞாநானந்த லஷணமாய் –
ஈஸ்வர சேஷமாய் இருக்கிற-ஆத்ம வஸ்து –
அதுக்கு அநு ரூபம் அன்று இறே -அசித் சம்சர்க்கம் –
2-அரு வினை –
கர்ம பரம்பரையாலே மேன்மேல் என அது தன்னை வர்த்திப்பித்து
பூண் கட்டுமதாய் இருக்கை –
3-மாய –
ருசி வாசனைகளைப் பிறப்பிப்பதாய்
4-வன் சேறு –
தோய்ந்தார் பின்பு கரை கழுவ வேண்டும்படியாய் இருக்கை
5-அள்ளல் –
கால் இட்டால் கீழே சுரிக்கும்படியாய் இருக்கை
6-பொய் நிலம் –
அது தான் கீழ் தரை இன்றிக்கே இருக்கை –
இப்படி இருக்கிற சம்சாரத்தில் அழுந்தார்கள் –
பொல்லாததுமாய்-அருவினையாய் – மாயமுமாய் -பொய் நிலமுமாய் இருக்கிற
பிறப்பாகிற வன் சேற்று அள்ளலில் அழுந்தார் –
என்று அந்வயம்
ஞான பிரானை அல்லால் இல்லை நான் கண்ட நல்லதுவே -என்று அருளிய
ஞான தேசிகர் -ஆழ்வாரை அல்லால் தொழா மதுரகவி பிரக்ருதிகள் –
அனந்தன் மேல் கிடந்த புண்ணியனை பாகவத பர்யந்தமாக பற்றுகை —
ஆழ்வார் ஸ்ரீ ஸூக்தியாலே இத்தை அருளி –
ஆவிர்பூத ஸ்வ ஸ்வரூபராய் வாழும் பலன் சொல்லி தலைக் கட்டுகிறார்
தாத்பர்யம்
மதுரகவி போல்வார் -ஞானப்பிரானை அல்லால் இல்லை நான் கண்ட நல்லதுவே என்று அருளிச் செய்த
ஆழ்வார் ஸ்ரீ ஸூக்தியால் போக்கிக் கொள்ள வேண்டும்
நம்மாழ்வார் தானே ஒரே உபாயம் என்று இவர் வார்த்தையால் சொல்ல வைக்க
தற்புகழ்ச்சி இல்லை
யதார்த்த கதனம் தானே
மீண்டும் பிறக்க மாட்டோம்
சம்சாரம் கடந்து உஜ்ஜீவிப்போம் என்று அருளிச் செய்கிறார்
விலக்ஷணர் வர்த்திக்கும் திருக்குருகூர்-ஜென்ம வைலக்ஷண்யம்
அவர்கள் புகழும் கல்யாண குணங்களை யுடையவர்
ஸ்ரீ யபதி நாமம் சொல்லும் பக்தர்களில் அக்ர கண்யர்
சேஷத்வ பாரதந்தர்யம் ஆத்ம குணங்கள் மிக்கவர்
இனிய சப்த சந்தர்ப்பம் -ஞாதவ்ய சகல ப்ரகாசகமாய் உள்ள
இந்தப் பிரபந்தம் அனுசந்திக்க வல்லார்
ஆழ்வாரது கடாக்ஷ பூதராகி
ருசி வாசனா ஜனகமாய் இருக்குமே -அடைந்தாரை அழுந்தப் பண்ணும்
பரிணாம சாலியாய்
ஜென்மம் ஜரை மரணம் இத்யாதி ஆத்ம ஸ்வரூப திரோதாகம் -சம்சாரம் -கர்மங்கள் காரணம் – இவற்றைக் கடந்து
தத்வ ஞானம் யதார்த்தம் அறிந்து
ஸ்வ ஸ்வரூபம் ஆவிர்பாவம் பெற்று
இயற்கைத் தன்மை பெறுவது போல்-
புதிதாக ஊட்ட வேண்டாமே
ஞான மயமான ஆத்ம ஸ்வரூபம் -பெற்று வாழ்வார்கள் என்கிறார் –
——————————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply