திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -2-4-9-ஸ்ரீ M.A V .சுவாமிகள் ..

பட்டபோதுஎழு போதுஅறி யாள்;விரை
மட்டுஅலர் தண்துழாய் என்னும்; சுடர்
வட்டவாய்நுதி நேமி யீர்! நுமது
இட்டம் என்கொல்இவ் ஏழைக்கே?

    பொ – ரை : ‘பேரொளியினையும் வட்டமான வாயினையும் கூர்மையினையுமுடைய சக்கரத்தைத் தரித்தவரே! சூரியன் மறைகின்ற காலத்தையும் தோன்றுகிற காலத்தையும் அறிகின்றிலள்; வாசனையோடு மலர்கின்ற தேனையுடைய குளிர்ந்த திருத்துழாய் என்று சொல்லுகிறாள்; அரியாமையினையுடைய இப்பெண்ணின் திறத்து நுமது எண்ணம் தான் யாதோ?’ என்றவாறு.

    வி – கு : அலர் துழாய் – வினைத்தொகை. நேமீயிர் – விளிப்பெயர். ஏழை – அறிவில்லாதவள். இது, உயர்திணை இருபாற்கும் பொதுப் பெயர். ‘களி மடி மானி காமி கள்வன், பிணியன் ஏழை’ என்றார் நன்னூலார்

ஈடு : ஒன்பதாம் பாட்டு. ‘இவள் ‘பட்டன’ என்கைக்கு என்பட்டாள்?’ என்ன, ‘படுவன எல்லாம் பட்டாள்; இனி, என் படல் வேண்டும்?’ என்கிறாள்.

பட்டபோது எழுபோது அறியாள் – 2உதித்ததும் மறைந்ததும் அறிகின்றிலள். ‘இவள் அறிவதும் ஏதேனும் உண்டோ?’ என்னில், விரை மட்டு அலர் தண் துழாய் என்னும் -‘இது ஒரு பரிமளமே; இது ஒரு தேனே; இது ஒரு பூவே; இது ஒரு குளிர்ததியே’ என்று, திருத்துழாய் விஷயமாக ஒரு கோடியைச் சொல்லும். ஆக, 3‘உம்முடைய பேரும் தாரும் ஒழிய அறியாள்’ என்கிறாள். என்றவாறே, நம்மை ஆசைப்பட்டு இப்படிப் படப்பெற்றோமே!’ என்று 4அலப்ய லாபத்தால் கையில் திரு ஆழியை விதிர்த்தான ‘சுடர் வட்டம் வாய் நுதி நேமியீர்’ என்கிறாள். அதாவது, ‘சுடரையும் வட்டமான வாயையும் கூர்மையையுமுடைய திரவாழியைக் கையிலே உடையீர்’ என்பதாம் 5இப்போது, பெண் பிள்ளையைக் காட்டிலும் திருத்தாய் கையும் திருவாழியுமான அழகுக்கு ஈடுபட்டு விசேஷணங்கள் இட்டு அனுபவிக்கிறாள் ‘சுடர் வட்டம் வாய் நுதி’ என்று. ஆக, 6‘அடைந்தவர் பகைவர்

என்னும் வேற்றுமை இன்றி அழிக்கைக்குப் பரிகரம் உமக்கு ஒன்றேயோ?’ என்கிறாள் என்றபடி. 1‘ஆழிப்படை அந்தணனை, மறவியை இன்றி மனத்து வைப்பாரே’ என்பதன்றோ இவர்தம்முடைய வார்த்தையும்? கையும் திருவாயுமான அழகைக் கண்டால் நெஞ்சு அழியுமவர்கள் 2இவர்கள். நுமது இட்டம் என் கொல் – 3இரா வணன் இரணியன் முதலியோர்களை முடித்தது போன்று, முடிக்க நினைக்கிறீரோ? நித்தியசூரிகளைப் போன்று, கையும் திருவாழியுமான அழகை அனுபவிப்பிக்கிறீரோ? தன்னையும் மறந்து உம்மையும் மறந்து சம்சாரிகளைப் போன்று உண்டு உடுத்துத் திரிய வைக்கிறீரோ? இவள் பேற்றில் நீர் நினைத்திருக்கிறது என்? இவ்வேழைக்கே – சிறிதும் மனத்திட்பம் இல்லாதவளான 4இவள் விஷயத்தில் நீர் நினைத்திருக்கிறது என்?

இவள் பட்டன என்கைக்கு என்ன பட்டாள் -படுவது எல்லாம் பட்ட பின்பு -பட வேண்டியது ஒன்றும் இல்லையே
பட்ட போதும் ஏழு போதும் -சூர்யன் -இரவு பகல் -அறியாத –
உதித்ததும் அஸ்தமித்ததும் தாயார் -அறிந்த படி
ராத்ரியில் நித்தரை இன்றி வாயில் வார்த்தை இன்றி
விரை மட்டு -தேன்ஒழுகும் –இட்டம் என் கொல்
-இது தேனே -இது -வாசனை மணமே குளிருசியை கொண்டாடுகிறாள்
பெரும் தாரும் ஒன்றை தவற
ஒன்றும் அறியாமல்
அலப்ய லாபத்தால் கையில் திரு ஆழியை காட்டினான் –
தருனவ் -ரூபா சம்மனவ் -போல இவளும் உண்ணப் புக்கு வாயை மறந்தால் போல்
சுடர் வட்ட   வாய் -நேமி அழகில் ஈடு பட்டு -தாயார் வார்த்தை –
விசெஷணம் இட்டு -வர்ணிக்கிறாள்
தருணவ் ரூப சம்மப்பைன்வ் -போலே –
ஆஸ்ரித -விரோதி
நஞ்சீயர் வார்த்தை உகப்பாரை அவ் அழகை காட்டி  அகல நின்று முடிக்கும்
உகதாவாரை கிட்டே நின்று இத்தாலே முடிக்கும் –
உமது இட்டம் என் கொல் -ராவண ஹிரன்யாதி போல் முடிக்க பார்க்கிறீரா
கிட்டே நின்று நித்யர் போல் அனுபவிக்க
தன்னையும் மறந்து உம்மையும் பறந்து –
இவர் பேற்றுக்கு என் நினைவு
ஏழைக்கு -ஞானம் இல்லாத –அத்யந்த சபலை -ஈடுபாடு -மதி எல்லாம் உள் கலங்கி –
தத்துவ அர்த்தம் -அவனையே வாய் புலத்தும் இத்தையும் பேற்றுக்கு சாதனம் இல்லை
அவன் நினைவே உபாயம் –
இவ் -காட்டி -சபலைகள் பலரும் உண்டு -இப்படி ஒரு வ்யக்தி புறம்பு இல்லை என்கிறாள் –

 

நஞ்சீயர் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading