ஸ்ரீ திரு விருத்தம் -38-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள்-வியாக்யானம் –

(நீலோத் பல புஷ்பங்கள் கருநெய்தல் மலர்கள் -திருமேனி சாரூப்பியம்
சாம்யா பத்தி சாமீப்யம் சாலோக்யம் சாயுஜ்யம்
கால் வன்மையால் -கடமாயின எல்லாம் கழித்து -நீர் நிலைகளில் நின்ற தபஸ்ஸின் பயனா
குடமாடியவர் நடமாடி உலகு அளந்த
இரண்டாலும் மண்ணும் விண்ணும் குலுங்கி -உருகி -ஈடுபட்டு –
திருத்தாயார் கீழே புலம்பினாலும்
பகவத் கடாக்ஷத்தால் போகிற வழிகள் எல்லாம் பூக்கள் சூழ்ந்து-தெய்வ யோகத்தால்
தடங்களும் பூக்களுமாக இருக்க -லோக பதார்த்தங்களை பார்த்து
அதுவும் அவனையே நினைவூட்ட -அவன் இடமே ஈடுபட்டாள்
வியந்தும்
போலி கண்டு அழிந்தும் மகிழ்ந்தும்
சொன்னால் விரோதம் -அஸேவ்ய சேவை கூடாது -என்று உபதேசம் –
ஏற்கும் பெரும் புகழ் வானவர் யீசனைப் பாடும் ஏற்கும் புகழ் யுடைய ஆழ்வார் –
நான் வேறே ஒருவருக்கும் என்னாவின் இன் கவி கொடுக்கிலேன்
நா கொடுத்த பயன்
வம்மின் புலவீர் உம் மெய் வருத்தி கை செய்து உய்ம்மினோ –
தேவ பித்ரு ரிஷி -மூன்று ருணங்கள் -கடன் தீர -பாடுங்கோள் )

அவதாரிகை –

யோகிகள் யோக அப்யாசம் பண்ணும் போது யோகம் சாத்மிக்கைக்காக
லோக யாத்ரையிலே ஒன்றுவார்கள்—
அது போல் இவரும் பகவத் அனுபவம்
சாத்மிக்கைக்காக லோகங்களில் பதார்த்தங்களின் மேல் கண் வைததார் –
அவையும் பகவத் விஷயத்துக்கு ஸ்மாரகமாய் நலிகிறபடி –
மயர்வற மதி நலம் அருள பெற்றவர் ஆகையாலே –

நம்மை
லோக யாத்ரையின் நின்றும்
வேத (வைதிக )யாத்ரையில் மூட்டும் தனை அருமை போரும்
ஆழ்வார்களை –
வேத (வைதிக )யாத்ரையில் நின்றும்
லோக யாத்ரையிலே மூட்டுகை –

நம்மை
சம்சாரத்தில் உண்டான ருசி வாசனையை தவிர்த்து
பகவத் விஷயத்தில் உண்டாக்குக்கைக்கு உள்ள அருமை போரும்
ஆழ்வார்கள்
பகவத் விஷயத்தில் ருசி வாசனையை தவிர்த்து –
சம்சாரத்தில் உண்டாக்குக்கைக்கு –
இரண்டும் எம்பார் அருளி செய்தார் –

கடமாயினகள் கழித்து தன் கால் வன்மையால் பல நாள்
தடமாயின புக்கு நீர் நிலை நின்ற தவமிது கொல்
குடமாடி யிம் மண்ணும்  விண்ணும் குலுங்க வுலகளந்த
நடமாடிய  பெருமான் உரு ஒத்தன நீலங்களே -38-

பாசுரம் -38-கடம் ஆயினகள் கழித்து தன் கால் வன்மையால் –
தலைவனைப் பிரிந்த தலைவி போலி கண்டு மகிழ்தல் –
சொன்னால் விரோதம் இது -3-9-

பதவுரை

கடன் ஆயினகள் கழித்து–காடுகளாகவுள்ள வற்றைக் கடந்து ஒழித்து
கடம் ஆயின புக்கு–தடாகங்களாக வுள்ளவற்றில் பிரவேசித்து (அங்கு)
தம் கால் வன்மையால்–தமது கால்களின் வலிமையால்
பல நாள்–அனேக காலம்
நீர் நிலை நின்ற–நீரிலே நீங்காது நின்று செய்த
தவம் இது கொல்–இத் தவத்தினாலேயோ
நீலங்கள்–நீலோற்பல மலர்கள்–கரு நெய்தல்கள்
குடம் ஆடி–(கிருஷ்ணாவதாரத்தில்) குடக் கூத்தாடினவனும்
(த்ரிவிக்ரமாவதாரத்தில்)
இ மண்ணும்–இந்த மண்ணுவகமும்
விண்ணும்–விண்ணுலகமும்
குலுங்க–நெகிழும்படி
உலகு–உலகங்களை
அளந்து–அளவிட்டு
நடம் ஆடிய–(இங்ஙனம்) திருவிளையாடல் செய்தருளினவனுமான
பெருமான்–எம்பெருமானுடைய
உரு ஒத்தன–திருமேனி நிறம்போன்ற நிறம் பெற்றன.
இம் மண்ணும் விண்ணும் குலுங்க–இந்த பூ லோகமும் ஊர்த்வ லோகமும் ஆச்சர்யப்பட்டு அசையும்படியாக
குடமாடி -ஸ்ரீ கிருஷ்ண அவதாரத்தில் குடக் கூத்தாடியும்
வுலகளந்த-லோகங்களை த்ரிவிக்ரம அவதாரத்தில் ஆக்ரமித்தும்
நடமாடிய பிரான் உரு ஒத்தன -சஞ்சரித்த சர்வேஸ்வரனுடைய திரு மேனியோடே சாம்யம் உடைத்தாய் இருக்கின்றன
இது -இதற்குக் காரணம்
கடமாயினகள் கழித்து -தேவ பித்ரு ருஷி ருணங்கள் நிறைவேற்றி
தன் கால் வன்மையால் -தனது காலின் உரத்தினால்
பல நாள் தடமாயின -அநேக காலம் தடாகம் என்ற பேர் பெற்றவைகளில்
புக்கு நீர் நிலை நின்ற தவம் கொல்-பிரவேசித்து ஜலத்தில் சிரகாலம் வாஸம் பண்ணின தபஸ்ஸாய் இருக்கலாம்

வியாக்யானம் –

கடமாயினகள் கழித்து –
ருணானி த்ரிகுண்ய அபாக்ருத்ய -என்கிறபடியே –
மூன்று வித கடன்கள் கழிந்த பின்னர்
மனசை மோஷத்தில் நிலை நிறுத்த வேண்டும் –

மனு ஸ்மரதி – 6-35 -ப்ரஹ்ம  சர்யேனருஷிப்ய  யஜ்ஜேன தேவேப்ய பிரஜயா பித்ருப்ய –  என்று
சொல்லுகிற படியே –
ப்ரஹ்மசர்யம்  மூலம் ரிஷிகளின் கடனையும் –
யாகம் மூலம் தேவர்கள் கடனையும் –
பிள்ளைப் பேறு மூலம் பித்ருக்களின் கடனையும் -தீர்க்கக் கடவன் –

உஷ்ண காலத்திலேயே –
உஷ்ணமான தேசங்களிலே –
சரீர க்லேசங்களாலே –
சொல்லுகிற ருண த்ரயத்தையும் இறுத்து —

தன் கால் வன்மை இத்யாதி –
தன்னுடைய யத்னத்தாலே யாதல்-
தபோ பலத்தால் ஆதல்-
சத்தையை நோக்கி இட்டு வைத்து –
சீத காலத்திலேயே கடலோடு -குளப் படியோடு வாசி அற –
தீர்த்த தேசங்கள் எல்லாம் புக்கு -கழுத்து மட்டும் நீரிலே நின்று –
தபஸ்ஸூ பண்ணின அந்த பலத்தாலே -வந்ததோ உங்களுக்கு இப் பரம சாம்யா பத்தி ?–

நீல மலர்கள் இப்படி கடன் தீர்கின்றன –
கடம்-கடன் –

குடமாடி-
மன்றிலே தன் அழகை சூறை கொள்ளும் படிக்கு ஈடாக நின்று –
குடக் கூத்தை ஆடி
இடையருக்கு உண்டான செருக்குக்கு தலை சாவி வெட்டின படி –

இம் மண்ணும் இத்யாதி –
ஒரு தெருவிலே யாதல்-
சிலர்க்கு ஆதல்-
தன்னை கொடுக்கும் அது அன்றிக்கே
லோகமாக வாழும் படி கூத்தாடின படி –

(குரவை – கலி நடம்- குடக்கூத்து =கரணம் -நோக்கு – தோற்பாவை -ஆறு வகை கூத்துக்கள்
மேலு பலவும் சொல்வர் )

குலுங்க-
சம்கார காரணன் ந்ருத்யம் ஆகில் இறே லோகம் நடுங்கிற்று என்னாலாவது –
அங்கன் அன்றிக்கே –
லோகம் அடைய அச் செயலுக்கு நெஞ்சு உளுக்கின படி   –

உலகு அளந்து நடமாடிய –
இந்திரன் தான் இழந்த பூமியைக் கொண்டு போக –
மகா பலி தன்னது அல்லாததை தன்னது என்று பிரமித்து –
அத்தை கொடுத்தோம் -என்று ஒவ்தார்யத்தை நினைத்து போக –
இவர் திரு உலகு அளந்து அருளின போதை அழகை தம் பேறாக அனுபவித்தார் –

(உவந்த உள்ளத்தனாய்
பெருமாளுக்கு தீண்டப்பெற்றோம்
மகா பலிக்கு அவனுக்கே கொடுக்கப்பெற்றோம்
இந்திரனுக்கு இழந்த செல்வம்
ஆழ்வார்களுக்கு சேவை -அழகு அனுபவித்து உகந்து )

உரு ஒத்தன நீலங்களே –
இப்படி சர்வதா சத்ருசமான வடிவை நீலங்கள் பெருகைக்கு அடி –
கடமாயினகள் கழித்து தன் கால் வன்மையால் பல நாள்
தடமாயின புக்கு நீர் நிலை நின்ற தபசோ ?-

இவருக்கு பகவத் விஷயத்தில் லோக யாத்ரை அனுசந்திக்க புக்கால்
அதுவும் பகவத் விஷயத்துக்கு ஸ்மாரகமாய் நலியும் படி இறே
பிறந்து ஞான வைசத்யம் —அத்தை சொல்லுகிறது –

தாத்பர்யம்
இதில் ஆழ்வார் -சர்வேஸ்வரன் ஆஸ்ரிதற்கு ஸாரூப்ய பிரதானம் பண்ணுபவன் ஆகையால்
நமக்கும் ஸாரூப்யத்தை அளிக்கும் என்று அனுசந்தித்து உரைத்த பாசுரத்தை
கரு நெய்தல்களிலே சர்வேஸ்வரனான நாயகன் போலியைக் கண்டு உரைத்த
நாயகியின் பாசுரத்தாலே அருளிச் செய்கிறார்

நாயகி சந்த்ர ஒளியால் மலர்ந்த கருநெய்தல் மலர்கள்
நிறம்-
கிருஷ்ண வாமன திரிவிக்ரம அத் யாச்சர்ய
அதி மானுஷ சேஷ்டிதங்கள் –
எம்பெருமான் திரு மேனி ஒத்து இருக்க
இது எதனால் இருக்கும்
சா அங்கமாக -முக்கடன்களைக் கழித்து -கர்ம யோகங்கள் அனுஷ்ட்டித்து
வெய்யில் காலத்தில் மலைகளில் நின்றும்
குளிர் காலத்தில் தடாகங்கள் இருந்தும்
செய்த தபஸ்ஸுக்களின் பலமோ
நானும் செய்து கிட்டக்க கூடாதோ என்கிறார்

——————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading