ஸ்ரீ திரு விருத்தம் -37-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள்-வியாக்யானம் –

(கொடுமையான வளைந்த வில்லைப் பிடித்து உள் ள வேடர் இருக்கும்
சூழ் கடம் -பாலை நிலம் காட்ட அன்றோ கூட்டிச் சென்றார்
புணர்ந்து உடன் சென்ற செவிலித்தாய் சொல்லக் கேட்ட
நல்ல தாய் -பெற்ற தாய் பாசுரம்
நாடும் காலம் நோற்றுப் பெற்ற இவள்
சுரம் -பூமி -தாழ்ந்த பூமி
மண்ணை யிருந்து  துழாவி -4-4-
என் இள மான் என்று அங்கும் திருத்தாயார் பாசுரம் )

(தமிழர்
புணர்ந்து உடன் போன தலைமகள்
பெற்ற தாயார்
களவு நெறியில் கலந்து
தோழி பரிகாரம் சொல்ல
உடனே மணம் செய்வது இயல்பு
இல்லையேல் அப்பழி அடங்க ஆவலுடன் உடன் கொண்டு தனது இடத்துக்குச் செல்வதும்
வேறே இடத்தில் மறைத்து வைப்பது
ஓன்று முறைமையால் நடக்கும்
கூடைக்கூட்டிப்போக
தோழியால் அறிந்த -செவிலித்தாயாய் அதனை நல் தாயும் உணர்த்த
கவலையுடன் பேசுகிறாள்

அன்றிக்கே
கலந்து பிரிந்த தலைமகள்
தாயார் அறியாமல்
பிரிவாற்றாமை -திருக்கோளூர் பெண் போல் நோக்கிச் செல்ல
நேரிழை நடந்தாள் -அவனூர் வினவி திண்ணம் என் இளமான் புகுமோர் திருக்கொள்ளுறே
வழியில் படும் கஷ்டங்களை தாயார்
இளைஜர் வாத்யம் வில் -பாலை நிலம் அடையாளங்கள் –
உடன் போக்கும்
தனிப் போக்கும் இதில் உண்டே )

அவதாரிகை-

கலந்து பிரிந்தாள் ஒரு தலைமகள் பிரிவாற்றாமையால் புறப்பட்டு
க்ரூரமான காட்டிலே துஷ்ட மிருகங்களும் -மனுஷ்யரும்-துர்த்துவநிகளும்
துர் கதிகளுமான தேசத்திலே போக —

திரு தாயார் இவளை படுக்கையில் காணாமையாலே –
எல்லா படிகளாலும் பொல்லாதாய் இருக்கிற தேசத்திலே –
புறப்பட்டு போன இவள் -என் செய்கிறாளோ என்று –
இவள் போன வழியை பார்த்து மோஹிக்கிறாள்–

திரு கோளூரில் புகுகிற   பெண் பிள்ளை உடைய திருத் தாயாரைப் போலே –
ஓர் இடத்தை நிச்சயிக்க ஒண்ணாமையாலே -எல்லா படிகளாலும் சோகிக்கிறாள்-

கொடும் காற் சிலையர் நிரை  கோள் உழவர்  கொலையில் வெய்ய
கடுங்கா விளைஞர் துடி படுங்கவ் வைத்து அருவினையேன்
நெடும்காலமும் கண்ணன் நீண் மலர் பாதம் பரவிப் பெற்ற
தொடுங்கால்  ஓசியும்   இடை இள மான் சென்ற சூழ் கடமே –37-

பாசுரம் -37-கொடும் கால் சிலையார் நிறை கோள் உழவர் –
நற்றாய் தன் மகள் சென்ற பாலை நிலக் கொடுமையை கூறி இரங்கல் –
மண்ணை யிருந்து  துழாவி -4-4-

பதவுரை

அரு வினையேன்–அநுபவிக்க முடியாத தீவினைப் பயனையுடைய யான்
நெடு காலமும்–வெகு காலம்
கண்ணன்–கண்ணபிரானுடைய
நீள் மலர் பாதம்–நீண்ட தாமரை மலற்போன்ற திருவடிகளை
பரவி–வழிபட்டு
பெற்ற–அந்த ஆராதனையின் பயனாக ஈன்ற
தொடுங்கால் ஒசியும் இடை இனமான்–தொட்டால் ஒடியும்படியான (மிக மெல்லிய) இடையை யுடையவளும்
இளமை தங்கிய மான் போன்ற பார்வை யுள்ளவளுமான மகள்
சென்ற–நடந்து போன
சூழ்கடம்–பரந்த பாலைநிலம். (எப்படிப்பட்டதென்னில்)
கொடு கால் சிலையர்–வளைந்த விற்கழுந்தை யுடையவர்களும்
நிரை கோள் உழவர்–பசுக் கூட்டங்களைக் கவர்ந்து கொள்வதையே தொழிலாக வுடையவர்களும்
கொலையில் வெய்ய–கொலைத் தொழிலில் கொடியவர்களும்
சுடு கால்–நடை விரைந்த கால்களை யுடையவர்களுமாகிய
இளைஞர்–இளைய வீரர்களது
துடி–பறைகள்
படும்–ஒலித்தலாகிற
கவ்வைத்து–ஆரவாரமுடையது.

வியாக்யானம் –

கொடுங்காற்  சிலையர் –
யோதா நாமக்னி கல்பானாம் பேசலாநாம்  மகேஷூணாம்–பால காண்டம் -6 21- –
வீரத்தில் அக்னி போன்று யாராலும்-அண்ட இயலாமல் உள்ளவர்களும் –
வலிமை மிக்கவர்களும் –

(திரு அயோத்யையில் காவல் காப்பார்
கடுமை -கையில் வில் -இராமாயண ஸ்லோகம் போல்
கொடுமை -வளைந்த குரூரமான சிலையர் )

கோணின காலை உடைய  சிலையர் –
ஹிம்சையில் த்வரையாலே எப்போதும் நாணி ஏறிட்டு வளைந்த படியே இறே இருப்பது
கொடுமை என்றுமாம் –

கால்-
நாணி –

வில்லுக்கு கொடுமை யாவது –
தான் சென்று நலிகை அன்றிக்கே –
ஆள் இட்டு நலிகை

சிலையர்-நிரூபகம் –
உண்ணும் போதும்
ஸ்வ ஸ்திரீ யோடு அனுபவிக்கும் போதும்-
கையும் வில்லுமாய் இருக்கிறபடி –
எப்போதும் கை கழலா நேமியானோடே-பெரிய திருவந்தாதி -87-
பழகினவள்  இறே இவள் –

அவனுக்கு கையும் திரு ஆழியும் நிரூபகமாய் இறே இருப்பது
அது பிறர்க்கு தாரகமாய் இறே இருப்பது –
இது பிறர்க்கு அநர்த்தமாய் இருக்கும் இறே –

நாஹரயதி    சந்த்ராசம் பாஹூ ராமஸ்ய சம்ஸ்ரிதா –அயோத்யா காண்டம் -60 -20 – –
பெருமாளின் வலிமையான தோள்கள்-பற்றிய படி செல்லும் அவள் –
கானகத்தில் உள்ள சிங்கம் யானை -போன்றவற்றை பார்த்து அஞ்ச வில்லை-என்னும் படியே
அவன் கையும் வில்லும் நினைத்தார் பயம் கெட்டு இருக்குமா போலே
இருக்கிறது அன்று இறே இங்கு –

நிரை கோள் உழவர் –
பர அபகாரமான கோ க்ரஹனம் பண்ணுகையே ஸ்வயன் க்ருஷியாய் இருக்கும் அவர்கள்-
கோ ப்ராஹ்மண ஹிதாயச  -என்று
சாது சம்ரஷணம் பண்ணின வரோடே பழகினவள் இறே இவள் –

கொலையில் வெய்ய –
கொல்லும் இடத்தில் வெவ்வியராய் இருக்கை-
அர்த்தார்தம் ஆகவாதல்-
எதிரி என்றாதல்-
அன்றிக்கே –
துடிப்பு காண்கையே பிரயோஜனமாக கொல்லுகை –
சாவக் கொல்லாதே
கிடந்தது உழலும் படி கொல்லுகை –
(கொன்றேன் பல்லுயிரை குறிக்கோள் இன்றியே போல் )

இடையன் எறிந்த  மரம் ஆக்குகை-பெரிய திரு மொழி – 11-8 6–

படை நின்ற பைம்தாமரையோடு அணி நீலம்
மடை நின்று அலரும் வயலாலி மணாளா
இடையன் எறிந்த மரமே ஒத்து இராமே
அடைய வருளாய் எனக்கு உன் தன் அருளே -11-8-6-

ஒரு சார் பசுமையாய் ஒரு சார் உலர்ந்து இருப்பது போலே ஞான லாபம் -பேறு கிடையாமையாலே பெறப் பெற்ற வாட்டமும் யுண்டே
வேர் பறிந்த கொடியின் மலர்களும் போட்ட இடத்திலே செவ்வி பெரும்படியான தேச விசேஷத்தில் இருந்தும்
நீ அடியேனுக்கு பூர்ண அனுபவம் அருளத் தட்டிலையே
இருள் தரும் மா ஞாலத்திலே இருந்து தொண்டு செய்த அடியேனுக்கு நித்ய விபூதியில் நித்ய கைங்கர்ய செல்வம் அருளாய் –

இடையர்கள் வெட்டி எறிகின்ற மரம் ஓர் இடத்தில் பச்சையாகவும் –
மற்று ஓர் இடத்தில் காய்ந்தும் உள்ளது போன்று –
குற்று உயிரும் கொலை உயிரும்  ஆக செய்வர் –
அவர் பிறரை கொல்லும் இடத்திலும் -அவர்களுக்கும் ஹித ரூபம் ஆக இறே கொல்லுவது –

பின்னையும் –
சஞ்சாத பாஷ்ப பர வீர ஹந்தா ராமோ முகூர்த்தம் விமானா பபூவ –கிஷ்கிந்தா காண்டம் -24 -24 –
எதிரிகளை வீழ்த்த வல்லனாகிய  பெருமாள்-
சிறிது நேரம் துயரம் அடைந்த மனதுடன் அப்படியே அமர்ந்தான் -என்று
கண்ணும் கண்ண நீருமாய் இறே இருப்பது –

கடுங்கால் இளைஞர் –
பர ஹிம்சை பண்ண வென்றால் -பத்து புக்கு பத்து மீள வல்லராய் இருக்கை-
இவர்கள் ஒரு கிரியை செய்ய வேண்டாதே காணவே பயா வஹமாய் இருக்கும் பருவம்-
ரசாயன சேவை பண்ணினாரைப் போலே இளகின பருவமாய் இருக்கை –

துடி படுங் கவ்வைத்து –
பறைகளினுடைய ஓசை உடன் கூடிய கானகம்
துடி யினுடைய ஓசையை உடைத்து  –
இத் த்வனி உள்ள இடத்தே போகிறது

இருந்தால் தாயினுடைய ஹித வசனம் கேட்க வேணும் என்று –
இத் த்வனி உள்ள இடத்து போனால் அழிய -அழிகிற- உடம்பை இறே அழிப்பது –
இங்கு நித்தியமான ஆத்மாவை அழிக்கும் –

அருவினையேன்–
அவன் வேண்டி இராமை இல்லை-
இவளுக்கு ருசி இல்லாமை இல்லை-
கிட்டாது ஒழிகிற இது  காண்கிற என்னுடைய பாஹ்ய ஹானி இறே –
மத் பாபமே வாத்ர நிமித்த மாஸீத்
(நானே தான் ஆயிடுக )

நெடுங்காலம் இத்யாதி –
ஆஸ்ரயித்தின் அளவன்று கிடீர் –
(நெடும்காலமும் கண்ணன் நீண் மலர் பாதம் பரவிப் பெற்ற
கண்ணன் திருவடி -உலகு அளந்த -அளவு அல்லவே இந்த காலத்தில் நீட்சி )
சக்ருதேவ பிரபன்னாய -யுத்த காண்டம் – 18-32 –
சடக்கென்று –
சக்ருத் பிரபத்தியும் பொறாததை கிடீர் நான் தீர்க்க காலம் உபாசித்தது –
தேவகியாரைப் போலே அநந்த வ்ரதம் அனுஷ்டித்து கிடீர் –
தன்னையும் அறியாதே –
தன்னை பெறப் பட்ட அருமையும் அறியாதே கிடீர் போயிற்று –

மஹாதா தபஸா ராம மஹாதா சாபி கர்மணா –ஆரண்ய காண்டம் – 66-3 –
நீண்ட காலம் உடலை வருத்தி –
பல நியமங்களை கடப் பிடித்து –
பல கர்மங்களை இயற்றி அல்லவோ-ராமனாகிய உன்னை பெற்றாள் -என்று
ஸ்ரீ கௌசல்யார் சொல்லுமா போலே –

நீண் மலர் பாதம் –
ஆஸ்ரிதர் இருந்த இடத்தளவும் செல்ல தானே வளரும் படி
ஸூலபமான திரு அடிகள்-
அது தானும் தன் பேறாய் இருந்த படி

மலர்
செவ்வி –

பரவிப் பெற்ற –
ஸ்தோத்ர வாதங்களை பண்ணிப் பெற்ற –
நிதி எடுத்தாற் போலே –

தொடுங்கால் ஓசியும் இடை –
தொடத் தரியாய் இருக்கிறபடி –
நாயகனும் சீர்மை அறிந்து அனுபவியாதே பார்த்து இருக்கும் அத்தனை –

ஒசிந்த நுண் இடை மேல் கையை வைத்து நொந்து நொந்து -திரு வாய் மொழி -6 -7-8 – –
(நிதி எடுத்தால் பெற்ற இவள் எம்மை நீத்த என் காரிகை )

ஒசிந்த நுண் இடை மேல் கையை வைத்து நொந்து நொந்து
கசிந்த நெஞ்சினளாய்க் கண்ண நீர் துளும்ப செல்லும் கொல் ?
ஒசிந்த ஒண் மலராள் கொழுநன் திரு கொளூர்க்கே
கசிந்த நெஞ்சினளாய் எம்மை நீத்த எம்காரிகையே –6-7-8

இவை உண்டோ இல்லையோ -என்று சம்சயிக்க வேண்டி இருக்கிறபடி –
மேலும் கீழும் பார்த்தால் இடையும் உண்டு என்று அனுமித்து கொள்ளும் அத்தனை –
இடைக்கு தாரகமாக கையை வைத்தால் –
கை தானும் மலையை வைத்தாற் போலே இறே இருப்பது –

இள மான் சென்ற –
இவ்வழி போக்கும் இத்தனையும் பொறாத பருவம் கிடீர்

சூழ் கடம் –
க்ரூரமாய் பரந்து இருந்துள்ள காடு-

தாத்பர்யம்
ஆழ்வாருக்குப் பிறந்த ஞான பக்தி வைராக்யங்களைக் கண்டு
சம்சாரத்தில் இருப்பு துஸ்ஸஹம்
இவள் காடேறப் போனாள் என்று நினைத்த திருத்தாயார் வார்த்தை
இவளுக்காக நான் நெடும் காலம் தவம் செய்து பெற்றேன்
இவளோ ஒசிந்த இடை கொண்டவள்
தனியே ஓர் இடம் போக சக்தி கொண்டவள் அல்லவே
போன இடமோ பெரிய பாலை
வேடர்களும் பயங்கரமாக சஞ்சரிக்க
அவர்கள் பறை ஒலியைக் கேட்டு இவள் என்ன படுகிறாளோ
இது நான் செய்த பாபமே இவற்றுக்கு காரணம்
என்கிறாள்

———————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading