சாஸ்திரம் நீர்மையினால் அருள் செய்தான்
சதுர வித தேக -மக்களும் உய்ய
முனிவரை இடுக்கி வெளி இட்ட சாஸ்தரத்துக்கு விசிஷ்ட வேஷம் விஷயம்
முந்நீர் வண்ணனாய் வெளி இட்ட சாஸ்திர தத் பர்யங்களுக்கு நிஸ்க்ருஷ்ட வேஷம் விஷயம் –17 —
சர்வேஸ்வரன் தன் கிருபையால் -உஜ்ஜீவிக்க -நலம் அந்தம் இல்லாதோர் நாட்டில் கைங்கர்யம்
திரு மந்த்ரம்-சாஸ்திர தாத் பர்யம் வெளி இட்டு அருளி -அனைவரும் உஜ்ஜீவிக்க
வெளி இட்ட பிரகாரம் அதற்கு விஷயம் எது மேல் அருளுகிறார்
தத் பிரகாரம் தெரிவித்து -மேல் விஷயம் சொல்கிறது ..
இருள்கள் கடியும் முனிவர்-முனிவர் களுக்குள் நின்று -முனிவர்களை இடுக்கிக் கொண்டு
திரு வாய் மொழி 10 -7 -7 -அஞ்ஞானம் தமஸ் போக்கும் முனிவர்கள் -புராண முகத்தால் போக்கி
ஸ்ம்ருதி – பராசரர் -நினைவில் வைத்து -அருளினார் கிருஷ்ண த்வத்பாயனர்-வியாசர்-சத்யவதி தாயார் தீபம் விட்டுப் போனார்கள்-
வேத வியாச பகவான்-வித்தி நாராயணம் பிரபும்-அவரே நாராயணன் -புண்டரீ காஷனைத் தவிர யாரால் மகா பாரதம் அருள முடியும் –
ஆவேச அவதாரம்-சத்வாரகம்-அத்வாரகம்-தானே வெளி இட்டு அருளுவது -முனிவர் மூலம் வெளி இட்டான் –
அந்தர்யாமியாக இருந்து –எடுத்து நின்று தன் முகனே வெளிட்டு -பராசரர் விஷ்ணு புராணம் வசிஷ்டர் வால்மீகி ஸ்ரீ ராமாயணம்–
சேதனர்-விசிஷ்ட வேஷம் விஷயம்-தேகம் உடன் கூடிய வேஷம்- தேகத்திலே நோக்கு -பிராமண சரீரம் ஷத்ரிய வேஷம் –
பதரி ஆஸ்ரமத்துள் உள்ளானே -கரும் கடல் முந்நீர் வண்ணனை-சாஸ்திர தாத்பர்யம்-பரம தயாளு –
யோக்யதை சாபேஷம் வேதம் என்பதால்-அத்வாரகம் தானே வெளி இட்டு அருளினான்-
சம்சாரிகள் தங்களையும் மறந்து ஈஸ்வரனையும் மறந்து கைங்கர்யம் இழந்து இழந்தோம் என்ற இழவும் இன்றி —
சர்வேஸ்வரன் தன் கிருபையால் தானே -வெளி இட்டு சிஷ்யனுமாய் ஆச்சர்யனுமாக திரு மந்த்ரம்
ஸ்வேன ரூபனே நின்று தானே நின்று -இதனால் தன் திரு மந்த்ரம் விளைந்த மண்-போக ஆசை
சேதனரின் நிஸ்க்ருஷ்ட வேஷம்-சரீரம் தவிர்த்து ஆத்ம ஸ்வரூபம் மட்டும் பேசும் விஷயம்
இத்தால் சாஸ்த்ரத்தில் தேகத்திலே நோக்கு -ப்ரஹ்ம ரிஷி ஆனது -போல் அன்றி பிறவியிலே பிராமணர் -ஆக்குவது இல்லை
திரு மந்த்ரத்திலே-தாத் பர்யத்துக்கு – -சாஸ்திர சாரத்துக்கு –ஆத்மாவில் நோக்கு -ஸ்வரூபத்திலே
அனந்யார்ஹ சேஷத்வம்-அனந்யார்ஹ சரணத்வம்-அனந்யார்ஹ போக்யத்வம் –
ஏவம் பூதான இவை இரண்டும்-சாஸ்திரமும் தாத் பர்யமும்
தோல் புரையே
போம் அதுக்கு பழுதிலா யோக்யதையே வேணும்
சர்வ அதிகாரமா -இல்லையே -அதிக்ருத அதிகாரமா -வேதம் அறிந்து வரும் அதிகாரம்
மூன்று வர்ணர் பிராமணர் ஷத்ரியர் வைஸ்யர் தானே
ஸ்திரீகள் சூத்ரர் இல்லையே
தேகம் -ஆந்தரமான ஆத்மா -உள்ளே இருக்கும் ஆத்மாவுக்கு -இல்லையே
மேல் எழ தேகம்-தோல் புரையே -போம் –
பழுதிலா ஒழுகல் ஆற்று –விசிஷ்ட வேஷம்–வம்சம் பிரவாகம்-ஆசாரம் ஆதல் –உத்பத்தி ஆதல் இரண்டிலும் குற்றம் இன்றி
ஒரு குற்றம் இன்றி-தாய் தந்தை ஆசாரம் கடைப் பிடித்து -பிறவியிலும்-
கண்ணன் கழலினை நண்ணும் மனம் உடையீர் -எண்ணும் திரு நாமம் திண்ணம் நாரணனே –
மனம் உடையீர் -அதிகாரம் வேற வேண்டாம் -மனசு ஒன்றே வேண்டும் –
ஸ்ரத்தை ஏவ காரணம் பும்சா -சாஸ்திரம் வாக்கியம் -ஸ்ரத்தை ஒன்றே போதும்
சந்த்யா வந்தனம் பண்ணாதவன் எந்த கர்மா வுக்கும் யோக்யதை இல்லை –
சந்த்யா ஹீனன் அசூசி நித்யம்
ஆனால் திரு மந்த்ரம் சொல்ல யோக்யதை வேற சம்பாதிக்க வேண்டாம்
கங்கை தீர்த்தம் ஆட -வேறு தீர்த்தம் ஆட வேண்டாம் -திரு மந்த்ரம் போல்
-கடலில் -அமாவாசை பௌர்ணமி அன்றி தீர்த்தம் ஆடி சுத்தி பண்ணி கொண்டே போகனும் -சாஸ்திரம் போல்
யோக்யதை தேடின பின்பு தான் சாஸ்திரம்
ஸ்வரூப ஸ்பர்சி -ஸ்ரத்தை மட்டும் கொண்ட ஆத்மா -திரு மந்த்ரம்
நானும் சொன்னேன் நமரும் உரைமின் -நமோ நாராயணா -பெரிய திரு மொழி பாசுரம் போல்
எனக்கு தேனும் பாலும் கன்னலும் அமுதும் ஆகிய திரு மால் திரு நாமம்
யோக்ய அயோக்ய விவாகம் அற சர்வரும் அதிகாரிகள்
பரமம் ஹிதம் -குலசேகரர்-சுருக்கச் சொல்கிறேன்-சம்சார ஆர்ணவம் -ஆபத்து அலைகள் நிறைந்த
அழுந்தி இருக்கும் -மேம் பொருள் போக விட்டு நானா ஞானம் விட்டு
நமோ நாராயணா மந்த்ரம் ச பிரணவம் -பிரணவம் சேர்த்து -நம உடன் திரும்பி திரும்பி சொல்ல வேண்டும்
இத்தால் சாஸ்திர தாத் பார்யம் அதி கிருத அதிகாரமும் ,சர்வ அதிகாரத்வமும்
தது ஹேதுக்களுடன் அருளினார்
அடுத்த சூரணை
சாஸ்த்ரர் தெப்ப கரையர் போல்
சாஸ்திர நிஷ்டர் -உய்யக் கொண்டார் -எம்பெருமானார் -உபதேசம் கேட்டு
பிரமாணிகர்-சாஸ்திரம் காட்டிய வழி-சாஸ்த்ரஜஞர் ஆகையால் இசைந்தே அவன் கிருபை இல்லாததால் இழந்தாய்
தாத் பர்ய நிஷ்டர் -முமுஷுகள் இருவரும் -மோஷம் அடைய இச்சை படைத்தவர் இருவரும்-வழி மார்க்கம் உபாயம் வாசி
ஆத்மாவல் த்ரஷ்டவ்யா -காண /ஸ்ரோதவ்ய- கேட்டு/ மந்தவ்யா -மனனம் பண்ணி நிதி திசாத் தவய –
பகவத் பிராப்தி சாதனம் உபாசனம் -ஓம் இதி யாத்மானம் தியானம்
சம்சார நிவ்ருத்தி பூர்வக பகவத் பிராப்தி சாசனம்
உபாசனம் கர்மம் அது மோஷம் கொடுக்காது
தோனி அவன் தான்-சர்வ பல பிரதன் அவன் தான்
ப்ரீதி அடைந்து கிருபை ஒன்றால் கொடுக்கிறான் -கிருபையும் எதிர் பார்த்து இருப்பார்கள்
ஆற்றை நீந்துவார் தெப்பத்தை ஒரு கையால் இடுக்கி -தாங்களும் ஒரு கையால் துழாவி
தாங்களும் முயன்று -உபேயதையும் அவலம்பித்து கொண்டு -இருக்கும் -இரண்டு சாதனங்கள்
பிறவி கடல் நீந்துவார்க்கு-திரு வாய் மொழி பாசுரம்–சம்சார சாகரம் அனந்த கிலேச பாஜனம்
சாஸ்திர சாரம்-இருந்து ஞானம் பெற்றவர்கள் -ஸூவ யத்னம் நிஷேதித்து -நம பதம்
ஓடம் எறினவர்கள்-போல்-தீரம் கமனம்-அக்கரை செல்ல ஸூவ யத்தனம் இன்றி – தெப்பம் கை விட்டு-
தான் கட்டை தேடாமல் கரை ஏறும் நிச்சயம்-கரை குருகும் காலம் மட்டுமே பார்த்து அதன் விட்டத்தில் நடுவில்- விஷ்ணு போதம்-
பரம பதம் நிச்சயம் – அக்கரை இக் கரையும் ஊடுருவ நின்று -அவன் இங்கும் அங்கும் ஊடுருவி இருப்பதால் -சம்சார சமுத்ரம் கடக்கும்
வைகுந்தன் என்ற தோனி பெறாது உழல்கின்றேன்-நாச்சியார் திரு மொழி
இது ஒன்றே உபாயம் –அவன் ஞானம் கொண்டு போவதால் நிச்சயம்
சர்வகஜஞன் சர்வ சக்தன் பிராப்தன் -சம்பந்தம் உண்டே ரஷிப்பான்-கை விட மாட்டான் விச்வசித்து –
தனக்கும் பார தந்த்ர்யம் உண்டே -அசித் வத் போல் -இட்ட வழக்காக -ஸ்வாமி-சொத்து
திரு மந்த்ரம் சொல்லிக் கொடுத்த அர்த்தம் அறிந்தவன்–மார்பில் கை வைத்து –
நிர் பரன்-இரு கையையும் விட்டு –ஸூ வ யத்தன ரூப உபசாதனாதிகளையும் -தத் சாத்திய பகவத் கிருபையையும்
அவலம்பிக்கை விட்டு -கேவல பகவத் கிருபையே உத்தாரகம் என்று அத்யவிசித்து
கூவிக் கொள்ளும் காலும் இன்னும் குறுகாதோ –கரை குறுகும் கொள்ளும் காலம் எண்ணுவாரைப் போல்
முகப்பே கூவி பணி கொள்ளாய் -ஆவி திகைக்க ஐவர் குமைக்கும் சிற்று இன்பம் ஒழித்து –
பாவியேனை பல நீ காட்டிப் படுப்பாயோ-ஆக்கை விடும் பொழுது எண்ணே –
காள மேக பெருமாள் ஆப்தன் வழித் துணை பெருமாளை எதிர் பார்த்து இருப்பான்
பகவத் பிராப்தி தானே கரை –
அக்கரை என்னும் அனர்த்த கடல்- இக்கரை ஏறி-இளைத்து -ஞானம் விசதம ஆனால் அது அணுகி இருக்கும்
கால சிந்தனை பண்ணிக் கொண்டே இருப்பார்கள்
இத்தால் சாஸ்திர நிஷ்டர் சாரயஜ்ஞர் பிரதி பத்தி செய்யும் விஷயம் சொல்கிறார்-
—————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திரு அடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் .
Leave a Reply